பயங்கரவாதிகள் கொண்டு வந்த பேஸ்ட் முதல் பேரிச்சம்பழம் வரை

Updated : ஜூன் 27, 2014 | Added : ஜூன் 27, 2014 | |
Advertisement
குபேர்: (படகு) - (26/11 சம்பவங்களுக்குப் பின்னால்) ஒரு பெரிய சதித் திட்டமே உள்ளது என்பதற்கான சாட்சியங்களைக் காண மீண்டும் ஆரம்பத்துக்கே (குபேர் படகு நிகழ்ச்சிகளுக்கு) செல்வோம்.மனுதாரன் கசாப், வினோலி சௌபாத்தி போலீஸ் என்கவுண்டரில் இறந்து விட்ட அவனது கூட்டாளி பற்றிய விவரங்கள், அடையாளங்கள், நாயர் மருத்துவமனையில் 2008 நவபம் 27, நள்ளிரவு 1.30 மணிக்குத் தனது மற்றும் அவனது இறந்த விட்ட
பயங்கரவாதிகள் கொண்டு வந்த பேஸ்ட் முதல் பேரிச்சம்பழம் வரை

குபேர்: (படகு) - (26/11 சம்பவங்களுக்குப் பின்னால்) ஒரு பெரிய சதித் திட்டமே உள்ளது என்பதற்கான சாட்சியங்களைக் காண மீண்டும் ஆரம்பத்துக்கே (குபேர் படகு நிகழ்ச்சிகளுக்கு) செல்வோம்.
மனுதாரன் கசாப், வினோலி சௌபாத்தி போலீஸ் என்கவுண்டரில் இறந்து விட்ட அவனது கூட்டாளி பற்றிய விவரங்கள், அடையாளங்கள், நாயர் மருத்துவமனையில் 2008 நவபம் 27, நள்ளிரவு 1.30 மணிக்குத் தனது மற்றும் அவனது இறந்த விட்ட அவனது கூட்டளி அபு இஸ்மாயில் ஆகியோர் பெயர், வயது மற்றும் முகவரியை அவன் (கசாப்) கூறியதில் இருந்து வெளிவந்தது.
2008 நவம்பர் 27 காலை 11.00 மணிக்கு, போலீஸ் அதிகாரி பாண்டுரங்க சாவந்த் (பி.டபிள்யூ 31) அறிவுரைப்படி, சந்திரகாந்த் ஜபர்தஸ்த் ஜாதவ் (பி.டபிள்யூ 42) மனுதாரனை விசாரிக்கும் பொருட்டு நாயர் மருத்துவமனைக்கு வந்தார். இவரே வினோலி சௌபாத்தி சம்பவங்களின் விசாரணை அதிகாரியாகவும் இதுவரை இருந்தவர். அந்த சமயத்தி," தனது மேலதிகாரிகளின் கட்டளைப்படி சிபி-சிஐடி பிரிவைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிநாத் மாரடே அங்கு வந்திருந்தார். மனுதாரனுக்குச் சிகிச்சை அளித்த டாக்டரின் அனுமதியுடன் ஜாதவ் அவனை பகல் 1.00 மணிக்க விசாரித்து அவனது அறிக்கையை பதிவு செய்தார். அப்போது மாரடே மற்றும் பர்வீன் அசோக் ஹர்குடே, பவேஷ் மகாதேவ் தக்கல்கார் (பி.டபிள்யூ 25) ஆகியோர் சாட்சியங்களாக இருந்தனர். இவனது (கசாப்) அறிக்கை முதலில் இந்தியப் படகைக் கடலில் கண்டுபிடிக்கவும், பின்னர் அப்படகில் கொல்லப்பட்டுக் கிடந்த மாலுமி அமர் சில் சோலங்கியின் உடலையும், அப்படகில் இருந்து சேடலைட் தொலைபேசி, ஜிபிஎஸ் மற்றும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் மீட்க உதவியது.
கசாப் கூறிய செய்திகள்: "நானும் எனது 9 பாகிஸ்தான் கூட்டாளிகளும், இந்தியா மீது தாக்குதல் நடத்த கராச்சி க்ரீக்ல் இருந்து இம்மாதம் 22ம் தேதி புறப்பட்டோம். கடலில் எங்களுக்கு அல்-ஹூசைனி போட் கிடைத்தது. அந்த அல் ஹூசைனி படகில் 7 பேர் இருந்தனர். அடுத்த நாள் நண்பகலில் இந்தியப் படகைப் பிடித்தோம். இந்தியப் படகில் இருந்த 4 பேரை அல் ஹுசைனி படகில் அடைத்தோம். பின்னர் நானும் எனது 9 கூட்டாளிகளும் இந்தியக் கடல் எல்லை சுமார் 4 நாடிகல் மைல் தூரத்தில், இந்தியப் படகில் மும்பைக்கு அருகாமையில் வந்தோம். இந்தியப் படகு மாலுமியையும் கூட்டி வந்தோம். அன்று தேதி 26 நேரம் பிற்பகல்.
அங்கு வந்ததும், நான், எனது கூட்டாளிகள் அபு ஸோஹெப் மற்றும் அபு இஸ்மாயில் மூவறும் மாலுமியை இஞ்சின் அறைக்கு இழுத்துச் சென்று கை கால்களைக் கட்டினோம். அவர் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டினோம். அவர் கழுத்தில் கத்தியால் குத்தி நான் கொலை செய்தேன். மாலுமியின் உடலை அங்கு தான் மறைத்து வைத்தேன். எங்களது சாடலைட் போன், ஜிபிஎஸ் மற்றும் நோட்டுப் புத்தகத்தை இந்திய படகில், கடலிலேயே விட்டுவிட்டு வந்தோம். நானும் எனது 9 கூட்டளிகளும் எங்களது ரைபின், வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளுடன் ரப்பர் படகில் ஏறி மும்பையின் கரையை அடைந்தோம். மாலுமியின் இறந்த உடல், அந்தப் படகு, சேடலைட் போன், ஜிபிஎஸ் மற்றும் நோட்டுப் புத்தகத்தை நான் காட்டுகிறேன்' (இந்த ஒப்புதலின் உண்மையை எடுத்துக்காட்ட செக்ஷன் 27ன் படி அழுத்தம் தரப்பட்டுள்ளது.
இந்த வாக்குமூலத்தை ஜாதவ் பதிவு செய்து இரண்டு சாட்சிகளுடன் தானும் கையெழுத்திட்டுள்ளார். இதில் கசாப் கையெழுத்து இல்லை. கையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாகப் பேனாவைப் பிடித்துக் கசாப் கையெழுத்து போட முடியாத நிலையில் (பேனாவை பிடிக்கும் வலது கையில் காயங்கள்) டாக்டர் விகாஸ்குமார் காசிநாத் கேசரி இதற்கு சான்றிதழ் அளித்துள்ளார்.
மனுதாரன் கசாப் அளித்த வாக்குமூலத்தைக் கொண்டு கைவிடப்பட்ட இந்தியப் படகைத் தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கடலோரக் காவற்படையின் உதவியுடன் மும்பை காஸன்ஸ் டாக்கிற்குப் படகு கொண்டு வரப்பட்டது. மும்பையின் தென்மேற்கில் 6 கடல் மைல் தூரத்தில் சுமார் 4.40 பிற்பகிலி இந்த கைவிடப்பட்ட படகு காணப்பட்டது. கடலோரக் காவற்படை கமாண்டன்ட் மல்ஹோத்ரா (பி.டபிள்யூ 26) இதைக் கண்டார். கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜகன்னாதன் (பி.டபிள்யூ 37) வேண்டுகோளுக்கிணங்க ஹெலிகாப்டர் உதவியுடன் இதைத் தேடினார். கடலோரக் காவற்படைக் கப்பல் சங்கல்ப், அங்கு வரும்வரை, இந்தப் படகைக் காண்காணித்திருந்து மும்பை சசூன் டாக் பகுதிக்குக் கொண்டு வந்தார்.
இந்தப் படகு சந்தேகத்துக்கிடமில்லாமல் குபேர் என்னும் இந்திய மீன்பிடிப் படகேயாகும். இது குஜராத் போர்பந்தர் துறைமுக அதிகாரியிடம் பதிவு செய்யப்பட்டது. பதிவு எண் பிபிஆர். 2342. இதன் உரிமையாளர் போர்பந்தரைச் சேர்ந்த ஹீராலால் மசானி.
போர்பந்தர் கஸ்டம்ஸ் சூபரின் டென்டன்ட் தீபக்குமார் விச்வநாத் தவே (பி.டபிள்யூ 46) தனது சாட்சியத்தில் குபேர் மீன்பிடி படகுக்கு 2008 ஆகஸ்டு 16 முதல் டிசம்பர் 31 வரை க்ரீக் பாஸ் சிஎச்/பிபிஆர்/174 வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததுடன் அதற்குரிய ஆலுவலக நகலையும் காட்டினார். அதில் அவரது கையெழுத்து உளளது. அந்தப் படகின் உரிமையாளர் ஹிராலால் மகானி என்றும் மாலுமியின் பெயர் அமர்சிங் சோலங்கி என்றும் தெரிவித்தார்.
வினோத் பாபுலால் மசானி தான் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவனென்றும், குபேர் உட்படத் தங்களுக்கு 6 படகுகள் சொந்தமாக உள்ளதாகவும் தெரிவித்தார். தனது குடும்ப வியாபாரத்தைக் கவனித்து வருவதாகக் கூறினார். குபேர் மற்றும் குடும்பப் படகு மா இரண்டும் நவம்பர் 14ம் தேதி (2008) கடலுக்குச் சென்றனவென்றும் அவை 10 அல்லது 12 நாட்களில் போர்பந்தர் திரும்புமென்று கணக்கிடப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். நவம்பர் 25ம் நாள் மா படகு போர்பந்தர் வந்து சேர்ந்தது. ஆனால் குபேர் படகின் கதி என்ன என்று ஏதும் தெரியவில்லை. கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக இரண்டுபடகுகளும் பிரிந்து விட்டதாக மா படகு மாலுமி கூறினார். 2008 நவம்பர் 27 மாலை 5.00 மணிக்கு மும்பை கடலோரக் காவற்படகைப் பற்றி அவரிடம் விசாரித்த அதிகாரி, உடனே மும்பை வந்தார். மீலாட் பந்தர் சீவ்ரியில் அவரது படகு நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டார். கடலில் இந்தப் படகைக் கைப்பற்றிய பயங்கரவாதிகள் மாலுமி அமர்சிங் சோலங்கியைக் கொலை செய்து விட்டார்கள் என்ற செய்தியையும் தெரிந்து கொண்டார்.
குபேர் படகைத் தேடிக் கண்டுபிடித்து சசூன் டாக்ஸ் பகுதிக்குக் கொண்டு வரப்பட்ட அதேசமயம் 2008 நவம்பர் 27ல் இரவு 9.15 மணிக்கு வழக்கின் புலன் விசாரணை க்ரைம் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டது. நாயர் மருத்துவமனையில் இருந்து கசாப் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அதிகாரி மார்டேயின் காவலுக்குள் வந்தான். லோயர் பரேல் டிசிபி-சிஐடி பிரிவு 3க்கு அவனைக் கொண்டு வந்து முறைப்படி அவனை சிஆர்.எண் 182/2008 ஆவணப்படி அவனைக் கைது செய்தார். (அரெஸ்ட் மெமோ -ஈஎக்ஸ்டி எண் 215) கைது செய்யும் போது மணி இரவு 10.30 - 10.45 இருக்ம். இரவு 10.45 மணிக்க மனுதாரனை (கசாப்) டிபி சாலை காவல் நிலையத்துக்கு அழைத்து வருமாறு மார்டேவுக்கு ஜாதவ் அழைப்பு விடுத்தார். சசூன் டாகிற்கு குபேர் படகு கொண்டுவரப்பட்ட செய்தியும் டிபி சாலை காவல் நிலையத்துக்கு வந்திருந்தது. இரவு 11.10 மணிக்கு மனுதாரனுடன் மார்டே டிபி சாலை காவல் நிலையத்தைச் சென்றடைந்தார். மார்டே, ஜாதவ், மனுதாரன், அவனது நாயர் மருத்துவமனை பஞ்சநாமாவில் சாட்சிக் கையெழுத்திட்ட பர்வீன் அசோக் ஹர்குடே மற்றும் பவேஷ் மகாதேவ் தக்கல்கார் ஆகியோர் சசூன் டாக் இடத்தை இரவு 12.00 மணிக்குச் சென்றடைந்தனர்.
சசூன் டாக் என்ற இடத்தை அடைந்தவுடன், கடலில் இருந்து மீட்டு வரப்பட்டு, அம்போலி என்ற இடத்தினருகே நிறுத்தப் பட்டிருந்த (யெல்லோ கேட் காவல் நிலையம் அருகில்) மரப்படகை இவர்கள் பார்த்தனர். இந்தப் படகே, தானும் தனது ஒன்பது சகாக்களும் ஏறிவந்த இந்தியப்படகு என்று கசாப் அடையாளம் காட்டினார். அதில்தான் மும்பையை அடைந்ததாகவும் தெரிவித்தான். அந்தப் படகில்தான் மாலுமியைக் கொன்று இஞ்சின் அறையில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தான்.பின்னர் போலீஸ் குழு மற்றும் பஞ்சநாமா சாட்சிகளை இஞ்சின் அறைக்குக் கூட்டிச் சென்று, ஒரு ஏணிக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த ஆண் சடலத்தைக் காட்டினான். சடலத்தின் கைகள் பின்னால் கட்டப்பட்டு மோசமான நிலையில் இருந்தது. பின்னர், இஞ்சின் அறையில் சடலத்தின் இடப்புறம் ஒரு மறப்பலகைக்கு அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சேட்லைட் போன், ஜிபிஎஸ் மற்றும் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்தான். இந்த மூன்று பொருட்களையும் போலீஸ் குழுவிடம் ஒப்படைத்தான். இஞ்சின் அறையில் இருந்து மனுதாரனால் குபேர் படகிலிருந்து எடுக்கப்பட்டு பஞ்சநாமா ஆவணம் மூலம் பதிவாகிய பொருட்கள் (எக்ஸிபிட் 138) பின் வருவன ஆகும்.
1) கறுப்பு உறையில் ஒர சாடலைட் போன் - ஹ்யூக்ஸ், துராயா 7101; ஐஎம்ஈ எண் 352884-00-054152-6; ஈயூ-வில் அசெம்பிள் செய்யப்பட்டது, எம்சிஎன்: 8008211-0006; சிம் கார்டு -துராயா 89882 05980 80530 6377; பேட்டரியில் "அசெம்பிள்ட் இன் பிரான்ஸ்' என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
2) கறுப்பு நிற ஜிபிஎஸ், கார்மின் தயாரிப்பு, மாடல் ஜிபிஎஸ் 12 எம்ஏபி எஸ்/என் 98205626; தைவானில் தயாரிக்கப்பட்டது
