நாரிமன் ஹவுஸ் மீதான தாக்குதல்: சர்வதேச பிரச்னையாக்க சதி

Updated : ஜூன் 22, 2014 | Added : ஜூன் 22, 2014 | கருத்துகள் (1) | |
Advertisement
நாரிமனில் நாசவேலை: 180. இம்ரான் பாபர் - அபு அக்ஸா (இறந்த குற்றவாளி எண் 2) மற்றும் நசிர் - அபு உமர் (இறந்த குற்றவாளி எண் 3) (நான்கு பேர் - 2 ஜோடிகள்) பத்வார் பார்க்கில் இருந்து நடை பயணமாக நாரிமன் ஹவுஸ்-க்குச் சென்றனர். முதலில் கொலாபா, எஸ்.பி.எஸ். சாலையில் உள்ள எக்ஸ்ப்ரஸ் பெட்ரோல் பம்ப் என்ற இடத்தில் ஒரு ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டை பதித்தார்கள். அங்கிருந்து நாரிமன் ஹவுஸ் சென்று,
நாரிமன் ஹவுஸ் மீதான தாக்குதல்: சர்வதேச பிரச்னையாக்க சதி

நாரிமனில் நாசவேலை: 180. இம்ரான் பாபர் - அபு அக்ஸா (இறந்த குற்றவாளி எண் 2) மற்றும் நசிர் - அபு உமர் (இறந்த குற்றவாளி எண் 3) (நான்கு பேர் - 2 ஜோடிகள்) பத்வார் பார்க்கில் இருந்து நடை பயணமாக நாரிமன் ஹவுஸ்-க்குச் சென்றனர். முதலில் கொலாபா, எஸ்.பி.எஸ். சாலையில் உள்ள எக்ஸ்ப்ரஸ் பெட்ரோல் பம்ப் என்ற இடத்தில் ஒரு ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டை பதித்தார்கள். அங்கிருந்து நாரிமன் ஹவுஸ் சென்று, தரைதளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மாடிப் படிகளுக்குக் கீழே இரண்டாவது ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டைப் பதித்தார்கள்.181. பின்னர் நாரிமன் ஹவுஸ் மேல் தளங்களுக்குச் சுலபமாகச் சென்றார்கள். தரை தளத்துடன் சேர்ந்து, நரிமான் ஹவுஸ் 5 மாடிக் கட்டிடம். தற்காலிக இடத்தேவைக்கும், வழிபாடு செய்யவும் இஸ்ரேலிய மக்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். இங்கு இஸ்ரேலிய குரு, கேப்ரியல் ஹோல்ட்ஸ் பெர்ஜ் தனது மனைவி ரிங்கா மற்றும் இரண்டு வயது மகன் மோஷேயுடன் நிரந்தரமாக வசித்து வந்தார். அங்கே இரண்டு ஊழியர்கள் இருந்தனர். ஒருவர் காஸி ஜாகிர் உசைன் (பி.டபிள்யூ. 239) இவருக்குத் தரை தளத்தில் வசிப்பிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றவர் ஸாந்த்ரா எனும் பெண்மணி. இங்கு ஒரு காவல்காரரும் (வாட்ச்மேன்) இருந்தார். பெயர் கேசரி. ஆனால் 2008 நவம்பர் 26 சம்பவ தினத்தில் இவர் இங்கு ட்யூடியில் இல்லை.
182. சம்பவ நாளன்று நாரிமன் ஹவுஸில் ஹோல்ட்பர்க் தம்பதியருடன், இரண்டு ஆண்கள், இரண்டு பெண்மணிகள் விருந்தினராக தங்கியிருந்தனர்.


இரவு முழுவதும் துப்பாக்கிச் சப்தம்:

183. 2008 நவம்பர் 26ம் நாள் அங்கு இரவு 8.00 மணிக்கு உணவு நேரம் முடிந்தது. 9.45 மணிக்கு (இரவு) உசைன் மற்றும் சாந்த்ரா இருவரும் அன்றைய நாள் பணிகளை முடித்து விட்டுக் கீழே இறங்கினார்கள். முதல், இரண்டாம் தளங்களுக்கு இடையில், ஒருவன் துப்பாக்கியுடன் நிற்பதை உசைன் பார்த்தார். அவரை நோக்கி அவன் சுட்டான். ஆனால் அது உசைனைத் தாக்கவில்லை. உசைன் உடனே முதல் தளத்துக்குத் திரும்பினார். அங்கிருந்த அறையில் சாந்த்ரா இருந்தாள். அந்த அறையை அடைந்ததும் உசைன் அறையை உட்புறம் தாழிட்டார். அப்போது கேப்ரியல் ரிங்கா மற்றும் வந்திருந்த நான்கு விருந்தாளிகள் இரண்டாவது தளத்தில் இருந்தனர். சாமான்களை அறையில் புகுந்து, உட்புறம் தாழிட்டு, விளக்குகளை அனைத்து விட்டு மறைந்து கொண்டனர். மறுநாள் 27.11.2008 பகல் 11.00 மணிக்கு வெளியில் வந்தனர். இரவு முழுவதும்துப்பாக்கி சத்தம் அந்தக் கட்டிடத்தின் உள்ளிருந்து கேட்டுக் கொண்டே இருந்தது. அவர்கள் வெளியே வந்தபோது இரண்டாவது தளத்தில் குழந்தை மோஷி அழும் குரலைக் கேட்டார்கள். உடனே இரண்டாவது தளத்துக்கு ஓடினார்கள். அழும் குழந்தை மோஷியாவை சாந்த்ரா எடுத்துக் கொள்ள இருவரும் திரும்பினார்கள். நரிமான் ஹவுசில் இருந்து வெளியே வந்தவுடன் உடனே கொலாப காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
184. அதீதமான தைரியம், மனிதாபிமானம், எஜமான விசுவாசம் ஆகிய அவர்களது பண்புகள், மரணத்தூதின் பிடியில், பயங்கரவாதிகள் பிடியில் இருந்த குழந்தை மோஷியைக் காப்பாற்றியது.


பணய கைதிகளாக்க திட்டம்:

185. சொந்த உயிருக்கே ஆபத்து முன்னால் இருந்த போதிலும், அதைத் துச்சமாக மதித்து உயிரைக் காப்பாற்றிய நிகழ்ச்சி ஒரு மனித மனதின் அற்புதக் குணாதிசயங்களுக்கு ஒரு சிறந்த உதாரணம். ஆனால் நாரிமன் ஹவுசில் சோகமான படுகொலைகள் நிகழ்ந்து விட்டன. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இரண்டு பயங்கரவாதிகளும் கேப்ரியல், ரிங்கா மற்றும் இரண்டு விருந்தினர்களையும் பணயக் கைதிகளாகச் சிறைப்படுத்தினார்கள். அவர்களைக் கருவியாகக் கொண்டு இந்திய அதிகாரிகளிடம் பேரம் பேசலாமென்று நினைத்தனர். ஆனால் பாதுகாப்புப் படையின் தாக்குதல் தீவிரமானதால், இவர்கள் ஒரு சுமையாகி விடுவார்கள் என்று முடிவு செய்து தங்களது பணயக் கைதிகளை இவர்கள் கொன்று விட்டார்கள்.


இடமாறியும் இறந்த இருவர்:

186. இந்த விபரீதமான சோக நிகழ்ச்சியில் நாரிமன் ஹவுசில் இருந்தவர்கள்தவிர, வேறு இரண்டு பேர் உயிரிழந்து விட்டனர்.
187. முகமது சலீம் ஹர்ஹர்வாலா (பி.டபிள்யூ.206) தனது குடும்பத்தாருடன் கொலாப எஸ்பிஎஸ் சாலையில் உள்ள, பரிதுன் கோர்ட் கட்டிடத்தில் 73/4 கதவு இலக்கம் கொண்ட வீட்டில் வசித்து வருகிறார். இது நாரிமன் ஹவுசுக்கு மிக அருகாமையில் உள்ளது. நாரிமன் ஹவுசில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பயந்து, கொலாபா கோர்ட் 4வது மாடிக்குத் தனது குடும்பத்துடன் அவர் இடம் மாறினார். ஆனால் துரதிஷ்ட வசமாக இதுவே மரண முடிவாகப் போய்விட்டது. கொலாபா ஃப்ளாட்டில் அவரது பெற்றோர்கள், நாரிமன் ஹவுசை நோக்கியிருந்த ஒரு ஜன்னல் அருகே நின்றிருந்தனர். இரவு சுமார் 10.30 மணிக்கு நாரிமன் ஹவுசில் இருந்து பாய்ந்த புல்லட்டுகள் அவரது பெற்றோர்களைத் தாக்கின. அவர்களை உடனே செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் வழியிலேயே இறந்து விட்டனரென்று மருத்துவமனை டாக்டர்கள் அறிவித்தனர்.


