கசாபின் கடைசி கட்ட தந்திரம் பொய்த்துப் போன பரிதாபம்

Updated : ஜூலை 22, 2014 | Added : ஜூலை 08, 2014 | கருத்துகள் (9) | |
Advertisement
இனி விசாரணையின் இறுதி கட்டத்தை காண்போம்: ஒரு ஸ்தாபனத்தின் - தொழில் ரீதியான அமைப்பின் - பெருமை இது போன்ற உச்ச கட்ட சமயங்களில் தான் பரீட்சிக்கப்படுகிறது. அந்தந்த ஸ்தாபனங்களின் ஒழுங்கு முறை விதிகள், தன்னிச்சையாக அந்த இடங்களிலிருந்தே வர வேண்டுமென்ற சுய தத்துவத்துக்கு மும்பை பயங்கரவாத நிகழ்வுகளைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய முறை தீங்கிழைத்து விட்டது.விசாரணையில்
கசாபின் கடைசி கட்ட தந்திரம் பொய்த்துப் போன பரிதாபம்

இனி விசாரணையின் இறுதி கட்டத்தை காண்போம்: ஒரு ஸ்தாபனத்தின் - தொழில் ரீதியான அமைப்பின் - பெருமை இது போன்ற உச்ச கட்ட சமயங்களில் தான் பரீட்சிக்கப்படுகிறது. அந்தந்த ஸ்தாபனங்களின் ஒழுங்கு முறை விதிகள், தன்னிச்சையாக அந்த இடங்களிலிருந்தே வர வேண்டுமென்ற சுய தத்துவத்துக்கு மும்பை பயங்கரவாத நிகழ்வுகளைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய முறை தீங்கிழைத்து விட்டது.
விசாரணையில் நேர்மை இல்லை: திரு. ராஜூ ராமச்சந்திரன்: மனுதாரன் கசாபுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட சாட்சியங்கள், எண்ணிக்கையிலும், உண்மைத் தன்மையிலும் மிகப் பலமாக இருந்த போதிலும், அதிலிருந்து முற்றிலும் விலகிச் செல்லும் போக்கையே திரு. ராமச்சந்திரன் தனது விவாதத்தில் மேற்கொண்டார். அவர் அடிப்படை யிலேயே கை வைத்தார். அவரது வாதம் இதுதான். தனது கட்சிக்காரருக்கு நேர்மையான விசாரணை கிடைக்கவில்லை. அறிந்தோ அறியாமலோ ஒரு நேர்மையான விசாரணை மறுக்கப்படும்போது அதனால் ஏற்படும் விளைவு ஒன்றுதான். அதாவது அந்த விசாரணை பயனில்லாத விசாரணை. இப்படிப்பட்ட ஒரு விசாரணையில் இருந்து வந்த தீர்ப்பு, அதையொட்டிய தண்டனை சட்டப்படியானதாக இருக்க முடியாது. அந்தத் தீர்ப்பும் தண்டனையும் நிறைவேற்றத்துக்கு உரியதல்ல. சட்டரீதியான ஆட்சி, நீதிமுறை பாதையில் நாம் நடப்பது உண்மையானால், நாம் கடைக்கோடி வரையிலும் அந்தப் பாதையில் மட்டுமே நடக்க வேண்டும். பாதி வழியில் நின்று விடக்கூடாது. அந்தப் பிரயாணத்துக்குரிய விதிகளிலிருந்து மாறக்கூடாது, என்று திரு. ராமச்சந்திரன் நாகரீகமான பாஷையில் இந்த நீதிமன்றத்துக்கு நினைவுறுத்தினார்.


அரசியல் சட்ட உத்தரவாதம்:

இந்திய அரசியல் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ், தனிநபர் வாழ்வுரிமை, தனிநபர் சுதந்திரம் ஆகிய உத்தரவாதங்களில் "நேர்மையான விசாரணை' என்பது ஒரு உள்ளார்ந்த அங்கமாகும், என்பது திரு. ராமச்சந்திரனின் வாதம், விளக்கம். அரசியல் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவாதங்களை ஒருவரிடமிருந்து அன்னியப்படுத்தமுடியாது. இந்த உரிமைகளைப் பறிக்க முடியாது என்று வாதிட்ட அவர் முதலில் சில வழக்குகளை, அவை மீதான தீர்ப்புகளை ஆதாரமாகக் காட்டினார்நேர்மையான விசாரணையென்பது அன்னியப்படுத்த முடியாத தனிநபர் உரிமை என்ற அடிப்படையில் தனது வாதத்தைத் தொடர்ந்த திரு. ராமச்சந்திரன், மனுதாரன் கசாப் விஷயத்தில் அரசியல் சட்டத்தின் உத்தரவாதம் திருப்தியாகப் பின்பற்றப்படவில்லை, அவருக்கு இரண்டு உத்தரவாதங்கள் மறுக்கப்பட்டுள்ளது, முதலாவது ஆரம்ப நிலையிலேயே அவருக்கு சட்ட ஆலோசனை வசதி வழங்கப்பட்வில்லை(அரசியல் சட்ட பிரிவு 22(1)), இரண்டாவது தன்னை தானே குற்றவாளியாகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருந்து பாதுகாப்பு - (அரசியல் சட்டப்பிரிவு 20(3), அதாவது கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வது) இரண்டுமே தனது கட்சிக்காரருக்கு வழங்கப்படவில்லையென்று அவர் வாதித்தார்.


பயங்கரவாதிக்கும் சட்ட உரிமை?:

தனது வாதத்தை மேலும் விரிவாக விளக்கிய திரு. ராமச்சந்திரன், மனுதாரன் கசாப் கைது செய்யப்பட்டு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படும் முன்பாகவே, அரசியல் சட்டத்தின் 22(1) பிரிவின் கீழ் சட்ட ஆலோசனை பெறும் உரிமை உள்ளதென்பது அவனுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றார். மேலும் ஒருவருக்கு அரசியல் சட்டப்படி ஒரு வழக்கறிஞரை நாடி, ஆலோசனை பெற்று, அவரால் பாதுகாப்புப் பெற முடியும் என்று தெரிவித்து அறிந்து கொள்ளுமாறு செய்வதும், பின்னால் அவருக்குச் சட்ட உதவி வழங்குவது ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான சலுகையல்ல என்று வாதிட்டார். ஒருவருக்குச் சட்ட உதவி வழங்குவது மட்டுமே அரசியல் சட்டத்தைப் பின்பற்றியதாக ஆகிவிட முடியாது. 2009, பிப்ரவரி 17ம் தேதி கூடுதல் முதன்மை மெட்ரோபோலிடன் மாஜிஸ்ட்ரேட் முன்பு அவனது ஒப்புதல் வாக்குமூலம் பதிவுக்காக ஆஜர்படுத்தப்படும் வரையில், அவனுக்கு இப்படி ஒரு உரிமை இருப்பதாகச் சொல்லப்படவேயில்லை. மதிப்பிற்குரிய மாஜிஸ்ட்ரேட் அவர்களும் அவனுக்கு அரசியல் சட்டப்படி இவ்வாறான அடிப்படை உரிமை இருப்பதாகவும், ஒரு வழக்கறிஞரின் துணையை நாடித் தனக்காக வாதிட அவரைக் கோரமுடியும் என்று எடுத்துக் கூறவில்லை. "உனக்கு வழக்கறிஞர் வேண்டமா' என்று மட்டுமே கேட்டார். இவ்வாறு அரசியல் சட்டத்தின் 20(3) பிரிவுப்படி அவனுக்குள்ள உரிமையைத் தெரியப்படுத்தாமலே அவனது வாக்குமூலம் பதிவு செய்யப்படுள்ளது.


மாஜிஸ்திரேட் எச்சரிக்கை போதாது:

மேலும் மனுதாரனின் (கசாப்) வாக்குமூலம் பதிவின்போது அவனுக்கு அவ்வப்போது சில எச்சரிக்கை அறிவுரைகளை மாஜிஸ்திரேட் எடுத்துரைத்து விளக்கியது குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 164ன் படி சந்தேகமில்லாமல் சரியானதே என்றாலும் கூட, அரசியல் சட்டத்தின் தரத்தைவிட மிகவும் தாழ்ந்ததேயென்று திரு. ராமச்சந்திரன் வாதிட்டார். ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவேண்டிய அவசியல் இல்லை, இந்த வாக்குமூலமே அவனுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்று மனுதாரனுக்கு எடுத்துச் சொல்வது மட்டுமே அரசியல் சட்டவிதிகளை மதிப்பதாக ஆகிவிடாது என்று அவர் மேலும் வாதாடினார். அரசியல் சட்டத்தின் 22(1) மற்றும் 20(3) பிரிவுகளைப் பற்றி மாஜிஸ்ட்ரேட் எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். ஒரு குற்றவாளிக்கு இந்த உரிமை விளக்கங்கள் தரப்பட்டிருந்தால் மட்டுமே அவன் தனக்கு ஒரு வக்கீல் வேண்டுமா, வேண்டாமா, வாக்குமூலம் தரலாமா வேண்டாமா என்று தெரிந்து கொள்ள முடியும். அதுதான் அரசியல் சட்டரீதியாக ஏற்கத் தக்கதாக இருக்க முடியும்.தன்னுடைய வாதத்தைப் பலமாக்கும் முயற்சியில் மதிப்பிற்குரிய வழக்கறிஞர், அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் நந்தினி சத்பதி - பி.எல். தானி வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பை எடுத்துக்காட்டினார். அந்தத் தீர்ப்பில் 42 முதல் 45 வரையான பத்திகளில் கூறப்பட்ட செய்திகளில் நமது அரசியல் சட்டத்தின் 20(3) பிரிவுகள் ஒத்து வருவதாகவும், ஒரு குற்றவாளியின் உரிமைகள் குறிப்பிடப்பட்டுள்ளதையும் எடுத்துக் காட்டினார். அந்தத் தீர்ப்பில் காணப்படும் பத்திகள் 21 முதல் 34 வரை இதைப்பற்றியே பேசுவதாகவும் உள்ளது என்றும் வலிமையாக வற்புறுத்தினார்.


