ADDED : செப் 03, 2026 05:24 AM

சென்னை: சென்னை மற்றும் மதுரையில், ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை, அடையாறு கஸ்துாரிபாய் நகர், முதல் பிரதான சாலையில் உள்ள, ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம், கொட்டிவாக்கத்தில் உள்ள, ஐஸ்வர்யா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள, ஏ.ஆர்.சி., கருத்தரிப்பு மையம்...
மாதவரத்தில் உள்ள பிரசாந்த் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் அதன் அருகே பிரசாந்த் பெர்டிலிட்டி மையம் உள்ளிட்ட 20 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தினர்.
அதேபோல், மதுரையிலும், ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி உள்ளனர்.
வரி ஏய்ப்பு புகார் காரணமாக, இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