3) மங்கிப் போன் பச்சை நிற அட்டையுடன் ஒரு நோட்டுப் புத்தகம், பல பக்கங்களில் உருது மொழியில் எழுத்துக்களும் கிறுக்கல்களும் கொண்டது.
எண் 182 கொண்ட எக்ஸிபிட் பஞ்சநாமா படகில் இருந்த பல்வேறு பொருட்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கிறது. சாட்சிகள் முன்பு இது தயாரிக்கப்பட்டுள்ளது. பி.டபிள்யூ 42 ஜபர்தஸ்த் ஜாதவ் தனது சாட்சியத்தில் ஏறத்தாழ 145 பொருட்கள் படகிலிருந்து கைப்பற்றப்பட்டு, பஞ்சநாமா எக்ஸிபிட் 182 விவரப்படி எண்ணிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் குபேர் படகில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் பற்றிய பட்டியலும் கொடுத்துள்ளார். பொதுவாக ஒரு மீன் பிடிப்படகில் இது மாதிரியான பொருட்கள் இருப்பதில்லை. நீதி மன்றத்தில் ஜாதவ் அளித்த பட்டியல் கீழ் வருமாறு:
1. பிங்க் (இளஞ்சிவப்பு) நிற பஞ்சுப்பொருள் 6
2. போர்வைகள் 14
3. மேலாடைகள் 2
4. மெத்தை 1
5. குளிர்பான பாட்டில் காலியானது 1
6. நமாஸ் பிரார்த்தனை செய்யும்போது பயன்படுத்தும் ஸ்கார்ப் 1
7. குல்லாய்கள் 4
8. டி.ஷர்டுகள் 6
9. பேண்டுகள் 6 - ஒரு பேன்டில் சௌத் போல் என்ற பாகிஸ்தான் தயாரிப்பு கம்பெனியின் முத்திரை உள்ளது.
10. ஷர்ட் 1
11. ஜாக்கெட்டுகள் 15
12. மூத் பிரஷ் 7
13. ஷேவிங் ரேஸர்கள்
14. ஷேவிங் க்ரீம் ட்யூப் 1
15. மூத் பேஸ்ட் 1 ட்யூப்
16. காலியான சர்க்கரை பை 1
17. காலியான கோதுமை மாவு காகிதப் பை
18. இரண்டு காற்றடிக்கும் பம்புகள் - ஏர் பம்ப்
19. சலவை பவுடர் - டிடர்ஜன்ட் பவுடர் - 4 பாக்கெட் (பாக் என்ற பிராண்ட் பெயர் கொண்டது)
20. காலியான நெஸில் பால் பவுடர் டப்பாக்கள் 50
21. 55 லிட்டர் கொள்ளளவு கொண்ட எண்ணெய் கேன்கள் 8 (ஒன்றில் கல்ஃப் மற்றும் பாகிஸ்தான் முத்திரையுடன்)
22. டீசல் பீப்பாய்கள் 5, இதில் ஒன்று காலி. கலர் ஸ்ப்ரே
23. கண்டெய்னர்கள் 5
24. கை கத்தி
25. கத்தி 1
26. கத்திரிக்கோல் 1 ஜோடி
27. தார்பாலினால் ஆன படகு உறை 3
28. தரை சுத்தப்படுத்தும் பிரஷ் - பாகிஸ்தானில் செய்யப்பட்டது.
227. எக்ஸிபிட் எண் 182 பஞ்சநாமா பொருட்கள் பட்டியல் மிக நீளமானது. இவை குபேர் படகிலிருந்து கைப்பற்றப்பட்டவை. பிடபிள்யூ 42 ஜாதவ் அளித்த பொருட்கள் பட்டியலில் கீழ்கண்ட பொருட்களையும் குறிப்பிடலாம்.
பொதுவாக இந்திய மீன்பிடிப் படகுகளில் இவை இருப்பதில்லை.
1) 6 அங்குலம் நீள இரும்பு ஸ்பானர்கள் - உருது மொழியில் சொற்கள் கொண்டது, ஸ்பானர்களில் துப்பாக்கிப் படங்களுடன் - 4 அங்குல கைப்பிடி கொண்ட பெரிய கத்தி.
2) சைனாவில் தயாரிக்கப்பட்ட 30 போர் பிஸ்டலுக்கான 50 காலி புல்லட் பாக்கெட்டுகள்.
3) பெரிய கப்பலில் இருந்து சிறிய கப்பலுக்குச் சாமான்களை மாற்றப் பயன்படுத்தும் நைலான் கயிறு - ஒரு முனையில் வட்டமான முடிச்சு கொண்டது.
4) மருந்துகள் அருந்த உதவும் ஸில்வர் ஃபாயில்கள்
5) ஹாக்கி முத்திரையுடன் கூடிய, பாகிஸ்தான் பாஸல் சன்ஸ் தீப்பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தீப்பெட்டி 1
6) நேஷனல் ஃபுட் (உணவுப் பொட்டலம்) ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் உள்ளிருக்கும் பொருட்கள் குறிக்கப்பட்டுள்ளன.
7) உருது எழுத்துக்கள் கொண்ட காக்கி நிறப் பை 1
குபேர் படகில் இருந்து பஞ்சநாமா (எக்ஸிபிட் 138 மற்றும் 182) மூலம் மீட்கப்பட்ட சேட்லைட் போன், ஜிபிஎஸ், மற்றும் பிற பொருட்கள் வினோத் பாபுலால் மசானி (படகின் உரிமையாளர்)யிடம் காட்டப்பட்டன. ஆனால் அவை தனக்குச் சொந்தமானதல்லவென்றும், 2008 நவம்பர் 14ம் தேதி படகு கடலுக்குச் சென்றபோது இவை படகில் இல்லையென்றும் நீதிமன்றத்தில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
குபேர் படகில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து மனுதாரர் கசாப் வெளியில் எடுத்து போலீசாரிடம் காட்டிய பொருட்களில், சரியாகத் தைக்கப்படாத, மங்கலான பச்சை நிற அட்டையுடன் கூடிய நோட்புக் ஒன்று.
அதில் முதல் பக்கத்தில் - 24 மணிநேரம், பிரயான காலம் முழுவதற்குமான பாதுகாப்பு பணி - என்ற தலைப்பிலானது.
பகதுல்லா + ஸோஹெப் + ஸாகிப் பணி நேரம் காலை 6 மணி முதல் 8 மணி வரை; அலி + ஹேஜாஸி + உமர் பணி நேரம் காலை 8 மணி முதல் 10 மணி வரை; இஸ்மாயில் + முஜாஹித் + உமர் பணி நேரம் 10 மணி முதல் 12 மணி வரை.
12.00 மணிக்குப் பிறக, முதல் குழு மீண்டும் அடுத்த 2 மணி நேரம் பணிக்குத் திரும்புவார்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது குழு அடுத்தடுத்த 2 மணி நேர ஷிப்டுகளுக்கு அடுத்தடுத்து இந்த ரோஸ்டர் முறைப்படி அடுத்த நாள் காலை வரை காவல் பணியில் இருப்பார்கள்.
இரண்டாவது பக்கம் வலது பக்கத்தில் உள்ள சாமான்கள் பட்டியல்
1) பிஸ்கட் (கேண்டி + பேக்கரி)
2) சூவையான் 51 (ஒரு தின்பண்டமாக இருக்கலாம்)
3) ஃப்ளவர் ரெட்
4) சாமான்களை வைக்க பூட்டுடன் கூடிய டிரம்.
இடது பக்கத்தில் உள்ள பட்டியல்
1) இந்த இடத்தின் தொலைபேசி எண்
2) இந்த இடத்தின் சேடலைட் எண்
3) வரை படங்களின் நகல்கள் - போட்டோ நகல்கள்
4) மொபைல் செட்டுகளுக்கான சிம்ஸ்
5) 2 டிடி பிஸ்டல்கள்
6) அக்வாபினா மினரல் வாட்டர்
7) 10 கிலோ தரமுள்ள பேரிச்சம் பழம்.
8) காண்ட்ஸ்டோர் சார்ஜர்
9) ஜிபிஎஸ் அல்லது நாவிகேடர்
10) சேடலைட் + போன்கார்டு
மூன்றாவது பக்கத்தில் குறியிட்டுச் சொற்கள் பட்டியல்
ஹாலத்தீக் ஹைன் (எல்லோரும் நலம்)
மிசிலி லாக் ரஹீ ஹை - (மீன்கள் வந்த கொண்டிருக்கின்றன)
சிவில் போட் பாய் லாக் - (சகோதரர்கள்)
நேவி போட் யார் லாக் - (நண்பர்கள்)
நேவி ஷிப் யார் லோகான் கா க்ரூப் - (நண்பர்கள் குழு)
இஞ்சின் மிஷின்
மதாத் - (உதவி அல்லது உதவி செய்), மால் - சரக்குகள்
ஸஃபார் - (பிரயாணம்) பார்ஃப் - ஐஸ்.
இந்தக் குறியிட்டுச் சொற்களுக்குக் கீழ் "ஜிஆர் கொடுப்பவன் மூன்று சேர்த்துத் தருவான், எடுத்துக் கொள்பவன் தனக்கு மூன்றைக் குறைத்துக் கொள்வான்' என்ற வாசகங்கள் காணப்படுகின்றன.
இதற்கு கீழே "சாடிலைட்டை காலை 10.00 மணி முதல் இரவு 10.00 ணிவரைத் திறந்து வைக்கவும்' என்று ஞாபகப்படுத்தும் வரிகள் காணப்படுகின்றன.
அடுத்தப் பக்கத்தில் இன்னொரு சாமான்கள் பட்டியல் உள்ளது.
1) துப்பாக்கி ஒன்று
2) மேகசின்கள் 8
3) கைக்குண்டுகள் 8
4) ஜிபிஎஸ் குரூப் 1
5) குத்துக் கத்தி 1
6) கூடுதல் ரவுண்டுகள்
7) மொபைல் மற்றும் பேட்டரிகள்
அடுத்த இரண்டு பக்கங்களில், டிகிரி, நிமிஷங்கள் மற்றும் வினாடிகள் பற்றிய விவரங்கள் உள்ளன.
இதற்கடுத்த பக்கத்தில் 23270972879217 என்ற எண் மேலே எழுதப்பட்டுள்ளது. அதற்குக் கீழே மும்பையில் சில இடங்கள், குலாபா கப்பேரேட் மச்சிலிமார் நகர் ராஜாபாய் டவர் ரீகல் கவுக் நாதலால் மார்க் நரிமான் பாயின்ட் டபிள்யூடிசி ரீகல் சினிமா ஆகிய பெயர்கள் உள்ளன.
கடைசிப் பக்கத்தில் மீண்டும் டிகிரி, நிமிடங்கள், வினாடிகள் பற்றிய விவரங்கள் உள்ளன.
துராயா சேடலைட் போன் மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் - குபேர் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவை - மற்றும் பிற இடங்களில் நடந்த வன்முறையில் கைப்பற்றிப்பட்ட ஜிபிஎஸ் கருவிகள் யாவும் அமெரிக்க பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷனுக்கு - தடயயியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. இந்த அமைப்பில் எலக்ட்ரானிக் இஞ்சினியர் மற்றும் தடயயியல் ஆய்வாளராகப் பணியாற்றி டேனியல் ஜாக்சன் (பிடபிள்யூ 152) ஆய்வு நடத்தினார். மொபைல் போன், ஜிபிஎஸ் கருவிகள், ஐ-பாட்ஸ் முதலிய ஆய்வுகளில் இவர் நிபுணர். இந்தக் கருவிகளை ஆய்வு செய்வதற்கு முன்னர் ஆயிரத்துக்கு மேற்பட்ட எலக்ட்ரானிக் கருவிகளை எஃப்பிஐ-ல் ஆய்வகத்தில் ஆய்வு செய்துள்ளதாகத் தனது சாட்சியத்தில் நீதிமன்றத்தில் இவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை மீட்டெடுத்து ஆய்வு செய்ய இவருக்கு அனுப்பப்பட்ட சேடலைட் போன் மற்றும் 5 ஜிபிஎஸ் கருவிகளில் இவர் (டேவிட் ஜாக்சன்) க்யூ119, க்யூ120, க்யூ121, க்யூ122 மற்றும் க்யூ123, க்யூ124 என்று குறியீடுகள் செய்துள்ளார். க்யூ119 மற்றும் க்யூ120 குறியீடுகள் குபேர் படகிலிருந்து மீட்கப்பட்ட சேடலைட் போன் மற்றும் கார்மின் ஜிபிஎஸ் கருவிகளுக்கு உரியவை. க்யூ123 மற்றும் க்யூ124 கியவை தாஜ் ஹோட்டலில் மீட்கப்பட்ட கார்மின் ஜிபிஎஸ் கருவிகளுக்கு உரியவை. க்யூ121 நரிமான் ஹவுசில் கைப்பற்றப்பட்டதாக இருக்கலாம். க்யூ122 ஒபிராய் ஹோட்டலோடு தொடர்புடையது. க்யூ 121, க்யூ 122 மல்லேகன் ஜிபிஎஸ் கருவிகள். இவைகளில் உள்ள விவரங்கள் உள்ளே இருந்த குருவிகளின் பேட்டரி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதால் மீட்கப்பட முடியவில்லை.
மும்பை போலீசிடமிருந்து பெற்ற சாடிலைட் போன் மற்றும் 5 ஜிபிஎஸ் கருவிகள் பற்றிய ய்வினை 2009 பிப்ரவரி 11ல் தொடங்கி பிப்ரவரி 18ல் முடிந்ததாக ஜோக்சன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது ஆய்வு பற்றி மேலும் விளக்கிக் கூறினார்.
ஒரு ஜிபிஎஸ் கருவியிலுள்ள விவரங்களை மீட்க அந்தக் கருவியை ஒரு கம்ப்யூடரோடு இணைக்க வேண்டும். பின்னர் அந்த விவரம் கம்ப்யூடரில் காப்பி செய்யப்படும். பின்னர் ஒரு மென்பொருளைக் கொண்டு, கம்ப்யூடரில் பதிவான விவரங்கள் பரிசீலிக்கப்படும். இவ்வாறு கருவிகளை ஆராய்ந்த பின்னர் தனது அறிக்கையைத் தயாரித்ததாக நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜிபிஎஸ் விவரங்களைக் கம்ப்யூட்டரில் பதிவு செய்து, கம்ப்யூடரில் இரந்து அவற்றை ஒரு குறுந்தகட்டில் பதிவு செய்துள்ளார். இந்த டிசிஐ ஆர்டிகிள் 517 ஆக நீதிமன்றத்தில் அடையாளம் காட்டினார். மேலும் தனது கையெழுத்துள்ள (ஈஎக்ஸ்டி எண் 601) ஆவண நகலையும் அவர் கடையாளம் காட்டினார். ஜிபிஎஸ்-களில் காணப்பட்ட கோடுகள் குறிப்பிட்ட இடங்களுக்கான (நேர்கோடுகள், நெட்டுக் கோடுகள்) வழி - மார்க்கங்களைக் காட்டுவதாக இருக்கலாம். அவை ஜிபிஎஸ்ல் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். கார்மின் மென்பொருள் உதவியுடன் ஜிபிஎஸ் க்யூ120ல் இருந்து பெறப்பட்ட வழிக்குறிப்புகளில் இருந்து இந்த வரைபடங்களைத் தயாரித்ததாகவும் அவர் கூறினார்.