ஒப்புதல் வாக்குமூலம் செல்லாதா:

நந்தினி சத்பதி வழக்குத் தவிர, இதே நீதிமன்றத்தில் தரப்பட்ட கத்ரி - பீகார் மாநில வழக்குத் தீர்ப்பையும் சுட்டிக் காட்டினார். இந்த வழக்கில் சிறைவாசிகளின் கண்கள் மிருகத்தனமாகக் குருடாக்கப்பட்டது. அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு எவ்வாறு சட்ட உதவியைக் குற்றவாளிக்கு வழஙக வேண்டுமென்று கூறுகிறது என்பதை இந்த நீதிமன்றம் இந்த வழக்கில் வலியுறுத்தியது.டெல்லி அரசு - நவ்ஜோரத் சிந்து வழக்கில் இந்த நீதிமன்றம் வழங்கிய தீர்வு, அமெரிக்க மிராண்டா நீதிமன்றத் தீர்ப்பு (பாராக்கள் 159-164) 2002 பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 35, 52வது பிரிவுகள், அரசியல் சட்டத்தின் 21 மற்றும் 22(1), கர்தார் சிங் - பஞ்சாப் வழக்கில் இந்த நீதிமன்றம் தெரிவித்த வழி முறைகள், டி.கே. பாசு - மேற்கு வங்கம் வழக்குகளில் இந்த நீதிமன்றத்தின் பார்வையும், அமெரிக்க உச்ச நீதி மன்றம் நந்தினி சத்பதி வழக்கில் தெரிவித்த கருத்துக்களும் எவ்வாறு இணைந்து வருகிறதென்பதையும் திரு. ராமச்சந்திரன் விரிவாக மேற்கோள் காட்டி மனுதாரனுக்காகப் பலமாக வாதாடினார்.
கைது செய்யப்பட்ட சமயத்திலோ அல்லது இந்த வழக்கு போடா சட்டத்துக்கு உள்ளாக்கப்பட்ட போதோ, சட்ட ஆலோசனை உரிமையை ஒரு வழக்கறிஞர் மூலம் பெறும் வாய்ப்பு பற்றி மனுதாரனுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று காரணத்தினால் ஒப்புதல் வாக்குமூலத்தை (விசாரணை நீதிமன்றம்) நிராகரித்துள்ளதையும் அதை 181, 182 மற்றும் 185 பாராக்களில் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதையும் ராமச்சந்திரன் மேற்கோள் காட்டினார்.
நவ்ஜோத் சிந்து வழக்கில் அரசியல் சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பாதுகாப்புகள் நிச்சயமாகப் பின்பற்றப்படவேண்டும் என்பதற்கு இந்த நீதிமன்றம் கூறிய காரணங்கள், இந்த வழக்குக்ம் நிச்சயமாகப் பொருந்தும் என்றும் அவர் வலியுறுத்தி வாதாடினார். போடா சட்டத்தில் 32 மற்றும் 52 செக்ஷன்களின் வழங்கப்படும் பாதுகாப்புக்கு அடித்தளமாக அமைவது அரசியல் சட்டத்தின் 20(3), 21 மற்றும் 22(1) ஆகியவை. எனவே, கிரிமினல் சட்டம் செக்ஷன் 164ன் கீழ் ஒரு மாஜிஸ்ட்ரேட் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும்போது மிராண்டா விதி அல்லது போட்டா சட்டம் 32 மற்றும் 52ன் கீழ் உள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று முடிவு செய்வது சரியல்ல. ஏனென்றால் மிராண்டா மற்றும் நவஜோத் சிந்து வழக்குகளில் போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்புதல் அளிப்பது அனுமதிக்கக்கூடியது. ஆனால் நாட்டின் சகஜமான சட்டங்களின் போலீஸ் வாக்குமூலம் ஒரு சாட்சியமாக ஏற்கத்தக்கதல்ல. இன்றும் சுருக்கமாகவே சொல்வதென்றால், குற்றம் சாட்டப்பட்டுள்ளவருக்குள்ள அரசியல் சட்ட உரிமைகளைப் போலீஸ் எடுத்துச் சொல்லும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் குற்றவாளி தனது வாக்குமூலத்தை அளிக்க ஒரு மாஜிஸ்ட்ரேட்டிடம் அழைத்து வரப்படும்போது, அந்த மாஜிஸ்ட்ரேட் குற்றவாளிக்கு இதை எடுத்துச் சொல்ல வேண்டும். நவ்ஜோத் சந்து வழக்கில் அரசியல் சட்டத்தின் 20(3), 21 மற்றும் 22(1) பிரிவுகளை அர்த்தமுள்ள வகையில் நீதிமன்றம் எவ்வாறு கையாண்டது என்றும் எடுத்துக் காட்டினார். எனவே, ஒரு வழக்கறிஞரைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் பற்றி அவருக்கு (குற்றம் சாட்டப்பட்டவருக்கு) தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும். ஒருவருக்குள்ள உரிமைகள் பற்றி அவருக்குத் தெரிவிக்க வேண்டியது ஒவ்வொரு அதிகாரியின் பொறுப்பாக இருக்கவேண்டும். எனவே கிரிமினல் சட்டத்தின் 164 பிரிவின்கீழ் ஒரு குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் வழங்க வரும்போது, மாஜிஸ்ட்ரேட் அவரிடம் 20(3) மற்றும் 22(1) அரசியல் சட்டப் பிரிவுகளின் கீழ் அவருக்குள்ள உரிமை பற்றிச் சொல்லவேண்டியது சட்டரீதியான கட்டாயமாகும். இந்த வழக்கில் மாஜிஸ்ட்ரேட் (பிடபிள்யூ218) மனுதாரனிடம் அவனுக்கு வழக்கறிஞர் உதவி தேவையா என்று கேட்டுள்ளார் என்றாலும், இது பற்றி - இந்த உரிமை பற்றி - அவனுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதா என்றும் கேட்டிருக்க வேண்டும். கேட்கவில்லை.
மேலும் வாதிடுகையில் கிரிமினல் ப்ரொசீஜர் கோடு செக்ஷன் 164 முறையாகப் பின்பற்றப்பட்டிருந்த போதிலும், அது அரசியல் சட்ட ரீதியான கடமையைச் செய்ததாக ஆகாது என்றும், ஏனெனறால் தனக்காக வாதாட ஒரு வக்கீலை நாடுவதா வேண்டாமா என்று முடிவு செய்ய அவனுக்கு வாய்ப்பில்லை. விசாரணைக் கட்டத்தில் ஒரு வழக்கறிஞரைக் குற்றவாளிக்கு ஏற்பாடு செய்து தரவேண்டுமென்று கிரிமினல் சட்டத்தின் 304வது பிரிவு கூறுகிறது. இதைக் குற்றவாளியே கூட வேண்டாமென்று சொல்ல முடியாது. எனவே நீதி நிர்வாக விதிகளின்படி மிக ஆரம்ப காலத்திலேயே, விசாரணை நிலையிலேயே மனுதாரனுக்கு வழக்கறிஞர் உதவி வழங்கப்பட்டிருக்க வேண்டுமென்பதே சட்டம். அப்போதுதான் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பயனுள்ள பாதுகாப்புக் கிடைக்க முடியும். இல்லாத நிலையில் அவனது ஒப்புதல் வாக்குமூலம் தன்னைத்தானே அழித்துக் கொள்வதாக முடியும். எனவே காலங்கடந்து ஏதும் செய்வதில் பயனில்லை. தவிர, ஒரு மாஜிஸ்ட்ரேட் சட்டப்படியான எழுத்தாலும் உணர்வாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் குற்றவாளிக்கு அவன் உரிமைகளை எடுத்துச் சொன்னாலும், அவனது வழக்கறிஞரின் உதவிக்கு அது (மாஜிஸ்ட்ரேட் அறிவுரை) ஈடாக முடியாது என்று திரு. ராமச்சந்திரன் வாதிட்டார்.அரசியல் சட்டப்படி ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்று அவர் தனக்காக வாதிடும் உரிமையை மனுதாரன் இழந்து விட்டார். அரசியல் சட்ட ரீதியான இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைத்தானே குற்றவாளி என்று ஒப்புக் கொள்ளும் நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. அரசியல் சட்டத்தின் படியான 20(3) உரிமை மறுக்கப்பட்டுள்ளது. தனது வாதத்துக்கு ஆதாரவாக இந்த நீதிமன்றம் செல்வியும் மற்றவர்களும் - கர்னாடக அரசு வழக்கில் அண்மையில் அளித்த தீர்ப்பில் உள்ள பாராக்கள் 92 முதல் 101 வரையில் சுட்டிக் காட்டினார். இந்த வழக்கிநன் தீர்ப்பில் உள்ள துணைத்தலைப்புகளின் கீழ் உள்ள 102 - 112 மற்றும் 113 - 119 பாராக்களையும், அரசியல் சட்டத்தின் 20(3) பிரிவோடு பொருத்திக் காட்டினார். இவற்றைக் கொண்டு எவ்வாறு குற்றவாளிக்கு ஆரம்ப காலத்திலிருந்தே அரசியல் சட்டப்படி 20(3) பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டுமென்று திரு. ராமச்சந்திரன் விரிவாக வாதாடினார்.
