தொண்டர் குடும்பத்துக்கு பழனிசாமி ரூ.10 லட்சம் நிதி
தொண்டர் குடும்பத்துக்கு பழனிசாமி ரூ.10 லட்சம் நிதி
ADDED : டிச 02, 2025 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பங்கேற்ற கூட்டத்துக்கு வந்த, கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., தொண்டரான கட்டட தொழிலாளி அர்ஜுனன் உயிர் இழந்தார்.
அவரது உடல், பிரேத பரிசோதனைக்கு பின், அவரது தாய் மாகாளியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று , அ ர்ஜுனன் உடலுக்கு பழனிசாமி அஞ்சலி செலுத்தினார் . பின்னர், மாகாளிக்கு ஆறுதல் தெரிவித்து, 10 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்.
மேலும், ''தலைமை கழகம் வாயிலாக, இன்னும் 10 லட்சம் ரூபாய் வழங்குவோம்,'' என தெரிவித்தார்.