டேனியல் ஜாக்சன் தனது சாட்சியத்தில் மேலும் கூறுகிறார். ஜலா 1, ஜலா 2 ஆகிய பெயர்கள் ஜிபிஎஸ்.க்யூ120 கருவியை உபயோகித்தவர் பயன்படுத்திய பெயர்கள். க்யூ120ல் காணப்படுவது கராச்சி - மும்பைக்கான மார்க்கங்கள். இவரது அறிக்கையில் 36வது பக்கத்தில் உள்ள சேர்க்கையில் (அனெக்சர்) இடையில் வரும் வழிகள் காட்டப்பட்டுள்ளது. இவை கராச்சி-மும்பை மார்க்கங்கள். இதன் முதல் குறிப்பு கராச்சி வளைகுடா - கல்ஃப் ஆப் கராச்சி. கடைசிக் குறிப்பு மும்பை. இவரது அறிக்கையின் 38வது பக்கத்தில் பிரயாண மார்க்கங்கள் ஓசினி முதல் ஓசினா என்று குறிக்கப்பட்டுள்ளது. ஓசினி என்பது பாகிஸ்தான் கடற்கரை, ஓசினா என்பது மும்பைக் கடற்கரை என்று அவர் விளக்கினார்.
ஜாக்சன் - பிடபிள்யூ 152 தயாரித்த வரைபடங்கள், கம்ப்யூடர் ப்ரிண்ட் அவுட் படங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த வரைபடங்களைப் பற்றி மேலும் தெளிவாகத் தெரிந்து கொள்ள ப்ராசிக்யூஷன் தரப்பில் சந்தீப் சித்தி லிங்கப்பா சிவாங்கி - பிடபிள்யூ 161 விசாரிக்கப்பட்டார். 1998ல் மாஸ்டர் மேரின் என்ற பட்டப் படிப்பை முடித்தவர் இவர். இந்த சமயத்தில் லால்பகதூர் சாஸ்திரி கல்லூரியில் இவர் அட்வான்ஸ் மேரிடைம் ஸ்டடீஸ் மற்றும் ஆராய்ச்சிப் பிரிவில் (நாடிகல் ஆபீசர்) பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். 2009 பிப்ரவரி 24ம் தேதி டிசிபி-சிஐடி அலுவலகத்துக்கு வருமாறு இன்ஸ்பெக்டர் சவால் தன்னை அழைத்ததாகவும், இரண்டு ஜிபிஎஸ் கருவிகளில் இருந்து எடுக்கப்பட்ட பிரிண்ட் அவுட்டுகளைக் காட்டியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தப் பிரிண்ட் அவுட்டுகள் (பிரயாண) மார்க்கங்களைக் காட்டின. இந்த வரைபடத்தில் காணப்படும் இடங்களைக் குறித்துக் காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். தனது கல்லூரியில் இருந்து இரண்டு வரைபடங்களை இவர் கொண்டு வந்தார். ஒரு அச்சடித்த வரைபடத்தை மார்கெட்டில் வாங்கினார்கள். இதில் மூன்றாவது பக்கத்தில் (எக்ஸிபிட் எண் 601) என்று மொத்தமாகக் குறியிடப்பட்டிருந்ததில்) இந்த மூன்றாவது பக்கத்தில் இருந்தவை ஜலா1, ஜலா2, ஜலா3, மற்றும் ஜலா4 என்று விளக்கினார். ஒரு அச்சடித்த வரைபடத்தில் இந்த மார்க்கக் குறிப்புகளை சுட்டிக் காட்டுமாறு இவர் (பேராசிரியர்) கேட்டுக் கொள்ளப்பட்டார். ஒரு அளவு கோலைக் கொண்டு அவர் குறித்த வழிப் புள்ளிகள் நீதி மன்றத்தில் காட்டப்பட்டன. அப்போது, அதில் உள்ளவை அவரத கையால் எழுதப்பட்டவை, அந்த வரைபடத்திலிருந்தது தனது கையெழுத்தே என்றும் அவர் கூறினார். இந்த வரைபடம் எக்ஸிபிட் 651 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை இன்னும் தெளிவாகக் காட்ட, ஜலா3, ஜலா 4ஐ இன்னுமொரு வரைபடத்திலும் குறித்துள்ளார். இது எக்ஸிபிட் 652. தவிர, ஓசின்ஸ் 1, ஓசின்ஸ் 2, ஓசின்ஸ் 3 மற்றும் ஓசின்ஸ் ஏ வழிக் குறிப்புகள் (எக்ஸிபிட் 651) வரைபடத்திலும் காட்டப்பட்டுள்ளன. ஓசின்ஸ் வழிக்குறிப்புகள் தெற்கு பாகிஸ்தானில் இருந்து தெற்கு மும்பை, ஜலா வழக்குறிப்புகள் குஜராத்தில் இரந்து தெற்கு மும்பை வழிகளைக் காட்டுவதாகவும் அவர் விளக்கினார்.
டிஎன்ஏ சம்பந்தம்: குபேர் படகில் இருந்து மீட்கப்பட்டவை, போர்வைகள், மேலாடைகள் மற்றும் பல ஆடை ரகங்கள் என்று பார்த்தோம். இவற்றில் உள்ள வியர்வைக் குறிகள், எச்சில் மற்றும் உடல் வெளிப்பாடுகள் டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப் பட்டன. இறந்த 2வது குற்றவாளி இம்ரான் பப்பார், இறந்த 5-வது குற்றவாளி அப்துல் ரகுமான் பாதா, இறந்த 7வது குற்றவாளி பகதுல்லா, மற்றும் இறந்த 9வது குற்றவாளி ஷோயாப் தவிர, பிற 6 குற்றவாளிகள் பயன்படுத்திய தொடர்புள்ள பொருட்கள் குபேர் படகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மனுதாரனின் வியர்வைக் கறை ஒரு ஜாக்கெட்டோடு ஒத்துப் போகிறது என்று அறிக்கை - எக்ஸிபிட் எண் 205 எஃப் காட்டுகிறது. வெவ்வேறு குற்றவாளிகளின் டிஎன்ஏ எவ்வாறு ஒத்துப் போகிறதென்பது (குபேர் படகில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களுடன்) தீர்ப்பின் இறுதியில் மூன்றாவது ஷெட்யூலில் இணைக்கப்பட்டுள்ளது.
காற்றடித்த ரப்பர் படகு: சம்பவங்களின் கோர்வையாக, குபேர் படகு நிகழ்ச்சிக்குப் பின்னர், மனுதாரன் கசாப் மற்றும் இறந்துவிட்ட அவனது கூட்டாளிகள் மும்பையில் கரையேறப் பயன்படுத்திய ரப்பர் படகுக்கு வருவோம்.
கைவிடப்பட்டுவிட்ட இந்தப் படகை நரிமான் பாயின்டில் பார்த்தவர் ப்ரஷாந்த் ஹேமந்த் தாணு. 2008 நவம்பர் 26ம் தேதி இரவு 9.45 - 10.00 மணியளவில் இதை பத்வார் பார்க் என்ற இடத்துக்கு இழுத்து வந்து, கடலோரக் கடற்கரைக்குத் தகவல் அளித்தவர். இரவு சுமார் 11.00 மணிக்கு, அதே தினம், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அனில் காம்ப்ளே, இரண்டு பஞ்சநாமா சாட்சிகளுடன் பரசுராம் காசிநாத் மேஹர் (பிடபிள்யூ-34) மற்றும் ப்ரகாஷ் கிருஷ்ண நாயக் (பஞ்சநாமா எக்ஸிபிட் 162) முன்னிலையில் இந்தப் படகில் இருந்த பொருட்களைக் கைப்பற்றினார். ரப்பர் படகு உட்பட 14 பொருட்கள் இதிலிருந்து கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. அவை,
1) 40 குதிரை சக்தி கொண்ட யமஹா எண்ட்யூரோ அவுட்போர்டு மோட்டார். இது படகில் பொருத்தப்பட்டிருந்தது.
2) சைனாவில் தயாரிக்கப்பட்டது என்ற குறிப்புடன், எம்ஒய்சி 86-5 மாடல் உயிர்காக்கும் ஜாக்கெட்டுகள், குங்குமப்பூ - சிகப்புநிறம் - 8, உற்பத்தி ஆண்டு 2006, வரிசை எண்கள் 0404663, 0404725, 0404731, 0404766, 04404847, 0404974, 0404869 மற்றும் 0404996
3) காஸோலின் என்று எழுதப்பட்ட சிகப்பு நிற எரிபொருள் பெட்டி
4) 1 ப்ளாஸ்டிக் பையில், சமாத் ரப்பர் பிரைவேட் லிமிடெட், பெரோஸ்பூர் ரோடு, லாகூர், பாகிஸ்தான் என்று எழுதப்பட்ட ஒட்டுப்பசை ட்யூப்
5) நீலநிற ஆயில் கேன் 1, 0.7 லிட்டர், ஷெல் ஆட்வான்ஸ் ஸ்போர்ட் எச்டி 20 டபிள்யூ 50 மோட்டார் சைகிள் ஆயில் என்று எழுதப்பட்டது மற்றும் படகைப் பழுது பார்க்கத் தேவையான கருவிகள் (டூல்கள்) அடங்கிய 1 ப்ளாஸ்டிக் பை. இந்த ரப்பர் படகில் பொருத்தப்பட்டிருந்த யமஹா அவுட் போர்டு மிஷின் இந்த வழக்கில் ஒரு விசேஷமான முக்கியத்துவம் பெறுகிறது.
ஜார்ஜ் மேனோ இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சர்வீஸ் சூபர் வைசராகப் பணியாற்றும் படாலா (பிடபிள்யூ 30) ஒரு மேரின் இஞ்சினியர். இவர் நீதிமன்றத்தில் கூறிய சாட்சியம்.
இவர் பணியாற்றும் மேற்படி கம்பெனி இந்தியாவில் யமஹா அவுட்போர்டு விஷின்களுக்கான அதிகார பூர்வமான இறக்குமதியாளர்கள் கம்பெனியின் தலைமையகம் இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்கப்படும் அவுட் போர்டு மிஷின்களுக்கான பதிவேடு வைத்துள்ளது. மும்பை போலீஸ் க்ரைம் பிரான்ச் அலுவலகத்திலிருந்து இவருக்கு அழைப்பு வந்தது. ஒரு யமஹா அவுட் போர்ட் மிஷினை இவர் சோதனை செய்தார். இன்ஸ்பெக்டர் கானே (பிடபிள்யூ 47) காற்றடைத்த ரப்பர் ஸ்பீட் படகு, யமஹா ஓபிஎம் இவரிடம் காட்டப்பட்டது. அதைச் சோதித்த பின்னர், மிஷின் பாகங்களிலுள்ள எண்களைப் பார்த்து தனது நாட்குறிப்பில் குறித்துக் கொண்டார். இந்த நாட் குறிப்பை நீதி மன்றத்தில் (எக்ஸிபிட் 147) காட்டினார். எண்களையும் எடுத்துச் சொன்னார்.
இஞ்சின் ப்ராக் கெட் எண் (ஓபிஎம்) 67602ஈ, சிடிஐ எண் 6எஃப்6 - 01 எஃப் 8 டி 411727 ஒய் 09; இஞ்சின் மீது இருந்த ஸ்டிக்கர் இஞ்சின் எண் 1020015 என்று காட்டியது. ப்ரொபெல்லர் அளவு 11க்கு 15 ஜி யமஹா ஓபிஎம்க்கு இந்தியாவில் அதிகார பூர்வமான இறக்குமதியாளர்கள், விற்பனையாளர்கள் தனது கம்பெனி என்றும் அவர் கூறினார். கம்பெனியின் தலைமையகத்துப் பதிவேடுகளில் உள்ள எண்கள், அவர் சோதித்த படகு விற்கப்பட்டதல்ல என்று உறுதிப்படுவதாக அவர் கூறினார். அவர் பரிசோதித்த ஓபிஎம்-ஐ நீதிமன்றத்தில் அடையாளர் காட்டினார். ஆர்டிகிள் 157.
இதில் முக்கியமான இன்னொரு சாட்சி பாட் வில்லியம்ஸ் - பிடபிள்யூ 154 அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் எஃப்பிஐ அலுவலகத்தில் இவர் இருந்த சமயம் ஆடியோ - வீடியோ இணைப்பு மூலம் இவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. ஜியாபரி மெரோன் பிடபிள்யூ 153 எஃப்பிஐல் சிறப்பு ஏஜெண்டாகப் பணியாற்றியவர். இவர் லாஸ் ஏஞ்சலால் எஃப்பிஐ அலுவலகத்தில் சிறப்பு ஏஜென்டாகப் பணியாற்றும் பால் ஆர் பானிடஸ் பற்றி அறிமுகம் செய்தார். இவர் பாட்வில்லியம்ஸ்-ஐ கோர்டுக்குக் காட்டினார். இவர் யமஹா மோட்டார் கார்பரேஷனில் சீனியர் ப்ராடக்ட் ஸ்பெஷலிஸ்டாகப் பணியாற்றி வந்ததாகக் கோர்டுக்குக் கூறினார். இந்தக் கம்பெனியின் தலைமை அலுவலகம், அமெரிக்காவில், கலிபோர்னியா மாநிலத்தில் சைப்ரஸ் என்னுமிடத்தில் உள்ளது. இங்குதான் இவர்கள் அவுட்போர்டு மிஷின்கள், மோட்டார் சைகிள், ஸ்கூடர் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறார்கள். இதில் சில அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் அவுட்போர்டு மிஷின்கள் அமெரிக்காவில் அல்லது ஜப்பானில் உற்பத்தி செய்யப்படுகின்றன. வரிசை எண்களைக் கொண்டு அவுட்போர்டு மிஷின்களை அடையாளம் காணமுடியுமென்றும், (மோட்டார் ப்ராக் கெட்டில் இருக்கும்) கடைசி 7 எண்கள் மோட்டார் படகைக் குறிக்குமென்றும் அவர் விளக்கினார். கடைசி 7 ஸ்தானங்கள் கொண்ட வரிசை எண், ஒரே அளவுள்ள ஓபிஎம் தவிர இன்னொரு மிஷினில் இருக்காது என்றும் அவர் கூறினார். மேலும் யமஹா அவுட் போர்டு மிஷின் எண் 1020015 எண்ட்யூரோ 40 மிஷின், ஜப்பானில் இருந்து பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்துக்கு பிசினஸ் அண்ட் இஞ்சினியரிங் ட்ரெண்ட் கம்பெனிக்கு அனுப்பப்பட்டதென்றும் அவர் மேலும் கூறினார். ஜப்பானில் இருந்து மேற்படி பாகிஸ்தான் கம்பெனிக்கு இந்த மிஷின் 2008, ஜனவரி 20ம் தேதி அனுப்பப்பட்டதாக பாட் வில்லியம்ஸ் கூறினார்.
இவரிடம் (பாட் வில்லியம்ஸ்) யமஹா கஸ்டமர் சர்வீஸ் க்ரூப் லெட்டர்தாளில் மிஸ் மிக்சல் தேஜராஸ் கையெழுத்திட்டு அமெரிக்க நீதி இலாக்கா, பெடால் பீரே ஆப் இன்வெஸ்டிகேஷனுக்கு எழுதப்பட்ட கடிதம் காட்டப்பட்டது. அதைப் பார்த்த வில்லியம்ஸ், எ.எஸ். யமஹா மோட்டார் கார்ப்ரேஷன் அஸிஸ்டன்ட் மேனேஜர் (சர்விஸஸ்) மிஸ். மிச்சல் தேஜராஸ் -ஐத் தெரியுமென்றும், அவருடன் குறைந்த பட்சம் 6-7 வருடங்கள் சேர்ந்து பணியாற்றியுள்ளதாகவும் கோர்ட்டுக்குத் தெரிவித்தார். மேலே குறிப்பிட்ட லெட்டர் பேடில் 2009, பிப்ரவரி 17ம் தேதிய கடிதத்தில் மிஸ் தேஜராஸ் கையெழுத்தையும் அடையாளம் காட்டினார். இக்கடிதம் எக்ஸிபிட் 604 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிஸ் தேஜராஸ் எழுதிய கடிதம்:
பெறுநர்:
யு.எஸ். டிபார்ட்மென்ட் ஆப் ஜஸ்டிஸ்,
பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்,
11000 வில்ஷையர் பிஎல்விடி, 17வது தளம்,
லாஸ் ஏஞ்சல்ஸ், சிஏ. 90403.
கவனம்: ஸ்பெஷல் ஏஜென்ட் ஜியாப்ரிமேரோன்,
கோப்பு எண் எல்ஏ - 252196
அன்புள்ள மேரோனுக்கு,
2009 பிப்ரவரி 13ம் தேதி எங்கள் யமஹா பிரதிநிதி உங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே உங்கள் இடத்தில் நடைபெற்ற உரையாடலை இக்கடிதம் மூலம் உறுதி செய்கிறோம். யமஹா அவுட் போர்டு எண்ட்யூரோ 40, மாடல் ஈ 40 ஜேஎம்எச்எல், வரிசை எண் 1020015 பற்றிய விவரங்கள்.
உற்பத்தி செய்யப்பட்ட இடம்/நாடு - ஜப்பான்.
ஏற்றுமதி செய்யப்பட்டது: இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆப் பாகிஸ்தான்
டிஸ்ட்ரிப்யூடர் : பிஸினஸ் அண்ட் இஞ்சினீயரிங் ட்ரெண்ட்
யமஹா மோட்டார் கார்பரேஷனுடன் ஆன எனது உத்தியோக வரம்பை ஒட்டி இந்தத் தகவலை அளிக்க எனக்கு அதிகாரமுண்டு.
தங்கள் உண்மையுள்ள,
மிக்சல் தேஜராஸ்,
அஸிஸ்டென்ட் மேனேஜர் - சர்வீஸ் சப்போர்ட்,
நகல்: எஸ்.ஆர். எண் 1 - 9130852
பிங்க் நிற மென்மையான பேக்கில் பொருள் - ஃபாம்
பயங்கரவாதிகள், கையெழுத்துக்கள்.
பத்வார் பார்க் மும்பை கடற்கரையை அடைந்த ரப்பர் படகை விட்டு நாம் சிஎஸ்டி ரயில் நிலையத்துக்குத் திரும்புவோம். மனுதாரர் கசாப், அவனது இறந்துவிட்ட கூட்டாளி இஸ்மாயில் இருவரும் நிகழ்த்திய சிஎஸ்டி மரணக் கூத்துகளை முன்பே பார்த்தோம். மீண்டும் இந்த இடத்துக்கு - சிஎஸ்டி - திரும்புவோம். மும்பை நகரின் பிற இடங்களில் இவர்கள் நிகழ்த்திய வெறியாட்டச் செயல்கள், எவ்வாறு சதிதிட்டங்களில் மற்ற 8 தீவிரவாதிகளையும் ஒன்றாகப் பிணைக்கிறது. இங்கு நாம் பார்ப்பது ஒரு சாதாரணமான முக்கியத்துவ மற்ற பொருளாகத் தோன்றுகிறது. இது ஒரு பிங்க். இளஞ்சிவப்பு - நிற மென்மையான நுரை போன்ற பொருள். ஆனால் முக்கியத்துவமற்ற, அற்பமான இந்தப் பொருள் மனுதாரன் கசாப்ஐ மற்ற 8 பயங்கரவாதிகளுடன் பிரித்துப் பார்க்கமுடியாதபடி இணைக்கிறது. இந்த இளஞ்சிவப்பு ஃபாம் பொருள், ஒரு நீண்ட நூலைப் போல ஒவ்வொரு சம்பவத்தோடும் இணைந்து, ஒரு உள்ளார்ந்த துணையாக ஒரேயொரு பயங்கர நாடகத்தின் பொது அங்கமாக இருந்திருக்கிறது என்பதைப் போகப் போகக் காணலாம்.
இந்த இளஞ்சிவப்பு நிறம் பொருள், குபேர் படகிலிருந்து மீட்கப்பட்ட பல்வேறு பொருள்களுக்கிடையில் முதன் முதலாகக் காணப்பட்டது என்பதை நினைவுப் படுத்திக் கொள்வோம். குபேர் படகிலிருந்து மீட்கப்பட்ட பொருள்களில் இது 10வது எண்ணாக - பல அளவுகளில் உள்ள பிங்க் நிறப் பொருள் 6 எண்கள் - குறிக்கப்பட்டுள்ளது. 13வது பஞ்சநாமா ஆவணம் 6 அங்குல நீளமுள்ள ஒரு ஜோடிக் கத்திரிக்கோல்களைக் குறிப்பிடுகிறது.
இந்த பிங்க் நிற பஞ்ச போன்ற ஃபாம் சிஎஸ்டி ரயில்நிலைய நிகழ்ச்சியிலும் காணப்படுகிறது. இந்தத் தீர்ப்பின் முன் பக்கங்களில், கசாபின் இறந்து விட்ட கூட்டாளி அபு இஸ்மாயில், அவனது ஏகே.47 துப்பாக்கியால் சுடத் தொடங்குவதற்கு முன்னால், பிரயாணிகள் தங்கள் சாமான்களை வைக்கும் தங்கும் அறையில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு அடங்கிய ஒரு பையை வைத்தான் என்பதைக் குறிப்பிட்டுள்ளோம். அதிர்ஷ்ட வசமாக அந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை. இந்த நாசவேலை நிகழ்வுகள் முடிந்த பின்னர் சிஎஸ்டி ரயில் நிலையத்தில் சிதறிக் கிடந்த, சொந்தம் கோஸ்படாத பொருட்களைத் திரட்டி ஒரே இடத்தில் வைத்தனர். இவ்வாறு சேகரிக்கப்பட்டு, பிற லக்கேஜுகளுடன் இந்த வெடிகுண்டுப் பையும் இருந்தது. சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அவர்களது உடைமைகளைத் திருப்பித் தரும்போது, கருப்பு, சிவப்பு நிற சாக்குப்பை சந்தேகத்துக்கிடமான வகையில் சாமான கூட்டத்துக்கு இடையில் கிடந்தது காணப்பட்டது. போலீஸ் வரவழைக்கப்பட்டு சோதனை செய்து பார்த்ததில் அதில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் அணைப்புகுழு - வரவழைக்கப்பட்டு, குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டது. 2008 டிசம்பர் 3ம் தேதி மாலை சுமார் 7 மணிக்கு, டேவிட் ராஜ்தாமஸ் மற்றும் ஷாம் ரத்தன் தாகே ஆகியோரைச் சாட்சிகளாகக் கொண்டு "கைப்பற்றல் பஞ்சநாமா' ஆவணமும் தயாரிக்கப்பட்டுளளது. இந்த சிவப்பு - கருப்பு நைலான் பையில் பூட்டுப் போட்டுள்ள ஒரு சதுர தகர டப்பாவில் நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகர டப்பா இளஞ்சிவப்பு பஞ்சு போன்ற மெல்லிய பொருளால் எல்லாப் பக்கங்களிலும் மூடப்பட்டிருந்தது.
அடுத்த கட்டம்: சிஎஸ்டி ரயில் நிலையத்திலிருந்து மனுதாரன் மற்றும் அவனது இறந்து போன கூட்டாளி இருவரும் காமா மருத்துவமனை மொட்டை மாடிக்குச் சென்றார்கள். அங்கு சதானந்த் வசந்த் தாதே - பிடபிள்யூ 118 - மற்றும் அவரது குழுவுடன் இவர்கள் எதிர்த்து நிற்க நேர்ந்தது. இந்த சம்பவம் முடிந்த பின்னர் மருத்துவமனைக் கட்டிடத்தின் பல பாகங்களில் இருந்தும், குறிப்பாக மொட்டைமாடிப் பகுதியிலிருந்தும் ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இங்குதான் தாதே மற்றும் அவரது குழுவினருடன் பயங்கரவாதிகள் மனுதாரன் கசாப் மற்றும் அவனது இறந்துபோன கூட்டாளி அபு இஸ்மாயில் நீண்ட போரைச் சந்தித்தனர். இந்த மொட்டை மாடியில் 2008 நவம்பர் 28ல் கைப்பற்ற பட்ட பொருட்கள் - எக்ஸிபிட் 486 - ஒரு பஞ்சநாமா ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. காமா மருத்துவமனையில் கைப்பற்றிய பொருட்களில் ஒன்று நீல, ஊதா நிறக் கறுப்பு ரெக்சின் பை. இதை அதிலுள்ள பொருட்களைக் கொண்டு தோள் மற்றும் இடுப்பில் கட்டிக் கொண்டு முதுகில் சுமந்து செல்லலாம். இதில் "அலையை மாற்றலாம்' என்று பொருள்படும் வாசகம் அச்சடிக்கப்பட்டிதருந்தது. இதில் பிங்க் நிற பஞ்சுப் பொருள் 51 செ.மீ து 193 செ.மீ. து 1 செ.மீ. அளவில் இருந்தது.
பயங்கரவாதிகள் தாஜ் ஹோட்டலில் பதித்த இரண்டு வெடிகுண்டுகள் வெடிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. வெடிகுண்டு வைத்திருந்த ஒரு பை, புதிய தாஜ் ஹோட்டல் அருகில் 50 மீட்டர் தூரத்தில் .ளள குனி டூரிஸம் சௌகி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. மற்றொன்று ஸ்டேட் பேங்க ஆப் ஹைதராபாத் எதிரில் கோகுல் ஒயின் ஷாப் சந்தில் உள்ள கோகுல் உணவகம் அருகே காணப்பட்டது. இவை பஞ்சநாமா ஆவணம் எக்ஸிபிட் 736 ஆவணப்படி 2008 நவம்பர் 27ம் தேதி வெடிகுண்டுப் பைகள் கைப்பற்றப்பட்டன. ஹிதேஷ் சந்திர விஜயகுமார் அவஸ்தி மற்றும் அமர்நாத் ராம்விலாஸ் இருவரும் பஞ்சநாமா சாட்சிகள்.
முதல் வெடிகுண்டு இருந்த பை பற்றிய விளக்கம்: மேலே உலோகத்தாலான மூடி, பக்கத்தில் பூட்டு, எல்லாப் பக்கங்களிலும் பிங்க் நிற பஞ்சுப் பொருளால் மூடப்பட்டிருந்தது. எலக்ட்ரானிக் பைமர் மூலம் வெடிக்கச் செய்வது. உருது மற்றும் ஆங்கிலத்தில் எலக்ட்ரானிக் டைமர் மீது ஒட்டப்பட்டிருந்தது. இரண்டு 9 வேவ்ட் டியூரசேல், பேட்டரிகள், இரண்டு எலக்ட்ரானிக் வெடி தூண்டுதல் - டெடோனேடர்ஸ் - என்ற வாசகங்கள் இருந்தன.
இரண்டாவது வெடிகுண்டு பற்றிய விளக்கம்: இது நீண்ட சதுர வடிவ உலோகப் öப்டடி. மேலே உலோக மூடி. பக்கத்தில் பூட்டு உள்ளது. எல்லாப் பக்கத்திலும் பிங்க் நிறப் பஞ்சுப் பொருளால் சுற்றப்பட்டிருந்தது. எலக்ட்ரானிக் டைம் கருவி மூலம் வெடிப்பது. எலக்ட்ரானிக் டைமர் மீது வெள்ளைத் தாளில் உருது, ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. இரண்டு 9 வோல்ட் ட்யூரசேல் பாட்டரிகள், 23 எலக்ட்ரிகல் வெடி குண்டு கருவிகள் - டெடோனேடர்ஸ்.
தாஜ் மகால் ஹோட்டல் வாஸாபி ஹார்பர் பார் 1933ல் இந்த பிங்க் நிற பஞ்சுப் பொருள் மீண்டும் நீல, கருநீலப் பையில் இருந்து மீண்டும் தோன்றுகிறது. 2008 நவம்பர் 29ல் (எக்ஸிபிட் 749) கைப்பற்றப்பட்ட பொருள்களில் இந்தப் பை ஒன்று. பஞ்சநாமா ஆவணம் இதற்கும் உள்ளது. ஈசுவர் மகாதேவ் கோலேகர் மற்றும் வைபவ் விலாஸ் பாட்டீல் இருவர் இந்த பஞ்சநாமாவில் சாட்சிகள்.
இந்தக் கருநீலப்பை பற்றிய விளக்கம்: ஒரு நீல, கருநீலப்பை. சுமார் இரண்டே கால் அடி உயரம், ஒரு அடி அகலம், முதுகில் சுமந்து செல்ல இரண்டு பெல்ட் வசதி கொண்டது, இடுப்பைச் சுற்றிக் கட்டிக் கொள்ள வசதியாக 5 அங்குல அகலத்தில் நீல நிற ஸ்ட்ரிப்புகள், "அலையை மாற்றலாம்' என்ற பொளு"படும் வாசகம் .ள்ளது. அந்தப் பையில் காவி நிறம், கிளிப்பச்சை, நீல நிறத்தில் ஒரு சித்திரமும் உள்ளது. தவிர பிங்க் நிற 2 அடி நீள பஞ்சுப் பொருள் இந்தப் பையிலும் இருந்தது.
பைகளுக்குள் இருக்கும் வெடிகுண்டுகள், கையெறி குண்டுகளுக்குச் சேதம் ஏற்படாது குஷன் வசதி செய்யவும், சுமந்து செல்லும் போது தற்செயலாக வெடித்து விடாது தடுக்கவும், இந்த பிங்க் நிற பஞ்சு மென்மைப் பொருள் உபயோகிக்கப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
குபேர் படகு, சிஎஸ்டி ரயில் நிலையம், காமா மருத்துவமனை மொட்டை மாடி, தாஜ் ஹோட்டல் அருகில் கண்டெடுக்கப்பட்ட பைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பஞ்சு பொருள் துண்டுகள் ஃப்ரான்சிக் சயின்ஸ் லேபரடரிக்கு ரசாயன சோதனைக்கு அனுப்பப்பட்டன.
நீதி மன்றத்தில் சாட்சியமளித்த பிடபிள்யூ 247 தடயவியல் நிபுணர் ராஜேந்திர ராமச்சந்திர மால்வே, இந்தப் பஞ்சுப் பொருள் தோற்றத்திலும் மற்றும் பிசியோ தெர்மல் குணாதிசயங்களிலும் ஒன்றுக் கொன்று ஒரே தன்மையானவையென்று கூறினார். இந்தப் பஞ்சுப் பொருள் துண்டுகளை வெவ்வேறு தெர்மல் நிலைகளில் ஆராயந்ததாகவும் அதில் எல்லாமே ஒரே நிலை தெர்மல் குணாதிசயங்களைக் கொண்டவை என்றும் தெரிவித்தார். மேலும் இந்த பஞ்சுப் பொருள் ஒரே இடத்தில் வாங்கப்பட்டுள்ளன என்று முடிவாகக் கூறினார். இந்த அறிக்கை எக்ஸிபிட் எண் 1013 ஆகும்.
இடைமறித்துக் கேட்கப்பட்ட தொலைபேசிப் பதிவுகள்: இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய சதி விபரங்கள் பற்றிய சாட்சியங்கள், அயல் நாட்டில் உள்ள தங்களது கூட்டுச் சதிகாரர்கள் மற்றும் பங்காளிகளுடன் பயங்கரவாதிகள் தொடர்பு கொண்ட தொலைபேசிகள் மறித்துக் கேட்கப்பட்டதில், இந்தச் சதி, அதையொட்டிய சம்பவங்கள் சுட்டிக் காட்டுவது "இந்தச் சதித் திட்டம் பிறந்த இடம் பாகிஸ்தான்' என்பதே உண்மை.
