தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சென்னை அருகே கொடூரம்: வன்கொடுமைக்கு ஆளான 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

சென்னை அருகே கொடூரம்: வன்கொடுமைக்கு ஆளான 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

சென்னை அருகே கொடூரம்: வன்கொடுமைக்கு ஆளான 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

46


UPDATED : ஜூன் 15, 2026 11:04 AM

ADDED : ஜூன் 15, 2026 09:37 AM

Follow on GoogleFavourite on Google

46

UPDATED : ஜூன் 15, 2026 11:04 AM ADDED : ஜூன் 15, 2026 09:37 AM


46
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

கும்மிடிப்பூண்டியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து முட்புதரில் வீசப்பட்ட 3 வயது குழந்தை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தேடினர். அப்போது முட்புதரில் பச்சிளம் குழந்தை காயங்களுடன் உடல்நலம் குன்றி இருப்பது கண்டறியப்பட்டது. பிறகு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.

அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தையை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனிடையே குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பாக பீஹாரைச் சேர்ந்த மஞ்சி (19) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை புலம்பெயர் தொழிலாளர்கள் 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

3 வயது குழந்தை வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்துக்கு, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாமக தலைவர் அன்புமணி, திமுக எம்.பி., கனிமொழி, உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us