சத்திரம்- சபரிமலை எல்லையில் காட்டு யானைகள் நடமாட்டம்; ஐயப்ப பக்தர்கள் உஷார்
சத்திரம்- சபரிமலை எல்லையில் காட்டு யானைகள் நடமாட்டம்; ஐயப்ப பக்தர்கள் உஷார்
ADDED : டிச 03, 2025 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: பெரியாறு புலிகள் சரணாலயத்தில் சத்திரம், சபரிமலை எல்லை பகுதியில் காட்டு யானைகள் நடமாடியதால் ஐயப்ப பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் காட்டு யானைகள், கரடி ஆகியவை கடந்த வாரம் நடமாடின. அவற்றை அந்த வழியில் சென்ற ஐயப்ப பக்தர்கள் பார்த்தனர். அதனால் அப்பகுதியில் வனத்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் அதே பகுதியில் தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் இரண்டு காட்டு யானைகள் நடமாடின. தகவல் அறிந்த மவுண்ட் பகுதி வனத்துறையினர் யானைகளை காட்டிற்குள் விரட்டினர்.
பெரியாறு புலிகள் சரணாலயம் எல்லை பகுதியில் பகல் வேளையிலும் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