பணயக்கைதிக்கு நடத்திய பாடம்:

188. நாரிமன் ஹவுசில் இருந்து இரண்டு பயங்கரவாதிகளும் எல்லா திசைகளையும் நோக்கிச் சுட்டார்கள். அருகிலிருந்த கட்டிடங்கள், சாலைகள், சந்துகளை நோக்கிக் கையெறி குண்டுகளை வீசினார்கள். இதில் பலர் காயமடைந்தனர். இந்த நாரிமன் ஹவுஸ் சம்பவத்தில் இன்னொரு அம்சமும் உள்ளது. இதை நமது தீர்ப்பின் பிற்பகுதியில் விரிவாக காணலாம்.
நாரிமன் ஹவுசில் நுழைந்த இரண்டு பயங்கரவாதிகளும் குறிப்பாக இம்ரான்பப்பார், எல்லைக்கு அப்பாலுள்ள தங்களது சகாக்களுடன் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தனர். ஒரு கட்டடத்தில் பணயக் கைதிகளில் ஒருவரான, மெக்சிகோவைச் சேர்ந்த ஹ்வார்ஸ் ப்ளாட் ரோபினேவிக் என்ற பெண் மணியை முன்வைத்து, இந்திய அதிகாரிகளுடன் பேச்சு ஆரம்பிக்க முயன்றனர். தொலைபேசியில் அவர்களுடன் என்ன பேச வேண்டுமென்று அந்தப் பெண்ணுக்குப் பாடம் நடத்தப்பட்டது. தனது நிலைமை, தன்னைச் சிறைப்பிடித்தவர்கள் பற்றிய நிலைமை பற்றி அப்பெண் பேசக்கூடாது, எத்தனை பேர் பணயக் கைதிகள் என்று சொல்லக் கூடாது, பாதுகாப்புப் படைகளின் எதிர்த்தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும், தன்னை சிறைப் பிடித்தவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், பணயக் கைதிகளைக் காப்பாற்ற வேண்டும், என்று மட்டுமே அவள் பேச வேண்டுமென்று பயங்கரவாதிகள் அப்பெண்ணுக்குப் பாடம் நடத்தினார்கள். இந்தப் பெண் இறுதியில் கொல்லப்பட்டு விட்டார்.
189. தனது கூட்டாளிகள் மற்றும் சகாக்களோடு தொடர்பு கொண்டிருந்த அதே சமயம், இம்ரான் பப்பார், இந்தியாவின் பிரபலமான இந்தியா டி.வி சேனலுடன் தொடர்பு கொண்டு பேசினான். மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த லெவி என்பவருடன் பேசினான். இவர் தன்னை ஒரு மத்தியஸ்தராகக் காட்டிக் கொண்டு வந்தார். யூதர்களான பணயக் கைதிகள் உயிரைக் காப்பாற்ற முயன்றார்.
190. நாரிமன் ஹவுசில் நுழைந்து ஒளிந்து கொண்டிருந்த இம்ரான் பப்பார் - அபு அக்ஸா, நசீர் - அபு உமர் ஆகிய 2 ஜோடி - நான்கு பயங்கரவாதிகளும் 2008, நவம்பர் 28 இரவு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். ஆனால் பயங்கரவாதிகள் 5 அயல்நாட்டினர் உட்பட ஒன்பது பேரைக் கொன்று விட்டனர். இவர்களால் 7 பேர் காயமடைந்தனர்.


ஹோட்டல் ஓபிராய் : இறந்தவர்கள் 35, காயமுற்றோர் 24:

191. பகதுல்லா (இறந்த குற்றவாளி 7) - அப்துல் ரகுமான், சோட்டா-சாகிப் (இறந்த குற்றவாளி 6) இருவரும் இரவு சுமார் 9.55 மணிக்கு 2008 நவம்பர் 26ம் தேதி ஓபிராய் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். ஓட்டல் வரவேற்பறையில் கண்மூடித்தனமாகச் சுட ஆரம்பித்தனர். ஹோட்டல் சிசிடிவி கேமராவில் ஒரு ஹோட்டல் ஊழியர் வரவேற்பு மேஜையருகே கதவை திறந்து கொண்டு வந்து போய்க் கொண்டிருப்பது தெரிகிறது. துப்பாக்கிச் சூட்டில் அவர் அடிபட்டுத் தரையில் விழுந்தார். பின்னர் ஹோட்டலின் பிரதான வரவேற்புப் பகுதியில் இருந்து சிற்றுண்டி அறைக்குள் புகுந்து கண்மூடித்தனமாகச் சுட்டார்கள். அவர்களது ஏகே 47 மிருகத்தனமாக நடமாடியது. ஹோட்டலின் காந்தார் சிற்றுண்டிப் பிரிவிலிருந்த ஊழியர்கள் பயங்கரவாதிகள் சுடுவதைப் பார்த்தார்கள். அப்போது அங்கு 50-60 பேர் உணவருந்திக் கொண்டிருந்தனர். ஊழியர்கள் உடனே சிற்றுண்டி அறைக்கதவை உள்ளிருந்து தாழிட்டனர். பின்கதவு வழியாக அனைவரையும் வெளியேற்ற ஆரம்பித்தனர். லாபியில் இருந்த பயங்கரவாதிகள் சிற்றுண்டி அறையை நோக்கி விரைந்தனர். ஆனால் அது உட்புறம் தாளிடப்பட்டிருந்தது. மூடிய கதவுகளை நோக்கித் தீவிரவாதிகள் சுட்டனர். கண்ணாடிக் கதவுகளைத் துளைத்துக் கொண்டு ஒரு புல்லட் தினாஜ் சர்மா என்ற பெண் ஊழியரின் வலது தோள் பட்டையைத் தாக்கியது. இறுதியாகக் கதவை உடைத்துக் கொண்ட காந்தார் சிற்றுண்டி அறையில் தீவிரவாதிகள் நுழைந்து விட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த விருந்தாளிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டனர். ஹோட்டலின் இரண்டு ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் ஜோர்டன் மற்றும் ப்ரதீப் ராம்மூர்த்தி பெங்கலோர்கார் ஆகிய இருவர். தப்பி ஓட முயன்றால் சுட்டு விடுவதாகப் பயங்கரவாதிகள் மிரட்டினார்கள். அங்கிருந்த மேஜைகளின், பிற பர்னிசர் மீது அங்கிருந்த பாரில் இருந்த மதுபானத்தை அவற்றின் மீது ஊற்றுமாறு பணித்தார்கள். ஜோர்டனிடம் ஒரு லைட்டரைக் கொடுத்து, மதுபானத்தால் நனைக்கப்பட்டிருந்த பர்னிச்சர்களுக்கு தீவைக்குமாறு கூறினார்கள். ஆனால் லைட்டர் வேலை செய்யவில்லை. தீக்குச்சியால் கொளுத்துமாறு பயங்கரவாதிகள் கூற, ஜோர்டென், தனது பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டி எடுத்து மேசைத் துøணியைக் கொளுத்து முயன்றான். ஆனால் பயத்தில் நடுங்கி யுவன் தீக்குச்சியைக் கொளுத்தும் போது தனது கைகளையே சுட்டுக் கொண்டு அலறினான். அவனது இயலாமையால் கோபமடைந்த பயங்கரவாதிகள் அவனை அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்று விட்டனர். பின்னர் பெங்கலோர்கார்-ஐக் கூப்பிட்டு அங்கிருந்த பர்னிசர்களுக்குத் தீ வைக்குமாறு கூறினார்கள். அவனும் அவ்வாறு செய்தான். பயங்கரவாதிகள் அவனை அழைத்துப் பெரிய மனிதர்கள் விஐபிகள் தங்கியுள்ள தளத்துக்கு இட்டுச் செல்லுமாறு பணித்தார்கள். பெங்கலோர்கார் லிப்டில் நுழைந்தார். திடீரென்று கைக்குண்டு எறிவதில் கவனம் செலுத்திய போது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்த பெங்கலோர்கார் கீழே செல்லும் பட்டனை அழுத்த லிப்ட் மூடிக் கொண்டு இறங்கத் தொடங்கியது. பயங்கரவாதிகள் லிப்டின் மீது சுட்டார்கள். இவ்வாறு பயங்கரவாதிகளிடமிருந்து சாதுர்யமாகத் தப்பி பெங்கலோர்கார் உயிர் பிழைத்துக் கொண்டார்.
192. பகதுல்லா - அப்துல் ரகுமான் சோட்டா இருவரும் மேல்தளங்களுக்கு சென்று பெரிய மனிதர்கள் - விஐபிக்கள் - தங்கியுள்ளார்களா என்று தேடினார்கள். யாரையும் காணமுடியவில்லை. அதே சமயம் அங்கே சிக்கி விட்டார்கள். பாதுகாப்புப் படை வந்துவிட்டது. 2008 நவம்பர் 28 காலை 7.00 மணிக்கு அவர்கள் பாதுகாப்பு வீரர்களுடனான சண்டையில் கொல்லப்பட்டனர்.
ஓபிராய் ஹோட்டல் துணை பாதுகாப்பு அதிகாரி ராஜேஷ் கண்பத் காடம் (பி.டபிள்யூ. 215) அளித்த சாட்சியத்தில் இந்தக் கடைசி நிமிடப் போராட்டத்தை முழுமையாகக் காணலாம். கர்னல் ரதி மற்றும் லெப்டினன்ட் கர்னல் சர்மா இருவரின் தலைமையில் வந்த நேஷனல் செக்யூரிடி கமாண்டோ படை பயங்கரவாதிகளுடன் நிகழ்த்திய எதிர்ப்பை காடம் விரிவாகத் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் பயங்கரவாதிகள் கொல்லப்படுவதற்கு முன்னால் இந்தத் தாக்குதலில் 10 வெளிநாட்டவர் உட்பட 35 பேர் பலியாகிவிட்டனர். 7 வெளிநாட்டவர் உட்பட 24 பேர் காயமடைந்தனர்.


எதிரிகளின் ஆயுத பலம்:


பயங்கரவாதிகள் (பாகிஸ்தானில் இருந்து) எடுத்து வந்த ஆயுதங்களின் தன்மை, அளவு பற்றித் தெரிந்து கொள்வதற்கு தாஜ் ஹோட்டலில் அவர்கள் கொல்லப்பட்ட பின்னர், பஞ்சநாமா ஆவணத்தின்படி அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதப் பட்டியலைப் பார்க்கலாம்.
எக்ஸிபிட் எண் 744:1) கறுப்புநிற மாகசின்கள் 7, இவற்றில் 7 ரவுண்டுகள் உயிருள்ளவை, ஒன்று காலி; 2) 132 உயிருள்ள கார்ட்ரிட்ஜுகள் கொண்ட துணிப்பை; 3) 5 கையெறி குண்டுகள்; 4) 1 புல்லட் பேயோநெட்;
194. எக்ஸிபிட் எண் 746: 1) 150 பிஸ்டல் எம்ப்டீஸ்;2) 6 பெரிய எம்ப்டீஸ்;3) 28 புல்லட்டுகள்; 4) 10 சிறிய எம்ப்டீஸ்;5) 12 பெரிய எம்ப்டீஸ்;6) 5 புல்லட்டுகள்;7) 1 கிரினேட் பின்;8) 1 சிறிய எம்ப்டி.
195. எக்ஸிபிட் எண் - 751: 1) 3 எம்ப்டீஸ்;196. எக்ஸிபிட் எண் 752;1) மேகசின் உள்ளிட்ட பிஸ்டல் 1; 2) எம்ப்டி மேகசினுடன் பிஸ்டல் 1
197. எக்ஸிபிட் எண் 757:1) 2 து 4 அங்குல அளவு கொண்ட வெடிப்பொருள் நிரம்பிய தகர டப்பா;2) 7 எம்டிகள்.
198. எக்ஸிபிட் எண் 760:1) சேதமடைந்த 4 ஏகே 47 ரைபின்கள் ஒரு ரைபின் மேகசினுடன்;2) 8. ஏகே 47 மேகசின்கள்;3) இரண்டு ஸ்டார் தயாரிப்பு பிஸ்டல்கள், ஒவ்வொன்றிலும் ஒரு மாகசின்;4) 1 தனியான பிஸ்டல் மேகசின்;5) 9 னை லூஸ் கார்ட்ரிஜ் 8;6) 7.62 னை கார்ட்ரிஜ் 6;7) 7.62 னை கார்ட்ரிஜ் 1
199. எக்ஸிபிட் எண் 763:1) பேயோனெட் 1;2) குப்பை - இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு பையில் 2 மாகசின்கள், ஒரு மாகசினில் 5 உயிருள்ள ரவுண்டுகளும், மற்றொரு மாகசினில் 2 உயிருள்ள ரவுண்டுகளும் இருந்தன.
200. எக்ஸிபிட் எண் 910:1) எம்டி கார்ட்ரிஜ் 21;2) உயிருள்ள கார்ட்ரிஜ் 3;3) உலோகத் துண்டுகள் 6;201.
எக்ஸிபிட் எண் 1125:1) பாகிஸ்தான் பெஷாவர் நகரைச் சேர்ந்த கைபர் ஆர்ம்ஸ் மேன்யு பேக்சரிங் கம்பெனியால் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் 1;2) ஏகே-47க்க உரிய மேகசின் 5, அவற்றில் 2 ப்ளாஸ்டிக் ஒட்டு டேப்புடன் இணைக்கப்பட்டது, 3 தனியாக துருப்பிடித்த நிலையில்;3) உயிருள்ள கார்ட்ரிட்ஜ் 12;4) பேயோனெட்டுகள் 2
202. பஞ்சநாமா ஆவணமூலம் பிற இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதப் பொருட்களும் குறைந்ததல்ல.


கமாண்டோக்கள் சாதித்தனர்:

இந்த இடத்தில் இன்னொரு உண்மையையும் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் பயங்கரவாதிகள் சரியான இடங்களில் நின்று கொண்டு இலக்குகளைத் தாக்கியபோது, அவர்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு வருவது சுலபமான காரியமாக இருக்கவில்லை. இந்த வேலைக்குத் தேவையான திறமை மகாராஷ்ட்ரா போலீசிடம் கொஞ்சமும் இருக்கவில்லை. இறுதியாக கடற்படை மார்கோஸ் கமாண்டோக்கள் அழைக்கப்பட வேண்டியிருந்தது. இறுதியாக, தாஜ் ஹோட்டல், ஓபிராய் ஹோட்டல் மற்றும் நாரிமன் ஹவுஸ் ஆபரேஷன்கள் நேஷனல் செக்யூரிடி கார்டுகளிடமே ஒப்படைக்கப்பட்டது. இந்த இடங்களில் அவர்கள்தான் போராடினார்கள். பயங்கரவாதிகள் அவர்களுக்கும் சரியான சவாலாகவே இருந்தனர்.
ஓபராய் பயங்கரவாதிகள் 2008 நவம்பர் 28 காலை 7.00 மணியளவில் கொல்லப்பட்டனர். நவம்பர் 28 இரவு நரிமான் ஹவுஸ் மீண்டது. நவம்பர் 29 காலை 9.00 மணிக்கு தாஜ் ஹோட்டல் மீட்கப்பட்டது.
204. லியோபோல்ட் கஃபே, ஹோட்டல் தாஜ், ஹோட்டல் ஓபிராய் மற்றும் நரிமான் ஹவுஸ் நிகழ்ச்சிகளையும், மஸகான் டாக்சி குண்டு வெடிப்பையும் ப்ராசிக்யூஷன் முழுமையாக ஆவணப் படுத்தியுள்ளது. சிஐடி ரயில் நிலையம், காமா மருத்துவமனையில் உள்ளே, வெளியே நடந்தவை, ஸ்கோடா கார் கொள்ளை, மற்றும் வினோலி சௌபாத்தி நிகழ்வுகளையும் முழுமையாகவே ஆவணப்படுத்தியுள்ளது. வினோலி சௌபாத்தி நிகழ்வு மனுதாரன் கசாப் மற்றும் இறந்துபோன் அவனது கூட்டாளி அபு இஸ்மாயில் தொடர்பானது.
205. லியோபோல்ட் கஃபே நிகழ்ச்சியில் ப்ராசிக்யூஷன் 10 சாட்சிகளை விசாரித்துள்ளது. பிற சாட்சியங்களையும் முன் வைத்துள்ளது. 10 சாட்சிகளில் 3 பேர் நிகழ்வுகளைக் கண்ணால் பார்த்தவர்கள். இவர்களில் நிலேஷ் மகேந்திர காந்தி (பி.டபிள்யூ 478) மற்றும் ப்ரகாஷ் பர்வானி (பி.டபிள்யூ 479) இருவரும் காயமடைந்தவர்கள். கொலாபா போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் சுதாகர் தத்து தேஷ்முக், பயங்கரவாதிகள் அந்த இடத்தைவிட்டு, தாஜ் ஹோட்டல் நோக்கிச் சென்ற பிறகு இங்கு வந்து சேர்ந்தார்.
206. ஹோட்டல் தாஜ் நிகழ்ச்சிகள் சம்பந்தமாகப் ப்ராசிக்யூஷன் 27 சாட்சிகளை விசாரித்தது. மேலும் இரண்டு சாட்சிகளுக்கு, குத்தால் ராஜகோபாலன் ராமமூர்த்தி (பி.டபிள்யூ 188) மற்றும் சுனில் ராஜாராம் ஜாதவ் (பி.டபிள்யூ 224) இருவரும் விசாரணை நீதிமன்றத்தில் சம்மன் மூலம் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். மேலும் அடில் ரோஹின்டன் இரானி (பி.டபிள்யூ 188)யும் விசாரிக்கப்பட்டார். இவர்கள் பயங்கரவாதிகளின் பணயக் கைதிகளாகிக் காயமடைந்தவர்கள். அன்னி இரானி, ரோஹின் டன் இரானியின் மனைவி. இவர் கணவருடன் மொபைலில் பேசியபோது அவர் பணயக் கைதியாகயிருந்தார். பயங்கரவாதிகள் இவரை மிரட்டிப் பேசியுள்ளனர். ப்ரகாஷ் சம்பத் ராவ் போய்டே ஒரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர். தாஜ் ஹோட்டலில் வெடிக்காத இரண்டு வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்தவர் இவரே. முக்கியமான இன்னொரு சாட்சி கேப்டன் அனில் ஜாக்கர் (சி.டபிள்யூ 3) இவர் என்எஸ்ஜி கமாண்டோ. மற்றவர்கள் சாதாரண சாட்சிகள்.
207. நாரிமன் ஹவுஸ் நிகழ்ச்சியில் ப்ராசிக்யூஷன் தரப்பில் 9 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இவர்களில் காஸி ஜாகீர் உசைன் (பி.டபிள்யூ 239), கமல்லீலாதர்சிங் (பி.டபிள்யூ 201), ரம்பூவால் சந்திரபதி யாதவ் (பி.டபிள்யூ 202) மற்றும் ஹன்மந்த் விஷ்ணு பண்டால்கர் (பி.டபிள்யூ 200) ஆகியோர் நிகழ்வுகளைக் கண்ணால் பார்த்த முக்கிய சாட்சிகள். இன்னொரு முக்கிய சாட்சி முகமது சலீம் ஹர்ஹர்வாலா (பி.டபிள்யூ 206). இவரது பெற்றோர்களே பயங்கரவாதிகளின் குண்டுகளுக்குப் பலியாகி இறந்தவர்கள்.
208. ஹோட்டல் ஓபிராய் நிகழ்வில் ப்ராசிக்யூஷன் தரப்பில் 14 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இவர்களில் ப்ரதீப் பெங்கலோர்கர் (பி.டபிள்யூ 212), ராஜேஷ் காடம் (பி.டபிள்யூ 215) மற்றும் லிசா ரிக்னர் (பி.டபிள்யூ 250) மிக முக்கியமானவர்கள். பயங்கரவாதிகளுடன் தனியாக எதிர்த்து நின்றவர்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் பகவத் கச்ரு பன்சாடே (பி.டபிள்யூ208) இன்னொரு முக்கியமான சாட்சி. மற்றவர்கள் சாதாரண சாட்சிகள்.


