உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 09, 2026 04:52 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் குலாம் அகமது மீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், 'தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக, குலாம் அகமது மீரை, காங்கிரஸ் தலைவர் கார்கே நியமித்துள்ளார்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குலாம் அகமது மீர், ஜம்மு காஷ்மீர் மாநில எம்.எல்.ஏ.,வாக உள்ளார். ஏற்கனவே, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்த கிரிஷ் ஷோடங்கர், கோவா மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