திரு. கோபால் சுப்பிரமணியம்: மனுதாரரின் சார்பில் முன் வைக்கப்பட்ட வாதங்களுக்குப் பதிலளித்த திரு. கோபால் சுப்பிரமணியம், மனுதாரருக்கு அரசியல் சட்டப்படியான சகல உரிமைகளும், ஒரு வழக்கறிஞர் உதவியுடன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஒரு குற்றவாளியாகத் தன்னைக் கட்டாயமாகக் காட்டிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலையிலிருந்து பாதுகாப்பும் முழுமையாகவே வழங்கப்பட்டுள்ளது, எனவே மனுதாரரின் விசாரணை நிலையில் இவை மறுக்கப்பட்டுள்ளது என்று கூறுவது சரியல்ல என்று கூறினார். எந்தக் குற்றத்தைச் செய்தவராக இருந்தாலும், இந்திய அரசியல் சட்டம் அவர்களுக்கு ஆரம்ப உரிமைகளை வழங்கியுள்ளது என்பதைத் திரு. சுப்ரமணியம் ஏற்றுக் கொண்டார். அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு ஒருவரின் பாதுகாப்புக்கு விரிவான உத்தரவாதம் அளிக்கிறது. அதையொட்டிய பிற பிரிவுகள், ஒரு குற்றவாளியின் ப்பாவித்தனம் உண்மையானால் அதற்குரிய அவசியமான பாதுகாப்புக்கும் உத்தரவாதமளிக்கிறது. விசாரணையின் போது தவறுகள் ஏற்படாதவாறும் உத்தரவாதமளிக்கிறது. ஒரு கிரிமினல் குற்றத்தைச் செய்தவருக்கு உரிய உரிமைகள், சலுகைகள், மற்றும் பாதுகாப்பை வழங்கும் அரசியல் சட்டம், ஒரு சட்ட பூர்வமான திட்டமாக வகுக்கப்பட்டுப் பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ளது. 1973ம் ஆண்டு கிரிமினல் நடைமுறை விதிகள் - மற்றும் 1872ம் ஆண்டு இந்திய சாட்சியச் சட்டம் - ஆகியவை அரசியல் சட்ட வாக்குறுதிகளுக்கு ஏற்ப வரையப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒர குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்ட உத்தரவாதங்கள் நடைமுறையிலும் சரியாக இருக்க வேண்டுமென்ற உறுதிப்பாடு இவருக்கு (மனுதாரருக்கு) உண்மையிலேயே கிடைத்துள்ளது, என்று கூறினார்.திரு. ராமச்சந்திரன் குறிப்பிட்ட உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பின்வரும் அரசியல் சட்டப் பிரிவுகளில் காணப்படுகிறது. அவை 20(3), 21 மற்றும் 22(1)
குற்றங்களுக்கான தண்டனைகள், பாதுகாப்பு
குற்றவாளி தனக்குத்தானே எதிராக சாட்சி கூற வேண்டிய நிர்பந்தம் இல்லாமை
உயிருக்குப் பாதுகாப்பு
சட்டரீதியாக ஏற்கப்பட்டுள்ள வழிமுறைகள் தவிரப் பிற காரணங்களால் உயிருக்கும், தனி உரிமைகளுக்குப் பாதகம் ஏற்படலாகாது.
சில வழக்குகளில் கைது செய்து காவலில் வைக்கக்கூடாது
கைது செய்யப்பட்டவர், அறிவிப்பின்றி காவலில் வைக்கப்படக்கூடாது
எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அவருக்கு விருப்பமான வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்று அவரைத் தனது வக்கீலாக அமர்த்திக் கொள்ளும் உரிமையை மறுக்காமல் நடந்து கொள்ளுதல், அவர் என்ன காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.அரசியல் சமூக வாழ்க்கைக்குரிய பண்பாடுகளை மற்றும் நெறிமுறைகளை அரசியல் சட்டம் வகுத்துள்ளது. ஆனால் இந்த நெறிமுறைகளை அமலாக்கம் செய்யும் பொறுப்பு கிரிமினல் சட்ட முறைகளில் உள்ளது. இந்த கிரிமினல் சட்ட விதிகளை நன்கு அறிந்து கொள்ள அரசியல் சட்ட நெறிமுறைகள் இந்தச் சட்டப் பிரிவுகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை ஒருவர் புரிந்து கொள்ளமுடியும். இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அரசியல் சட்ட உத்தரவாதங்கள் கிரிமினல் சட்ட விதிகளுக்குள்ளும் வேலை செய்கிறது என்பது தெரிய வரும், என்று சுப்ரமணியம் விளக்கினார்.
கிரைம் சட்டவிதியின் 161வது பிரிவை அவர் விளக்கினார். சாட்சிகளிடம் போலீஸ் விசாரணை: இந்தப் பிரிவின் கீழ் புலன்விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரி, மாநில அரசின் பொதுவான அல்லது குறிப்பிட்ட ஆணையின் மூலம் நியமிக்கப்படட்ட அந்தஸ்து உடையவராக இருப்பார். இவரது ஆணையின் படி ஒரு போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்ட வழக்கைப் பற்றி அறிந்துள்ள ஒருவரிடம் வாய்மொழியாக விசாரணை நடத்துவார். இவ்வாறு விசாரிக்கப்படும் நபர் உண்மையைச் சொல்லக் கடமைப்பட்டவர். வழக்கு சம்பந்தப்பட்ட செய்திகளை இவர் உண்மையாகச் சொல்ல வேண்டும். இந்தப் பிரிவின்படி, போலீஸ் அதிகாரி, இந்த விசாரணையில் தரப்பட்ட வாக்கு மூலங்களை எழுத்து மூலமாகவும் செய்யலாம். ஒவ்வொருவருடைய வாக்குமூலங்களையும் தனித்தனியாக உண்மையாகப் பதிவு செய்ய வேண்டும். இந்த வாக்குமூலங்கள் இந்தத் துணை விதியின்படி ஆடியோ-வீடியோ எலக்ட்ரானிக் வழியில் பதிவு செய்ய வேண்டும் என்று, இந்த இடத்தில் அழுத்தம் கொடுத்து சுப்ரமணியம் விளக்கினார்.செக்ஷன் 161, துணைப்பிரிவு 2, போலீஸ் கேள்விகளுக்கான பதில்கள், குற்ற ஒப்புதலாக அமைவதை அனுமதிப்பதில்லை. இதலிருந்தே அரசியல் சட்டத்தின் 20(3) கூறுவதையேதான் கிரிமினல் சட்ட விதிகளும் பேசுகின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
செக்ஷன் 162ல் இதே செய்தியைத்தான் மீண்டும் கூறுகிறது. போலீசுக்குத் தரும் வாக்குமூலங்களில் கையெழுத்துப் போடக் கூடாது; இந்தப் பிரிவின் கீழ், வாக்குமூலங்கள் எழுத்து வடிவத்தில் இருந்தால், அந்த வாக்குமூலத்தை அளிப்பவர், (விசாரணைகள் நடத்தப்படும்போது) அதில் அவர் கையெழுத்திட வேண்டியதில்லை; இந்த வாக்குமூலங்களோ, அல்லது வேறு பதிவாகியுள்ள வாக்குமூலங்களையோ வேறு கேள்வி நிலை அல்லது வேறு காரணங்களுக்காகவோ போலீஸ் நாட்குறிப்பில் பதிவு செய்திருந்த போதிலும், இவற்றை எந்தக் காரணங்களுக்காகவோ உபயோகப்படுத்தக்கூடாது. என்றாலும் ஒரு சாட்சி விசாரணைக் காலத்தில் ப்ராசிக்யூஷன் தரப்பில் அழைக்கப்படும்போது, அவரது எழுத்து மூலமான சாட்சியம் நீதி மன்றத்தின் அனுமதியோடு, பிராசிக்யூஷன் தரப்பில், அவரது சாட்சியம் உண்மையே என்று நிரூபிக்கப்படும்போது மட்டுமே உபயோகிக்கப்படலாம். அதுவும் அந்த சாட்சி 1872 சாட்சியங்கள் சட்டத்தின் 145வது செக்ஷன்படி முரண்படும்போது மட்டுமே உபயோகப்படுத்தலாம். அதுவும் குறுக்கு விசாரணையின் போது, வழக்கு விபரங்களை விளக்கும்போது மட்டுமே உபயோகப்படுத்தலாம்.கிரிமினல் ப்ரொசீஜர் விதிகள் 162, துணைப்பிரிவு (1) மூலம் போலீஸ் அதிகாரிகள் பெறும் வாக்குமூலங்கள் ஏற்கத் தக்கதல்ல என்ற விளக்கம் அரசியல் சட்டத்தின் 20(3) பிரிவில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைக் கண்ணாடி பிரதி பிம்பமாக காட்டி உள்ளது. சிற்சில இடங்களில் மட்டும் சாட்சியச் சட்டம் 1872ன் 32(1) மற்றும் 27 விதிகளுக்குள் பிரச்சினை எழும்போது மட்டும் ஒரு வரம்புக்குள் சில விதிவிலக்குகள் உள்ளன.
இச்சடத்தின் 163 விதியின் 1வது துணைவிதியின்படி தூண்டுதல்கள் கூடாது. அதிகாரத்தில் உள்ள நபரும் இவ்வாறு தூண்டுவது, அச்சுறுத்துவது, அல்லது இவ்வாறு செய்தால் இந்த உதவி செய்வேன் என்று வாக்குறுதி தருவது ஆகிய எந்தச் செயலையும் 1872 சாட்சியங்கள் சட்டத்தின் 24வது பிரிவின்படி செய்யக் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது. மேலும் புலன் விசாரணைக் காலத்தில் ஒருவர் தனிச்சையாக, சொந்த விருப்பத்தில் தர விரும்பும் வாக்குமூலங்களையும் எந்த அதிகாரியும் தடு"க முடியாதென்றும் திரு. சுப்பிரமணியம் மிக அழுத்தமாகத் தெரிவித்தார்.கிரிமினல், மற்றும் சாட்சியங்கள் சட்டங்களின் பிரிவுகளும் அரசியல் சாஸனம் வழங்கும் தனி நபர் உரிமைகளும், ஒன்றுக் கொன்று முரண்பட்டதல்ல, இச்சட்டங்களின் கீழ் போலீஸ் அதிகாரிகளின் நடைமுறை, வழக்கைப் பற்றி அறிந்தவருக்கு புலன் விசாரணை காலத்தில் தரப்பட்டுள்ள உரிமைகள், சாட்சியப்பதிவுகள், அவற்றை உபயோகிக்கும் கட்டங்கள் ஆகிய சட்டப் பிரிவுகளோடு ஒப்பிட்டு அழுத்தமாக, சுப்பிரமியம் தனது வாதத்தை முன்வைத்தார்.
அவர் மேலும் கூறுகையில் குற்றவியல் சட்டப் பிரிவு 163, துணைப் பிரிவு (1) உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தத்துவங்களின் அடிப்படையில் அமைந்ததென்று விளக்கினார். இச்சட்டத்தின் கீழ் தூண்டுதல் அல்லது கட்டாயப் படுத்துதல் கூடாது. ஒரு வாக்குமூலத்தில் தூண்டுதல் - கட்டாயப்படுத்துதல் மற்றும் சுதந்திரமானது - தனிச்சையானது என்பதற்குள்ள வேறுபாடுகள் நிலை பற்றியும் இப்பிரிவுகள் பேசுகின்றன. அதாவது குற்றவாளி தனது குற்றத்தைத் தானாகக் கூறுவதில் அவனுக்குள்ள சுதந்திரம் இப்பிரவுகளின் மூலம் பாதுகாக்கப்படுகிறது என்று சுப்பிரமணியம் மேலும் விளக்கினார்.குற்றவியல் சட்டப் பிரிவுகள் 161 - 163 விசாரணை முறைகள், இந்தியாவில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்று சுப்பிரமணியம் வலியுறுத்தினார். போலீசுக்குக் குற்றவாளி அளித்த வாக்குமூலங்கள் ஏற்கத்தக்கதல்ல போன்ற பிரிவுகள், குற்றவாளிக்குக் கிடைக்க வேண்டிய பாதுகாப்புகள் பற்றிய விரிவாக அலசுகின்றன. இந்தியச் சட்டங்களின் கீழ்த் தன்னைத் தானே குற்றவாளியாகக் காட்டிக் கொண்டு வாக்குமூலம் தரும் தத்துவம் கிடையாது. போலீஸ் விசாரணையின் போது 162(2) செக்ஷன்படி இது நேரலாம். நீதி வழியான ஒப்புதலையே சட்டம் கேட்கிறது. இதுவம் கிரிமினல் சட்ட முறை 164ன் கீழ் சாட்சியாக ஏற்கப்படும்விதமாக இருக்க வேண்டும்.
குற்றவியல் சட்டப்பிரிவு 164 பிரிவும் தன்னைத் தானே குற்றவாளியாகக் காட்டும் வாக்குமூல நிர்பந்தங்கள் கூடாது என்ற அரசியல் சட்ட உரிமையைப் பாதுகாக்கும் விதமாகவே அமைந்துள்ளது. இப்பிரவு சொல்வது இதுவே.
1) ஒரு வழக்கில் விசாரணை அல்லது புலனாய்வு நடப்பதற்கு முன்னால், ஒரு மெட்ரோபாலிடன் அல்லது நீதித்துரை மாஜிஸ்ட்ரேட் அவருக்கு இந்த வழக்கில் அதிகார எல்லை இருந்தாலும், இல்லாவிட்டாலும், புலனாய்வு நடக்கும் போது, இந்தச் சட்டப் பிரிவின் கீழ் (செக்ஷன் 164) அல்லது அமலில் இருக்கும்போது அவரிடம் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்கு மூலத்தைப் பதிவு செய்யலாம். (இந்த வாக்கு மூலத்தை இந்தத் துணைவிதியின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீலும் உடன் இருக்க இந்த ஒப்புதல் வாக்குமூலம் ஆடியோ - வீடியோ எலக்ட்ரானிக் முறையிலும் பதிவு செய்யலாம். ஆனால் ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் மாஜிஸ்ட்ரேட் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள ஒரு போலீஸ் அதிகாரி ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்யமுடியாது. 2) ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் முன்பாக, "இப்படி ஒரு வாக்குமூலம் தரவேண்டிய கட்டாயம் குற்றவாளிக்கு இல்லை, அவர்தரும் வாக்குமூலமே தரவேண்டிய கட்டாயம் குற்றவாளிக்கு இல்லை, அவர்தரும் வாக்குமூலமே அவருக்கு எதிராக பயன்படுத்தப்படலாம்' என்று விவரமாக எடுத்துரைத்து, அதற்குப் பின்னரும், குற்றம் சாட்டப்பட்டவர் தன்னிச்சையாகவே வாக்குமூலம் தருகிறார் என்பதற்கான நம்பிக்கை இருந்தால் அல்லாது, அந்த மாஜிஸ்ட்ரேட் வாக்குமூலத்தைப் பதிவு செய்யக்கூடாது. 3) வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக, மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜராகும் நபர் வாக்குமூலம் தர இஷ்டப்படவில்லையென்று தெரிவித்தால், போலீஸ் காவலில் அவர் இருப்பதை அனுமதிக்க மாட்டார். 4) எந்த வாக்குமூலமும் செக்ஷன் 281ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். இதில் வாக்குமூலம் அளித்தவர் கையெழுத்திட வேண்டியதில்லை.
இதுபோன்ற வாக்குமூலப் பதிவுகளில் மாஜிஸ்ட்ரேட் கீழ்க்கண்டவாறு குறிப்பு எழுதவேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர் (அவரது பெயரைக் குறிப்பிட்டு) இவ்வாறான வாக்குமூலம் அளிக்கக் கடமைப்பட்டவரல்ல வென்று அவருக்கு விளக்கிக் கூறினேன்.
இவ்வாறு விளக்கிய பின்னரும் அவர் வாக்குமூலம் அளித்தால், அது அவருக்கு வினோதமாகப் பயன்படுத்தப்படலாம் என்பதும் அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. இந்த வாக்குமூலம் அவரால் தன்னிச்சையாகவே தரப்பட்டதென்று நான் நம்புகிறேன். என்னால் விளக்கப்பட்டு என் முன்னிலையில் இந்த வாக்குமூலம் தரப்பட்டது. இது வாக்குமூலமளித்தவருக்கும் படித்துக் காட்டப்பட்டது. இது முழுமையாகவும் உண்மையாகவும் உள்ளது. என்று குறிப்பெழுதி மாஜிஸ்ட்ரேட் கையெழுத்திட வேண்டும்.
இந்தச் சட்டத்தின் துணைப்பிரிவு 1ன் கீழ், எந்தவொரு வாக்குமூலத்தையும் (ஒப்புதல் வாக்குமூலமில்லாத வேறு) ஒரு மாஜிஸ்ட்ரேட் சாட்சியத்துக்காகப் பதிவு செய்யும்போது, அவரது கருத்துப்படி வழக்குக்குப் பொருந்துவதாக இருந்தால் அவ்வாளு செய்யலாம். யாருடைய வாக்குமூலத்தை அவர் பதிவு செய்கிறாரோ, அவருக்குப் பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரம் மாஜிஸ்ட்ரேட்டுக்கு உண்டு. இந்தப் பிரிவின்கீழ் ஒப்புதல் வாக்குமூலம் அல்லது பிற வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் மாஜிஸ்ட்ரேட், அதை விசாரிக்கும் அல்லது விசாரணை நடத்தும் மாஜிஸ்ட்ரேட்டுக்கு அனுப்ப வேண்டும். (இந்த இடத்தில் அழுத்தம் தரப்படுகிறது)சட்டத்தின் 164 பிரிவு புலன் விசாரணையின் போது, ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய அனுமதிக்கிறது. இப்பிரிவின் துணைப்பிரிவு (2) மாஜிஸ்ட்ரேட்டுக்கு இன்னொரு கடமையும் கட்டாயப்படுத்துகிறது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு, முன் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது பற்றி எச்சரிக்கவேண்டும். ஒரு நீதித்துறை அதிகாரி என்ற முறையில், இப்பதிவைச் செய்வது சரி என்ற திருப்தி அவருக்கு இருக்கவேண்டும். சம்பந்தப்பட்டவர், தானே இஷ்டப்பட்டு ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் என்று அவர் பூரணமாக நம்பவேண்டும்.
இந்த 2வது துணைப் பிரிவு 3வது துணைப் பிரிவுடன் இணைத்துப் பார்க்கவேண்டிய ஒன்றாகும். குற்றம் சாட்டப்பட்டவர் தனது வாக்குமூலப் பதிவிற்கு முன்பாக, அவ்வாறு வாக்குமூலம் அளிக்க விரும்பவில்லையென்று தெரிவித்தால், மாஜிஸ்ட்ரேட் அவரது காவலுக்கு உத்தரவிடக்கூடாது. வாக்குமூலம் அளித்த பின்னரும், அவரது பாதுகாப்புக் கருதி சட்டப்பிரிவு 4 துணைப் பிரிவின் கீழ், தனது பதிவில், பின்குறிப்பைக் கீழ்கண்டவாறு எழுதவேண்டும்.
அதாவது குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தேவையான எச்சரிக்கை தரப்பட்டுள்ளது, என்றும் வாக்குமூலப் பதிவு முழுமையானது மற்றும் உண்மையானது என்றும் சான்றளிக்க வேண்டும்.குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைத்தானே குற்றவாளியென்று வாக்குமூலம் தரவேண்டிய கட்டாயத்திலிருந்து பாதுகாப்பு, ஒரு மேஜிஸ்ட்ரேட், நீதித்துறை அதிகாரியின் கடமைகள் கிரிமினல் சட்டத்தின் செக்ஷன் 164 மற்றும் துணை பிரிவுகள் 2, 3 மற்றும் 4ல் விளக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய சட்டப் பிரிவுகளை விஸ்தாரமாக விவரித்து, குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்டம் அளித்துள்ள பாதுகாப்பு, வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் மாஜிஸ்ட்ரேட் அல்லது நீதித் துறை அதிகாரிக்குள்ள சட்டரீதியான கடமைகள், குற்றம் சாட்டப்பட்டவர் தனது ஒப்புதல் வக்குமூலத்தைத் தனது சொந்த விருப்பத்தின் பேரில், தூண்டுதல், அச்சுறுத்தல் ஏதும் இன்றியே வழங்குகிறார் என்பதை உறுதி செய்து கொள்ளுதல், வாக்குமூலப் பதிவின் அடிக்குறிப்பில் அவர் குறிப்பிட வேண்டிய விவரங்கள், சான்றிதழ் முறைகளையும் திரு சுப்ரமணியம் எடுத்துரைத்தார்.
மேலும் குற்றவியல் பிரிவு 164ன் கீழ்தரப்பட்ட குற்றவாளியின் வாக்குமூலத்தின் தன்மைகள் சட்டப்பிரிவு 164(2), 164(4) துணைப் பிரிவுகளின் கீழ் எவ்வாறு மாறுபடுகிறது என்றும் விளக்கினார்.குற்றப் புலனாய்வுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களால் தரப்படும் தன்னிச்சையான வாக்குமூலம், அச்சுறுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலங்களில் உள்ள வேறுபாடுகள் பற்றியும் அவர் விளக்கினார். எனவே தன்னிச்சையாக அளிக்கப்பட்ட வாக்குமூலத்தை (கசாப்) புறக்கணிக்க முடியாதென்றும் அவர் அழுத்தமாக வாதித்தார்.
