UPDATED : ஆக 20, 2024 09:32 PM
ADDED : ஆக 20, 2024 09:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 90 அடி உயர பிரம்மாண்ட அனுமன் சிலை திறந்து வைக்கப்பட்டது.
அமெரிக்காவின்
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் சுகர்லாண்ட் என்ற பகுதியில் ஸ்ரீ
அஷ்டலக் ஷ்மி கோயில் உள்ளது. இங்கு 90 அடி உயரத்தில் பிரம்மாண்ட அனுமன்
சிலை கட்டி முடிக்கப்பட்டு கடந்த 18-ம் தேதி ஸ்ரீ சின்னஜியர் சுவாமிகள்
முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. இச்சிலைக்கு ஒற்றுமையின் சிலை என
பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள அனுமன் சிலைகளில் மூன்றாவது மிகப்பெரிய அனுமன் சிலை இது என கூறப்படுகிறது.

