சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் எஸ்.ஆர்.எம்., மாணவி சாம்பியன்
சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் எஸ்.ஆர்.எம்., மாணவி சாம்பியன்
ADDED : நவ 13, 2025 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அசாம் ஸ்குவாஷ் மற்றும் ராக்கெட் சங்கம், இந்திய ஸ்குவாஷ் சங்கம் மற்றும் சர்வதேச தொழில்முறை ஸ்குவாஷ் சங்கம் இணைந்து, 'ஈஸ்டர்ன் ஸ்லாம்' சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் - 2025 போட்டியை, அசாம் மாநில தலைநகர் குவஹாத்தியில், நவம்பர் 8 முதல் 11 வரை நடத்தின.
இதில், இந்தியா உட்பட வெளிநாடுகளைச் சேர்ந்த, 400 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதில், 19 வயது பிரிவில், இந்தியா சார்பில் போட்டியிட்ட சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையின் ஷமீனா ரியாஸ், 18, அந்த பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இவர், இறுதி போட்டியில், அஞ்சலி செம்வாலை 11 - 9, 13 - 11, 9 - 11, 11 - 4 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி, 3 - 1 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

