ஜப்பானில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஜப்பானில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ADDED : டிச 09, 2025 08:15 AM

டோக்கியோ: ஜப்பானில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்காசிய நாடான ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஹோக்கைடோ, அமோரி, இவா ஆகிய பகுதிகளில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கடல் பகுதியில், இந்திய நேரப்படி நேற்று இரவு 7:45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில், 7.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அமோரி மாகாணக் கடற்கரையில் இருந்து, 80 கி.மீ., தொலைவிலும், வடக்கு ஜப்பானில் உள்ள மிசாவா பகுதியில் இரு ந்து 73 கி.மீ., தொலைவிலும், 50 கி.மீ., ஆழத்திலும் பதிவானதாக அந்த மையம் அறிவித்துள்ளது.
இந்த நி லநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின; இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிர்ச் சேதங்கள் குறித்த முழுமையா ன தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கு அவசர பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் உயிருக்கு முதலிடம் கொடுத்து, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்றும் ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சி தெரிவித்துள்ளார்.

