உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 07, 2026 04:25 AM

அ நிறம் | அளவு
சென்னை: இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஹேப்பி ராஜ் என்ற திரைப்படம் வெளியானது.
இந்த படத்தில், ரஜினி நடித்து, 1980ல் வெளியான முரட்டுக்காளை திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த, 'பொதுவாக எம்மனசு தங்கம்...' என்ற பாடல் பயன் படுத்தப்பட்டு உள்ளது. இப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, நீதிபதி கே.குமரேஷ்பாபு முன், விசாரணைக்கு வந்தது. இளையராஜா தரப்பில், 'என் அனுமதி இல்லாமல் பதிப்புரிமை சட்டத்தை மீறும் வகையில், இந்த பாடல் பயன்படுத்தப்பட்டு உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, அந்த படத்தில் குறிப்பிட்ட அப்பாடலை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
