தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ கத்தார் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு; மேற்காசிய போர் குறித்து முக்கிய ஆலோசனை

கத்தார் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு; மேற்காசிய போர் குறித்து முக்கிய ஆலோசனை

கத்தார் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு; மேற்காசிய போர் குறித்து முக்கிய ஆலோசனை


ADDED : ஜூலை 05, 2026 07:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 07:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

தோஹாவில் கத்தார் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.

மேற்காசிய பிராந்தியத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே நான்கு மாதங்களுக்கும் மேல் மோதல் நீடித்ததால் பதற்றம் நிலவியது. இரு நாடுகளுக்கு இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டாலும், பதற்றமான சூழலே நிலவுகிறது.

இந்த சூழலில், மேற்காசியாவில் உள்ள கத்தார், பஹ்ரைன், குவைத், ஓமன் ஆகிய நாடுகளுக்கு நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐந்து நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 05) தோஹாவில் கத்தார் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.

எரிசக்தி, வர்த்தகம், முதலீடுகள் உள்ளிட்டவை குறித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.வளைகுடா நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்ததற்காக கத்தாருக்கு ஜெய்சங்கர் நன்றி தெரிவித்தார்.

இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று தோஹாவில் கத்தார் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியை சந்தித்ததில் மகிழ்ச்சி.

அங்குள்ள இந்தியச் சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். மேற்கு ஆசியப் பிராந்திய மோதல் மற்றும் அதன் தாக்கம் குறித்து தகவல் தெரிவித்தார். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us