ADDED : டிச 02, 2025 12:54 AM
அபுஜா: நைஜீரியாவில், ஆயுதமேந்திய கடத்தல்காரர்கள் மீண்டும் கைவரிசை காட்டியுள்ளனர். குழந்தை உட்பட 14 பெண்களை கடத்திச் சென்றனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், ஆயுதமேந்திய கடத்தல்காரர்கள் கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்களை கடத்திச் சென்று, அரசுக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் ஒரு பள்ளிக்குள் நுழைந்து, 24 மாணவியரைக் கடத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து, மற்றொரு பள்ளிக்குள் நுழைந்து, 300 மாணவர்கள், ஆசிரியர்களை கடத்திச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, சோகோடோ மாகாணத்தில் உள்ள சச்சோ என்ற கிராமத்திற்குள் திருமணம் நடக்கவிருந்த மண்டபத்துக்குள் நுழைந்த கடத்தல்காரர்கள், மணப்பெண், அவரது தோழியர் 10 பேர், ஒரு குழந்தை, இரண்டு பெண்கள் என, மொத்தம் 14 பேரை கடத்திச் சென்றனர்.

