உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 01, 2026 05:48 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில், திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், லாரன்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: பலரும் திருச்சி கிழக்கில் போட்டியிடுங்கள் என்கின்றனர். ஒரு கட்சியில் தொண்டராக இருந்து பணியாற்றிய பின் தான், தேர்தலில் போட்டியிட வேண்டும்.
திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிட போவதில்லை. அதேசமயம், வேறு எங்கும் போட்டியிட மாட்டேன் என்று சொல்லவில்லை. நிதானமாக சிந்தித்து அரசியலுக்கு வருவேன். இவ்வாறு கூறியுள்ளார்.