இந்தக் கட்டத்தில், இந்த நீதிமன்றத்தில் (உச்சநீதி மன்றத்தில்) 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு பாம்பே அரசு (பம்பாய்) வெசஸ் கதிகாலு ஒகாட் வழக்கில் அரசியல் சட்டம் 20(3) ஐ விளக்கி, குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் காவலில் இருக்கும்போது கொடுத்தது மூலம் கட்டாயப்படுத்தி வாங்கப்பட்டது என்றும் தனக்குத்தானே எதிர் சாட்சியாக அவர் ஆக்கப்பட்டுள்ளார் என்று கூறுவதும் சரியாகாது என்று முடிவு கூறியதையும் சுப்பிரமணியம் எடுத்துக் காட்டினார். ஒரு போலீஸ் அதிகாரி விசாரணை நடத்தி, ஒரு விருப்ப வாக்குமூலம் பெறப்பட்டு, அந்த வாக்குமூலம், தன்னைத்தானே குற்றவாளியாகக் காட்டுவதாக அமைந்து விடுமானால், "அது கட்டாயப்படுத்தியதாக ஆகாது'.கத்திகாலு ஒகாட் வழக்கில் எடுக்கப்பட்ட முடிவின் படி, தன்னிச்சையான வாக்குமூலங்கள், அரசியல் சட்டம் 20(3)ன் கீழ் தடை செய்யப்பட்டதல்ல, குற்றம் சாட்டப்பட்டவருக்குள்ள உரிமைகள் மீறப்படவில்லை என்பது இதனால் பெறப்படுவதாக சுப்பிரமணியம் விளக்கினார்.
கிரிமினல் செயல்விதிமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல் சட்டப்பிரிவுகள் ஆகிய இரண்டுக்கும் உள்ள உறவுகளை உறுதிப்படுத்திக் காட்டிய திரு சுப்பிரமணியம், கிரிமினல் விதிமுறைகளுக்கான 161, 162, 163 மற்றும் 164 பிரிவுகள் அரசியல் சட்டம் 20(3) மற்றும் 21 பிரிவுகளின் பிரதிபிம்பங்களாகவே பாதுகாப்பு அம்சங்களைக் காட்டுகின்றன, சட்டப்படியான இந்த விதிகளைப் பின் பற்றுதல் அரசியல் சட்டத்தையும் பின்பற்றுவதே ஆகுமென்று விளக்கினார். எனவே கிரிமினல் சட்ட விதிகள் பின்பற்றப்படுகையில் மீண்டும் அரசியல் சட்ட விதிகளை இழுக்கத் தேவையேதும் இல்லை என்றும் அவர் வாதிட்டார். கிரிமினல் செயல்விதி முறைகள் இவ்வாறு சோதித்தறியப்பட்ட பின்னர் அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பு அம்சங்களும் பின்றபற்றப்பட்டுள்ள என்பதும் தெளிவாகும், பாகாப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதும் தெளிவாகும், கிரிமினல் சட்ட விதிகளுக்கும் அரசியல் சட்ட அங்கீகாரம் உள்ளதென்பதும் தெளிவாகுமென்றும் சுப்பிரமணியம் மீண்டும் விரிவாக வலியுறுத்தினார்.குற்றவாளிக்குச் சட்ட உதவி வழங்குதல் பற்றிய பிரச்சினை பற்றிய விஷயத்தில், சட்ட உதவி பெறும் உரிமை, அது எப்போது வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டத்தில் 22(1) பிரிவில் காணப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசித்துத் தனக்குப் பாதுகாப்புக்கோரும் உரிமையை மறுக்க முடியாது. அந்த வழக்கறிஞரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவருக்கே உண்டு. திரு. சுப்ரமணியம் பார்வையில் அரசியல் சட்டத்தின் 22(1) பிரிவு இரண்டு முக்கியமான அம்சங்களைக் கொண்டுள்ளது. 1) கைது செய்யப்பட்டவர் அவர் விரும்பும் சட்ட உதவியாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள உதவப்பட வேண்டும், 2) அவர் தேர்ந்தெடுக்கும் வழக்கறிஞரையே அவரது சார்பில் அவருக்காக வாதாட அனுமதிக்கப்பட வேண்டும்.
"அவரால் பாதுகாக்கப்படவேண்டும்' என்ற சொற்றொடர் தெளிவாகவே உள்ளதென்று சுப்ரமணியம் கூறினார். அதாவது அரசியல் சட்டத்தின் 22(1)வது பிரிவு மூலம் தரப்பட்டுள்ள உரிமை உத்தரவாதம், அவருக்கு - கைது செய்யப்பட்டவருக்கு - அவர் விசாரணை முன் நிறுத்தப்படும்போது மட்டு÷ம் இந்த அனுமதி வழங்கப்படவேண்டும் என்று தெளிவாகக் கூறுவதாக சுப்பிரமணியம் வாதிட்டார்.சட்ட உதவி என்ற விஷயத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் திரு. சுப்பிரமணியம் குற்றவியல் சட்டம் செக்ஷன் 304ஐ மேற்கோள்காட்டினார். சட்டப்பிடியான உதவி எப்போது வருகிறது. ஒரு நீதிமன்றத்தின் முன்பு அவர் வழக்குவரும்போது, அவருக்காக வாதாட ஒரு வக்கீல் தரப்படவேண்டும், அதுவும் அவரது சார்பில் வாதாட ஒருவர் இல்லையென்றாலோ, அல்லது ஒரு வக்கீலை வைத்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவருக்குப் பொருளாதார வசதி இல்லையென்றாலோ, இந்தச் சலுகைக்கு அவர் உரியவர். அதே சமயம் விசாரணைகள் எல்லாம் முடிந்து, குற்றம் சாட்டப்பட்டவர் மீது தேவையான சாட்சியங்கள் அல்லது ஒரு மாஜிஸ்ட்ரேட்டிடம் அவரை அனுப்புவதற்கான நியாயமான சந்தேகங்கள் இல்லையென்று தெரிய வந்தால் அவரை விடுவித்து விடலாமென்று குற்றவியல் சட்டம் செக்ஷன் 169 கூறுகிறது.
மேலும் கூறுகையில், இந்தியப் புலனாய்வு முறைகளைக் கொண்டே "சட்ட உதவி உரிமை' என்ற விஷயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். பிற நாடுகளில் காணப்படுவதுபோல, போலீஸிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களை இந்தியச் செயல்முறைகள் சாட்சியங்களாக ஏற்றுக் கொள்வதில்லை. மாஜிஸ்ட்ரேட்டிடம் தரப்படும் வாக்குமூலங்களையே (செக்ஷன் 164 மூலம் தரப்படுவதையே) ஏற்றுக் கொள்கிறது. இது ஜுடீஷியல் வாக்குமூலம். இந்த முறையை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடு ஏற்பதில்லை. போலீசிடம் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்கள் குற்றவாளிக்கு எதிராக அந்நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாகப் போலீஸ் காவலில் இருக்கும்போது தரப்படும் வாக்குமூலங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் வேறு. ஆனால் இந்தியப் புலன் விசாரணை முறைகளில் இந்த விளைவுகள் ஏற்படுவதில்லையென்று சுப்பிரமணியம் கூறினார்.மிராண்டா (அமெரிக்கா) தீர்ப்பு பற்றிய பிரச்சினை பற்றி திரு. சுப்பிரமணியம் பின்வருமாறு விவாதித்தார். அங்கு போலீஸ் அதிகாரிகளிடம் தரப்படும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்கப்படுகிறது. எனவே இந்தியாவின் குற்றவியல் சட்டம் 12ம் சேப்டர் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் 1872 - செக்ஷன் 24, 25 விதிகளுடன் சேர்த்துப் பார்க்கப்படவேண்டும். இம்முறையில் போலீஸிடம் தரப்படும் வாக்குமூலங்களுக்கு இங்கே அனுமதி இல்லை. செக்ஷன் 164 குற்றவியல் சட்டம் வழியாக மாஜிஸ்ட்ரேட்டிடம் தரப்படும் வாக்குமூலமே ஏற்கப்படும். நீதிக்கு முரணாகப் போலீஸ் கட்டாயப்படுத்தி வாங்கும், தூண்டுதல், அச்சுறுத்தல் மற்றும் சித்திரவதை செய்து வாங்கும் வாக்குமூலங்கள் முழுமையாக இந்தச் சட்டப்பிரிவின் கீழ் சாட்சியங்களாக ஏற்கப்படுவதை இந்தியச் சட்டம் நிராகரிக்கிறது.
தனது வாதத்தை மேலும் தொடர்ந்த திரு. சுப்பிரமணியம் இந்த மிராண்டா விதி, அமெரிக்காவிலேயே நீர்த்துப்போய் விட்டது, அங்கேயே உறுதியுடன் தற்போது பின்பற்றப்படுவதில்லை என்று கூறினார். இதற்கு ஆதாரமாக டேவிஸ் வெசஸ் அமெரிக்க அரசு வழக்கை அவர் எடுத்துக் காட்டினார். குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்ட உதவி எவ்வாறு தரப்பட வேண்டும் என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.தன்னைத்தானே குற்றவாளியாகக் காட்டிக் கொள்ளும் வாக்குமூலத்துக்கு எதிராகவும், சட்ட உதவி விஷயத்தையும் பெர்குயிஸ், வார்டன் மற்றும் தாம்ப்கின்ஸ் வழக்கில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அண்மையில் வழங்கிய தீர்ப்பையும் சுப்பிரமணியம் எடுத்துக் காட்டினார். இந்த வழக்கில் மிராண்டா வழக்கையும் அமெரிக்க நீதிமன்றம் மேற்கோள் காட்டியுள்ளது. சட்ட உதவியை, உரிமையை மறுப்பது, அதை மறுப்பதால் ஏற்படும் விளைவுகள், அச்சுறுத்தல், சித்திரவதை மூலம் வாக்குமூலம் பெறுவதால் ஏற்படும் விளைவுகளை அமெரிக்க நீதிமன்றம் எவ்வாறு சுட்டிக் காட்டியுள்ளதென்பதைத் திரு. சுப்பிரமணியம் விரிவாக விளக்கினார்.
