உள்ளே இருந்தா காசு... வெளியே இருந்தா கேசு!| Dinamalar

உள்ளே இருந்தா காசு... வெளியே இருந்தா கேசு!

Added : ஜூன் 17, 2014
Share
''...இடையில் உணவு இடைவேளை வேறு... ஐந்தறிவு ஜீவன் போல ஒரு வாழ்க்கை; கேட்டால், அரசாங்க வேலை என்று வெளியில் பீத்திக்கொள்வது...!,'' காமெடி சேனலில், 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'யாக வடிவேலு வெடித்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்து சிரித்துக்கொண்டே, வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தாள் சித்ரா. ''இம்சை அரசன் சொல்றது இம்மியளவும் தப்பில்லை!,'' என்றபடியே, வீட்டுக்குள்
உள்ளே இருந்தா காசு... வெளியே இருந்தா கேசு!

''...இடையில் உணவு இடைவேளை வேறு... ஐந்தறிவு ஜீவன் போல ஒரு வாழ்க்கை; கேட்டால், அரசாங்க வேலை என்று வெளியில் பீத்திக்கொள்வது...!,'' காமெடி சேனலில், 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'யாக வடிவேலு வெடித்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்து சிரித்துக்கொண்டே, வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.


''இம்சை அரசன் சொல்றது இம்மியளவும் தப்பில்லை!,'' என்றபடியே, வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.


''என்னடி! வர்றப்பவே 'டிரைலர் ' ஓட்டிட்டே வர்ற...என்ன விஷயம்?,'' என்றாள் சித்ரா.


''பெரும்பாலான கவர்மென்ட் ஆபீஸ், அப்பிடித்தான இருக்கு? கோயம்புத்தூர்ல, மதியம் 2 லயிருந்து 4 மணி வரைக்கும், எந்த ஆபீஸ்லயும் எந்த ஆபீசரையும் பார்க்கவே முடியுறதில்லை; கலெக்டர், கமிஷனர் யாரு மேலயும் யாருக்கும் பயமிருக்கிறதா தெரியலை!,'' என்றாள் மித்ரா.


''அதுக்கு எதுக்கு நீ கொந்தளிக்கிற?,''


''நான் கொந்தளிக்கலை...போலீஸ்காரங்க கொந்தளிக்கிறாங்க; கமிஷனர் ஆபீஸ்ல இருக்கிற அமைச்சுப் பணியாளர்களைப் பத்தி, 'கம்பிளைன்ட்'ட அடுக்குறாங்க; அங்க ஒரு வேலையும் உருப்படியா நடக்கிறதில்லையாம்; பெரும்பாலான ஆளுங்க 'டிமிக்கி' கொடுத்துட்டு, சொகுசு வாழ்க்கை வாழுறாங்க; கேரம் போர்டு, செஸ் ஆடிட்டு, ஜாலியா இருக்காங்க. எங்களைத்தான் 'நாளைக்கு வா, நாளைக்கழிச்சு வா'ன்னு அலைக்கழிக்கிறாங்கன்னு புலம்புறாங்க,''


''ஒனக்குத் தெரிஞ்சு விஷயம், ஆபீசர்களுக்குத் தெரியாமயல இருக்கும்? அவுங்க எதுவும் கண்டுக்கிறதில்லையா?,'' என்றாள் சித்ரா.


''அரசல் புரசலா தெரிஞ்சிருக்கலாம்; ஆனா, அவுங்க மேல நடவடிக்கை எடுத்தால் ஏதாவது, உள்ளடி வேலை பாத்திருவாங்களோன்னு பயப்படறாங்க போலிருக்கு,'' என்றாள் மித்ரா.''எல்லாம் ஒரு விளம்பரம் தான்...!'';

காமெடி சேனலில் காட்சி மாறியிருந்தது. ''எல்லாம் ஒரு விளம்பரம் தான்...!'' என்று 'கரகாட்டக்காரன்' செந்தில், கல்லுளி மங்கன் போல நிற்க, கவுண்டமணி திட்டிக்கொண்டிருந்தார்.


''இந்த 'டயலாக்'கும் எல்லா காலத்துக்கும் பொருந்தும்டி...!''என்றாள் சித்ரா.


''அப்பிடி யாருக்கா விளம்பரம் தேடுறா?,'' ஆர்வமாய்க் கேட்டாள் மித்ரா.


