ராஜம்மா | Dinamalar

ராஜம்மா

Updated : ஜூலை 04, 2014 | Added : ஜூலை 04, 2014 | கருத்துகள் (10)
Share
ராஜம்மாகும்பகோணத்தை சேர்ந்தவர், எளிய குடும்பத்தில் பிறந்தவர், காதுகேட்கும் திறன் இல்லாதவர், எழுத படிக்கத்தெரியாதவர்.தன்னுடைய எந்த பலவீனத்தையும் பொருட்படுத்தாமல் தனது குழந்தைகளை சிரமப்பட்டு ஆளாக்கியவர்.சுத்தமாக இருப்பதும், சுற்றுச்சூழல் மீது பிரியமாக இருப்பதும் இவரது வழக்கம். கோவில்களுக்கு சென்று அங்குள்ள தெய்வத்தை தரிசிப்பது என்பது இவருக்கு பிடித்தமான
ராஜம்மா

ராஜம்மா
கும்பகோணத்தை சேர்ந்தவர், எளிய குடும்பத்தில் பிறந்தவர், காதுகேட்கும் திறன் இல்லாதவர், எழுத படிக்கத்தெரியாதவர்.
தன்னுடைய எந்த பலவீனத்தையும் பொருட்படுத்தாமல் தனது குழந்தைகளை சிரமப்பட்டு ஆளாக்கியவர்.
சுத்தமாக இருப்பதும், சுற்றுச்சூழல் மீது பிரியமாக இருப்பதும் இவரது வழக்கம். கோவில்களுக்கு சென்று அங்குள்ள தெய்வத்தை தரிசிப்பது என்பது இவருக்கு பிடித்தமான விஷயம்.
பிறந்தது முதலே செருப்பு போட்டு பழகாத இவரது கால்கள் போகாத ஊர் கிடையாது தொழாத தெய்வங்கள் கிடையாது.
தனக்காக அல்லாமல் பிறருக்காக வேண்டுவதும் பிரார்த்திப்பதும் இவரது பழக்கம்,மிக எளிய வாழ்க்கை இவருடையது.
சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்திப்பார்ப்பதே என்ற உயரிய நோக்கம் கொண்ட இவர் தனது குழந்தைகளையும் அப்படியேதான் வளர்த்தார்.
அந்த குழந்தைகளில் ஒருவரான பாலசுப்பிரமணியன் தற்போது இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் பணியாற்றுகிறார்.


ஏழை மாணவர்களுக்கு உதவியவர்:

தேவைக்கு மேல் உள்ளது எல்லாம் தெய்வத்திற்கே என்பது அம்மாவின் மொழி என்றால் கொஞ்சம் வேறுபட்டு தேவைக்கு மேல் இருப்பது எல்லாம் ஏழை எளிய மாணவர்களை படிக்க செய்வதற்கே என்பதை தன் வழியாகக் கொண்டவர்.
அம்மாவும், பிள்ளையும் யாருக்காவது உதவவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இணைந்த தோழர்கள் என்றுகூட சொல்லலாம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த வாரம் ராஜம்மாள் தனது 74 வயதில் திடீரென இறந்துவிட்டார்.
இறந்த தகவல் ஜெகர்த்தாவில் இருந்த பாலசுப்பிரமணியனுக்கு சொல்லப்பட்டதும் சொல்ல முடியாத துக்கத்திற்கு ஆளானாலும் அடுத்த கொஞ்ச நேரத்தில் தன்னை தேற்றிக்கொண்டு அம்மாவின் கண்களை தானமாக கொடுப்பதற்கு சென்னையில் உள்ள நண்பர்கள் விஸ்வநாதன், டாக்டர் ரமேஷ் ஆகியோர் உதவியுடன் ஏற்பாடு செய்தார்.
பின்னர் இறந்த தாயைக்காண இந்தியா நோக்கி பறந்து வந்தவருக்கு இடையில் ஒரு யோசனை.இருக்கும் வரை ரத்ததானம் இறந்த பின் கண்தானம் இது மட்டும்தான் செய்ய முடியுமா? இதையும் தாண்டி ஏதாவது செய்யமுடியுமா? என்று யோசித்தபோதுதான் மருத்துவ மாணவர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் படிப்பிற்காக உடல் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது என்று எப்போதோ படித்த செய்தி மனதிற்குள் ஒடியது.
உடனே நண்பர்களை மீண்டும் தொடர்புகொண்டார்


25 வகையான உறுப்பு தானம்:

சில பார்மலிட்டிகள்தான், அதை செய்துவிட்டால் உடல்தானம் செய்ய முடியும் என்று சொல்லவே அதற்கான ஏற்பாடுகளை செய்யச்சொல்லிவிட்டார்.
பின்னர் சென்னை வந்தவர் தாய்க்கு செய்யவேண்டிய இறுதி கடமைகளை முறையாக செய்தவர் பின்னர் தானும் தன் குடும்பத்தாரும் சேர்ந்து எடுத்த முடிவின்படி சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தாயின் உடலை தானம் செய்துவிட்டார்.
ஒருவர் உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ இருபத்தைந்து வகையான உடல் உறுப்புகளை தானம் செய்யமுடியும்.
பல ஆண்டுகளாக பார்வை இல்லாதவர்களை பார்வை பெறச்செய்யவைப்பது உள்ளிட்ட மகத்தான மருத்துவ உதவிகளை செய்யமுடியும்.இதில் உடல்தானம் என்பது இன்னமும் பெரிதாக விழிப்புணர்வு பெறாத விஷயமாக உள்ளது.அந்த வகையில் என் அம்மா இருக்கும் போது எல்லோருக்கும் உபயோகமாக இருந்தார், இப்போது இறந்தபிறகும் பலருக்கும் உபயோகமாக இருக்கிறார்.


வாழ்விலும் இறப்பிலும் வழிகாட்டி:

வாழ்ந்தபோது வழிகாட்டியவர் இப்போது இறப்பிலும் வழிகாட்டியுள்ளார்.பலரது மனதிலும் கண்தானம் துவங்கி உடல்தானம் வரையிலான விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளார் என்று கண்கலங்க சொல்லிமுடித்த பாலகிருஷ்ணன் தன்னோடு எப்போதும் வைத்துள்ள ஒரு கார்டை எடுத்து காண்பித்தார்.
அந்த கார்டில் இவர் தன் உடல் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் தானம் செய்துள்ளார் ஆகவே இவருக்கு எது நேர்ந்தாலும் உடனே தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் என்று எழுதி கிழே மருத்துவ மனைகளின் பெயர்கள் எழுதப்பட்டு இருந்தது.
பாலசுப்பிரமணியனுடன் தொடர்பு கொள்வதற்கான உள்ளூர் எண்:9940655579.
- எல்.முருகராஜ்


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X