தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு

 முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு

 முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு


ADDED : ஜூலை 09, 2026 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 12:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- டில்லி சிறப்பு நிருபர் -: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதியினர், முஸ்லிம் மதத்திற்கு மாறும்போது, அவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களாக கருதி சாதிச் சான்றிதழ் வழங்கும் உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழக அரசு கடந்த, 2004ம் ஆண்டில் ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதன்படி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதியினர், முஸ்லிம் மதத்திற்கு மாறும்போது, அவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களாக கருதி சாதிச் சான்றிதழ் வழங்க முடியும்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த உத்தரவை ரத்து செய்து சமீபத்தில் உத்தரவிட்டது.

'ஒருவர் இஸ்லாமிற்கு மாறினால் அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே. பிறப்பின் அடிப்படையில் அமையும் குறிப்பிட்ட பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோர முடியாது' என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us