''பதவியைப் பறி கொடுத்தவர் தான். தேர்முட்டியில நடந்த பொதுக்கூட்டத்துக்கு அவரு வர்றப்ப, ஏகப்பட்ட பட்டாசு வெடிச்சிருக்காங்க; நாப்பது அம்பது பேரு, சால்வை போத்திருக்காங்க...!'' என்று சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, 'எதுக்கு பதவி போனதுக்கா?' என்று கேட்டுச் சிரித்தாள் மித்ரா.


''முழுசாக் கேளுடி! கட்சியில இன்னும் எனக்கு தான் செல்வாக்குன்னு காமிக்கிறதுக்காக, அந்த 'விஜய் மல்லையா' கவுன்சிலர்ட்ட சொல்லி, இந்த ஏற்பாட்டைப் பண்ணிருக்காரு,'' என்றாள் சித்ரா.


''அது யாருக்கா விஜய் மல்லையா கவுன்சிலரு?,''


''அந்த கருப்பு கவுன்சிலரு தான். சிட்டிக்குள்ள இருக்கிற 'டாஸ்மாக் பார்' முழுசும், அவரோட 'கன்ட்ரோல்'ல இருக்கிறதால, அவருக்கு இப்பிடி ஒரு பேரு வச்சிருக்காரு, 'மாஜி' எம்.எல்.ஏ., ஒருத்தரு,'''அசால்ட் ஆறுமுகம்';

காமெடி சேனலை மாற்றினாள் மித்ரா. அடுத்த காட்சியில், 'அசால்ட் ஆறுமுகம்' ஆக, அரட்டிக்கொண்டிருந்தார் வடிவேலு.


''ஒவ்வொரு கேரக்டர்லயும், நம்ம பாக்கிற ஒரு ஆளை ஞாபகப்படுத்துறது தான், வடிவேலோட ஸ்பெஷல். வக்கீல் வண்டு முருகன், அசால்ட் ஆறுமுகத்தையெல்லாம் பார்த்தா, நம்ம ஊரு ஆளுங்க நிறைய்யப் பேரு ஞாபகத்துக்கு வர்றாங்க!,'' என்றாள் சித்ரா.


''இப்போ ஞாபகத்துக்கு வர்றது யாரு?,'' என்றாள் மித்ரா.


''நம்மூரு வக்கீல் ஒருத்தர் தான். பதவி பறி போனவரோட 'ரைட் ஹேண்ட்'கள்ல இவரும் ஒருத்தரு; அதனால தான், முக்கியமான பதவியும் இவருக்கு கிடைச்சுது; அதை வச்சு, 'ஒப்பீனியன்' கேட்டு வர்ற, எல்லா கட்டடங்களுக்கும் சதுர அடிக்கு இவ்வளவுன்னு செம்ம வசூலைப் போட்ருக்காரு; கோபாலபுரத்துல, ஜி ப்ளஸ் ஒன்' ரெண்டு புளோர்ல வீடு கட்றதுக்கு 'பர்மிஷன்' வாங்கிட்டு, 68 ரூம் கட்டி, வக்கீல்களுக்கு வாடகைக்கு விட்ருக்காங்க; அதுல, ஒரு ரூமை மெரட்டி 'ஓசி'யில பத்திரம் முடிச்சிருக்காரு அந்த வக்கீலு. பக்கத்துல பணம் கொடுத்து வாங்குன ரூமையும் சேத்து பிரமாண்டமா 'டெக்கரேட்' பண்ணிட்டு இருக்காரு,'' என்றாள் சித்ரா.


''அந்த கட்டடத்தை 'சீல்' வைக்காம, கார்ப்பரேஷன் ஏன் வேடிக்கை பாக்குது?,''


''அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்டி...!,''இது போலீஸ்காரங்க புலம்பல்;

''சம்பாதிக்கிறவன் சம்பாதிச்சிட்டே இருக்கான்; வேலை பாக்கிறவன் வேலை பாத்துட்டே இருக்கான்!,'' என்று புலம்பலாய் மித்ரா ஆரம்பிக்க, 'யாருக்காக நீ புலம்புற' என்றாள் சித்ரா.


