காங்., மாவட்ட தலைவர்களுக்கு பத்து நாட்கள் பயிற்சி முகாம்
காங்., மாவட்ட தலைவர்களுக்கு பத்து நாட்கள் பயிற்சி முகாம்
ADDED : ஜூலை 08, 2026 06:20 AM

சென்னை: தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கு, வரும் 22 முதல் 31ம் தேதி வரை, 10 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களுக்காக, பல்வேறு செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதை செயல்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2029 லோக்சபா தேர்தல் ஆகியவற்றில் கட்சி பணிகளை வலுப்படுத்த, வரும் 22 முதல் 31ம் தேதி வரை, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 10 நாள் பயிற்சி முகாம் நடக்க உள்ளது.
தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர் ஆலோசனையின் பேரில், கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாமை ஒருங்கிணைக்க, நெடுஞ்செழியன், செந்தமிழ் அரசு, குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாமல்லபுரம் பயிற்சி முகாமில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
