என்னை கொலை செய்ய ஈரான் சதி… அதிர்ஷ்டத்தால் தப்பிக்கிறேன்: டிரம்ப் 'பகீர்'
என்னை கொலை செய்ய ஈரான் சதி… அதிர்ஷ்டத்தால் தப்பிக்கிறேன்: டிரம்ப் 'பகீர்'
ADDED : ஜூலை 08, 2026 10:35 PM

வாஷிங்டன்: என்னை கொலை செய்ய ஈரான் சதி செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் 3 வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்து போனது. ஈரானுக்கு எதிராக மீண்டும் புதிய தாக்குதல்களை நடத்தி உள்ளதாக வளைகுடாவில் அமைந்துள்ள அமெரிக்க படைப்பிரிவு தலைமையகம் சென்ட்காம் அறிவித்தது.
துருக்கியின் அங்காராவில் நேட்டோ உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப, ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்தார். அவரின் தாக்குதல் அறிவிப்புக்கு நேட்டோவும் ஆதரவு அளித்து உள்ளது.
இந் நிலையில் ஈரான் என்னை கொலை செய்ய சதி செய்கிறது என்று டிரம்ப், குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறி உள்ளதாவது;
அமெரிக்க தலைவரை அவர்கள் (ஈரானை குறிப்பிடுகிறார்) ஒழிக்க முற்படுகிறார்கள். அவர்கள் வைத்துள்ள பட்டியலில் என் பெயரும் உள்ளது. இப்போது வரை எனக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்துள்ளது.
அது எப்போதும் கை கொடுக்கும் என்று சொல்ல முடியாது. அவர்கள் கெட்ட மற்றும் வக்கிரம குணம் கொண்டவர்கள். புற்றுநோய் போன்ற அவர்களை வேரறுக்க வேண்டும்.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