மிராண்டா கொள்கைகளின் படி போலீஸ் விசாரணைக் காலத்தில் வழங்கப்படும் மெனை உரிமை மற்றும் வழக்கறிஞர் உதவியை நாடும் முழுமையான உரிமை ஒரே மாதிரியாகப் பல சந்தர்ப்பங்களில் பின் பற்றப்படுவதில்லை என்று திரு. சுப்பிரமணியம் வாதாடினார். ஆஸ்திரேலிய உயர்நீதி மன்றம் ஒரு வழக்கில் (டீட்ரிச் விஆர்) மிராண்டா தத்துவம் ஏற்க தக்கதல்ல என்று கூறிய தீர்ப்பையும் அவர் சுட்டிக் காட்டினார். கனடா நாட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றையும் அவர் சுட்டிக் காட்டினார். மேலும் ஒரு ஐரோப்பிய நீதிமன்ற முடிவு, இங்கிலாந்தில் உச்ச நீதிமன்றம் அம்ப்ரோஸ் வி ஹாரிஸ், மேகோவான் வி ஸ்காட் லாண்ட் வழக்குகளில் மேற்கொண்ட இரண்டு தீர்ப்புகளையும் சுப்பிரமணியம் எடுத்துக் காட்டினார்.
மேலும் பல்வேறு கட்டுரைகள், ஆராய்ச்சி அறிக்கைகள் பலவற்றையும் எடுத்துக் காட்டி, பிற்கால வழக்குகளில் மிராண்டா கொள்கைகள் அமெரிக்காவில் செல்லரித்துப் போய் விட்டதென்று வாதாடினார்.
அடுத்து, மனுதாரரின் (கசாப்) சார்பில் (நந்தினி சத்பதி விஷயத்தில்) வழக்கறிஞர் துணை பற்றிய கேள்விக்குப் பதிலளித்த திரு. சுப்பிரமணியம், 1) பூல் பாண்டி வெசஸ் சூபரின்டென்ட் ஆப் சென்ட்ரல் எக்ஸைஸ், 2) ரெவின்யூ இன்டலிஜென்ஸ் வெசஸ் ஜாகல் கிஷோர் சமாரா விஷயத்தில் இதே நீதி மன்றம் நந்தினி சத்பதி உதாரணத்தை ஏற்க மறுத்துள்ளதையும் அவர் எடுத்துக் காட்டினார்.
மிராண்டா மற்றும் நந்தினி சத்பதி விஷயங்கள் முன்னர் அனுமதிக்கப்பட்டதே என்ற கேள்வி எழுமானால், அதற்குரிய சந்தர்ப்பங்கள் வித்தியாசமானவை என்று சுப்பிரமணியம் கூறினார். இவை டி.கே. பாசு மற்றும் நவ்ஜோத் சிந்து வழக்கில், விசாரணைக்காலத்தில் பின்பற்றப்பட்ட நிர்பந்தங்களில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பாதுகாப்பளிக்க வேண்டிய தேவைகளை ஒட்டி அனுமதிக்கப்பட்டது. இது போன்ற சந்தர்ப்பத்தில்தான் சட்ட விதிகளை ஒட்டிக் கைது செய்யப்பட்டவர் விசாரணைக் காலத்தில் - முழு விசாரணைக் காலம் முழுவதுமே இல்லாவிட்டாலும் கூட - தனது வழக்கறிஞருடன் பேசி ஆலோசனை பெற இந்த நீதிமன்றம் சில வழிமுறைகளை வகுத்தது. டி.கே. பாசு வழக்கில் அரசியல் சட்டம் 22(1) ஐ குற்றவாளிக்கு ஒரு உதவியாக மட்டுமே கருதி அனுமதித்ததே தவிர, சட்ட பூர்வமான உரிமையாக அதை வழங்கவில்லை. நவ்ஜோத் சிந்து வழக்கு பாராளுமன்றத் தாக்குதல் சம்பந்தப்பட்டது. இந்த வழக்கில் 2002 பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் வழிமுறைகளை ஒட்டி வழக்கறிஞர் உதவி அனுமதிக்கப்பட்டது.
எனவே, மிராண்டா வழக்குடன், போடா சட்ட விதிகளை ஒப்பிட்டுப் பார்ப்பது சரி, அமெரிக்கச் சட்டத்தின்படி, போலீஸிடம் தரும் ஒப்புதல் வாக்குமூலம் ஏற்கத்தக்கது. அதேசமயம் வழக்கறிஞர் உதவி பற்றி மிராண்டா, நந்தினி சத்பதி வழக்குத் தீர்ப்புகளையும் ஆராய்ந்த பின்னர், இந்த நீதி மன்றம் கீழ்கண்டவாறு முடிவெடுத்துள்ளதை திரு சுப்பிரமணியம் எடுத்துக் காட்டினார். அவர் சுட்டிக் காட்டியது தீர்ப்பின் 160வது பத்தி.
நந்தினி சத்பதி வழக்கில் அரசியல் சட்டத்தின் 22(1) பிரிவு, சந்தேகத்துக்குரியவர் போலீஸ் காவலில் இருக்கும்போது ஒரு வழக்கறிஞரைச் சந்திக்க, ஆலோசனை பெற விரும்பினால் மறுக்கப்படலாகாது என்ற அர்த்தமும் இந்தப் பிரிவிற்கு உண்டு என்றும் விசாரணைக் காலத்திலும் இந்த உரிமை உண்டு என்றும் நந்தினி சத்பதி வழக்கில் கூறப்பட்டது. ஆனால் மிராண்டா வழக்கில் வழக்கறிஞர் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது போல, நந்தினி சத்பதி அந்த அளவுக்க வலியுறுத்தவில்லை.
சாதாரணமாக இந்திய குற்றவியல் முறைகளில் மிராண்டா தத்துவத்துக்கு இடமில்லை என்று சுப்பிரமணியம் வாதிட்டார். ஏனென்றால், இது போன்ற பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இந்தியச் சட்டங்களில் தெளிவாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தன்னைத்தானே குற்றவாளியாக ஒப்புக் கொள்ள மறுப்பது மற்றும் சட்ட உதவி ஆகிய குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமைகள் இந்தியச் சட்டங்களில் உயர்வாகவே அமைந்துள்ளது. அமெரிக்காவில் இது போன்ற அங்கீகாரங்கள் வருமுன்பே இந்தியாவில் இவை பிறந்து விட்டன. அரசியல் சட்டம் 20(3), 22(1) தெரிவிக்கும் கருத்துக்களும், இந்தியக் குற்றவியல் முறைப் பிரிவுகள் 161, 162, 163 மற்றும் 164ம், 1872 இந்தியச் சாட்சியங்கள் சட்டத்தின் 24 மற்றும் 25வது பிரிவுகள் குற்றம் சாட்டப்பட்டவருக்குள்ள உரிமைகளுக்குப் புனிதமான அங்கீகாரம் அளித்துள்ளது என்று திரு. சுப்பிரமணியம் விளக்கினார்.
மனுதாரரின் சார்பில் வாதிக்கப்பட்ட செல்வி வழக்கு பற்றிக் குறிப்பிடுகையில், இந்த நீதிமன்றம் தெரிவித்த கருத்தை திரு. சுப்பிரமணியம் நினைவூட்டினார். அதாவது காவலில் இருக்கும்போது தரப்பட்ட வாக்குமூலங்கள் நிர்பந்தப்படுத்தி வாங்கப்பட்டதே என்றும் தன்னிச்சையாகவே வாங்கப்பட்டது என்று கருதுவது இந்தியச் சட்டத்தில் இல்லை. எனவே மிராண்டா வழக்கு எச்சரிக்கைகள் போலக் கூடுதலான எச்சரிக்கைகள் தேவையில்லை என்று இந்த நீதிமன்றம் செய்த முடிவை திரு. சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.
தனது வாதத்தின் முடிவில் திரு. சுப்பிரமணியம் தொகுத்துக் கூறிய குறிப்புகள்:
1) கைது செய்யப்படும் போதே சட்ட உதவி தரப்பட்டு விட வேண்டுமென்று அரசியல் சட்ட 22(1) பிரிவின் கீழ்க் கட்டாயமானதல்ல, ஆனால் கைது செய்யப்பட்டவருக்கு உதவியாக, அவர் விரும்பினால் தரப்பட வேண்டியது.
2) தன்னைத் தானே குற்றவாளி என்று தெரிவித்துக் கொள்ள மறுக்கும் அரசியல் சட்டம் 20(3) தரும் உரிமை, குற்றம் சாட்டப்பட்டவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் தானாகவே அளிக்கு வாக்குமூலங்களுக்கு முரணானதல்ல, அதாவது அவ்வாறு வாக்குமூலம் தருவதை இந்தச் சட்டப் பிரிவு தடுக்கவில்லை.
3) அரசியல் சட்டம் தரும் தன்னைத்தானே குற்றவாளியாகக் காட்டும் நிலைமைக்கு எதிரான அரசியல் சட்ட 20(3) பிரிவு, உரிமை, இந்தியக் குற்றவியல் முறை 161, 162, 163 மற்றும் 164 பிரிவுகளிலும் அடங்கியுள்ளது. மற்றும் 1872 சாட்சியங்கள் சட்டப் பிரிவுகளிலும் உள்ளது. எனவே இந்தப் பிரிவுகளின் கீழ் செயல்படுவது என்பது அரசியல் சட்டத்தையும் மதித்துச் செயல்படுவதேயாகும்.
4) மிராண்டா வழக்கில் கூறப்படும் சட்ட உதவி முறைகள் பற்றிய தீர்ப்பு அமெரிக்காவிலோ அல்லது பிற நாடுகளிலோ பின்பற்றப்படுவதில்லை.
நீதிமன்றம்: மிராண்டா பற்றிய விவாதங்கள் விரிந்து செல்வதால், முதலில் அதை ஒதுக்கி வைத்து விடுவோம். சந்தேகத்துக்குரியவர் போலீசிடம் தரும் செய்திகள், அவருடைய தண்டனையை, மரண தண்டனை உட்பட உறுதி செய்து விடக் கூடுமென்ற கருத்துக்களை ஒட்டி மிராண்டா முடிவுகள் வந்தன. மிராண்டா வழக்கிலிருந்து மேலும் தெரிவது என்னவென்றால், மந்தேகத்துக்குரியவரை மிகவும்கொடுமையான நிலைமைக்கு உள்ளாக்கி, விசாரணையில் போலீஸ் அவரைப் பேச வைக்கக்கூடும் என்பதே. தன்னிடமுள்ள சகல அதிகாரத்தையும் பயன்படுத்தி, குற்றம் சாட்டப் பட்டவரை அச்சுறுத்தி விசாரணை அதிகாரி மிகத் திறமையாக வாங்குமூலங்கள் வாங்குவார். ஆனால் உண்மையைத் தேட மாட்டார். சந்தேகத்துக்குரியவரை மிரட்டி ஒப்புக் கொள்ள வைப்பார். இது போன்ற சந்தர்ப்பங்களில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு, தன்னைக் குற்றவாளியாகவே ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயச் சூழ்நிலையில், அவருக்குரிய பாதுகாப்பு உறுதிப்படுத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் மிராண்டா விதிகளை உருவாக்கியது. போலீசிடம் தரப்பட்ட வாக்குமூலம் தன்னிச்சையானதே என்பதை உறுதிப்படுத்தவே இந்த விதிகள் வந்தன. இதற்கான வழிமுறைகள் விதிக்கப்பட்டன.