மனுதாரன் கசாப் தனது காரியத்தில் மட்டுமே குறியாக இருந்தான். ஆனால் இறந்து விட்ட குற்றவாளி எண் 1, அபு இஸ்மாயில் அங்குமிங்குமாக நகர்ந்து கொண்டேயிருந்தான். மற்றப் பயங்கரவாதிகள் ஹோட்டல் தாஜ், ஹோட்டல் ஓபிராய் மற்றும் நரிமான் ஹவுசுக்குச் சென்று விட்டனர். சிறிது நேரம் பிணைக் கைதிகளைப் பிடித்து வைத்திருந்தாலும் அங்கே சிக்கி விட்டார்கள். அவரவர்கள் இருந்த இடத்திலிருந்து, தங்களது கூட்டாளிகளுடன் தங்களது மொபைல் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தார்மீகமான ஆதரவு, அறிவுரை மற்றும் ஆலோசனைகளைப் பெற்று வந்தனர்.
பயங்கரவாத எதிர்ப்புக் குழுவில் மிகவும் எச்சரிக்கையோடு செயல்பட்ட ஒருவர், தாஜ் ஹோட்டல், நரிமான் ஹவுஸ் மற்றும் ஹோட்டல் ஓபிராயில் இருந்து பயங்கரவாதிகள் தொலைபேசி மூலம் கொண்ட தொடர்புகளைக் கண்டு கொண்டதுடன், அவற்றை இடைமறித்துக் கேட்டார்.
மும்பை பயங்கரவாத எதிர்ப்புக் குழுவில் பணியாற்றுபவர் நிவ்ருதி துகாராம் காடம் - பிடபிள்யூ242. இவர் தொழில்நுட்பம் பிரிவில் பணியாற்றுகிறார். உளவுச் செய்தி சேகரித்தல், தொலைபேசி உரையாடல்களை இடைமறித்துக் கேட்டல் மற்றும் செய்தி விபரங்களை ஆராய்தல் இவரது பணி. 2008 நவம்பர் 26 இரவு இவர் மும்பை நாகபாடாவில் உள்ள தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். பயங்கரவாதிகள் மொபைல் தொலைபேசி 9910719424 எண்ணிலிருந்து தொடர்ந்து யாரையோ அழைத்துப் பேசுவதாக இவருக்குச் செய்தி வந்தது.
சாதாரண காலங்களில் தொலைபேசி உரையாபலை இடைமறித்துக் கேட்க அரசின் அனுமதி தேவை. ஆனால் அவசர நிøலைமைகளில் இதைச் செய்ய ஒருவருக்கு அவரது உடனடி மூத்த அதிகாரியின் அனுமதியே போதுமானது. இந்த விஷயத்தில் பயங்கரவாத எதிர்ப்புக் குழு பொறுப்பிலிருக்கும் அனுமதி இந்த சந்தர்ப்பதில் போதுமானது.
அப்போது இந்த ஏடிஎஸ். முதன்மை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஹேமந்த் கர்காரே. மேலே கூறியுள்ளபடி, போலீஸ் க்வாலிஸ் காரில் இவரும், மேலும் இரண்டு அதிகாரிகள் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது, மனுதாரன் கசாப் தாக்குதலில் மற்றும் போலீசாரும் கொல்லப்பட்டு விட்டனர். கர்காரே இவ்வாறு கொால்லப்பட்டுவிட்ட பின்னர், அவரது டெபுடியும் கூடுதல் போலீஸ் கமிஷனருமான பரம் பீர் சிங் அவரது இடத்தில் பொறுப்பேற்றார். (பிடபிள்யூ உடனே காடம் (பிடபிள்யூ 242) பாம் பீர்சிங்கிடமிருந்து, தொலைபேசி உரையாடலை மொபைல்போன் 9910719424ல் இருந்து இடைமறித்து எழுத்து மூலமான அனுமதியைப் பெற்றார். இவ்வாறு பரம் பீர்சிங் அளித்த அனுமதியை, மகாராஷ்டிரா அரசு உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்கலா ஜூட்ஷி (பிடபிள்யூ 253) அனுமதியை வழங்கினார்.
தொலைபேசி உரையாடல்களை இடைமறித்துக் கேட்க வழங்கப்பட்ட அனுமதியை ஒட்டி, மேற்படி தொலைபேசி சேவையாளர் (பாரதி ஏர்டெல்லுக்கு) மற்றும் எல்லா சேவையாளர்களுக்கும், மேற்படி எண் ரோமிங்ல் இருந்ததால், இந்த உரையாடல்களை போலீஸ் லேண்ட் லைன் 022-23053162 எண்ணுக்குத் திருப்பும்படி உத்தரவிடப்பட்டனர். இவ்வாறு மேற்படி மொபைல் எண்ணிலிருந்தோ அல்லது அந்த எண்ணுக்கு வந்த அழைப்புகளையோ கம்ப்யூட்டர் சாப்வேட் உதவியுடன் போலீஸ் லேண்ட் லைன் எண்ணில் ஹெட்போன், ஸ்பீக்கர் மூலம் கேட்க முடியும். இந்த நோக்கத்துக்காகவே ஏடிஎஸ். அலுவலகத் தொலைபேசியில் ஷோகி என்னும் சாப்ட்வேர் பொருத்தப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து முதல் அழைப்பு 01-04 ணணிக்கு (இரவு) 2008 நவம்பர் 27ல் வந்ததென்றும் கடைசி அழைப்பு அதே நாளில் 10.27 மணிக்கு பதிவு செய்யப்பட்டதென்றும் காடம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த உரையாடல்களைத் தானே நேரடியாகக் கேட்டதாகவும் அதை கம்ப்யூடர் ஹார்ட் டிஸ்க்ல் அதே சமயம் பதிவு செய்ததாகவும் காடம் நீதி மன்றத்தில் கூறினார். பின்னர் இந்தக் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் பதிவுகள் சிடியில் நகலெடுக்கப்பட்டன. பின்னர் பேப்பர்களில் நகலெடுக்கப்பட்டன.
மொபைல் எண் 9910719424ல் இருந்து வந்த உரையாடல்களில் இருந்து அவை தாஜ் ஹோட்டலில் இருந்து வந்தவை என்று அறியமுடிந்ததென்று காடம் மேலும் கூறினார். பேசியவர்கள் அலி, உமர், அப்துல் ரகுமான் மற்றும் ஷோயெப் பேசினார்கள். மற்ற முனையிலிருந்து பேசியவர்கள் வாசிபாய் மற்றும் காஃபா பாய்.
அந்த இரவில் காடம் வேறு இரண்டு மொபைல் பேச்சுக்களையும் கேட்டார். அவை 9820704561 மற்றும் 9819464530. இதில் முதலாவது ஹோட்டல் ஓபிராய் பயங்கரவாதிகளாலும், இரண்டாவது நரிமான் ஹவுஸ் பயங்கரவாதிகளாலும் பயன்படத்தப்பட்டது. மேலே குறிப்பிட்ட முறைப்படியே, இதற்கான இடைமறித்தல், கேட்டல் அனுமதியைப் பெற்று இந்த உரையாடல்களையும் இடைமறித்தார். இவற்றையும் இவர் 2008 நவம்பர் 27 இரவு 1.04 மணிக்குத் தொடங்கினார். கடைசி அழைப்பு காலை 8.52 மணிக்கு வந்தது. மொத்தமாக 12 நேரம் 33 நிமிடங்களுக்கு பயங்கரவாதிகளின் உரையாடல்கள் நடந்துள்ளன.
இவ்வாறு இடைமறிக்கப்பட்ட உரையாடல்கள் ஒரு லேப்டாப் மூலம் நீதிமன்றத்தில் ஒலிபரப்பிக் காட்டப்பட்டது. பதிவு செய்யப்பட்ட இந்தக் குரல்களை எழுத்து வழியான ட்ரான்ஸ்கிரிப்டுகளோடு ஒப்பிடுகையில், இவைகளில் சில சிறு பிழைகள் தவிர, இந்த ட்ரான்ஸ்கிரிப்டுகள் சரியானதே என்று காடம் நீதிமன்றத்தில் கூறினார். வேறுபட்ட தனித்தனி மொபைல் எண்களிலிருந்து செய்யப்பட்ட உரையாடல் பதிவு சிடிக்களை காடம் அடையாளம் காட்டினார்.
காடம் தெரிவித்த மிக முக்கியமான செய்தி இதுவே. மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மொபைல்களிலிருந்தும், பேசப்பட்ட உரையாடல்கள் எல்லாமே ஒரே எண்ணுக்கு 012012531824 பேசப்பட்டவை. புலன் விசாரணையில் இந்த எண் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்திலுள்ள கால்போனெக்ஸ் கம்பெனிக்குச் சொந்தமானதென்று தெரிய வந்துள்ளது.
தி கால்போனெக்ஸ்: பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 012012531824 எண்ணிலிருந்து பேசுவதாகத் தெரிவதாக காடம் கோர்ட்டில் கூறினார். இதில் உள்ள சர்வதேசக் குறியீட்டிலிருந்து இந்த எண் அமெரிக்காவைச் சேர்ந்ததென்று தெரிகிறது. பிடபிள்யூ 156 நிசார் அல் ஷரீப் சாட்சியத்திலிருந்து இந்த எண் பற்றிய தெளிவு கிடைக்கிறது.
இவரது சாட்சியம் ஆடியோ- வீடியோ இணைப்பு மூலம் பதிவு செய்யப்பட்டது. வீடியோ கான்பரென்ஸ் வசதி கொண்ட ஹோட்டல் ஃபேர் ஃபீல்ட் இன் அறை 222ல் இவர் அமர்ந்திருந்தார். இது கனடா, ஒன்டேரியோ சட்ரியில் உள்ளது. முன்னர் பிடபிள்யூ 153 ஆக விசாரிக்கப்பட்ட எஃப் பி ஐ ஸ்பெஷல் எஜெண்ட் ஜியாப்ரி மேரோன் முதலில் இந்தத் திரையில் டேவிட் ஷியா என்பவரை அடையாளம் காட்டினார். ஷியா பின்னர் நிசார் அல் ஷரிப் ஐ திரையில் கோர்ட்டுக்கு அடையாளம் காட்டினார். இவர் லாஸ் ஏஞ்சலெஸ்ல் எஃப் பி ஐ ஏஜெண்ட்.
அல் ஷரீப் தனது சாட்சியத்தில் இன்டர்நேஷனல் கனெக்ஷன் சர்வீஸஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என்று தன்னைப் பற்றிக் கூறினார். 1993ல் டெலாவேர் மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அலுவலகம் நியூ ஜெர்சியில் உள்ளது. கம்பெனியின் ப்ராண்ட் பெயர் கால்ஃபோனெக்ஸ். 2008 நவம்பர் முதல் 2009 ஜனவரி 6ம் தேதி வரை கால்போனெக்ஸ் டெலிபோன் எண் (201)253-1824 ஆக இருந்தது. இந்தக் கம்பெனி மொத்தமாக வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் ப்ரொடோகல் சேவைகளை அளித்து வந்ததாக அல்ஷரீப் கோர்ட்டில் கூறினார். இவர்களது சேவைகளை நாடுவோர், அமெரிக்காவில் இல்லாவிட்டாலும், அவரது இணைய தளம் மூலம் தொடர்பு கொள்ளலாமென்று இவர் கோர்டில் கூறினார். ஈமெயில் வாடிக்கையாளர் தன்னைப் பதிவு செய்து கொண்ட பின்னர், அவரது தேவைக்கேற்ப சேவைகள் செய்து தரப்படும். எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் பணம் முன்பே செலுத்தப்பட்டு விட வேண்டும். தங்களது சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர் காலர் ஐடி உள்ள எண்ணை அழைத்தால் திரையில் கால்ஃபோனெக்ஸ் எண் தெரியும் இந்தக் குறிப்பிட்ட காலத்தில் கால்ஃபோனெக்ஸ் எண் (201) 253-1824- 2008 நவம்பரில். இதை ஒருவர் மறைத்து விட முடியும். ஆனால் உபயோகிப்போர் இந்த எண்மீது (201) 253-1824 மீது கண்ட்ரோல் செய்யமுடியாது. பல்வேறு நாடுகளிலிருந்து தங்களுக்கு எண்கள் உண்டு என்று அவர் மேலும் கூறினார். சில அமெரிக்க எண்கள் தங்களது வாடிக்கையாளர்கள் விஐபி மூலம் மொபைல் நம்பர்களுக்கு அழைக்கலாம்.
நிசார் அல் ஷெரீப் மேலும் கூறியதாவது: கரக்சிங் என்பவர் (தேடப்பட்டு வரும் குற்றவாளி 21) அவருடன் ஈமெயில் மூலம் தொடர்பு கொண்டு தன்னை விஐபி சேவை மனு விற்பனையாளர் என்று அறிமுகம் செய்து கொண்டார். 2008 அக்டோபர் 20ம் தேதி ஈமெயில் மூலம் இவர் தொடர்பு கொண்டார். கரக்சிங்குடன் ஈமெயில் தொடர்புக்குப் பின்னர் இவர்கள் கால்ஃபோனெக்ஸ் - 15 பிசி 2 போன் கணக்குகளை ரம்பித்துக் கொடுத்துள்ளனர். இவற்றில் 10 காமன்க்ளையண்ட் அக்கவுண்ட். 5 டிஐடி ஆஸ்டிரியன் தொலைபேசி எண்கள். கரக்சிங்கின் ஈமெயில் ஐடி கரக்-டெல்கோ அட் யாஹு.காம். கரக்சிங் வேறு முகவரியேதும் தரவில்லை. தான் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று மட்டுமே இவர் கூறியுள்ளார். கரக்சிங்கிடமிருந்து வந்த மெயில்களுக்கு நிசார் அல் ஷரீப் தானே நேரடியாகப் பதில் அளித்துள்ளார். கரக்சிங் அனுப்பிய முதல் தொலை 250 அமெரிக்க டாலர்கள், பாகிஸ்தானில் இருந்து மணிக்ராம் மூலம் பெறப்பட்டது. இதை அனுப்பியவர் பெயர் முகமது இஸ்பாக். இதற்கான ரசீது அவரிடம் காட்டப்பட்டது அது சரியேயென்று அவர் அடையாளம் காட்டிய பின்னர் இது ஆர்டிகிள் 530 ஆக சாட்சியத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாவது பணம் 229 அமெரிக்க டாலர்கள் வெஸ்டர்ன் யூனியன் மூலம் இவருக்கு (கால்ஃபோனெக்ஸ்) அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான ரசிது ஆர்டிகிள் 531 ஆக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அல் ஷரீப் தெரிவித்த மிக முக்கியமான செய்தி: இவர் கரக்சிங்குக்கு அளித்த சேவை மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டது 2008 நவம்பர் 24 முதல் 27 வரை. ஆரம்ப கால உபயோகங்கள் சோதனை வகையாகவே இருந்தது.
தனது 2009 பிப்ரவரி 13ம் தேதி கடித மூலம் (எக்ஸிபிட் 614) கீழ்கண்ட தகவல்கள் எஃப் பி ஐக்கு அளித்துள்ளதாக அல் ஷரீப் கோர்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.
1. கரக்சிங் சப் - அக்கவுண்ட் 310000 துது 400000 துது ல் அழைப்பு விவரங்கள் பதிவுகள்.
2. 5 டிஐடி எண்களுக்கான அழைப்பு விவரங்கள் - பதிவுகள்