பொது சதித் திட்டம்:

இவ்வாறு மற்ற இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத வன்முறைகளை நன்கு ஆராய்ந்து பார்த்த பிறகும், மனுதாரன் கசாப் மற்றும் அவனது கூட்டாளி அபு இஸ்மாயில் இருவரும் நடத்திய வன்முறைகள் தனியாக வேறு இடங்களில் நடத்த மற்ற பயங்கரவாதிகளின் செயல்களோடு தொடர்பில்லாதவை என்ற வாதத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் எங்களுக்குப் புரியவில்லை. மற்ற 8 பயங்கரவாதிகளும் இவர்களுடன் சேர்ந்தே மும்பை கடற்கரையில் இறங்கியுள்ளனர். எனவே இந்த ஐந்து குழுக்களும் கூட்டாக இணைந்தவர்கள். ஒரு பொதுவான சதித்திட்டத்தை நிறைவேற்ற வந்தவர்கள் என்பது எங்களுக்குத் தெளிவாகவே தெரிகிறது.
210. இந்தியாவில் பயங்கரவாதிகள் கரையிறங்க சரியான இடம் பத்வார் பார்க் என்பது மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட்ட முடிவு என்பதை முன்பே சுட்டிக் காட்டியுள்ளோம். தாக்குதல்களுக்கான இலக்குகள் தேர்வு இதைவிட எச்சரிக்கையுடன் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். சத்ரபதி சிவாஜி ரயில்நிலையம் ஜனக்கூட்டம் நிறைந்த இடம். தங்களது பிரயாண அவசரங்களில் மக்கள் பாதுகாப்பு உதவிகளை எதிர்பார்த்திருக்க முடியாது. ஜனக் கூட்டத்தின் அளவோடு ஒப்பிடுகையில் இடமும் சிறியது, குறுகியது. இதை மனதில் கொண்டே மனுதாரன் கசாப், அவன் கூட்டாளி அபு இஸ்மாயில் இருவரும், தங்கள் திட்டப்படி மக்கள் எண்ணிக்கையை குறிவைத்து சிஎஸ்டி ரயில் நிலையத்துக்குச் சென்றார்கள், 52 பேரைக் கொன்றார்கள், 109 பேரைக் காயப்படுத்தினார்கள். மக்களை அதிர்ச்சியடையச் செய்து பெரும் பயத்தை உருவாக்க வேண்டும் என்பதே இவர்களது லட்சியம்.
211. சிஎஸ்டியில் இருந்து மனுதாரனும் (கசாப்) அவனது கூட்டாளி அபு இஸ்மாயில் இருவரும், ஒரு முக்கியமான நபரைச் சிறைப்பிடிக்க மலபார் ஹில்ஸ் நோக்கிச் சென்றனர். இந்தச் சிறைப்பிடிப்பால் மகாராஷ்டிர அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு பெரிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த இவர்கள் முயன்றுள்ளனர்.


வெளிநாட்டவரை கொல்வதே நோக்கம்:

மற்ற இரண்டு குழுக்களில் ஒன்ற லியோ போல்ட் கஃபேக்குச் சென்றது. அங்கிருந்து தாஜ் ஹோட்டல் மற்றும் ஓபிராய் ஹோட்டலுக்குச் சென்றது. லியோபோல்ட் மிகவும் பிரபலமான சிற்றுண்டிகள், மதுபானப் பொழுது போக்குக்கான இடம். மும்பை மக்கள் மட்டுமல்லாது, பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இங்கு அதிக அளவில் வந்து போவார்கள். இது சாலையைப் பார்த்துள்ள உணவுக் கூடம். இங்கு உட்கார்ந்து கொண்டு, காப்பி, டீ அல்லது பீர் பானத்தை சுவாரஸ்யமாக உறிஞ்சிக் கொண்டு மும்பையின் சுறுசுறுப்பான சாலை நிகழ்ச்சிகளை ரசிப்பார்கள். லியோபோல்ட் மீதான தாக்குதலின் நோக்கம் அயல் நாட்டவர் உட்படப் பலரைக் கொன்று குவிப்பது.
213. மும்பை நகரத்தின் வரலாற்றோடு இணைந்து விட்ட எழில் மிக்க அமைப்பு ஹோட்டல் தாஜ். ஓபிராய் நவீனமான அதி சொகுசு ஹோட்டல். இங்குதான் நாட்டின் செல்வந்தர்கள் சந்தித்துக் கூடிக் குலாவுகிறார்கள். உலகெங்கிலுமுள்ள தொழில் ரீதியான சகாக்கள் இங்குதான் சந்திக்கிறார்கள். இந்த இரண்டு ஹோட்டல்கள் மற்றும் லியோ போல்ட் மீதான தாக்குதல்கள் இரட்டை நோக்கம் கொண்டவை. ஒன்று, அதிகாரமும் செல்வ வளமும் நிறைந்த இந்தியர்களை மற்றும் அயல்நாட்டினரைக் கொன்று விடுவது, பீதி அலைகளை நாடு முழுவதும் பரப்புவது. இரண்டாவது இதன்மூலம் உலகின் கவனத்தைத் தங்கள் மீது திருப்புவது. இந்தப் பயங்கரவாத இயக்கங்கள் இதையே தங்களுக்குரிய பரிசாகக் கருதுகின்றன. மேலும், சில முக்கிய பிரமுகர்களைச் சிறைப் பிடிக்க முடியுமென்றும் இந்தப் பயங்கரவாதிகள் நம்பினார்கள். இதைக் கொண்டு பெரிய காரியங்களைச் சாதிக்க இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடியுமென்றும் இவர்கள் நம்பினார்கள்


சர்வதேச பிரச்னையாக்க சதி:

நாரிமன் ஹவுஸ் மீதான தாக்குதல் இஸ்ரேலை இந்தப் பிரச்சனையில் இழுப்பதற்கான முயற்சி. அங்கு வாழும் யூதர்களையும் இஸ்ரேலியக் குடிமக்களைக் கொல்வதன் மூலம் பிரச்சனை உலகளாவப் பிரபலப்படுத்தும் முயற்சி இது. நாரிமன் ஹவுசை முற்றுகையிட்டு, தங்களது குறிக்கோளில் இவர்கள் வெற்றியடைவது போலச் சிறிது நேரம் சென்றது. காரணம், அமெரிக்காவிலுள்ள லெவி என்பவனுடன் இந்தப் பயங்கரவாதிகள் தொடர்பு கொண்டனர். அவனும் சமரசம் செய்து, இவர்களது பணயக் கைதிகள் உயிரைக் காப்பாற்ற ஓடி வருவது போல் ஒரு நிகழ்ச்சியும் நடந்துள்ளது.
215. இந்த 5 இலக்குகளிலும் நடைபெற்ற தாக்குதல்கள் எல்லாம் ஒன்றுக் கொண்று உள்ளார்ந்த தொடர்பு கொண்டவை என்று இதன் மூலம் தெரிய வருகிறது. எனவே மனுதாரன் கசாம் மற்றும் அவனுடைய தோழன் அபு இஸ்மாயில் இருவரும் நேரடியாக நடத்திய குற்றங்களுக்கு அவர்கள் எவ்வளவு பொறுப்பானவர்களோ, பிற இடங்களில் இவர்களின் தோழமைப் பயங்கரவாதிகள் நிகழ்ச்சிய குற்றங்களிலம் இவர்களுக்கும் பங்கு, பொறுப்பு உண்டு. ஒருமுறை கூடத் துப்பாக்கியால் சுடாது, இந்திய மண்ணில் எந்தவொரு குற்றமும் செய்யாது, மனுதாரன் கசாப் கைது செய்யப்பட்டிருந்தாலும், மற்ற நான்கு குழுவினருடன் சேர்ந்தே அவன் மும்பை வந்துள்ளான், அவர்களின் குற்றங்கள், மற்றும் சதிவேலைகளில் இவனுக்கும் தொடர்புண்டு என்ற முடிவுக்கு வருவதும் சரியாகவே இருக்கும்.
இந்த மேல்முறையீடு மனுவில், மனுதாரன் நேரடியாகவே செய்த குற்றங்களைத் தவிர அதற்கப்பாலும் செல்லத் தேவையில்லை என்ற வாதத்தை மறுப்பதற்காகவே இந்த விளக்கம் தரப்படுகிறது.
சதித்திட்டத்தின் உண்மையான சொரூபம், பற்றிய சாட்சி விளக்கங்கள் இனிமேல்தான் விவாதிக்கப்படுகிறது. தீர்ப்பின் அடுத்த கட்டங்களில் அதைக் காண்போம்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
khajakamaludin - singapore,சிங்கப்பூர்
24-ஜூன்-201406:50:45 IST Report Abuse
khajakamaludin அடுத்து நீங்கள் யார் கர்கரேயை கொன்றது என்ற புத்தகத்தின் விமர்சனத்தை வெளியிடுவீர்களா /
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X