''இது போலீஸ்காரங்க புலம்பல்...சிட்டிக்குள்ள காட்டூர், ஆர்.எஸ்.புரம், பீளமேடு, ரேஸ்கோர்ஸ்னு வளம் கொழிக்கிற ஸ்டேஷன்கள்ல இருக்கிற போலீஸ்காரங்க, இந்த ஸ்டேஷன்களுக்குள்ளயே மாறி மாறி 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டு, வலுவா சம்பாதிக்கிறாங்க; ஒரே ஸ்டேஷன்ல பல வருஷமா இருக்கிறதால, அத்தனை கிரிமினலையும், வி.ஐ.பி.,க்களையும் தெரிஞ்சு வச்சுக்கிட்டு, 'பிளான்' பண்ணி காசு பாக்குறாங்க. அந்த ஸ்டேஷன்கள்ல, இன்ஸ்பெக்டர்கள் நல்லவுங்க வந்தாலும், இவுங்க ஆட்சி தான். ஆனா, குனியமுத்தூர், போத்தனூர், சரவணம்பட்டி ஏரியாவுல இருக்கிற போலீஸ்காரங்களுக்கு வேலை 'பெண்டு' நிமித்தும்; ஆனா, பெருசா வருமானம் கிடையாது; அதான், இந்த புலம்பல்...!'' என்றாள் மித்ரா.


''ரொம்ப வருஷமா, சிட்டிக்குள்ள இருக்கிற போலீஸ்காரங்களை, கொஞ்ச நாளைக்கு மாத்தி விடலாமே''


''போலீஸ்ல மட்டுமா? கார்ப்பரேஷன்லயும் இதே கதை தான்; இதே ஊர்ல இருக்கிற ஏழெட்டு இன்ஜினியர்கள் சம்பாதிச்சிருக்கிற அளவுக்கு, கவுன்சிலர்கள் கூட சம்பாதிச்சிருக்க மாட்டாங்க; ஏன்னா, இவுங்களுக்கு அஞ்சு வருஷம் தான்; ஆனா, அவுங்க அசையாமலே, பல வருஷமா இங்கயே 'நின்னு' விளையாடுறாங்க,''


''நீ சொல்றது உண்மை தான். திடக்கழிவு மேலாண்மைல 'எக்ஸ்பர்ட்'ன்னு சொல்லியே, பல கோடி சம்பாதிச்சிருக்காரு ஒரு இன்ஜினியர். இதுக்கு முந்துன அ.தி.மு.க., பீரியட்ல, 33 குப்பை லாரி வாங்குனதுல, இன்னிக்கு வரைக்கும் 3 லாரி வந்து சேரவேயில்லை; அதுல நடந்த ஊழல்ல 'பெரும் பங்கு' இவருக்குதான்; அதேபோல, வீடுகளுக்கு ரெண்டு கலரு குப்பைத் தொட்டி வாங்குறது, ரோட்டுல தூசு எடுக்குற வண்டி வாங்குறதுன்னு பல விஷயங்கள்ல லோக்கல் கம்பெனிகளுக்கு 'ஆர்டர்' கொடுக்காம, 'டுபாக்கூர் டில்லி' கம்பெனிங்க பேர்ல இவரு அடிச்ச கொள்ளை, கொஞ்ச நஞ்சமில்லை. இவரை 'சஸ்பெண்ட்' பண்ணி, சென்னைக்கு மாத்துனாங்க. ஆனா, 'அதிசயம் அம்யூஸ்மென்ட் பார்க்' பையன் மாதிரி திரும்ப வந்துட்டாரு,'' என்றாள் சித்ரா."என்ன கொடுமை சரவணன்?'

தொலைக்காட்சியில், 'சந்திரமுகி' பிரபு, 'என்ன கொடுமை சரவணன்?' என்று தலையில் அடித்துக் கொண்டார்.


''அக்கா! கோயம்புத்தூர்ல ஒரு பிரபலமான ஸ்கூல் காம்பவுண்டுல, ஒரு மாணவியும், டிரைவரும் காருக்குள்ள உக்காந்து தண்ணியடிச்சு பிடிபட்ருக்காங்க...தெரியுமா?,'' என்றாள் மித்ரா.


''ஏய்...என்னடி சொல்ற...நிஜமாவா?,'' என்று சித்ரா ஆச்சரியமாய்க் கேட்கும்போதே, மித்ரா மொபைலில் அழைப்பு வர, 'அக்கா! அப்புறமா வந்து சொல்றேன்' என்று டாட்டா காண்பித்து விட்டு, 'அங்கயே இரு! வந்துட்டேன்டி' என்று வேகமாக வண்டியைக் கிளப்பினாள்.
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X