விசிகவை தவிர்த்து விட்டு தமிழகத்தில் அரசு உருவாகாது: சொல்கிறார் திருமாவளவன்
விசிகவை தவிர்த்து விட்டு தமிழகத்தில் அரசு உருவாகாது: சொல்கிறார் திருமாவளவன்
UPDATED : ஜூன் 17, 2026 04:26 PM
ADDED : ஜூன் 17, 2026 03:13 PM

கடலூர்:விசிகவை தவிர்த்து விட்டு தமிழகத்தில் அரசு உருவாகாது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது;
தற்போதைய அரசியல் சூழல் எதிர்பாராத முடிவு என்பதை விட எதிர்பார்த்த முடிவு தான். இவ்வளவு பெரிய தலைகீழ் மாற்றம் உருவாகும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும், தமிழக அரசியலில் நான் ஈடுபட வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பே சிந்தித்ததாலும், முடிவு எடுத்ததாலும் அதற்கான என்ன காரணம் என்பதை இப்போது நீங்கள் புரிந்து இருப்பீர்கள்.
உங்களுக்கு அதில் ஒரு தெளிவு கிடைக்கும். மீண்டும் மீண்டும் நான் உங்களுக்கு விளக்கம் சொல்ல தேவையில்லை. தமிழகத்தில் விசிக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் என்பதை நான் பலமுறை சொல்லி இருக்கிறேன்.
தேர்லுக்கு முன்பு ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக விசிக இருக்கும் என்று சொன்னேன். அதெல்லாம் நடந்ததா? இல்லையா? அதே போல தமிழகத்தில் தொங்கு சட்டசபை என்ற வார்த்தை நான் பயன்படுத்தவில்லை.
ஆனால் அரசியல் சூழல் மாறும், அணி சேர்க்கைகள் மாறும் ஆகவே அந்த சூழ்நிலையில் நான் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன், அதனால் தான் நான் என்னை திடீரென வேட்பாளராக அறிவித்தேன்.
விசிகவை தவிர்த்து விட்டு தமிழகத்தில் அரசு உருவாகாது, இதை நான் ஆணவத்தோடு, அகந்தையோடு சொல்லவில்லை. கள அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
