ADDED : டிச 09, 2025 07:34 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன், உடல்நலக் குறைவால் நவம்பர் 14ம் தேதி காலமானார். அவரது மனைவி வசந்தி, 2017ல் உயிரிழந்து விட்டார்.
இவர்களுக்கு மூன்று பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். பெற்றோரை இழந்த நான்கு பேரையும், சமீபத்தில் தொலைபேசி வாயிலாக அழைத்து, முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
அதன்படி, கமலக்கண்ணன் மகள் லாவண்யாவிற்கு, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு மனை பட்டா, வீடு கட்டுவதற்கு 3.55 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டு ஆணைகளை, முதல்வர் வழங்கினார்.
சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கணினி உதவியாளர் பணிக்கான நியமன ஆணையையும் வழங்கினார். மற்றொரு மகள் ரிஷிகா மற்றும் சிறுவன் அபினேஷ் ஆகியோருக்கு, அன்புகரங்கள் திட்டத்தின் கீழ், மாதம் தலா 2,000 ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் வழங்கினார்.
மற்றொரு மகள் ரீனா வுக்கு, அழகு கலை பயிற்சி பெறுவதற்கு, 6,000 ரூபாய் உதவித் தொகையையும் முதல்வர் வழங்கினார்.

