உள்ளடக்கத்திற்கு செல்ல

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட்
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட்
ADDED : ஜூலை 08, 2026 03:45 PM

அ நிறம் | அளவு
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வில், பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 60 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 08) நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க உள்ளது. இதனால் அவகாசம் தேவை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் பிறகு, ''அரசின் முடிவை வரும் ஜூலை 24ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்; அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது'' எனக் கூறி இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
