தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு; திமுக மாஜி நேருவுக்கு சிக்கல்

சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு; திமுக மாஜி நேருவுக்கு சிக்கல்

சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு; திமுக மாஜி நேருவுக்கு சிக்கல்

14


UPDATED : நவ 03, 2026 12:11 AM

ADDED : நவ 03, 2026 12:04 AM

Follow on GoogleFavourite on Google

14

UPDATED : நவ 03, 2026 12:11 AM ADDED : நவ 03, 2026 12:04 AM


14
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை அடுத்து, அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், முதன்மை செயலருமான கே.என்.நேருவுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் அவர் நிர்வகித்த நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்த பணி நியமன முறைகேடு வழக்கில், நிவாரணம் தேடி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 2024- - 25ம் ஆண்டில் உதவி மற்றும் இளநிலை பொறியாளர் உள்ளிட்ட 2,538 பணியிட நியமனங்களுக்கு, 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யுமாறு, கடந்த ஆண்டு அக்டோபர் 27ல், தமிழக டி.ஜி.பி.,க்கு மத்திய அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது.

தனித்தனி மனு


இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யும்படி, மதுரையைச் சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரும், அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரையும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர். இருவரின் மனுக் களையும் விசாரித்த உயர் நீதிமன்றம், 'அமலாக்கத் துறை அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை உடனே வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், வழக்குப்பதிவு செய்யாத லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேநேரத்தில், வழக்குப்பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, அமைச்சர் நேரு மற்றும் முந்தைய தி.மு.க., அரசு தரப்பிலும், மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, நேருவின் மறு ஆய்வு மனுவை கடந்த அக்டோபர் 26ல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, நேரு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசு தரப்பிலும், 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்பட்டது.

வாய்ப்பு தரவில்லை


இந்த மனுக்கள், நீதிபதிகள் தீபங்கர் தத்தா, நீதிபதி ஷீல் நாகு அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, நேரு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான் ஆஜராகி, ''நேரு தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பு அளிக்காமல், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

''இது, அடிப்படையிலேயே தவறானது. உயர் நீதிமன்றம் வெறும் விசாரணைக்கு மட்டுமே உத்தரவிட்டிருந்தால், அது ஏற்கத்தக்கதாக இருந்திருக்கும். ஆனால், அவருக்கு வாய்ப்பு அளிக் காமலேயே, நேருவுக்கு எதிராக பாதகமான உத்தரவை பிறப்பித்துள்ளது,'' என்றார்.

நேரு தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றத்தின் பிப்ரவரி 20ம் தேதி தீர்ப்பிலும், நேரு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்த அக்டோபர் 26ம் தேதி உத்தரவிலும் தலையிடுவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. எனவே, நேருவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியில் பள்ளி கல்வித் துறையில் நடந்த முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் மகேஷ், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை தொடர்ந்து, அதே ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் நடந்த பணி நியமன முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் நேரு மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும், மறு ஆய்வு செய்யவும், சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் மறுத்து விட்டதால், அடுத்த நடவடிக்கைக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை தயாராகி வருகிறது. அதனால், நேரு உள்ளிட்ட, இவ்வழக்கில் தொடர்புடைய 14 பேருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us