ஒருவர் காவலில் எடுக்கப்படும்போது, அதிகாரிகள் அதற்குரிய சுதந்திரத்தை மறுத்து, விசாரணைக்கு உட்படுத்தி, அவரை அவர் வாய் வழியாகவே குற்றவாளி என்று ஒப்புக் கொள்ளச் செய்வது, அவரது உரிமைகளை அபாயப்படுத்துவதாகும். செயல்முறைகள் எல்லாம் அவரது உரிமைகளுக்குப் பாதுகாப்பளிப்பதாக இருக்கு வேண்டும். அவருக்கு மௌனமாகவே இருக்கும் உரிமையுண்டு என்பதையும் தெரியப்படுத்தி இந்த விதிகள் யாவும் கௌரவிக்கப்படவேண்டும். இந்த முறைப்படி,
1) விசாரணைக்கு முன்பாகவே, தங்களது கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட வேண்டும்.
2) நீதிமன்றத்தில் அவரது கூற்றுகளை அவருக்கு எதிராக மாறிவிடக்கூடும் என்று சொல்லப்பட வேண்டும்.
3) ஒரு வழக்கறிஞரை வைத்துக் கொள்ளும் உரிமை அவருக்கு உண்டு என்பதையும் தெரியப்படுத்த வேண்டும்.
4) ஒரு வழக்கறிஞரைக் கொண்டு வாதாடும் வசதி இல்லையென்றால், விசாரணைக்கு முன்பாகவே, ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கொடுக்க வேண்டும். அப்படி அவர் விரும்பினால்.
5) விசாரணையின் கால முழுவதிலும் இந்த உரிமைகளைக் கொண்டாட அவருக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.
6) இந்த உரிமைகள், சந்தர்ப்பங்கள் எல்லாம் வழங்கப்பட்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் அறிந்தோ அல்லது புத்திசாலித் தனமாகவோ, இவையெல்லாம் வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு விசாரணைக்குப் பதிலளித்து, வாக்குமூலங்களும்தரலாம்.
ஆனால் வழக்கு விசாரணைக் காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இந்த உரிமைகள், சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன என்று பராசிக்யூஷன் உறுதிப்படுத்திக் காட்ட வேண்டும்.விசாரணையின் போது பெறப்பட்ட வார்த்தைகளைச் சாட்சியமாக உபயோகப்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் அழுத்தமாகத் தெரிவித்தது.
மிராண்டா தீர்ப்பில் கூறியது போல, ஒரு குற்றவாளி பதில் கூறாமல், மௌனமாக இருக்கலாம், அவருக்கு வழக்கறிஞரை வைத்துக் கொள்ள உரிமையுண்டு, தன்னைத் தானே குற்றவாளி என்று ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திலிருந்து அவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற விதிகள் இந்தியச் சட்டங்களில் இல்லை என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. மிராண்டா வழக்குத் தீர்ப்பிலேயே இவ்வாறு குறிப்பாகச் சொல்லப்பட்டுள்ளது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறான கொள்கைகளை எடுத்துப் பார்த்த பின்னர், இந்த நீதிமன்றம் இதையொட்டிய பிற தீர்ப்புகளையும் குறிப்பிட விரும்புகிறது. உரிமைகளை மீறியே விசாரணைகள் நடத்தப்படுகின்றது என்ற வாதம் நீதிமன்றங்களின் முன்பு திரும்பத் திரும்ப வைக்கப்படுகிறது. இது இந்த நீதிமன்றத்துக்குப் புதிதல்ல.
எனவே இந்த வாதங்கள் ஏற்கத்தக்கதல்ல. தன்னைத்தானே குற்றவாளியாக ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருந்து உறுதியான பாதுகாப்புகள் பல நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது. அவைகளோடு இந்தியச் சட்டங்களும் ஒப்பிடப்பட்டுள்ளது. பிற நாடுகளின் அனுபவங்களும், விசாரணைக் காலத்தில் அத்து மீறல்கள் உண்டு என்றே தெரிவிக்கிறது. ஒரு மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் அல்லாது தரப்படும் வாக்குமூலங்கள், 1872-ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஏற்கப்படுவதில்லை. அப்போது பிரிட்டிஷ் சட்டங்கள் அமுலில் இருந்தன.
இந்த நீதிமன்ற இந்திய சாட்சியங்கள் சட்டம் பிரிவுகள் 25, 26 விதிகளையும் பரிசீலித்தது. மேலும் ஸ்வாண்சிங் வெசஸ் பஞ்சாப் மாநில வழக்கு ஒன்றையும் மேற்கோளாகக் கொண்டது. ஒரு முடிவை எடுத்தது. "போலீஸ் நிர்பந்ததின் தாக்கம் தொடர்வதைத் தவிர்க்க, ஒருவரைக் கைது செய்து, போலீஸ் உடனே அவரை ஒரு மாஜிஸ்ட்ரேட் முன்பு ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கக் கொண்டு வந்தால் அது செல்லத்தக்கதல்ல வென்று கோர்ட் முடிவு செய்தது. ஏனென்றால், ஒரு வாக்குமூலம் தரலாமா வேண்டாமா வென்று முடிவு செய்யக் குற்றம் சாட்டப்பட்டவருக்குக் குறைந்த பட்சம் 24 மணி நேர அவகாசமாவது தரப்படவேண்டும்' என்று இந்திய உச்ச நீதிமன்றம் முடிவு செய்ள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைத் தானே குற்றவாளி என ஒப்புக் கொள்ளும் நிர்பந்தத்தில் இருந்து பாதுகாப்பு பெற உருவாக்கப்பட்ட விதிமுறைகள், மிராண்டா விதிகளின்படி, இந்தியச் சட்டங்களில் ஏற்கெனவே உள்ளதென்பதை அமெரிக்க உச்சநீதி மன்றம் சுட்டிக் காட்டியுள்ளது, ஒப்புக் கொண்டுள்ளது.
இந்தியக் குற்றவியல் நடைமுறை விதிகளை மேயெழுந்தவாரியாகப் பார்த்தாலும், இந்த விதிகள் குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைத் தானே குற்றவாளியென்று ஒப்புக் கொள்ள வேண்டிய அவசியமில்லாது பாதுகாப்புப் பெறும் முறையிலேயே அமைந்துள்ளது தெரியவரும். பிரிவு 161(2) போலீஸ் கேள்விக்கு "ஆமாம்' விடைகளை அனுமதிப்பதில்லை. அதே போல சாட்சியங்கள் சட்டத்தின் 27வது விதியின் படி நிரூபணங்கள் இருந்தாலன்றி, போலீஸ் அதிகாரிகளுக்குத் தரப்படும் வாக்குமூலங்களை ஒரு சாட்சியமாக செக்ஷன் 162(1) அனுமதிப்பதில்லை. சாட்சியச் சட்டம் 32வது பிரிவின் கீழ் மரண வாக்குமூலம் ஏற்கப்படும். குற்றவியல் சட்டங்கள் மற்றும் சாட்சியச் சட்டம் 25வது பிரிவும் போலீஸ் அதிகாரிகளுக்குத் தரப்படும். வாக்குமூலங்கள் ஏற்கத் தக்கதல்லவென்றே கூறுகிறது. கிரிமினல் நடைமுறைகள் சட்டம் செக்ஷன் 163 நிர்பந்தங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் ஆசை வார்த்தை மூலம் வாக்குமூலங்கள் பெறத் தடை செய்கிறது.
இதை அடுத்து வருவது சிஎன் பிசி பிரிவு 164 - மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது. இதில் துணைப்பிரிவு 1ன் கீழ் புலன் விசாரணைக் காலத்தில் அல்லது நீதி மன்ற விசாரணைக்கு முன்பு மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதிக்கிறது. துணைப் பிரிவு 2 விதிகளின் படி, வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் மாஜிஸ்ட்ரேட், குற்றவாளிக்கு எச்சரிக்கை அறிவுரை கூற வேண்டிய சட்டரீதியான அவரது கடமையை அறிவுத்துகிறது. ஒரு நிதித்துறை அதிகாரி என்ற முறையில் குற்றவாளி தன்னிச்சையாக (எந்த போலீஸ் நிர்பந்தம், அச்சுறுத்தல்கள் இல்லாது) வாக்குமூலம் தருகிறார் என்று அவருக்குத் திருப்தி இருக்க வேண்டும். இந்தப் பாதுகாப்பு ம்சங்களில் மிக முக்கியமான ஒன்றைத் துணைப் பிரிவு 3 வலியுறுத்துகிறது. மாஜிஸ்ட்ரேட் முன்பு வாக்குமூலத்துக்காகக் கொண்டு வரப்படும் குற்றவாளி ஒருவேளை வாக்குமூலம் தர மறுத்தால், அவரைப் போலீஸ் காவலில் வைத்துக் கொள்ள மாஜிஸ்ட்ரேட் அனுமதிக்கக்கூடாது. மேலும் துணைப் பிரிவு 4 விதியின்படி, வாக்குமூலம் பெற்ற பிறகு, "அவருக்கு வாக்குமூலம் தருவது பற்றிய எச்சரிக்கை செய்யப்பட்ட தென்றும், பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குமூலம் முழுமையானது, உண்மையானதென்றும்' மாஜிஸ்ட்ரேட் அடிக்குறிப்பு எழுதிச் சான்றிதழ் அளிக்க வேண்டும். யாரொருவரும் போலீஸ் காவலில் இருக்கும்போது அங்கு உடனே ஒரு மாஜிஸ்ட்ரேட் இல்லாமலிருந்தால், அவர் தரும் வாக்குமூலம் அவருக்கு எதிரானதாகவே பெறப்பட்டதாகக் கருதப்படும் என்று கிரிமினல் விதிமுறைச் சட்டம் 164வது பிரிவு சாட்சியச் சட்டத்தின் 26வது பிரிவும் தெளிவாகக் கூறுகிறது.
