சேமிப்பில் 20% மக்களுக்கே வழங்கலாம்; அதிபர் டிரம்ப் முடிவு
சேமிப்பில் 20% மக்களுக்கே வழங்கலாம்; அதிபர் டிரம்ப் முடிவு
ADDED : பிப் 20, 2025 07:41 AM

வாஷிங்டன்: 'எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்கத் திறன் துறையிலிருந்து 20 சதவீதம் சேமிப்பை அமெரிக்கர்களுக்குத் திருப்பி தரலாம்' என அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற உடன், டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அரசு சாரா அமைப்பை உருவாக்கினார். அமெரிக்க அரசின் நிர்வாகத்தில் செய்யப்படும் வீண் செலவுகளை தடுப்பது, கணக்குகளை முறைப்படுத்துவது போன்றவற்றுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் இதன் தலைவராக உள்ளார். உலகெங்கும் பல நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை நிறுத்தி, இந்த அமைப்பு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்,எலான் மஸ்க் தலைமையிலான அசாங்கத் திறன் துறையிலிருந்து 20 சதவீதம் சேமிப்பை அமெரிக்கர்களுக்குத் திருப்பி கொடுக்கப்படும். 20 சதவீதம் அரசின் கடனை குறைப்பதற்காக ஒதுக்கப்படும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இது குறித்து, டிரம்ப் கூறியதாவது: நாங்கள் ஒரு புதிய முடிவு எடுக்க பரிசீலித்து வருகிறோம். அரசாங்கத் திறன் துறையிலிருந்து 20 சதவீதம் சேமிப்பை அமெரிக்க குடிமக்களுக்கு வழங்குகிறோம். மீதமுள்ள 20 சதவீதத்தை கடனை அடைக்கச் முடிவு செய்யப்பட்டுள்ளன. பல பில்லியன் டாலர் சேமிக்கப்படுகின்றன. எனவே 20 சதவீதத்தை அமெரிக்க மக்களுக்குத் திருப்பித் தருவது பற்றி நாங்கள் யோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

