ADDED : நவ 13, 2025 01:53 AM
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு, தி.மு.க., திறப்பு விழா நடத்துகிறது. திட்டங்களுக்கு விதை போட்டவர்கள் நாங்கள்; பெயர் வைத்துக் கொண்டது நீங்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே பாலங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்றது அ.தி.மு.க., ஆட்சியில் தான். உங்களால் மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியுமா. மத்தியில் ஆட்சியில் இருப்பது எங்கள் ஐயா; 'மோடி எங்கள் டாடி தான்' ஆட்சியில் இருக்கிறார்.
காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூரால் ரயில்வே மேம்பாலத்திற்கு அனுமதி வாங்க முடியுமா. 'ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ' அதேபோல நாட்டுக்கு காங்கிரஸ் தேவையில்லை.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க.,வின் தில்லுமுல்லு வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுவோம். அ.தி.மு.க., ஆட்சியில் தவறு இல்லை என ஒரு நாளும் கூறவில்லை. ஆனால் தி.மு.க., தவறை மட்டுமே செய்கிறது.
- ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