3. டிஐடி நம்பர்களுக்கான வக்ஸ்போன் அழைப்பு விவரப் பதிவுகள் (இவற்றை கால்ஃபோனெக்ஸ் தானாகவே பெறமுடியும்)


4. கரக்சிங், கால்பேனெக்ஸ் பிரதிநிதியுடன் பேசிய 3 சாட் லோகோகள்.


5. 2008 அக்டோபர் 27ம் தேதிய மணிகிராம் ரசிது நகல். 2008 நவம்பர் 25 தேதிய வெஸ்டர்ன் யூனியன் ரசீது நகல்.


6. கரக்சில் - கால்ஃபோனெஸ் இடையிலான ஈமெயில்கள்.

276. கரக்சிங்கிடமிருந்து கடைசியாக 2008 நவம்பர் 25ம் தேதி பிற்பகல் 12.08 மணிக்கு மெயில் வந்ததென்றும், பின்னர் இருவருக்கும் இடையே எந்தத் தொடர்புமே இல்லையென்றும், 2008 டிசம்பர் 25ல் கரக்சிங் கணக்கு முடிக்கப்பட்டுவிட்டதாகவும் அல் ஷரீப் தனது சாட்சியத்தில் நீதி மன்றத்தில் கூறினார்.

277. தன்னை இந்தியர் என்று காட்டிக் கொண்ட கரக்சிங் ஒரு மோசடிப் பேர்வழி என்று முடிவு செய்ய ஆழமான புத்தி கூர்மை ஏதும் தேவையில்லை. கால்போனெக்ஸ் நிறுவனத்திடமிருந்து விஐபி சேவைகளைப் பெற சிருஷ்டிக்கப்பட்ட ஒரு கற்பனை மனிதன். எஃப்பிஐ நடத்திய புலன் விசாரணையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.


மும்பை எஸ்ப்ளனேட் கூடுதல் முதன்மை மாஜிஸ்ட்ரேட் தனது மிஸலேனியஸ் அப்ளிகேஷன் நீர் 1/2009 மூலம் எழுதிய லெட்டர் ஓ-கேடரி கடிதத்துக்கு எஃப்பிஐ ஸ்பெஷல் ஏஜென்ட் அளித்துள்ள பதிலில் இந்த உண்மை உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இவர் பி.டபிள்யூ 153. இவரது பதில் செய்தி தேதி 2009 பிப்ரவரி 18. இது எக்ஸிபிட் எண் 617ஏ.


கால்போனெக்ஸ் நிறுவனத்துக்கு கரக்சிங் கணக்கில் 2008 அக்டோபர் 27ல் முதலாவதாக 250 அமெரிக்க டாலர்கள் மணிக்ராம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான ரசீது எண் 80700471903880005473. இதை அனுப்பியவர் முகமது இஷ்பாக். இதை லாகூரில் உள்ள பராச்சா இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் மணிக்ராம் ஏஜெண்ட் மூலம் அனுப்பியுள்ளார். இந்த நிறுவனம் லாகூரில் அனார்கலி பயாசுதீன் சாலையில் பாகிஸ்தானில் உள்ளது. இதை மணிக்ராம் மூலம் அனுப்ப இஷ்வாக், போஸ்ட் ஆபீஸ் மால் ஆன் டெஹ்குஜார் கே, பெஷாவார், பாகிஸ்தான் என்று முகவரியும், 03455698566 என்று தொலைபேசி எண்ணும் கொடுத்துள்ளார். இத்துடன் மணிக்ராம் ரசீது நகலும் இணைக்கப்பட்டுள்ளது.


இரண்டாவது தவணைப் பணம் 2008 நவம்பர் 25ம் தேதி வெஸ்டர்ன் யூனியன் மூலம், 8364307715-0 ரசீதின்படி அனுப்பப்பட்டுள்ளது. அனுப்பியர் ஜாவைத் இக்பால். கால்போனெக்ஸ்-க்கு இந்த இரண்டாவது தவணை பணம் 229 அமெரிக்க டாலர்களை அனுப்பியர் இவர் கையாண்ட வெஸ்டர்ன் யூனியன் ஏஜென்ட்- மதின டிரேடிங், பெஸ்சியா, இத்தாலி. தனது அடையாளத்தை உறுதிப்படுத்த இக்பால் மதின டிரேடிங்க்கு தனது கேசி094281 எண் பாகிஸ்தானி பாஸ்போர்டை அளித்துள்ளான்.


கால்ஃபோனெக்ஸ் ஒரு உண்மையைக் கூர்ந்து பார்த்துள்ளார். அனுப்பப்பட்டுள்ள இரண்ட தவணைப் பணங்களுமே இந்தியாவில் இருந்து வரவில்லை என்பதே அது. நவம்பர் 25, 2008 அன்று இவர் கரம் சிங்குக்கு அனுப்பிய ஈ மெயிலில் இருந்தியவிலிருந்து ஏன் பணம் வருவதில்லை என்று கேட்டுள்ளார். சிங் பதில் ஏதும் அனுப்பவில்லை.

