பொது செய்தி

இந்தியா

சுனந்தா மரணம்: தேவைப்பட்டால் சசி தரூரிடம் விசாரணை: டில்லி போலீஸ் கமிஷனர்

Added : ஜூலை 02, 2014 | கருத்துகள் (12)
Advertisement
சுனந்தா மரணம்: தேவைப்பட்டால் சசி தரூரிடம் விசாரணை: டில்லி போலீஸ் கமிஷனர்

புதுடில்லி: சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக தேவைப்பட்டால், அவரது கணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் மற்றும் அவரது உடலை சோதித்த டாக்டரிடம் விசாரணை நடத்துவோம் என டில்லி போலீசார் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் மெர் தராருக்கும், சசி தரூருக்கும், கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளதாகவும், மெர் தரார், சசி தரூரை, தன்னிடமிருந்து பிரிக்க முயற்சிப்பதாகவும், சுனந்தா, "டுவிட்டரில்' பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.இந்த விவகாரத்தால், சசி தரூர் சுனந்தா இடையில் கருத்து வேறுபாடும், மோதலும் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியானது.இதனால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் சுனந்தா புஷ்கர், கடந்த ஜனவரி மாதம் 17ம்தேதி டில்லியில் உள்ள லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது <உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர். அவரது உடலை 3 பேர் கொண்ட மருத்துவர் குழுவினர் பரிசோதனை நடத்தினர். இந்த சோதனையில்,அதிகளவு மருந்தை உட்கொண்டதால்தான் சுனந்தா மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. புஷ்கர் தங்கியிருந்த அறையில் மன அழுத்தத்திற்கான மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, சசிதரூரிடம் விசாரணை நடத்திவாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று, சுனந்த உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் குப்தா, சுனந்தாவுக்கு ஏற்பட்ட மன அழுத்தமே அவரது மரணத்திற்கு காரணம் எனவும், சிலர், இந்த மரணத்தை இயற்கையாக காட்ட வேண்டும் என விரும்பினர் எனவும் என்னை புதிய அரசுபதவியேற்கும் 3 நாட்களுக்கு முன்னர் என்னை விலகி செல்ல முயற்சி நடந்தது என கூறியிருந்தார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

டாக்டர் சுதிர் குப்தா கருத்துக்கு எய்ம்ஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. குப்தாவுக்கு யாரும் நெருக்கடி தரவில்லை எனவும், நெருக்கடி தந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறியிருந்தது.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த, முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர், இந்த விவகாரத்தில் விரைவாகவும் தெளிவாகவும் விசாரணை நடத்தி, பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், தெளிவான முடிவுக்குவந்தால்தான் சர்ச்சைகளுக்கு முடிவு கிடைக்கும். எனவும் கூறியிருந்தார்.

சுனந்தா புஷ்கர் மரணம் குறித்துடில்லி போலீசாரும்உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கமளித்தனர்.

இந்நிலையில், சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து டில்லி போலீஸ் கமிஷனர் பஸ்சி கூறுகையில், சுனந்தா விவகாரம் குறித்து எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது. தற்போது விசாரணை நடந்து வருகிறது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன். இந்த விவகாரத்தில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், மற்றும் டாக்டர் சுதிர் குப்தாவிடம் விசாரணைநடத்துவோம். ஆதாரங்கள் மற்றும் சட்டப்படி விசாரணை நடைபெறும். சுனந்தா மரணம் தொடர்பாக டில்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் அதுல் சூத் தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
O Podu - Chennai,இந்தியா
03-ஜூலை-201410:20:55 IST Report Abuse
O Podu இந்த போட்டோவை பார்த்தாலே தெரிகிறது. அவர் பார்வை சரியில்லை.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஜூலை-201410:19:32 IST Report Abuse
Swaminathan Nath நன்கு படித்த / business செய்யும் சுனந்தா, தற்கொலை செய்ய வாய்ப்பில்லை, மேலும் தவறாக மாத்திரை சாப்பிடவும் வாய்ப்பில்லை, இந்த மரணம் சந்தேகத்திற்கு உட்பட்டது, அரசியல் பலத்தால் இதை சசிதரூர் மூடி மறைத்துள்ளார், வயதை மீறிய காதல்,சந்தேகமானது,/// முழு விசாரணை தேவை,
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
03-ஜூலை-201410:00:25 IST Report Abuse
P. SIV GOWRI ஒரு 5 வருடத்திற்குள் முடிப்பார்களா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X