அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தோல்வியை கண்டு முடங்கி விடவில்லை': ஸ்டாலின்

Added : ஜூன் 18, 2014 | கருத்துகள் (4)
Advertisement
'தோல்வியை கண்டு முடங்கி விடவில்லை': ஸ்டாலின்

''தேர்தல் தோல்வியை கண்டு, தி.மு.க., மூலையில் முடங்கி விடவில்லை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.

சென்னையில் நடந்த தி.மு.க., பிரமுகர் ஏழுமலை இல்லத் திருமண விழாவில், ஸ்டாலின் பேசியதாவது: லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து, பலரும் இந்த விழாவில் பேசினர். தி.மு.க., என்றைக்கும் மக்களுக்காக பாடுபடும் கட்சி. வெற்றி பெறுவதை, வெறியுடன் கொண்டாடுவதும் கிடையாது; தோல்வி கண்டு மூலையில் முடங்கி விடுவதும் கிடையாது. இன்றைக்கு, தமிழகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை, இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் வெளியிட்ட ஒரு செய்தியில் காணலாம். தமிழகத்தில் சட்டம் இருக்கிறது... ஆனால், ஒழுங்கு இல்லை எனக் கூறியுள்ளார். அந்த அளவுக்கு தான், தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் உள்ளது. இதற்கு பரிகாரம் (சட்டசபை தேர்தல்) காணும் நாள் வெகு விரைவிலேயே வரவுள்ளது. அதற்கு நாம் தயாராக வேண்டும்; கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasanthan - Moscow,ரஷ்யா
19-ஜூன்-201406:13:52 IST Report Abuse
vasanthan விடுங்கள் வயோதிக வாலிபர் சங்க தலிவரே. சண்டையில் கிழியாத சட்டை இருக்கா? நல்லா கேட்குரானுக டிடைலு.. விடுங்க பாஸ் இதெல்லாம் ஜகஜம்..
Rate this:
Share this comment
Cancel
bhavani boopathy - Adyar,இந்தியா
19-ஜூன்-201406:05:11 IST Report Abuse
bhavani boopathy துவளாதது தான் உங்கள் பலம்...
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
19-ஜூன்-201405:38:22 IST Report Abuse
Krishnamoorthi A N திருமண விழாவிற்கு சென்றால் மணமக்களை வாழ்த்தி விருந்து சாப்பிட்டு வருவதுதான் பண்பாடு. அங்கு அரசியல் எதற்கு?
Rate this:
Share this comment
vasanthan - Moscow,ரஷ்யா
19-ஜூன்-201406:17:07 IST Report Abuse
vasanthanகட்டுமரத்தை போல தானே கைப்புள்ளயும் இருக்கும். கட்டுமரம் எழவு வீட்டில் கூட அரசியல் பேசும். கைபுள்ளை அப்பனுக்கு தப்பாமல் கல்யாண வீட்டில் ஒப்பாரி வைக்கிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X