ஒரே ஒரு பேப்பரு.... பல கோடிக்கு பேரம் சூப்பரு!

Added : ஜூலை 08, 2014
Share
Advertisement
''....ண்ணா! கால் டாக்சின்னா ரோட்ல போறவங்க காலை உடைக்கிற டாக்சி இல்லை... வண்டிய கொஞ்சம் மெதுவாத்தான் ஓட்டுங்களே...!'' கால் டாக்சி டிரைவரிடம் மித்ரா கெஞ்ச, தலையில் அடித்துக் கொண்டாள் சித்ரா. தண்ணீர்ப் பந்தல் ரோட்டில், ரயில்வே 'கேட்'டில் வண்டி சிக்கிக்கொள்ள, திடீரென்று 'யு டர்ன்' போட்ட டிரைவர், 'இதுக்குத்தாம்மா நான் வேகமா வந்தேன்,' என்று சொல்லி விட்டு, 'டைடல்
ஒரே ஒரு பேப்பரு.... பல கோடிக்கு பேரம் சூப்பரு!

''....ண்ணா! கால் டாக்சின்னா ரோட்ல போறவங்க காலை உடைக்கிற டாக்சி இல்லை... வண்டிய கொஞ்சம் மெதுவாத்தான் ஓட்டுங்களே...!''
கால் டாக்சி டிரைவரிடம் மித்ரா கெஞ்ச, தலையில் அடித்துக் கொண்டாள் சித்ரா.


தண்ணீர்ப் பந்தல் ரோட்டில், ரயில்வே 'கேட்'டில் வண்டி சிக்கிக்கொள்ள, திடீரென்று 'யு டர்ன்' போட்ட டிரைவர், 'இதுக்குத்தாம்மா நான் வேகமா வந்தேன்,' என்று சொல்லி விட்டு, 'டைடல் பார்க்' வழியாக, வண்டியைத் திருப்பினார்.


''சிட்டிக்குள்ள இவ்ளோ பாடுபடுத்துற, இந்த ரயில்வே 'கேட்'ல பாலம் கட்டுறதுக்கு, பல வருஷமா 'ஸ்டே'ன்னு ஒரு காரணம் சொல்லிட்டு இழுத்தடிக்கிறாங்க,'' குமுறினாள் மித்ரா.


''நம்ம டிஸ்ட்டிரிக்ட்ல 'லேண்ட் அக்யூசேஷன்' பண்ணிக் கொடுக்காம, பாலம் வேலை, ரயில்வே வேலை எல்லாம் இழுக்கிறதுக்குக் காரணமா இருக்கிற ஒரு ஆபீசரைப் பத்தி அடிக்கடி பேசுவோமே...அவுங்களைப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டியா?,''


''அந்த ஆபீசரா? அவுங்களுக்கென்ன?''


''2005ல, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுல 'மால் பிராக்டிஸ்' பண்ணி, 'செலக்ட்' ஆன 83 பேர் பட்டியல்ல, இந்த ஆபீசர் பேரு, எட்டாவது இடத்துல இருக்கு. மூணு வருஷமா, இவுங்களை மாத்தலைன்னு பேசுனோம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவுனால, இனிமே இவுங்களுக்கு வேலை இருக்குமான்னே தெரியலை. வாய்க்கு வாய், 'நாங்க என்ன சும்மாவா இருக்கோம்; எவ்ளோ வேலை பாக்குறோம்னு இந்த ஆபீசர் சொல்லுவாங்க. இப்பதான் தெரியுது, என்ன வேலை பாத்து,


இந்த வேலைக்கு வந்தாங்கன்னு,'' என்றாள் சித்ரா.


கால் டாக்சியில், எப்.எம்., ரேடியோவில், 'கற்பகம்' படத்திலிருந்து 'மன்னவனே அழலாமா' பாடிக் கொண்டிருந்தது.


''ரேஸ்கோர்ஸ்ல ஒரு 'மெகா பிராப்பர்ட்டி'யை, போலி டாக்குமென்ட் ரெடி பண்ணி விற்க முயற்சி நடந்திருக்கு தெரியுமா?,'' என்று அடுத்த மேட்டரை ஆரம்பித்தாள் மித்ரா.


''ஏதோ அரைகுறையா கேள்விப்பட்டேன்...ஒனக்குத் தெரிஞ்சதை சொல்லு!,'' என்றாள் சித்ரா.


