தெலுங்கு நடிகர் பட டிக்கெட் ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய ரசிகர்
தெலுங்கு நடிகர் பட டிக்கெட் ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய ரசிகர்
ADDED : டிச 02, 2025 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெர்லின்: ஜெர்மனியில் திரையிடப்படும், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் புதிய படத்தை பார்ப்பதற்காக அவருடைய தீவிர ரசிகர் ஒருவர், 1 லட்சம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் அகண்டா 2.0 திரைப்படம் வரும் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது. உலகம் முழுதும் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ரசிகர்கள் உள்ள நிலையில், இத்திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக வெளிநாடுகளில் இத்திரைப்படத்திற்கான டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர். இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் வசிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், அகண்டா 2.0 திரைப்படத்தின் டிக்கெட்டை ஏலத்தில், 1 லட்சம் ரூபாய் அளித்து பெற்றுள்ளார்.

