'நீதிக்கு முன் சோனியா, ராகுலின் கறைபடிந்த கைகள் கட்டப்படும்'
'நீதிக்கு முன் சோனியா, ராகுலின் கறைபடிந்த கைகள் கட்டப்படும்'
ADDED : டிச 02, 2025 05:36 AM

சென்னை: 'சோனியா, ராகுல் ஆகியோரின் கறைபடிந்த கைகள், நீதிக்கு முன் கட்டப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பிரதமர் மோடி ஆட்சியில், காங்கிரசார் செய்த அனைத்து ஊழல்களுக்கும் பதில் கூறியே ஆக வேண்டும். 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை நிறுவன சொத்துக்களை அபகரித்ததாக, அமலாக்க துறை அளித்த புகாரில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை துவக்கம் தான்.
'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், சோனியா மற்றும் ராகுலின் கறைபடிந்த, 'கை'கள் நீதிக்கு முன் கட்டப்படும். ஊழல் என்னும் களை பிடுங்கி எறியப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவரது மற்றொரு அறிக்கை:
'எளிய விவசாய குடும்ப பின்னணியில் இருந்து வந்து, வாழ்நாள் முழுதும் சமூக சேவைக்கு அர்ப்பணித்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை, பார்லிமென்டில் பிரதமர் மோடி பாராட்டி பேசியது, தமிழர்கள் அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம்.
மொழி, ஜாதி, சமூகம், பொருளாதாரம், பாலினம் என, அனைத்து பாகுபாடுகளையும் தாண்டி, தேசத்தின் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள எளிய பின்னணியை சேர்ந்தவர்களை, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் என உயரிய பதவிகளில், பா.ஜ.,தான் அமர வைக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

