புதிய காற்றழுத்த தாழ்வு: வரும் 21ல் உருவாக வாய்ப்பு
புதிய காற்றழுத்த தாழ்வு: வரும் 21ல் உருவாக வாய்ப்பு
ADDED : நவ 14, 2025 01:15 AM
சென்னை:'தென்கி ழக்கு வங்கக் கடலில் வரும் 21ல் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது' என, வானிலை துறை அறிவித்துள் ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை அக்., 16ல் துவங்கியது. ஓரிரு நாட்களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இதனால், தமிழகத்தில் பருவமழை தீவிரமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, ஆந்திரா நோக்கி சென்றது.
அதன்பின் உருவான மற்றொரு காற்றழுத்த தாழ்வு, மியான்மர் நோக்கி சென்றது.
இந்நிலையில், புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் தான், பருவமழை தீவிரமாகும்.
இச்சூழ்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 21ல் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது.
இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய குறைவான வாய்ப்பே உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