278. மேலே கூறப்பட்டுள்ள - கரக்சிங் ஒரு இந்தியர் - என்ற செய்தியையொட்டி எஃப்பிஐ எஜென்ட் கீழ்கண்டவாறு தெரிவிக்கிறார்.


கரக் - டெல்கோ அட் யாஹு.காம் கணக்கு 2008 அக்டோபர் 20ம் தேதி ஆரம்பமானது. இன்டர்நெட் ப்ரோடோகல் (ஐபி) முகவரி 66.90.72.125 மூலம் தொடங்கப்பட்டது. 2008 அக்டோபர் 20 - 2008 நவம்பர் 28 தேதிகளுக்கிடையில் இந்தக் கணக்குக்கு லாக் - இன் செய்யப்பட்ட கீழ்கண்ட முகவரிகள் எல்லாம் பின்வரும் பூகோளப் பகுதிகளைச் சேர்ந்தவை என்று தெரிவிக்கிறது.


58.27.167.153 - பாகிஸ்தான்.


66.90.73.125 - அமெரிக்காவில் ஒரு பதில் ஆசாமி - ஃப்ராக்ஸி


67.159.44.63 - அமெரிக்காவில் ஒரு பதில் ஆசாமி - ஃப்ராக்ஸி


80.78.132.155 - குவைத்


82.114.138.18 - ரஷ்யா - ஒரு பதில் ஆசாமி


82.114.141.99 - ரஷ்யா - ஒரு பதில் ஆசாமி


118.107.140.138 - பாகிஸ்தான்.


203.81.224.201 - பாகிஸ்தான்.


203.81.224.202 - பாகிஸ்தான்.


203.81.224.203 - பாகிஸ்தான்.


சிங்கின் கால்போனெக்ஸ் கணக்கு 2008 நவம்பர் 28க்குப் பிறகு இயங்கவில்லை. செயல்படாத நிலை, சுறுசுறுப்பின்மை, பணம்வராமை, செய்தித் தொடர்பின்மை ஆகிய காரணங்களுக்காக முடித்து வைக்கப்பட்டு விட்டது.

279. நிசர் அல் ஷெரிப் எஃப்பிஐக்கு அளித்த ஆவணங்களில் இருந்து கரக்சிங் - கால்போனெக்ஸ் பிரதிநிதி இடையே 3 சாட் லாக்ஸ், ஈ மெயில் பரிமாற்றங்கள் நடந்துள்ளன என்பது மேற்படி செய்திகளில் இருந்து தெரிகிறது.

280. கரக்சிங் - கால்போனெக்ஸ் இடையே நிகழ்ந்த சாட்டிங் மற்றும் ஈமெயில் பரிமாற்றங்களை ஆழ்ந்து ஆராய்ந்து கடுமையான உழைப்புடன் அரசு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் விரிவாக எடுத்து வைத்தார். கரக்சிங் என்ற கற்பனைப் பெயரில் சாட்டிங் செய்தது ஒரே நபர் இல்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர்களது பேச்சு முறை, சொற்களை உபயோகித்த முறையிலிருந்து இவர்கள் வெவ்வேறானவர்கள் என்பதும் தெளிவாகவே தெரிகிறது.

281. பேச்சுக் குரல்களைக் கூர்ந்து கவனித்து உணர, வர்த்தக அணுகுமுறை ஒரு வேளை நிசல் அல் ஷரீபைத் தடுத்து விட்டிருக்கலாம். இந்த மோசடியை அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பயங்கரவாத கூட்டம் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்க அவரது சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டு விட்டது. சட்டத்துக்கு விரோதமான நோக்கத்துக்காக, ஒரு போலிக் கணக்கைத் தன்னுடன் ஏற்படுத்திக் கொண்டு விட்டது என்பதை, மும்பை படுகொலைகள் சம்பவத்துக்குப் பிறகேதான் உணர்ந்து தெரிந்து கொண்டதாக அவர் கூறினார்.

282. மொபைல் எண்கள் 9910719424, 9820704561 மற்றும் 9819464530 - இவற்றைப் பயன்படுத்திய பிற மொபைல் போன்கள்: அப்பாவி இந்திய மக்களைச் சுட்டுக் கொன்று வெறியாட்டம் ஆடிய பயங்கரவாதிகள், கால்போனெக்ஸ் தொலைபேசி எண்ணுக்குள் எவ்வாறு புகுந்து ஒளிந்து, தாங்கள் எங்கிருந்து பேசுகிறோம் என்ற இடங்களையும் மாற்றிக் காட்ட முயன்றார்கள் என்பதையும் மேலே பார்த்தோம். தாஜ் ஹோட்டல், ஹோட்டல் ஓபிராய் மற்றும் நரிமான் ஹவுசிங் சிக்கிக் கொண்டவர்கள் எப்படிக் குறிப்பிட்ட மூன்று எண்களின் மூலம் செய்தி பெற்றார்கள். செய்தி அனுப்பினார்கள் என்பதைச் சுருக்கமாகக் காணலாம்.

283. மும்பை நகர வீதிகளில் சுற்றிச் சுற்றித் திரிந்த மனுதாரன் கசாப், அவனது இறந்தவிட்ட கூட்டாளி அபு இஸ்மாயில் இருவரும் நடமாடிய இடங்களில் இருந்து பல மொபைல்கள் சேகரிக்கப்பட்டன, கைப்பற்றப்பட்டன. இதில் 5 மொபைல்கள் முக்கியமானவை. 2 மொபைல்கள் தாஜ் ஹோட்டலிலும், 2 ஹோட்டல் ஓபிராயிலும், 1 நரிமான் ஹவுசிலும் எடுக்கப்பட்வை. தாஜ் ஹோட்டலில் இருந்து எடுக்கப்பட்டவை எக்ஸிபிட் 749, 760 என்று குறிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டும் நோக்கியா 1200. சில்வர் மற்றும் கறுப்பு நிறம். ஒன்றில் ஐஎம்ஈஐ எண். 353526024049451 மற்றும் ஏர்டெல் சிம் 8991310000200498887842 எண்கள் இருந்தன. இந்த போனை பயங்கரவாதிகள் பயன்படுத்தவேயில்லை. இன்னொரு 1200 நோக்கியாவில் ஐஎம்ஈஐ எண் 353526025840890 என்று இருந்தது. இதற்கான சிம் டெல்லியில் சுரேஷ் ப்ரசாத் என்ற பெயரில் வாங்கப்பட்டிருந்தது. இந்த போனில் இருந்து அழைக்கும்போது, அழைக்கப்படும் போனில் எண் 9910719424 என்று காட்டியது. இந்த எண்ணை முதலில் காடம் இதைக் கவனித்தார். இவர் பிடபிள்யூ 242. புலன் விசாரணையில் இந்த சிம்கார்டு குர்வீந்தர் சிங் பக்ஷி என்ற டெல்லி வியாபாரியிடமிருந்து பிடபிள்யூ 259 போலி அடையாளங்களைக் காட்டி வாங்கப்பட்டதென்று தெரிய வந்தது. சுரேஷ் பிரசாத் என்பதும் போலியான கற்பனைப் பெயர்.

284. நரிமான் ஹவுசில் இருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு நோக்கியா 1200 போன்கள் எக்சிபிட் 771 ஆகக் குறிப்பிடப் பட்டுள்ளன. ஒன்றில் ஐஎம்ஈஐ எண் 353526025828739 என்று இருந்தது. இதில் சிம் கார்டு இல்லை. இது உபயோகப்படுத்தப்படவேயில்லை. இன்னொரு நோக்கியா 1200ல் ஐஎம்ஈஐ எண் 353526025842235 என்று இருந்தது. இதில் உள்ள சிம்கார்டு கேப்ரியல் ஹோல்ட்ஸ் பெர்க் என்பவருக்குச் சொந்தமானது. இவர்தான் பயங்கரவாதிகளிடம் முதல் பிணைக் கைதியாகிப் பின்னர் கொல்லப்பட்டவர். இவர்கள் - பயங்கரவாதிகள் கேப்ரியல் ஹோல்ட் பெர்க் போனை எடுத்துக் கொண்ட அதிலுள்ள சிம் கார்டை அகற்றிவிட்டு அவர்களது சொந்த சிம் கார்டைப் போட்டுள்ளதாகத் தெரிகிறது. கேப்ரியல் சிம் கார்டிலிருந்து அழைப்பு விடுத்தால், அழைக்கப்படும் போனில், 9819464530 என்ற எண் தெரியும். பின்னர் காடம் கவனத்துக்கு வந்த இரண்டு எண்களில் இதுவும் ஒன்று.

285. வெள்ளி - கறுப்பு நிற நோக்கியா 1200 தொலைபேசி 5-வது ஆகும். எக்சிபிட் எண். 790 இது ஓபிராய் ஹோட்டலில் கைப்பற்றப்பட்டது. இதில் ஐஎம்ஈஐ எண் 353526025933620. இந்த போனில் உள்ள சிம்கார்டு ரீடா அகர்வால் என்பவருக்குத் தரப்பட்டுள்ளது. ஓட்டல் ஓபிராயில் கொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர். நரிமான் ஹவுசில் கேப்ரியல் ஹோல்ட்ஸ் பெர்க் மொபைலுக்க நிகழ்ந்தது போலவே, பயங்கரவாதிகள் ரீடா அகர்வால் மொபைலையும் எடுத்துக் கொண்டு, அதிலுள்ள சிம் கார்டை நீக்கிவிட்டு உபயோகப்படுத்தியுள்ளனர. ரீடா அகர்வால் சிம்கார்டு மூலம் பேசப்புடம் அழைப்புகளில் 9820704561 என்ற எண் தெரியும். காடம் (பிடபிள்யூ 242) பார்வையில் விழுந்த மூன்றாவது மொபைல் எண் இது.

286. தாஜ் ஹோட்டலில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய சிம்கார்டு இந்தியாவில் போலி அடையாளங்களைக் கொண்டு சுரேஷ் பிரசாத் என்ற கற்பனைப பெயரில் வாங்கப்பட்டுள்ளது என்பதும், நரிமான் ஹவுஸ் மற்றும் ஓபிராய் பயங்கரவாதிகள் பயன்படுத்திய சிம் கார்டுகள் அந்தந்த இடங்களில் பறிக்கப்பட்டு, இவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதென்பது தெளிவாகத் தெரிகிறது.

287. இதுவரை கண்ட செய்திகளின்படி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள 5 நோக்கியா 1200 மொபைல் தொலைபேசிகளும், சீனாவில் தோங்குவான் என்ற இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டுப் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டவை என்று தெளிவாகிறது. எக்ஸிபிட் எண் 606 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணம் முக்கியமானது. ஏசிபி, என்போர்ஸ்மென்ட் மேனேஜர், அமெரிக்க நோக்கியா இங்க் (பிடபிள்யூ 155) மேரிலோசானோ தனது 2009 பிப்ரவரி 12ம் தேதி அமெரிக்காவின் பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் அதிகாரி எஸ்ஏ ஜியாப்ரி மெரோன் எழுதிய கடிதமே இந்த ஆவணம் 606.


இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது கீழ் வருமாறு:


பெறுநர்


எஸ்ஏ. ஜியாப்ரீ மேரோன்


பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்


11000 வில்ஷையர் பில்டிங்,


லாஸ் ஏஞ்சலஸ் சிஏ 90024


தேதி: பிப்ரவரி 12, 2009


அமெரிக்காவின் லீகல் அதாரிடி மூலம் தாங்கள் கேட்டுக் கொண்டுள்ள படி, கீழ்கண்ட குறிபிட்ட நோக்கியா கருவிகள் (டிவைஸஸ்) சம்பந்தமாக எங்கள் ரிகார்டுகளில் உள்ள செய்தியை வழங்குகிறோம். (செய்திச் சுருக்கம்)


1. நோக்கியா 1200, ஐஎம்ஈஐ எண் 353526024049451


2. நோக்கியா 1200, ஐஎம்ஈஐ எண் 353526025828739.


இரண்டுமே சீனாவில் டோங்குவான் என்ற இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. 26.6.2008, 28.6.2008 தேதிகளில் பாகிஸ்தான் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. யுனைடெட் மொபைல் வெண்டர் பாகிஸ்தான் பிரைவேட் லிட் என்பவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. (12 பாகிஸ்தான் பிரைவேட் லிட்)


3. நோக்கியா 1200, ஐஎம்ஈஐ எண் 353526025842235


4. நோக்கியா 1200, ஐஎம்ஈஐ எண் 353526025840890


(மேலே குறிப்பிட்டுள்ளபடி) இரண்டுமே சீனாவில் டோங்குவான் என்ற இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, இரண்டுமே 26.6.2008 நாளில் பாகிஸ்தான் நாட்டுக்கு அனுப்பப்பட்டது. 12. பாகிஸ்தான் பிரைவேட் லிட் என்னும் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.


5. நோக்கியா ஐஎம்ஈஐ எண் 353526025933620


இதுவும் சீனா டோங்குவான்-ல் உற்பத்தி செய்யப்பட்டது. 26.8.2008ல் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது. வாங்கியவர் யுனைடெட் மொபைல். நாங்கள் சரக்கு அனுப்பிய சமயத்தில் 12 பாகிஸ்தான் பிரைவேட் லிமிடெட் முகவரி-


12 பாகிஸ்தான் பிரைவேட் லிமிடெட்,


2வது டிபிகல் ஃப்ளோர்,


எக்ஸிக்யூடிவ் டவர் போல் மென் சிடி,


ப்ளாக் 4, க்ளிஃப்டன், கராச்சி, பாகிஸ்தான் என்று இருந்தது.


நோக்கியாவில் எனக்குள் அதிகார வரம்பு, மற்றும் அமெரிக்கச் சட்டங்களையும் மதித்து, மேலே கூறப்பட்ட செய்தியைத் தங்களுக்கு, நோக்கியா பதிவேடுகளில் இருந்து தருவதற்கு எனக்கு அதிகாரமுண்டு.


