பதிவு செய்த நாள் :
கருத்துகள் (96)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னையில் நேற்று முன்தினம் இந்து முன்னணி பிரமுகர், சுரேஷ்குமார் படுகொலை உட்பட, ஒரு ஆண்டில் நான்கு பேர், வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவங்களால், இந்து அமைப்புகளின் பிரமுகர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவி வருகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகர், நேதாஜி சாலையில், கடந்தாண்டு, ஜூன் மாதம், 26ம் தேதி, இந்து முன்னணி பிரமுகரான, பால் வியாபாரி சுரேஷ்குமார், நள்ளிரவில் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், ஈடுபட்டவர்கள் குறித்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா பதிவுகள், தகவல் அளித்தாலும், சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க முடியவில்லை.இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்கும் முன், ஜூலை மாதம், முதல் தேதி, வேலூரில், இந்து முன்னணி பிரமுகரான, வெள்ளையப்பன் அதே முறையில், வெட்டிக் கொல்லப்பட்டார். இரண்டு சம்பவங்களும் ஒரே முறையில் அரங்கேற்றப்பட்டிருக்க, போலீசார் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க, தனிப்படைகளை அமைத்து தேடிக் கொண்டிருந்தனர். இதற்கிடையில், ஜூலை, 19ம் தேதி, இரவு சேலத்தில், பா.ஜ., மாநில செயலர், ஆடிட்டர் ரமேஷ், தன் அலுவலகத்தில் இருந்து இறங்கி வரும்போது, மூவர் கும்பல் அவரை வெட்டிச் சாய்த்தது. இந்த சம்பவமும், முந்தைய சம்பவங்களை போல் இருக்க, போலீசார் உஷாராகினர்.இதற்கிடையில், இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க, சிறப்பு புலனாய்வுப் பிரிவை அமைத்து முதல்வர் உத்தரவிட்டார். சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் முதல்கட்ட விசாரணையில், தீவிரவாதிகளான, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் உள்ளிட்டோரின் கைவரிசை என்பது தெரியவந்தது. இவர்கள் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு பரிசையும் அறிவித்த நிலையில், சென்னையில், இந்து தலைவரை சாய்க்க குறிவைத்த, 'போலீஸ்' பக்ருதீன் பிடிபட்டான். அவன் அளித்த தகவலின் பேரில், ஆந்திர மாநிலம் சித்தூரில் பதுங்கியிருந்த, பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை துப்பாக்கி முனையில் பிடித்தனர். அவர்கள் தற்போது, வேலூர் சிறையில் உள்ளனர்.போலீஸ் பக்ருதீனிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர்கள், 'ஹிட் லிஸ்ட்'டில் மேலும் பலர் இருப்பதாக தெரிவித்திருந்தான்.

இதுவரை, போலீசிடம் சிக்காமல் இருக்கும், அபுபக்கர் சித்திக்கை, தற்போது, போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இடையில், சென்னை கவுகாத்தி ரயிலில் நடந்த குண்டு வெடிப்பிற்கும், சித்திக்கிற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசுக்கு உள்ளது. முன்னதாக, இந்து அமைப்புகளின் பிரமுகர்கள் கொல்லப்பட்டபோது, மற்ற இந்து

அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின், படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் தான், நேற்று முன்தினம், இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ் குமாரை, மூவர் கும்பல் வெட்டிச் சாய்த்துள்ளது. இந்த சம்பவம், தமிழகத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டவர்கள் சிறையில் உள்ள நிலையில், இந்த சம்பவத்தை நிகழ்த்தியது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசிடம் சிக்காமல் இருக்கும், அபுபக்கர் சித்திக்கின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகமும் போலீசார் மத்தியில் உள்ளது.

இந்நிலையில், கொலையாளிகளை பிடிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில எல்லைப்பகுதிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சென்னையில், சுரேஷ்குமார் உடலை கொண்டு சென்றபோது, பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடந்ததால், மசூதிகள், தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு ஆண்டில், இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு நேர்ந்த இந்த கொடுமை, அவர்களுக்கு பாதுகாப்பில்லையோ என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.கொலை நடந்தது எப்படி? சென்னை, அம்பத்தூர் அடுத்த, மண்ணூர்பேட்டை, மலையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 48. அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே, காவல் உதவி மையம் பின்புறம் ஐயப்பா டெலிகாம் என்ற பெயரில், டெலிபோன் பூத் நடத்தி வந்தார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி தலைவராகவும் இருந்தார். அவருக்கு புவனேஸ்வரி, 31. என்ற மனைவியும் கிருஷ்ணவேணி, 10, கிரண்மயி, 8. என, இரு மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம், இரவு 10:30 மணிக்கு, கடையை மூடினார். அப்போது அவரது கடைக்கு, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், அவரை சரமாரியாக வெட்டினர். தடுக்க முயன்ற நண்பர் ரவிக்கும் வெட்டு விழுந்தது.

