ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டி போட கூடாது; சொல்கிறார் துரை வைகோ
ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டி போட கூடாது; சொல்கிறார் துரை வைகோ
ADDED : ஜூன் 04, 2026 01:19 PM

கோவை: ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டி போட கூடாது என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ திட்டவட்டமாக தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் துரை வைகோ கூறியதாவது: திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது என்று நான் சொன்னது வாஸ்துவம் தான். கொடியும், சின்னமும் கட்சியின் அடிப்படை அடையாளம். அப்படி இருக்கும் போது ஒரு இயக்கம், தன்னுடைய சின்னத்தில் இல்லாமல் இன்னொரு கட்சியின் சின்னத்தில் நிற்கும் போது தன்னுடைய தனித்துவத்தை இழக்குகிறது.
நான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். பலருக்கு ஒரு முக்கிய விஷயம் தெரியாது. ஒரு கட்சியின் வேட்பாளர் இன்னொரு கட்சியின் வேட்பாளராக நிற்கும் போது முதலில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவரோ அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறாரோ அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினராக மாற வேண்டும்.
அதன்பிறகு அந்த கட்சியின் சின்னத்தில் போட்டி போட வேண்டும். நாங்கள் ஏன் திமுக சின்னத்தில் நின்றோம் என்றால் கடைசிநேரத்தில் நாங்கள் போட்டியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. தொண்டர்கள், நிர்வாகிகளின் மனவேதனை எங்களுடைய துரதிர்ஷ்டவசம் என்று நான் சொல்கிறேன். ஆயிரம் முறை சொல்லுவேன். ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டி போட கூடாது. தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. இவ்வாறு துரை வைகோ கூறினார்.
