தமிழகத்தில் என்றும் சமத்துவ தீபம் எரியும்: முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் என்றும் சமத்துவ தீபம் எரியும்: முதல்வர் ஸ்டாலின்
ADDED : டிச 07, 2025 06:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் என்றும் சமத்துவ தீபம் எரியும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், மதுரைக்கு பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் வலை தள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது;
கருணாநிதி நூற்றாண்டு நூலகம், கருணாநிதி நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம், பிரமாண்டமான கீழடி அருங்காட்சியகம், உலகத் தரத்தில் ஹாக்கி மைதானம் இவைதான் நமது திராவிட மாடல் அரசு பேசும் மதுரைக்கான வளர்ச்சி அரசியல்.
எய்ம்ஸ் வராது; மெட்ரோ ரயில் தராது, கீழடி ஆய்வறிக்கையை மறைக்கும் பா.ஜ. பேசும் அரசியல்.
தமிழகத்தில் என்றும் சமத்துவ தீபம் எரியும்! வளர்ச்சியின் ஒளி பெருகும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.

