sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பட்டா மாறுதலுக்கு 13,000 ரூபாய் லஞ்சம்: சிக்கினார் விஏஓ

/

பட்டா மாறுதலுக்கு 13,000 ரூபாய் லஞ்சம்: சிக்கினார் விஏஓ

பட்டா மாறுதலுக்கு 13,000 ரூபாய் லஞ்சம்: சிக்கினார் விஏஓ

பட்டா மாறுதலுக்கு 13,000 ரூபாய் லஞ்சம்: சிக்கினார் விஏஓ

7


UPDATED : டிச 09, 2025 03:24 PM

ADDED : டிச 09, 2025 12:06 PM

Google News

7

UPDATED : டிச 09, 2025 03:24 PM ADDED : டிச 09, 2025 12:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வேந்தோணி கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை பட்டா மாறுதல் செய்ய 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் தனது தாயார் பெயரில் இடத்தை கிரையம் செய்துள்ளார். பெயர் கூற விரும்பாத புகார்தாரர் தனது தாயார் பெயரில் பட்டா பெயர் மாறுதல் செய்ய வேந்தோணி வி.ஏ.ஓ., கருப்புசாமி 58, யை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எனது லாகினுக்கு வரவில்லை, வந்தவுடன் சொல்கிறேன், என கூறி மனுதாரரின் போன் நம்பரை வாங்கியுள்ளார்.

தொடர்ந்து மனுதாரரின் மொபைல் எண்ணுக்கு பட்டா பெயர் மாறுதலாகி விட்டதாக மெசேஜ் வந்ததாக அழைத்துள்ளார். பின்னர் நான் பரிந்துரை செய்ததால் தான் உங்க அம்மா பெயரில் பட்டா கிடைத்தது. ஆகையால் எனக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு புகார்தாரர் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என கூறியதற்கு, ரூ. 2 ஆயிரத்தை கழித்து , ரூ. 13 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார்.

எனவே லஞ்சம் கொடுக்க விரும்பாதவர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுத்தலின் படி, ரசாயனம் தடவிய பணம் ரூ.13000 கருப்புசாமியிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர். கைது செய்யப்பட்ட விஏஓவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us