''ஒரு காலத்துல 'ஓஹோ'ன்னு இருந்த குடும்பத்தோட சொத்தாம் அது. அந்த குடும்பம் எப்படி அழிஞ்சது, அதுல எந்தெந்த குடும்பங்கள் தலை தூக்குச்சுன்னு, தோண்டுனா... கோயம்புத்தூர்ல பெரிய பிரளயமே வெடிச்சிரும். இப்போ, அந்த சொத்து சம்மந்தமான, ஒண்ணு ரெண்டு ஒரிஜினல் டாக்குமென்ட்டை எல்லாம், கோர்ட்ல வேலை பாத்த சில பேரு, எடுத்து வச்சிட்டு, ஒரு பேப்பருக்கு ஒரு கோடி, 3 கோடின்னு பேரம் பேசிருக்காங்களாம்,''


''அடப்பாவமே! இப்போ எல்லாரும் மாட்டிட்டாங்களா?,''


''சில பேரு மாட்டிருக்காங்க; நிறைய்யப்பேரு மாட்டுவாங்கன்னு, வக்கீலுக பேசிக்கிறாங்க. ஒரு பேப்பரை எடுத்து ஒளிச்சு வச்சிக்கிட்ட 'ஸ்டாஃப்' ஒருத்தரு, 'ஒங்களுக்கு இருக்கிற 14 ஏக்கர் தோப்பை எனக்கு எழுதி வச்சிருங்க'ன்னு கேட்ருக்காரு. இந்த விவகாரத்துல, மொத்த சொத்து மதிப்பு, 500 கோடியைத் தாண்டும்கிறாங்க. சி.பி.ஐ., இதை விசாரிச்சா, நல்லாயிருக்கும்னு வக்கீலுங்க எல்லாம்


'ஃபீல்' பண்றாங்க''


''யாராவது ஒருத்தரு, ரிட் பெட்டிஷன் போட்டா அது நடக்க வாய்ப்பிருக்கு!,'' என்றாள் மித்ரா.


'' யாரு போடுவா? எல்லாரும்தான் காசுக்கு விலை போயிர்றாங்களே! சரி! அந்த மேட்டரை விடு! சிட்டிக்கு நடுவுல இருக்கிற ஒரு முக்கியமான போலீஸ் ஆபீசர், கட்டப் பஞ்சாயத்துல பட்டயக் கிளப்பிட்டு இருக்காராமே,''


என்றாள் சித்ரா.


ரேடியோவில் சத்தமாக, 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா' பாடிக்


கொண்டிருக்க, ''டிரைவரண்ணா! கொஞ்சம் சத்தத்தைக் குறைங்க...அக்கா! யார்ன்னு நீயே சொல்லு!,'' என்றாள் மித்ரா.


''மலை மேல இருந்து இங்க வந்த ஆபீசர் ஒருத்தர்தான்; அவர்தான், காந்திபுரம், கிராஸ்கட் ரோடுன்னு முக்கியமான ஏரியாவுல எல்லாம், கடைகளைக் காலி பண்ற விவகாரங்கள்ல, சிவில் கேஸ்ல இருக்கிற மேட்டரையெல்லாம், ஏதாவது தகராறு, சண்டைன்னு கேசை மாத்தி, வாடகைக்கு இருக்கிறவுங்களை காலி பண்ணிக் கொடுக்குறாராம். அதுல மட்டுமே, மாசத்துக்கு, பல லட்சம் பாத்துருவாராம்,'' என்ற சித்ரா, ரேடியோ பாட்டுக்குப் பின் பாட்டு பாடினாள்.


''ஓ! பாட்டாவே பாடிட்டியா? பேருக்கேத்தது மாதிரி, காசு சேர்க்கணும்னு கஷ்டப்படுறாரு போலயிருக்கு,'' என்றாள் மித்ரா.


''சரி! கோயம்புத்தூர்ல இருக்கிற ஒரு பெரிய்ய்ய ஹாஸ்பிடலைப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்...


சொல்லட்டுமா?,'' என்று அனுமதி கேட்டாள் சித்ரா.


''எது...ஊருக்கு மேற்கால இருக்கிற ரோட்டுல இருக்கே... அந்த ஹாஸ்பிடலா? நல்ல ஹாஸ்பிடல்னு சொல்லுவாங்களே!'' என்றாள் மித்ரா.


