பொது செய்தி

தமிழ்நாடு

இளம் சாதனையாளர் விருது வழங்கும் விழா

Added : ஜூன் 19, 2014
Share
Advertisement

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரியில், பள்ளி கல்வி துறை அருப்புக்கோட்டை கல்வி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் மற்றும் சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரி இணைந்து , "இளம் ச ாதனையாளர் 2014 விருது' வழங்கும் விழா நடந்தது. 10 ம் வகுப்பு பொது தேர்வில், பள்ளி வாயிலாக முதல் 3 இடத்தை பெற்ற மாணவர்களுக்கு பரிசும், உயர் கல்வி பெறுவதற்குரிய வழிகாட்டுதலும் நடந்தது. விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஆர்.டி.ஒ., உதயகுமார், முதல்வர் சிவக்குமார், கல்லூரி செயலர் ரவிபாபு, தலைவர் மல்லையன், பொருளாளர் கரிவீரன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கருப்பசாமி வரவேற்றார்.
மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கி, முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பேசுகையில், ""விருதுநகர் மாவட்டத்தில்,10 ம் வகுப்பு பொது தேர்வில், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டம் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த கல்வி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதம் அதிகம் உள்ளது. இதற்கு உழைத்த அனைத்து ஆசிரியர்களை பாராட்டுகிறேன். இந்த மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள், வருகின்ற கல்வியாண்டில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று, விருதுநகர் மாவட்டத்தை மீண்டும் முதல் இடத்திற்கு கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும்,'' என்றார். ஸ்ரீவி., மாவட்ட கல்வி அலுவலர் விஷ்ணுதாஸ், விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன், மாவட்ட நூலக அலுவலர் ஜெகதீசன், பேராசிரியர்கள் முத்துக்குமார், சந்திரா, ஆசிரியர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர். பேராசிரியர் சீனிவாஸ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X