Advertisement

வந்தவர்கள் டூவீலரில் தப்பினர். தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், உயிருக்கு போராடிய சுரேஷ்குமாரை, அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால், சிகிச்சை பலனின்றி இரவு, 11:00 மணிக்கு இறந்தார். காவல் உதவி மையம் எதிரே, போக்குவரத்து சிக்னல், கம்பத்தில் நான்கு திசைகளையும் கண்காணிக்கும் வகையில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. கண்காணிப்பு கேமராவில் சம்பவம் குறித்த காட்சிகள் பதிவாகி உள்ளது என்றும், பதிவாகவில்லை என்றும் குழப்பமான தகவலை போலீசார் தெரிவித்தனர்.சந்தேகம் கிளப்புகிறார் வானதி: 'ஆடிட்டர்' ரமேஷ் உள்ளிட்டோரை கொலை செய்த கும்பல் தான், சுரேஷ்குமாரை கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிப்பதாக, வானதி சீனிவாசன் தெரிவித்தார். அம்பத்தூரில் படுகொலை செய்யப்பட்ட, இந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமாரின் பிரேத பரிசோதனை நடந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, நேற்று, பா.ஜ., மாநில பொதுச்செயலர் வானதி சீனிவாசன் வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: சுரேஷ்குமார் கொல்லப்பட்ட விதம், கடந்த ஆண்டு நடந்த ஆடிட்டர் ரமேஷ், வேலூர் வெள்ளையப்பன் உள்ளிட்டோரை கொலை செய்து இருப்பது போல் இருக்கிறது. பயங்கரவாத. கும்பல் தான் இந்த கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளனர் என, சந்தேகிக்கிறோம். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் விரைந்து கைது செய்ய வேண்டும்.


- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (96)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velladurai.A - gomathimuthupuram,இந்தியா
20-ஜூன்-201417:52:07 IST Report Abuse
Velladurai.A தேவாலயம் மீது கல்லெறிதல் தவறானது. முஸ்லிம்களை குற்றம் சுமர்த்துவது எந்த வகையிலும் சரியானதாக இருக்காது. உண்மையிலே இஸ்லாமிய மதம் இந்த மாதிரி கொலைகளை ஆதரிக்கவும் இல்லை. பள்ளிகூடங்களில் சேர்க்கும்போது படிவத்தில் ஜாதி கட்டத்தை எடுக்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா
20-ஜூன்-201417:51:35 IST Report Abuse
Arun Kumar அரசியலை ஒரு பாகுபாடு இல்லாத மக்கள் சேவையாக மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர மதம் + ஜாதி + இனம் இம்மூன்றையும் அரசியலோடு முக்கியத்துவம் கொடுத்து சேர்த்தால் இந்நிலமைதான் நேரிடும்.
Rate this:
Share this comment
Cancel
Sham Keen - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201417:45:15 IST Report Abuse
Sham Keen இந்தியா முழுவதிலும் எங்கேனும் ஒரு ஹிந்து தாக்கப்பட்டால் அதற்கு முஸ்லிம் தான் காரணம் என்றும் முஸ்லிம் தாக்கப்பட்டால் ஹிந்து தான் காரணம் என்றும் உடனடியாக மீடியாக்களில் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு இந்த இரு மதத்தினருக்கு இடையில் தலை முறை தலை முறையாக தொடரும்படியான ஆழமான பகைமை உணர்வு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த ஆபத்தான விஷயத்தை அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்கு - சுய லாபத்திற்கு பயன்படுத்தி கொள்கின்றனர். தமிழக அரசு தாமதம் இன்றி போர்க்கால வேகத்தில் செயல் பட்டு குற்றவாளிகளை கைது செய்வதோடு, தனி விரைவு நீதி மன்றம் அமைத்து குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் மரண தண்டனை கொடுக்க வழி செய்ய வேண்டும். ஹிந்துவுக்கு முஸ்லிமோ - முஸ்லிமுக்கு ஹிந்துவோ எதிரியாக இல்லை என்பதை ஆதாரங்களுடனும் உரிய செயல்பாடுகளுடனும் நிரூபித்து இருவருக்குள்ளும் கணன்று கொண்டிருக்கும் நெருப்பை நீரூற்றி குளிர செய்யவேண்டியது காவல் துறையினரின் கட்டாய கடமை.
Rate this:
Share this comment
Cancel
nasurudeen - tabuk,சவுதி அரேபியா
20-ஜூன்-201416:57:10 IST Report Abuse
nasurudeen போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், இவர்கள் எல்லாம் போலீஸ் காவலில் இருக்கும்போது இந்தக் கொலைகள் நடக்கிறது என்றால்??? இதற்க்கு மதச்சாயம் பூசாமல் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் முயற்சிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு யாரையாவது இரண்டு முஸ்லிம்களை கைது செய்து உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விட்டுவிடக் கூடாது. மீண்டும் வேறு யாராவது தலைவர் கொல்லபடுவார்..
Rate this:
Share this comment
Cancel
Kathiresasn Sornavel - Mumbai,இந்தியா
20-ஜூன்-201416:36:23 IST Report Abuse
Kathiresasn Sornavel ஹிந்துகளுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்க தவறினால்....கொலையாளிகளை பிடிக்கவில்லை என்றால்....2016 தேர்தலில், தமிழகத்தில் தனி பலத்துடன் தாமரை மலரும்..........
Rate this:
Share this comment
Cancel
rk nataraj - madurai,இந்தியா
20-ஜூன்-201415:59:21 IST Report Abuse
rk nataraj 12 கோடி வழக்குகள் தேக்கம் என்றால் என்ன அர்த்தம். யார் பொறுப்பு. இப்ப கூட ஐ நா, இந்தியாவில் பெண் கொடுமைகளுக்கு,சரியான தன்டனை இல்லை என்று கூறி இருக்கிறது. முழுக்க முழுக்க நீதி மன்றமே பொறுப்பு. பிஞ்சு குழந்தைகளை மானபங்கம் செய்தவர்களுக்கு தூக்கு, அல்லது என்கவுண்டர் போட முடியாதா?
Rate this:
Share this comment
Cancel
tajdeen - trichy,இந்தியா
20-ஜூன்-201415:11:56 IST Report Abuse
tajdeen ஒரு கட்சி வளரும் போது, உள்ளேயும் வெளியேயும் இருந்து ஆபத்து வரும்.
Rate this:
Share this comment
Cancel
Manoharan Prushothaman - mayiladutharai,இந்தியா
20-ஜூன்-201414:35:02 IST Report Abuse
Manoharan Prushothaman இந்து இயக்கங்களின் தலைவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பதிலுக்கு ஒரு முஸ்லீம் தலைவர் கூட தாக்கப்பட்டது கிடையாது. முஸ்லிம் மத மாட்சி தலைவர்கள் கொலையாளிகளை தீவிரவாதிகள் என்று கூறக்கூடாது என்று சொல்லி வருகிறார். அதிலும் விரோதிகளே இல்லாத நல்ல நடத்தை உடைய இந்து தலைவர்கள் கொலை செயப்படுகிறார்கள். முஸ்லீம் மக்கள் அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இதை நினைகிறார்கள். முஸ்லீம் மத தலைவர்களும் மறைமுக ஆதரவும் அளித்து வருகின்றனர். முஸ்லிம்களின் இந்த நடவடிக்கை தொடர்ந்தால் தமிழ் நாடு விரைவில் இந்து கட்சிகளின் ஆதரவு நாடாக மாறிவிடும்
Rate this:
Share this comment
Cancel
Willson Prabu - Bangalore,இந்தியா
20-ஜூன்-201414:33:09 IST Report Abuse
Willson Prabu கேவலம் ஓட்டுக்காக இது போன்று ஹிந்துக்கள் கொலைபடுவதை கண்டுகொள்ளாமல், கொலையாளிகளின் சமுக போரட்டத்திற்கு அதரவு கொடுக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை இந்த நிலை தொடரும்
Rate this:
Share this comment
Cancel
Tamil Nesan - tamil nadu.podakkudi,இந்தியா
20-ஜூன்-201414:23:11 IST Report Abuse
Tamil Nesan 20 சதவிகிதம் உள்ள முஸ்லிம் மக்கள் 80 சதவிகிதம் உள்ள மக்களை பகைத்து கொண்டால் யாருக்கு இழப்பு.....ஒரு சிலர் செய்யும் இந்த செயல்கள் ஒட்டு மொத்த இனத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும் என்பதை எப்பொழுது உணர போகிறார்கள்........அவரவர் அவர் சார்ந்த மதத்தை எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து பேசட்டும் ,,,மற்ற மதத்தினரை இழிவு படுத்தும்போது தான் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X