தமிழகத்தில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரிப்பு: திருமாவளவன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரிப்பு: திருமாவளவன்

Added : ஜூன் 18, 2014 | கருத்துகள் (1)
Advertisement

மதுரை: 'தமிழகத்தில் தலித்துகள் மீதான வன்முறை பெருகி உள்ளது' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரி, மரக்காணம் வன்முறையை தொடர்ந்து, தமிழகத்தில் பரவலாக தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் பெருகி உள்ளன. கடந்த 6 மாதங்களில் 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.தர்மபுரி சம்பவத்தில், குற்றவாளிகளை அரசு கைது செய்திருந்தால், இந்த வன்முறையை ஓரளவு கட்டுப்படுத்தி இருக்கலாம். உ.பி.,யில் 2 சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொல்லப்பட்டனர். இதுபற்றி முலாயம்சிங் தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது. அகிலேஷ்யாதவ் முதல்வரானபின், தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது. எனவே உ.பி., அரசை கலைக்க வேண்டும். தமிழகத்தில் பொள்ளாச்சியில் 2 சிறுமிகள் வன்புணர்ச்சி செய்யப்பட்டது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது. பெண்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதன்பின், கலெக்டர் அலுவலகம் எதிரே திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்மாவட்ட ஜாதி பிரச்னைகள், உ.பி.,யில் சிறுமிகள் கற்பழித்து கொலை செய்ததை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் அன்பழகன், செல்லப்பாண்டியன், அய்யங்காளை, கனியமுதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arunachalam, Arunn - Hongkong,சீனா
19-ஜூன்-201412:59:46 IST Report Abuse
Arunachalam, Arunn இதையே சொல்லி பதவியும் பணமும் சேர்த்து வசிதியான வாழ்க்கை வாழும் இந்த கிழவன், தாழ்த்தப்பட்ட மக்கள் எதனை பேருக்கு உதிவி செய்து இருக்கிறார்?? இவரின் வாழ்வு ஆதாரம் உயர்ந்த பின்னரும் இன்னும் இந்த சலுகைகளை ஏன் தனக்கு பயன்படுத்தி வருகிறார்??? இதுவரை இந்த பயனை அடையாதவர்கள் அடைய இவர் ஏன் வழிவிட கூடாது?? பயன்பெற்ற குடும்பமே பயனை அனுபவதிக்கொண்டு இருந்தால், பயன் பெறவேண்டிய இன்னும் பலர் எப்பொழுது பயன் அடைவது?? இந்த கொள்கையில் விரைவில் மாற்றம் வந்தால் ஒழிய பின் தங்கிய பலர் எப்பொழுதும் இந்த பயனை அடையப்போவதும் இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X