25 ஆண்டு சிறை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு
25 ஆண்டு சிறை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு
ADDED : ஜூன் 14, 2026 02:27 AM

விருதுநகர்: ''தமிழகத்தில், 25 ஆண்டு களுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளின் நிரந்தர விடுதலைக்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் தெரிவித்தார்.
விருதுநகரில் நேற்று அவர் கூறியதாவது:
சிறுபான்மையினருக்கு அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் சரியாக சென்றடைகிறதா என, ஆய்வு நடத்தப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களுக்கு கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்படும்.
ஐந்து ஆண்டுகளுக்கு, வெற்றி தமிழகம் என்ற தொலை நோக்கு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த இருக்கிறது. இவற்றில் சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களும் இடம்பெறும்.
கால் நுாற்றாண்டை கடந்தும் சிறையில் வாடும் கைதிகளுக்கு வழங்கப்பட்ட இரு மாத பிணை விடுப்பு, தேர்தல் நடத்தை விதிகளால் நிறுத்தி வைக்கப்பட்டது. இது மீண்டும் செயல்படுத்தப்படும்.
அவர்களின் நிரந் தர விடுதலைக்கும், தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. எங்கள் ஆட்சி, லஞ்சம், ஊழல் இல்லாத வகையில் அனைத்து மக்களும் விரும்பும் ஆட்சியாக இருக்கும்.
முஸ்லிம்களுக்கு வழங்கப்படும், 3.5 சதவீத இட ஓதுக்கீட்டை, 5 சதவீதமாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
