தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/உலகக்கோப்பை கால்பந்து: ஈகுவடாரை வீழ்த்தியது மெக்சிகோ

உலகக்கோப்பை கால்பந்து: ஈகுவடாரை வீழ்த்தியது மெக்சிகோ

உலகக்கோப்பை கால்பந்து: ஈகுவடாரை வீழ்த்தியது மெக்சிகோ


ADDED : ஜூலை 01, 2026 10:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 10:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் நாக் அவுட் சுற்றில் ஈகுவடார் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் மெக்சிகோ அணி ஈகுவடாரை எதிர்கொண்டது. மெக்சிகோ சிட்டியில் நடந்த இந்த ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் மெக்சிகோ அணி வீரர் ஜுலியன் குயினோன்ஸ் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து 31வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் மற்றொரு வீரர் ரவுல் ஜிமினெஸ் ஒரு கோல் அடித்தார்.

முதல் பாதியில் மெக்சிகோ 2-0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் இரு அணிகளாலும் ஒரு கோலும் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மெக்சிகோ அடுத்த நாக் அவுட் சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us