தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நடிகர் விஜயை காட்டிலும் அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம்; சொல்கிறார் அமைச்சர் அருண்ராஜ்

நடிகர் விஜயை காட்டிலும் அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம்; சொல்கிறார் அமைச்சர் அருண்ராஜ்

நடிகர் விஜயை காட்டிலும் அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம்; சொல்கிறார் அமைச்சர் அருண்ராஜ்

32


ADDED : ஜூன் 07, 2026 10:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 10:29 AM

32


32
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: நடிகர் விஜயை காட்டிலும் அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் அருண்ராஜ் ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது: கட்சி ஒரு சிறிய அமைப்பிலிருந்து தமிழகத்தின் முக்கிய சக்தியாக வளர்ந்தபோதே இந்தத் தேர்தல் வெற்றிக்கான வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது. இது தற்செயலாக நடந்ததல்ல; இது எங்கள் தலைவரின் துணிச்சலான முயற்சி தான் காரணமாகும்.

இந்த வெற்றி இரண்டு முக்கியத் தூண்களைச் சார்ந்து அமைந்தது. எங்கள் தலைவர் விஜய்யின் வலிமையான தலைமை மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை தான் காரணம். கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தை இரண்டு வலுவான கட்சிகள் ஆட்சி செய்து வந்த நிலையில், ஒரு புதியவர் களத்தில் இறங்கி அந்தக் கட்சிகளை வீழ்த்தியுள்ளார்.

வலுவான ஆதரவு

விஜய் அரசியலில் நுழைவது என்ற துணிச்சலான முடிவை எடுத்தார். தமிழக வெற்றிக்கழகம் என்பது வெறும் ரசிகர் மன்றம் என்பதையும் தாண்டிய ஒரு அமைப்பு. தமிழக மக்கள் உண்மையான, அனைவருக்குமான ஒரு தலைவருக்காக காத்திருந்தனர்.

குறிப்பாக நகர்ப்புறங்களில் விஜய்க்கு வலுவான ஆதரவு இருப்பதை தமிழக வெற்றிக்கழகத்தின் உள் ஆய்வுகள் தொடர்ந்து சுட்டிக்காட்டியது. இது ஒரு உண்மையான மதச்சார்பற்ற கூட்டணி, ஒரு கொள்கை சார்ந்த கூட்டணி. கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் திமுக ஒருபோதும் தேர்தலில் வெற்றிபெற்றதில்லை.

பெரும்பான்மையை விட இடம் குறைவாக இருந்தாலும், இந்தத் தீர்ப்பே நாம் கற்பனை செய்யக்கூடிய மிகச் சிறந்த தீர்ப்பாகும். தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றியை வெறும் இளைஞர் இயக்கத்தின் வெற்றியாக மட்டும் சுருக்கிவிட முடியாது. இது ஒரு குடும்பப் புரட்சி.

தமிழக மக்கள் தங்கள் குடும்பங்களுடன் இணைந்து உழைத்தனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ வசம் இருக்கிறது. விசாரணை அறிக்கை இன்னும் வரவில்லை. அந்தச் சம்பவம் விஜய்யை மிகவும் நிலைகுலையச் செய்தது.

செல்வாக்கு மிக்கவர்

பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க மீண்டும் கரூர் செல்ல எங்கள் தலைவர் விஜய் விரும்பினார்; ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

விஜய் கோட், சூட் அணிந்து ஏற்படுத்திய புதிய தோற்றத்தை விட இறுதியில் எங்கள் செயல்பாடே முக்கியமானது.


நடிகர் விஜயை காட்டிலும் அரசியல்வாதி விஜய்க்கு வலிமை அதிகம். அவரது கொள்கை உள்ளிட்டவை தான் தமிழக வெற்றிக்கழகத்தை ஒரு முக்கிய அரசியல் சக்தியாக மாற்றியது. இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us