''அவுங்களேதான்...ஊருக்குள்ள வேற எந்த 'ஹாஸ்பிடல்'லும் வளந்துரக் கூடாதுன்னு, ஏகப்பட்ட வேலை செய்யுறாங்களாம்; சுத்து வட்டாரத்துல 4 டிஸ்ட்ரிக்ட்ல இருக்கிற அத்தனை பிரைவேட் ஆம்புலன்ஸ்காரங்களோடவும், ஒரு 'டை-அப்' பண்ணிருக்காங்க; எங்க 'ஆக்சிடென்ட்' நடந்தாலும், அவுங்க ஹாஸ்பிடலுக்குக் கொண்டு வந்து சேக்கணும்; சேத்தவுடனே, ஆம்புலன்ஸ் டிரைவருக்கு மூவாயிரம் ரூபா, கையில கொடுத்திருவாங்களாம். அப்புறமா, அந்த பேஷன்ட்டுக்கு ஆகுற 'ட்ரீட்மென்ட் பில்'லுல, 10 'பர்சன்டேஜ் அமவுன்ட்'டை ஆம்புலன்ஸ் ஓனருக்குக் கொடுக்குறாங்களாம்; அதனாலதான், அங்க


'ஆக்சிடென்ட் கேஸ்' குவியுதாம்!,'' என்றாள் சித்ரா.


''அப்படின்னா, ஏழைப்பட்டவுங்களை வெளியில அனுப்பிருவாங்களா?,'' என்றாள் மித்ரா.


''தெரியலை... ஏன்டி...


மேக்கப் பொருளெல்லாம் விலை


கூடிருச்சா.... என்ன?,''


''அதை ஏன் என்கிட்ட கேக்குற? நான் என்னிக்கு 'மேக்கப்' போட்ருக்கேன்?,''


''கோவைப்புதூர்ல இருக்கிற ஆர்.டி.ஓ., ஆபீசுக்கு, ஒரு லேடி ஆபீசர், காலையில 10 மணிக்கு 'அசால்ட்'டா வருவாங்களாம்; வந்து, அரை மணி நேரத்துக்கு, ஒரு ரூம்ல போய் 'மேக்கப்' பண்ணுவாங்களாம்; அப்புறம்தான், கல்லாப்பெட்டியை திறப்பாங்களாம்... ஒரு அப்ளிகேஷன்ல கையெழுத்துப் போட 250 ரூபாயாம். அதுக்குக் குறையா இருந்தா, 'இதுல முக்கியமான பேப்பர் இல்லை'ன்னு 'இந்தியன்' செந்தில் மாதிரி, தூக்கி எறிஞ்சிருவாங்களாம்,'' என்றாள் சித்ரா.


எம்.எம்.ரேடியோவில், 'திருநிறைச்செல்வி...மங்கையர்க்கரசி...' என்று டி.எம்.எஸ்., கம்பீரமாய் பாடிக்


கொண்டிருந்தார்.


''அக்கா! அன்னிக்கு ஒரு சிடி,


ஜோடி மேட்டர் சொன்னனே...கண்டு பிடிச்சியா?,'' என்றாள் மித்ரா.


''ஆமாடி...! விசாரிச்சேன்...


சம்மந்தப்பட்டவரு, குளுகுளு


ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு


ஓடிட்டாராமே!'' என்றாள் சித்ரா.


''கரெக்ட்க்கா! அந்த மேட்டரை விடு...இதெல்லாம் அவுங்களா திருந்த வேண்டிய விஷயம். நம்ம பேசி என்ன ஆகப்போகுது?,'' என்றாள் மித்ரா.


''இதேபோல, ஒரு பில்டிங் இன்ஜினியரும், ஒரு லேடி டாக்டரும், ஏழை மக்களுக்கு இலவச சேவை செய்ய வேண்டிய இடத்துல, 'கூட்டணி' போட்டு, கொள்ளையடிக்கிறாங்களாம். அது எங்க...கண்டு பிடி?,'' என்று சித்ரா கேட்கும்போதே, திருமண மண்டபம் முன் கால் டாக்சி நிற்க, இருவரும் அன்பளிப்புக்கு வாங்கிய புத்தகங்களை எடுத்துக்கொண்டு, வேகமாக இறங்கினார்கள்.
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X