மதுரையின் 'பக்த துக்காராம்' ஜெகதீசன்...

Updated : ஜூன் 27, 2014 | Added : ஜூன் 27, 2014 | கருத்துகள் (9)
Share
Advertisement
மராட்டிய மன்னர் வீரசிவாஜியில் பெரிதும் நேசிக்கப்பட்டவர் அவரது குரு ராமதாசர்.ஒருமுறை அவரைத்தேடி சிவாஜி சென்ற போது அவரைக்கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட்டார்.ஒரு இடத்தில் நிற்காமல் செல்லும் ராமதாசரை காடு,மேடு,மலைகளில் பயணம் செய்து கண்டுபிடித்த போது என்னைப்பார்க்க ஏன் இவ்வளவு சிரமப்பட்டாய், உன் நாட்டிலேயே ஒருவர் இருக்கிறார் அவர் பெயர் துக்காராம்,நீ
மதுரையின் 'பக்த துக்காராம்' ஜெகதீசன்...

மராட்டிய மன்னர் வீரசிவாஜியில் பெரிதும் நேசிக்கப்பட்டவர் அவரது குரு ராமதாசர்.
ஒருமுறை அவரைத்தேடி சிவாஜி சென்ற போது அவரைக்கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட்டார்.
ஒரு இடத்தில் நிற்காமல் செல்லும் ராமதாசரை காடு,மேடு,மலைகளில் பயணம் செய்து கண்டுபிடித்த போது என்னைப்பார்க்க ஏன் இவ்வளவு சிரமப்பட்டாய், உன் நாட்டிலேயே ஒருவர் இருக்கிறார் அவர் பெயர் துக்காராம்,நீ அவரைப்பார்த்தாலே போதும் என்னைப்பார்த்து தரிசித்ததற்கு சமானம் என்று சொல்லியிருக்கிறார்.
தன் குரு சொன்ன துக்காராம் பற்றி விசாரித்த போது பண்டரிநாதர் மீது பக்தி பாடல்கள் பாடிவருபவர், மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர் என்று சொல்லியிருக்கின்றனர்.
உடனே சிவாஜி பொன்,பொருள்,நவரத்தினம் என்று நிறைய செல்வங்களோடு அவரைப்பார்க்க போயிருக்கிறார்.
பக்தர்களோடு சேர்ந்து பக்தி பாட்டு பாடிக்கொண்டிருந்த துக்காராம், இவரையோ இவர் கொண்டுவந்த செல்வங்களையோ கண்டுகொள்ளவேயில்லை.
பஜனை முடிந்த பிறகு துக்காராமை அணுகிய சிவாஜி தான் கொண்டுவந்த செல்வங்களை ஏற்றுக்கொண்டு தன்னை ஆசீர்வாதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.


எது உண்மையான சந்தோஷம்:

"சிவாஜி, நீ கொண்டு வந்த பொன்,பொருள் மற்றும் பதினெட்டு கிராமங்களை எழுதித் தந்த சாசனம் ஆகியன எதுவும் எனக்கு சந்தோஷத்தைத் தரப் போவதில்லை. உண்மையில் எனக்கு சந்தோஷத்தை தர வேண்டும் என்று நினைத்தாயானால் துளசி மணிமாலையை அணிந்துகொள். ஏகாதசி விரதம் இரு. விட்டல நாம ஜபம் செய்” என்று கூறுகிறார்
அதன்பிறகு துக்காராமின் தீவீர பக்தராகிவிட்ட சிவாஜி அவர் புகழ் பரப்புவதில் முனைப்புடன் இருந்தார்.
அந்த அளவிற்கு எளிமையாக வாழ்ந்த பக்த துக்காராமின் பாடல்களும் எளிமையானவை.அந்த பாடல்கள் அபங்கம் என்றழைக்கப்பெறுகிறது.
அபங்கம் என்றால் குற்றமில்லாதது. பங்கம் இல்லாதது.ஆனந்தமானது.சிறு சிறு பாடல்கள் மூலம் இறைவனுடன் பேசுதல் என்றும் இதற்கு பொருள் சொல்லலாம்.
ஒவ்வொரு அபங்கப் பாடலுக்கும் இத்தனை வரிகள்தான் இருக்க வேண்டும் என்று வரைமுறை எதுவும் கிடையாது. எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும் இருக்கலாம். சந்தங்கள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். அபங்கங்களை பாடுவதற்கு சங்கீத ஞானம் வேண்டும் என்பது இல்லை. மஹாராஷ்டிர மாநிலத்தில் எளிய தொழிலாளிகளும், இந்தப் பாடல்களை பாடித் திளைக்கின்றனர். இவர்களுக்கு வேதமோ சாஸ்திரமோ ஏன் சிறிய ஸ்லோகங்களோ கூட தெரியவேண்டாம்.
இந்தப் பாடல்கள் பலவும் மூர்த்தியான விட்டல் பற்றியே அமைந்துள்ளன. நம்மை அவன் வழிநடத்திச் செல்வான் என்ற நம்பிக்கையே இதன் அடிநாதம்.


" மதுரையின் பக்த துக்காராம் "

: துக்காராம் போல இறைவன் பாடல்களை பாடுவதையே நோக்கமாகக்கொண்ட ஒருவர் மதுரையில் இருக்கிறார்.
அவர் பெயர் ஜெகதீசன்
கடந்த 37 வருடங்களில் வெகு சில நாட்கள் தவிர மற்ற நாட்கள் அனைத்திலும் மதுரை கூடலழகர் கோவிலில் இறைவன் பாடல்கள் பாடியபடி நாள் தவறாமல் வலம் வருகிறார்.
ஜெகதீசன் தனக்காக எந்த வித கோரிக்கையும் வைக்காமல் பிறர் நலனுக்காக மட்டுமே பிரார்தித்தபடி காலை 6 மணி முதல் 8 மணிவரை சத்தமாக பாடல் பாடியபடி பெருமாள் கோயிலை 12 முறை வலம் வருகிறார்.
ஆரம்பத்தில் தனியாக வலம்வந்த இவருடன் அவ்வப்போது பலர் சேர்வதும், விலகுவதும் நடந்து வருகிறது.
நமக்காக செய்யும் பிரார்த்தனையைவிட மற்றவர்களுக்காக செய்யும் பிரார்த்தனைக்கு பலன் அதிகம்,இது போன்ற பிரார்த்தனைக்கு நிச்சயம் இறைவன் செவி சாய்ப்பார் என்பதால் இவரிடம் பலரும் தங்களது கோரிக்கைகளை பிரச்னைகளை எழுதிக்கொடுத்துவிடுவர்.


மற்றவர்களுக்காக பிரார்த்தனை:

அந்த பிரச்னைகளை,கோரிக்கைகளை ஒரு பையில் வைத்து சுமந்தபடி பக்தி பாடல்கள் பாடியபடி கோவிலை சுமார் இரண்டு மணி நேரம் வலம்வந்து பின் பெருமாளின் பாதத்தில் தன்னிடம் பக்தர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்துவிடுவர்.இந்த கோரிக்கைகள் நிறையவே நிறைவேறி வருவதை அடுத்து இப்போது பக்தர்கள் அதிகம் பேர் இவரிடம் எழுதிக்கொடுத்து வருகின்றனர்.
அவரும் அதனை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டு பிரார்த்தனை செய்துவருகிறார்,இதில் ஒரு விஷயம் இவருக்கு சரியாக பேச்ச வராது, திக்கி திக்கிதான் பேசுவார். இருந்தும் திக்காமல் பேசும் சக்தியை தா என்று இதுநாள் வரை இறைவனிடம் தன் சொந்த கோரிக்கையை வைத்தவர் இல்லை.
மணைவி குழந்தைகள் என்று குடும்பம் உண்டு குடும்பம் நடத்த பகலில் எலக்ட்ரீசியன் வேலை பார்க்கிறார்.மற்றபடி எப்போதும் பிறர் நலனிற்காக பிரார்த்தனை வலம்தான்.
இப்படி கடந்த 37 வருடங்களாக மதுரையின் துக்கராமாக கூடலழகரை வலம் வந்துகொண்டிருக்கும் ஜெகதீசன் கடந்த ஒரு வாரகாலமாக வரஇயலவில்லை.காரணம் கண்புரை நோய் காரணமாக ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது கட்டாய ஒய்வில் இருக்கிறார்.
பலருக்காக பல ஆண்டுகளாக பிரார்த்தனை செய்தவர் பூரண நலம் பெற்று, பார்வை பொலிவு பெற்று மீண்டும் கோவிலை வலம் வர இப்போது அவருக்காக நாம் பிரார்த்திப்போம்.
அவருடன் பேசுவதற்காக போன் எண்:9976136810.
(அவருடன் பேசுபவர்கள் அவர் திக்கி,திக்கித்தான் பேசுவார் என்பதை நினைவில் கொள்ளவும்)
- எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s. subramanian - vallanadu,இந்தியா
10-ஆக-201410:31:41 IST Report Abuse
s. subramanian இதுமாதிரி உணர்வுபூர்வமான கட்டுரையை படித்தாலே மனசு நிறையுது, அதைவிட்டுவிட்டு கருணா அது சொன்னார், வீரமணி இது சொன்னார் என்று பொய்யான செய்திகளை பார்த்துப்பார்த்து சலித்துவிட்டது... கொஞ்சநாள் அந்த மாதிரியான தலைவர்களின்(முக, ஸ்டாலின் முதல்வரா........இப்ப யார் கேட்டது) பேட்டிகளை தினமலரில் போடாதீர்கள்,,, ......
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
02-ஜூலை-201410:00:45 IST Report Abuse
TamilArasan நன்றி மலரே...அருமையான பதிவு - நிச்சயம் அவர் நலம் பெற நான் பிராத்திக்கிறேன்...
Rate this:
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
30-ஜூன்-201415:29:28 IST Report Abuse
P. SIV GOWRI திரு ஜகதீசர் அவர்களுக்கு எந்த குறையும் வராது. நல்ல உள்ளத்துக்கு கடவுள் என்றும் துணை இருப்பார். கூடிய சீக்கிரம் குணமாக பரமஆத்மாவிடம் பிராத்தனை செய்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X