பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை ரயில்களின் நேரம் மாற்றம்; தென்மாவட்ட மக்கள் கவனத்திற்கு

Added : ஜூன் 28, 2014
Share
Advertisement
திருநெல்வேலி: மதுரைக்கும் திருப்பரங்குன்றத்திற்கும் இடையே நடைபெறும் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளுக்காக, மூன்று தினங்கள் ரயில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் மகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:29ம் தேதி, 30ம் தேதி மற்றும் ஜூலை 2ம் தேதி ஆகிய நாட்களில், ரயில் போக்குவரத்து

திருநெல்வேலி: மதுரைக்கும் திருப்பரங்குன்றத்திற்கும் இடையே நடைபெறும் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளுக்காக, மூன்று தினங்கள் ரயில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் மகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
29ம் தேதி, 30ம் தேதி மற்றும் ஜூலை 2ம் தேதி ஆகிய நாட்களில், ரயில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுளளது.
29ம் தேதி பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்
1. வண்டி எண் 56319 நாகர்கோவில் - கோயம்புத்தூர் பாசஞ்சர், விருதுநகர் மற்றும் மதுரை இடையே 29.06.2014 அன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த வண்டி, வண்டி எண் 56320 -ஆக விருதுநகரில் இருந்து நாகர்கோவிலுக்கு வழக்கமான நேரத்தில் புறப்பட்டுச் செல்லும்.
2. வண்டி எண் 56320 கோயம்புத்தூர் - நாகர்கோவில் பாசஞ்சர், மதுரை மற்றும் விருதுநகர் இடையே 29.06.2014 அன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த வண்டி, வண்டி எண் 56319 -ஆக மதுரையில் இருந்து பிற்பகல் 03.00 மணிக்கு கோயம்புத்தூருக்கு புறப்பட்டுச் செல்லும்.
29ம் தேதி நேரம் மாற்றம் செய்யப்பட்ட ரயில்கள்
1. வண்டி எண் 56734 செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில், 29.06.2014 அன்று 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும்.
2. வண்டி எண் 56770 திருசெந்தூர் - பழநி பாசஞ்சர் ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில், 29.06.2014 அன்று 35 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும்.
30ம் தேதியும் மற்றும் ஜூலை 2ம் தேதியும் மாற்றம் செய்யப்படும் ரயில்கள்
1. வண்டி எண். 56319 நாகர்கோவில்- கோயம்புத்தூர் பாசஞ்சர் ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில், 30.06.2014 மற்றும் 02.07.2014 அன்று 70 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும்.
2. வண்டி எண் 56320 கோயம்புத்தூர்- நாகர்கோவில் பாசஞ்சர் ரயில் மதுரை ரயில் நிலையத்தில், 30.06.2014 மற்றும் 02.07.2014 அன்று 60 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும்.
3. வண்டி எண் 56734 செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில், 30.06.2014 மற்றும் 02.07.2014 அன்று 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும்.
4. வண்டி எண் 56770 திருசெந்தூர் - பழநி பாசஞ்சர் ரயில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில், 30.06.2014 மற்றும் 02.07.2014 அன்று 35 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இயக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X