கண்களை கசக்கச் செய்யும் "கலால்' - பரபரக்கும் பின்னலாடை துறையினர்

Added : ஜூலை 08, 2014
Share
Advertisement
டில்லி அப்பளத்தை நொறுக்கென கடித்துக் கொண்டே ஹாலுக்குள் நுழைந்தாள், மித்ரா. அவளை வரவேற்ற சித்ரா, ""என்னடி, இன்னைக்கு ஏதாச்சும் விஷயம் இருக்குதா?'' என, காதை கடித்தாள். ""திருப்பூர்ல இருக்கிற பின்னலாடை துறை முக்கிய நிர்வாகிங்க குரூப்பா கௌம்பி, டில்லிக்கு போயிருந்தாங்க,'' என்றாள் மித்ரா. ""ஆடை தயாரிக்கிறவங்க, ஏதாவது வெளிநாட்டு "பையருங்க'கிட்ட ஆர்டர்
கண்களை கசக்கச் செய்யும் "கலால்' - பரபரக்கும் பின்னலாடை துறையினர்

டில்லி அப்பளத்தை நொறுக்கென கடித்துக் கொண்டே ஹாலுக்குள் நுழைந்தாள், மித்ரா. அவளை வரவேற்ற சித்ரா, ""என்னடி, இன்னைக்கு ஏதாச்சும் விஷயம் இருக்குதா?'' என, காதை கடித்தாள்.


""திருப்பூர்ல இருக்கிற பின்னலாடை துறை முக்கிய நிர்வாகிங்க குரூப்பா கௌம்பி, டில்லிக்கு போயிருந்தாங்க,'' என்றாள் மித்ரா.


""ஆடை தயாரிக்கிறவங்க, ஏதாவது வெளிநாட்டு "பையருங்க'கிட்ட ஆர்டர் வாங்குறதுக்கு போயிருப்பாங்க. இதுல என்ன விஷேசம் இருக்கப் போகுது,'' என்றவாறு, கையிலிருந்த டீ கோப்பையை கொடுத்தாள், சித்ரா.


டீயை உறிஞ்சியவாறு, ""அட... இதுல வேற விஷயம் இருக்குக்கா. மத்திய அரசு தரப்புல, "பிராண்டட்' ஆடைகளுக்கு கலால் வரி விதிக்கப்போறதா, தகவல் கசிஞ்சிருக்கு. அந்த வரியை விதிக்கக்கூடாதுன்னு சொல்றதுக்காக, போயிருந்தாங்க,'' என்றாள் மித்ரா.


சோபாவில் இருந்த ரிமோட்டை எடுத்து, "டிவி'யை "ஆப்' செய்த சித்ரா, ""தெரியாமத்தான் கேக்குறேன்; அப்படி இந்த கலால் வரில என்னதான் இருக்கு. மத்த வரி மாதிரி, இந்த வரியையும் கட்டிட்டு போய்ட வேண்டியதுதானே; கவர்மெண்டுக்கு, திட்டம் வகுக்குறதுக்கு, ஏதுவா இருக்கும்ல,'' என, கேள்வியை தொடுத்தாள்.


""ஏற்கனவே, சி.எஸ்.டி., - வாட் வரி இருக்குது. இதுல, கலால் வரியும் வந்தா, டாக்குமெண்ட் தயாரிச்சே உசுறு போய்டும். எல்லாம் சரியா கொடுத்தாலும், "சம்திங்... சம்திங்' எதிர்பார்த்து, அது இல்லே, இது இல்லேனு, ஆயிரம் லொட்டு லொசுக்கு சொல்லுவாங்க; அவங்களுக்கு வெட்டலைன்னா, ரெய்டு, அது இதுனு சந்தி சிரிக்க வெச்சுடுவாங்க. போய் தொலையுதுனு, "சம்திங்' கொடுக்க ஆரம்பிச்சுட்டா, வரியை விட அதிகமா, "வெட்ட' வேண்டி வரும். அதனால, கலகம் பண்ற கலால் வரி திரும்பவும் வந்தா கண் கலங்க வேண்டி வருமேனு பயந்து, டில்லி போய், சென்ட்ரல் அமைச்சருங்கள நேர்ல சந்திச்சு, மனு கொடுத்துட்டு வந்திருக்காங்க; இனி, "பட்ஜெட்' விட்ட வழி,'' என்று வரி புராணத்தை மித்ரா முடிக்கவும், சுடச்சுட பஜ்ஜி தட்டு வரவும் சரியாக இருந்தது.


ஒரு பஜ்ஜியை எடுத்து மென்றபடி, ""திருப்பூர் நகரப்பகுதிக்கு மத்தியில வர்ற ரோடுகள சேர்த்து, அவிநாசியில இருந்து அவிநாசிபாளையம் வரைக்கும் தேசிய நெடுஞ்சாலைக்கு திடீருனு எடுத்துருக்காங்க; அதுனால, ஸ்டேட் ஹைவேஸ் அதிகாரிங்க அதிர்ச்சியான, கதை தெரியுமா,''


என, அடுத்த கேள்வியை எழுப்பினாள் சித்ரா.


""ஏன்... என்னாச்சு... என்.எச்., ரோடு வந்தா... நல்லது தானே,''


என, எதிர்கேள்வி கேட்டாள் மித்ரா.


""வாகன போக்குவரத்து அதிகமாயிருக்குதுனு,


ரூ.46 கோடிக்கு பழைய பஸ்


ஸ்டாண்ட் முன்னாடி, அடுக்கு


பாலம்; அவிநாசி ரோட்டுல,


ரெண்டு இடத்துல அடுக்கு பாலம் கட்டுறதுக்கு, ஸ்டேட் ஹைவேஸ் தரப்புல நிதி ஒதுக்கியிருக்காங்க. பூர்வாங்க பணிகள் வேகமா நடந்துக்கிட்டு இருந்துச்சு. பாலம் கட்டுறதுக்கு நெலம் கையகப்படுத்தணும். அதுல, பெரிய புள்ளிகளோட எடம் சிக்காம இருக்குறதுக்கு, யாரோ, டில்லிக்கு போயி, காய் நகர்த்தியிருக்காங்க. என்.எச்., வந்தா, இந்த பாலங்கள் வருமாங்கிறது, சந்தேகம் தான்னு புலம்புறாங்க. இப்ப, என்.எச்.,


திட்டம் வர்றதுக்கு யார் முயற்சி செஞ்சாங்கன்னு, துலாவிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X