சேலம் : சேலம், சாமிநாயக்கன்பட்டியில், "லிங்க பைரவி' சிலையை சற்குரு ஜக்கி வாசுதேவ் பிரதிஷ்டை செய்து வைத்தார். இவரது தலைமையில் கோவிலுக்கான பூமி பூஜை நடந்தது. சேலம், சாமிநாயக்கன்பட்டியில், "லிங்க பைரவி' கோவிலுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த, சற்குரு ஜக்கி வாசுதேவிற்கு பக்தர்கள் கும்ப மரியாதை செய்தனர். இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில், ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், முக்கோன வடிவில் கட்டப்படவுள்ள, "லிங்க பைரவி' கோவிலில், இரண்டு தீர்தது குளங்கள் அமைக்கப்படுகிறது. எட்டு மாத்தில் கோவில் கட்டுமான பணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று காலை கோவில் அடிக்கல்நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்தது. சற்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் நடந்த பூமி பூஜையில், ஏராளமான பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சற்குரு ஜக்கி வாசுதேவ், வெள்ளி பதிக்கப்பட்ட, "லிங்க பைரவி' சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார். தாய்மையின் பரிபூரண அம்சமாக விளங்கும், லிங்க பைரவி தேவி சக்தி வாய்ந்ததாகவும், உடல் உறுதி, செல்வம் ஆகியவற்றை வழிபடும் பக்தர்களுக்கு அளிக்கும் தேவியாக இருப்பார். சற்குரு ஜக்கி வாசுதேவ், "லிங்க பைரவி' சிலையை பிரதிஷ்டை செய்து, பக்தர்களிடம் பேசியதாவது: கோவில்கள் ஆன்மிகத்தை பரப்பும் இடமாக இருக்க வேண்டும். கோவிலை கடையாக மாற்றி, வியாபாரம் செய்யும் இடமாக ஏற்படுத்தி விட கூடாது. பழங்காலத்தில் இந்தியா பொருளாதார ரீதியாகவும், வளமைமிக்க வல்லரசு நாடாக திகழ்ந்தது. தெய்வத்தன்மை பக்தி மயத்துடன் இருக்க வேண்டுமே தவிர, வியாபார நோக்கமாக்கி விட கூடாது. தெய்வத்தன்மையை வியாபார மயமாக்கியதன் காரணமாக, இந்தியாவின் வளர்ச்சி குன்றிவிட்டது. தெய்வத்திடம் எதையும் எதிர்பார்க்க கூõடது. தெய்வத்தை பக்தியுடன் வழிபட்டால், நமக்கு தேவையானது கிடைக்கும். தெய்வம் இருக்கும் இடத்தை பக்தி மயத்துடன் வைத்து கொள்ளும் போது, நமக்கு எல்லா நலனும் கிடைக்கும், என்றார். ஓமலூர் எம்.எல்.ஏ., பல்பாக்கி கிருஷ்ணன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., மோகன்ராஜ், மகாதேவி டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர்கள் அர்ஜூன், மோகன், சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். "லிங்க பைரவி' கோவில் பூமி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சற்குரு ஜக்கி வாசுதேவ், அருளாசி வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE