தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/'எங்க ஊர்லயும் ஒரு எம்எல்ஏ இப்படித்தான்'... குழந்தையுடன் இருக்கும் பெண் தொழிலதிபருடன் அமைச்சர் கீர்த்தனா

'எங்க ஊர்லயும் ஒரு எம்எல்ஏ இப்படித்தான்'... குழந்தையுடன் இருக்கும் பெண் தொழிலதிபருடன் அமைச்சர் கீர்த்தனா

'எங்க ஊர்லயும் ஒரு எம்எல்ஏ இப்படித்தான்'... குழந்தையுடன் இருக்கும் பெண் தொழிலதிபருடன் அமைச்சர் கீர்த்தனா


ADDED : நவ 04, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 06:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முனிச்: தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவும், உலக நாடுகளுடனான பொருளாதார உறவை வலுப்படுத்தவும் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். முனிச் நகரில் பல்வேறு முன்னணி நிறுவன அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

குவாண்டம் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு சென்ற அவர், குழந்தையை சுமந்தபடி அலுவலக பணிகளை கவனித்து வந்த அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அலெக்ஸான்டிரா டேமன்ஹெயினை சந்தித்து பேசினார். குழந்தையை கவனித்துக் கொண்டே அலுவலகப் பணிகளை பார்க்கும் அவரது சவாலான செயலுக்கு அமைச்சர் கீர்த்தனா பாராட்டு தெரிவித்தார்.

அப்போது, எங்கள் ஊரிலும் ஒரு எம்எல்ஏ இதேபோன்று குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து தான் சட்டசபையிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் உரையாற்றுவார் என்று தவெக எம்எல்ஏ பல்லவியையும் அவர் நினைவுகூர்ந்தார். குழந்தையுடன் இருந்த பெண் தொழிலதிபருடன் அமைச்சர் கீர்த்தனா போட்டோ எடுத்துக் கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us