உண்மையுள்ள,


மேரி லோசனோ, ஏசிபி என்போர்ஸ்மென்ட் மேனேஜர்,


அமெரிக்காஸ் நோக்கியோ இங்க்,


6021, கானெக்ஷன் ட்ரைவ்,


எம்எஸ் 2-5-520 இர்விங், டெக்ஸாஸ்.

288. பயங்கரவாதிகள் தங்களுக்கு குறிவைத்த இடங்களில் சிக்கக் கொண்டு, மொபைல் போன், சிம்கார்டுகள் உதவியுடன், எல்லைக்கு அப்பாலுள்ள தங்களது கூட்டுச் சதிகாரர்களுடன் தொடர்பு கொண்டது பற்றிப் பார்த்தோம். எந்த இடங்களுக்குப் பேசினார்கள் என்பதையும் பார்ப்போம். இப்போது பயங்கரவாதிகளுக்கும் அவர்களது கூட்டாளிகளுக்கும் நடந்த உரையாடல் என்ன என்பதைக் காணலாம்.

289. உரையாடல்கள்: மனித மனத்தின் குரூரங்களின் முழு வெளிப்பாடாக அமைந்தது தான் நூற்றுக் கணக்கில் அப்பாவி மக்கள் மும்பையில் கொல்லப்பட்டுக் காயப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள். ஆனால் அதையும் தாண்டி இந்த பயங்கரவாதிகள் அவர்களின் பாகிஸ்தான் உரையாடலில் காண்பித்த பகை, வெறுப்புப் பண்புகள் கொலைவெறியின் உச்சகட்ட அழுக்குகள், இவர்களின் மனத்தில் படிந்திருந்த விஷம், நாச காரியங்களை நிறைவேற்ற மேற்கொள்ளும் வழிமுறைகள் பற்றிய இவர்களது குரூர புத்தி இந்த உரையாடல்களில் காணப்படுகின்றன.

290. 2008 நவம்பர் 27ம் தேதி (இரவு) 1 மணி 15 நிமிடம் 1 வினாடி முதல் 1 மணி 16 நிமிடம் 42 வினாடிகளுக்கிடையில் ஒரு (தாஜ் ஹோட்டல்) பயங்கரவாதிக்கும் அவனது கூட்டாளிக்கும் நடந்த பேச்சு முக்கியமானது. தாஜ் ஹோட்டலுக்கு இன்னும் தீ வைக்கவில்லையா என்று அடுத்த முனையில் உள்ளவன் கவலையோடு கேட்கிறான். அடுத்தடுத்த இதையே அடுத்த முனை ஆசாமியும் வலியுறுத்துகிறான். இங்குள்ள பயங்கரவாதி தனியாக ஒரு பிணைக் கைதியைப் பிடித்துக் கெண்டிருப்பதாகவும் (ராமூர்த்தி) இன்னும் பலரைப் பிடிக்கச் சென்ற கூட்டாளிகள் திரும்புவதற்குத் தாமதமாகிறதென்றும் பதில் கூறுகிறானர். ஒவ்வொரு முறையும் இவனது கூட்டாளிகள் (அடுத்த முனை - எல்லைக்கு அப்பால் உள்ளது) பேசும் போது இதையே - தாஜ் ஹோட்டலுக்கு தீ வைப்பதையே வலியுறுத்துகிறார்கள். தான் வ்வளவோ வலியுறுத்திச் சொல்லியுள்ள போதிலும், அவர்கள் வரவில்லையென்று இவர் பதில் சொல்கிறான். அவர்களோ தீ வைப்பதை விரைவுபடுத்துமாறும், கைக்குண்டுகளை எறியுமாறும் வலியுறுத்துகிறார்கள்.


கடல்வழிப் பயணம் பற்றி விசாரித்ததிலும் திட்டப்படி ஏதும் நடக்கவில்லையென்றே பதில் கிடைத்தது. "இந்தியப் படகு மூழ்கடிக்கப்படவில்லை, மிதந்து கொண்டிருக்கிறது, இதற்கும் மேலாக அபு இஸ்மாயிலின் சேடலைட் போன் மற்றும் ஜிபிஎஸ் இந்தப் படகில் (அவசர, ஞாபக மறதி) விடப்பட்டுவிட்டது' என்ற செய்திகள் அக்கரையிலிருந்த கூட்டாளிகளுக்கு மகிழ்ச்சியாக இல்லை. அவர்களுக்கான ஒரே சந்தோஷமான செய்தி, இந்தியப் படகில் மாலுமி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுவிட்டான் என்பதே. ஆனால் அந்த மகிழ்ச்சியும் முழுமையாக இல்லை. காரணம் அவனது - மாலுமியின் - உடல் கடலில் ஏறியப்படவில்லை. இத்தனை பேச்சுக்களுக்கு இடையிலும் தாஜ் ஹோட்டலுக்குத் தீவைப்பது பற்றியே இவனிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த பயங்கரவாதியோ இந்த வேலைக்கு லாயக்கானவனாகத் தெரியவில்லை.

291. இன்னொரு உரையாடல் - இடம் நரிமான் ஹவுஸ்: இங்கே பிணையக் கைதியாகச் சிக்கியவர் மெக்ஸிகோ நாட்டவர் பெயர் நார்மா ஷ்வார்ஸ்ப்ளாட் ரோமினோவிச், இவர்கள் உரையாடலுக்குள் இழுத்து வரப்பட்டவர். உயிரோடு தப்ப வேண்டுமானால் தாங்கள் சொல்வது போல் இந்திய அதிகாரிகளிடம் பேச வேண்டுமெனப் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் இவரை அச்சுறுத்தினார்கள். இந்தப் பெண்ணும் அவர்கள் சொல்வதைப் போலவே நடந்து கொள்வதாக ஒப்புக் கொண்டார். என்றாலும் இறுதியில் எந்த தயவு தாட்சண்யமும் இல்லாது பயங்கரவாதிகள் இவரைக் கொன்று விட்டனர். இந்த உரையாடல்களை இடை மறித்துப் பதிவு செய்ய பன்னிரண்டரை மணி நேரம் பிடித்துள்ளது. எனவே இந்த உரையாடல் மிக நீளமானது. இதில் சில மாதிரகளைப் பின்வரும் தலைப்புகளைக் கொண்டு பார்க்கலாம்.


1. பழமைகளுக்கு எதிராக இஸ்லாமின் பெயரால் போரிடுமாறு தூண்டுவது பெரிய தியாகச் செயல்.


2. தாங்கள் இந்தியர்கள், இந்திய முஸ்லிம்களுக்கு உள்ள துயரங்களைத் துடைக்கவே போராடுவதாகக் காட்டிக் கொள்ளும் ஏமாற்று வேலை இதில் நிரூபணமானது. இந்த முயற்சியில் இஸ்ரேலையும் இழுக்கும் முயற்சி உண்டு.


3. உயர் போலீஸ் அதிகாரிகளைக் கொன்றது குறித்து மகிழ்ச்சி கொண்டாட்டம்.


4. பாதுகாப்புப் படையை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்று பயங்கரவாதிகளுக்கு (அடுத்த முனையில் இருந்து) அறிவுரை.


5. பழமைகளுக்கு எதிராக இஸ்லாமின் பெயரால் பணயக் கைதிகளைக் கொல்வது தியாகம்.

292. தாஜ் ஹோட்டல் உரையாடல் பதிவுகள்: உரையாடல் எண் 3. இவை மொத்தமாக எக்ஸிபிட் 970 என்று குறிக்கப்பட்டுள்ளது. மறுமுனையில் இருந்து பெரியவர்கள் உரை யூ.கே. என்றும் தாஜ் ஹோட்டலில் சிக்கியவர்கள் பேச்சு டிஏ என்றும் குறிக்கப்பட்டுள்ளது.


(இந்த உரையாடல்கள் பயங்கரவாதிகள் தாய்மொழியில் பதிவு செய்யப்பட்டு, ஆங்கிலத்தில் பொருள் கூறப்பட்டிருக்கிறது)


யூகே 2: நண்பனே, அல்லா உன் செயலை. ஏற்றுக் கொள்ளட்டும். பலருடைய காயங்களுக்கு மருந்து போடப்பட்டுள்ளது. நாங்கள் உனக்குக் கற்றுத் தந்த பிரார்த்தனைகளை மறந்து விடாதே. நீ எங்கு உட்கார்ந்தாலும் இந்தப் பிரார்த்தனை மந்திரத்தை 3 முறை ஜபிக்கவும்.


யூகே2: மற்ற சகோதரர்களிடம் எங்கள் வணக்கத்தை (சலாம்) தெரிவிக்கவும். உன் காரியங்களில் உறுதியா இரு. உன் செயல்களில் பலத்தை வளர்த்துக் கொள்ளவும்.


நீ இந்த உலகத்தை விட்டுப் போய் விட்டாய். சொர்க்கம் இந்த உலகத்தை விட மேலானது. உன் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அவை சத்தியமான வாக்குறுதிகள். எங்களுக்காகவும் பிரார்த்தனை செய்.

உரையாடல் 4: ஓட்டல் ஓபிராய் பேச்சு: எக்ஸிபிட் 979


மறு முனையிலிருந்து வருவது. இது இறைவன் ஆணை. நான் சொல்வது உனக்கு புரியும். தற்போதைய பிரச்சினை இஸ்லாமுக்கும், பழமைக்குமானது. நாம் இறைவனின் அடிமைகள். உண்மையான ஒரு மதத்தைப் பரப்பவே நம்மை அனுப்பியுள்ளார். தியாக மரணம் பெரிய விஷயம். ஆனால் அந்த தியாகத்தின் தன்மை பகைவனின் மனதில் பயத்தை உருவாக்க வேண்டும். அதுதான் தியாகத்துக்கு அழகு.


பிரார்த்தனை செய். இது பிரார்த்தனை நேரம். அல்லாவுக்கு அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்று. சரிதானே. பயப்படுவதற்கு ஏதுமில்லை. தியாகச் செய்தியே முன்னால் இருக்க வேண்டும். தீரமாகப் போர் செய். அல்லாவின் சிங்கம் துரத்துகிறது என்று அவர்கள் உணர வேண்டும். இது இறைவன் ஆணை. அதுதான் தியாகம்.


ஓபிராயில் இருந்து - ஆம், இறைவன் ஆணை. எனக்காகப் பிரார்த்தனை செய்.


மறுமுனை: இந்துக்கள் கர்வக்காரர்கள். அவரகள் கர்வம் மண்ணில் புதைந்து போகட்டும். இறைவன் ஆணை.


அவனை நினைவில் கொள்வாய். அவன் விரும்பும் வெற்றி உன்னுடையது. இறைவன் உன்னுடைய வெற்றியை ஏற்றுக் கொள்ளட்டும். அதுவே சரி, சரி. இது இறைவன் விருப்பம். உனக்காக சொர்க்கத்தை அல்லா தயார் செய்து விட்டார். நீ நடந்து செல்லும் பாதையே சக்தி மிகுந்த பாதை. எல்லோருமே சொர்க்கத்துக்குத்தான் செல்ல வேண்டும். இது இறைவன் ஆணை. உன் காரியங்களை நீ தைரியமாகச் செய்ய வேண்டும்.


தாஜ் குரல்: ஆம் அல்லாவின் ஆணை இதுவே.

பேச்சு 11 தொடர்ச்சி: எக்ஸிபிட் 981


(பேச்சு முடியும் தறுவாயில் உள்ளது. பகதுல்லாவின் கடைசி நிமிடஙகளாக இருக்கலாம்)


தாஜ்: அஸ்லாம் ஆலேகும்.


யூகே - மறுமுனை: அலேகும் சலாம். நண்பனே பகதுல்லா, நீ நன்றாக இருக்கிறாய்?


தாஜ்: அப்துல் ரகுமான் பையா இறைவனடி சேர்ந்து விட்டான்.


யூகே -மறுமுனை: அச்சா! நீ அவன் அருகில் இருக்கிறாய்?


தாஜ்: ஆம் ஆவனருகில் இருக்கிறேன்.


மறுமுனை: அல்லா அவனை ஏற்றுக் கொள்ளட்டும். என் நண்பன் சகிப்புத் தன்மை கொண்டவன். தைரியமாய் இரு. விட்டுக் கொடுக்காமல் போராடு. இறைவன் ஆணை. அவன் துணையிருப்பான்.


மறுமுனை: நன்பனே! போர் செய். வெறியோடு போராடு. பிரார்த்தனை செய். இந்த நேரத்தில் செய்யும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். தைரியமாக இரு. நீ கைது செய்யப்படம் நிலைக்கு வரமாட்டாய். இதை நினைவில் வைத்துக் கொள்.


தாஜ்: ஆம் இது தான் இறைவன் விருப்பம், இறைவன் விருப்பம்.


மறுமுனை: தைரியமாக இரு. அஞ்சாதே. உன்மீது குண்டு பாய்ந்தால் அதுவே உனக்கு வெற்றி. இறைவன் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான்.


தாஜ்: சரி, இது தான் இறைவன் ஆணை.


தாங்கள் இந்தியர்கள், இந்திய முஸ்லீம்களுக்காகப் போராடுவோர் என்ற பாசாங்கு, இஸ்ரேலை இந்த நிகழ்ச்சியில் இழுக்கும் போக்கு எல்லாமே இந்த உரையாடல்களில் தெரிகிறது


நரிமான் ஹவுஸ் உரையாடல்கள்: எக்ஸிபிட் 984


மறுமுனை: உன்குச் சொந்த ஊர் எது என்று கேட்பார்கள், ஹைதராபாத் டெக்கான் என்று சொல்ல வேண்டும்.


இம்முறை: சரி.


மறுமுனை: ஹைதராபாத் டெக்கான் - புரிகிறதா


இம்முனை: சரி


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X