தேனி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
தேனி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ADDED : டிச 07, 2025 06:04 AM
தேனி: தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேனி வழக்கறிஞர்கள் சங்க 2025--- 2027ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதிவியேற்பு விழா நடந்தது.
மூத்த வழக்கறிஞர்கள் பாலசுப்பிரமணியம், மனோகரன் தலைமை வகித்தனர். தேனி வழக்கறிஞர் சங்க தலைவராக சந்தானகிருஷ்ணன், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் கார்த்திகேயன், துணைத்தலைவர்கள் பாலமுருகன், கணேஷ், ஆறுமுகம், பாண்டியராஜன், இணைச் செயலாளர்களாக தமிழ்மணி, லோகநாதன், முத்துசெல்வம், துணைச்செயலாளர்களாக மகாலிங்கம், வித்யா, ஆனந்தகுமார், கமல்ராஜ் பதவி ஏற்றனர்.
விழாவில் ஜாக் மாநில தலைவர் நந்தகுமார், துணைத்தலைவர் சுப்பிரமணி, மதுரை வழக்கஞர் சங்க பாஸ்கரன், திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் ஆனந்த முனிராஜ், போடி வழக்கறிஞர் சங்க தலைவர் கணேசன், பெரியகுளம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் நாராயணன், வழக்கறிஞர் சங்க தலைவர் காமராஜன், அரசு வழக்கறிஞர் குணசேகரன், மூத்த வழக்கறிஞர் வீரசிகாமணி உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் முகமதுயாஸ்மின் பர்வீன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நிஷாந்த் பங்கேற்றனர்.

