ராஜ்யசபா இடைத்தேர்தல்: ரஜினி ரசிகர் மனு தாக்கல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜ்யசபா இடைத்தேர்தல்: ரஜினி ரசிகர் மனு தாக்கல்

Added : ஜூன் 18, 2014
Advertisement

சென்னை: ராஜ்யசபா இடைத்தேர்தலில், ரஜினி ரசிகர் சுயேச்சை வேட்பாளராக, நேற்று, மனுதாக்கல் செய்தார்.
தமிழகத்தில், காலியாக உள்ள, ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு, அடுத்த மாதம் 3ம் தேதி, தேர்தல் நடைபெறும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல், கடந்த 16ம் தேதி துவங்கியது. முதல் நாள், அ.தி.மு.க., வேட்பாளர் நவநீத கிருஷ்ணன், இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள், மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம், யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. நேற்று, ரஜினி ரசிகரான, ராஜபாளையத்தை சேர்ந்த மன்மதன், சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். இவர் ராஜபாளையம் ஒன்றிய ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக இருப்பதாகவும் தெரிவித்தார். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி, ஏற்கனவே, 34 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளதாகவும், தற்போது அதே கோரிக்கையை வலியுறுத்தி, ராஜ்யசபா தேர்தலுக்கு, மனு தாக்கல் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்பு மனுவை, குறைந்தது 10 எம்.எல்.ஏ.,க்கள் முன்மொழிய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அவர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. இருந்தும், 10 எம்.எல்.ஏ.,க்களின் முன்மொழிவு இல்லாமலேயே மன்மதன் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். வேட்பு மனு தள்ளுபடியானாலும், டிபாசிட் பணம் திரும்ப வழங்கப்படும் என்பதால், பலர் சுய விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு, இப்படி மனு தாக்கல் செய்வதாக, சட்டசபை செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X