ADDED : நவ 13, 2025 01:52 AM

டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம், தேச பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. 'ஆப்பரேஷன் சிந்துார்' இன்னும் முடியவில்லை; நிறுத்தி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதை, கரூர் சம்பவத்தில், செந்தில் பாலாஜி நாடகம் ஆடியதுடன் ஒப்பிட்டு, தி.மு.க.,வினர் அவதுாறு பரப்புகின்றனர். இந்தியா மீதான வெறுப்புணர்வால், இது போன்ற கருத்துகளை கூறும் நபர்களை, என்.ஐ.ஏ., கண்காணிக்க வேண்டும்.
சென்னை ஆர்.கே., நகர் இடைத்தேர்தலின் போது, போலி வாக்காளர்கள் உள்ளதாக, தி.மு.க.,வினர் வழக்கு தொடர்ந்தனர். தற்போது, போலி வாக்காளர்களை ஒழிப்பதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வாக்குத்திருட்டில் ஈடுபடும் தி.மு.க.,வை ஒழிக்க, நிரந்தர வேலையை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
-- அர்ஜுன் சம்பத் தலைவர், ஹிந்து மக்கள் கட்சி