தன்னைத்தானே குற்றவாளியென்று குற்றம் சாட்டப்பட்டவர் வாக்குமூலம் அளிக்கும் நிர்ப்பந்தத்திலிருந்து அவரைப் பாதுகாக்க அரசியல் சட்டம் பலமாகவே வகுக்கப்பட்டு, அதற்கேற்ப இந்தியச் சட்டமுறைகளும் உள்ளதால், மிராண்டா தத்துவங்களைத் துணைக்கு அழைக்க வேண்டிய காரணம் ஏதும் இல்லையென்று தெளிவாகவே அறிந்து கொள்ளலாம்.
மிராண்டா முடிவுகளை இந்த நீதிமன்றம் எவ்வாறு பார்த்தது. இந்த நீதிமன்ற முடிவுகளில் இது மேற்கோளாகக் கொள்ளப்பட்டது, எந்த விஷயங்களில் மிராண்டா விதிகளை மறுத்தது என்பதை நாம் பார்த்தால், அது நமக்கு ஒரு உதவியாக இருக்கும்.
இந்த மிராண்டா விதிகளை முதன் முறையாக இந்த நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்டு அமர்வு நந்தினி சத்பதி வழக்கில் மிகவும் குறிப்பாக எடுத்துக் கொண்டது. இந்த வழக்கின் மனுதாரர் ஒரிசா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். 1947 ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 5(1) மற்றும் (2) கீழ் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காவல் நிலையத்துக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் பல கேள்விகள் அடங்கிய கேள்வித்தாள் தரப்பட்டது. அந்தக் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்ததால், இந்திய பீனல் கோர்ட் 179 பிரிவின் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டது. அவர் மீதான குற்றத்தை மாஜிஸ்ட்ரேட் ஏற்றுக் கொண்டார். இந்த வழக்கு செல்லத் தக்கதல்ல என்று அவர் உயர்நீதி மனறத்தில் வாதாடினார். உயர்நீதி மன்றம் அவரது மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது. பின்னர் அவர் நந்தினி சத்பதி - உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து இந்த நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் இந்த நீதிமன்றம் மிராண்டா முடிவுகள் பற்றி ஆழமாக பேசியது. என்றாலும், முழுமையாக மிராண்டா விதிகளை இந்தியக் குற்றவியல் முறைகளில் பதிக்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை, தவிர்த்தது. இந்திய யதார்த்த நிலைகளையொட்டி, அரசியல் சட்டம் 22(1) பிரிவின் கீழ், அவர் விரும்பும் வழக்கறிஞரிடம் ஆலோசனையெனும் உரிமை யாருக்குமே மறுக்கப்படலாகாது, கைது செய்யப்பட்ட யாருக்கும் மறுக்கப்படலாகாது என்பதற்காக சில வழிமுறைகளை அறிவுறுத்தியது. விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீலும் உடனிருப்பதை அனுமதிக்க, அப்போது அந்த விசாரணை நிகழ்ச்சியைப் படம் பிடிக்க, அரசியல் சட்டத்தின் 22(1) பிரிவின் கீழ் இந்த ஆலோசனை தரப்பட்டது. இவ்வாறு செய்வதால் சிலதடைகள் தவிர்க்கப் படலாம். என்றாலும், போலீஸ் ஸ்டேஷன் - வழக்கறிஞர் உடனிருத்தல் ஆகியவகைகளில் சில தீமைகளும் இருப்பதால், போலீஸ் வழக்கறிஞர் உதவியைத் தந்தே ஆக வேண்டுமென்பதுமில்லை. ஆனால் விசாரணைக் காலத்தில் கற்றம் சாட்டப்பட்டவர் தனக்குத் துணையாக வழக்கறிஞர் வேண்டுமென்று கேட்டால், இந்த வசதி மறுக்கப்படலாகாது. ஏனென்றால், போலீஸ் இதை மறுத்தால், குற்றத்தை நிரூபிக்கும் கடுமையான பொறுப்பு போலீஸ் மீது விழும், கட்டாயப்படுத்தி, ரகசியமாக, விருப்பமில்லாத நிலையில், வாக்குமூலம் பெற்றதாகவும் ஆகிவிடும், இதை இல்லையென்று நிரூபிப்பது போலீசுக்கு கஷ்டம். அதே சமயம் ஒரு வழக்கறிஞர் உடனிருப்பதாலேயே, குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பிரச்சனைக்கு அது ஒரு பரிகாரமாகவும் ஆகமுடியாது. ஏனென்றால் வழக்கிறஞர் விடைகளை சப்ளை செய்ய முடியாது, முணுமுணுக்க முடியாது, விசாரணையில் அச்சுறுத்தல் முயற்சியில் மட்டும் குறுக்கிட முடியுமே தவிர, விசாரணைப் போக்கில் குறுக்கிட முடியாது. ஆனால் நிர்பந்தம் வருகிறது, ஜாக்கிரதை என்று எச்சரிக்கலாம். அதே சமயம் கேள்வி-பதில்களைக் குறித்துக் கொள்ளலாம். வக்கீல் போலீசிடம் உரத்துப் பேசி சண்டைப்போட முடியாது. ஆனால் தனது கட்சிக்காரர் சார்பில் புகார் செய்து உதவலாம். மேலும் வழக்கறிஞர் வந்து சேரும் வரையில் போலீசும் விசாரணைக்காக ஒரு நியாயமான கால அளவுக்கு மேல் காத்திருக்க வேண்டியதில்லை. குற்றவாளி விரும்பும் வழக்கறிஞர் கிடைக்கவில்லை என்றால், குற்றம் சாட்டப்பட்டவரை விசாரித்து முடித்தபிறகு, போலீஸ் அவரை ஒரு மேஜிஸ்ட்ரேட், மருத்துவர், பாரபட்சமற்ற ஒரு அதிகாரி அல்லது அதிகாரியல்லாதவர் ஆகிய யாரிடமாவது போலீஸ் அழைத்துச் செல்ல வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரும் அவரும் தனியாகப்பேசிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் கண்களுக்கு அப்பால் இருந்து தனக்கு ஏதாவது நிர்பந்தம் இருந்ததா போன்ற விஷயங்களை அவரிடம் மனச்சுமையை இறக்கி வைக்க, போலீஸ் வசதி செய்ய வேண்டும். அவ்வாறு அவர் தெரிவித்தால் அவரை (குற்றம் சாட்டப்பட்டவரை) போலீஸ் அணுக முடியாதவாறு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவிட வேண்டும். இதை அருகிலுள்ள மாஜிஸ்ட்ரேடுக்கு அறிவிக்க வேண்டும்.
பின்னர் மேற்கொண்ட முடிவுகளிலும் கூட, சட்ட விரோதமான வழிகளில் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான விசாரணைகளில், அவரது உரிமைகளைப் பாதுகாக்கவும், விரிவாக விளக்கவும் ஒரு துணைக் கருவியாக மட்டுமே நந்தினி சத்பதி வழிகாட்டுதல்கள் மற்றும் மிராண்டா விதிகள் மேற்கோளாக, அங்கீகாரமாகப் பின்பற்றப்பட்டதே அன்றி, இந்த நீதிமன்றம் நந்தினி சத்பதி, மிராண்டா விதிகளை ஒரு முக்கியத்துவம் தந்து எந்த முடிவும் எடுத்ததாக, எங்களுக்குத் தெரிந்து ஏதும் இல்லை.
பூல் பாண்டி வழக்கு. 1963 கஸ்டம்ஸ் சட்டம் மற்றும் 1973 அன்னியச் செலாவணி ஒழுங்கு முறைச் சட்டம் ஆகிய இரு சட்டங்களின்கீழ் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். நந்தினி சத்பதி வழக்கைப் பலமான ஆதாரமாகக் கொண்டு இவர்கள் வழக்கறிஞர் ஒருவரும் உடனிருக்க வேண்டுமென்ற உரிமையை வலியுறுத்தினார்கள். அப்போது, விசாரணைக்காக அழைக்கப்பட்டு வந்தவருக்கு ஒரு வழக்கறிஞரை உடன் வைத்துக் கொள்ளும் உரிமை விசாரணையின்போது உண்டா என்ற கேள்வி நேரிடையாகவே இந்த நீதிமன்றத்தின் முன் எழுந்தது. ஆனால் இந்த நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மேல் முறையீட்டை நிராகரித்தது. வழக்கறிஞர்கள் திரு. சால்வே மற்றும் திரு. லலித் இருவரும் இந்த நீதிமன்றம் நந்தினி சத்பதி வெஸ்சஸ் பி.எல். தானி வழக்கில் கூறிய தீர்ப்பைப் பலமான ஆதாரமாகக் காட்டினார்கள். இந்த நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, ரமேஷ் சந்திர மேதா வெஸ்சஸ் மேற்கு வங்க அரசு மற்றும் இல்லியாஸ் வெஸ்சஸ் மெட்ரால் கஸ்டம்ஸ் கலெக்டர் வழக்குகளில் - இரண்டு வழக்குகளில் - வழங்கியுள்ள தீர்ப்புகளைப் பின்பற்றிப் பார்க்கும்போது, மனுதாரர்களில் வழக்கை ஒப்புக் கொள்ள முடியாது.நந்தினி சத்பதி வழக்குத் தீர்ப்பு இதற்குப் பின் வந்ததாகையில் அதே போல் தங்கள் வாதமும் ஏற்கப்படவேண்டும் என்ற வாதத்தில் வலிமை இல்லை.
இன்னொரு வழக்கு, எங்களில் ஒருவர் - நீதிபதி அஃடாப் அலாம் - இந்த அமர்விலும் இருந்தார். 1985 போதைப் பொருள் சட்டத்தின் கீழ் ரெவென்யூ இன்டலிஜன்ஸ் டைரக்டொரேட் அதிகாரி ஒருவரை விசாரணைக்கு அழைத்தால், விசாரணையின்போது அவருக்கு வழக்கறிஞர் உதவி உரிமை உண்டா என்ற கேள்வி மீண்டும் எழுந்தது. இதிலும் நந்தினி சத்பதி முடிவுகள் விவாதிக்கப்பட்டு, பூல் பாண்டி வழக்கையொட்டி, இந்த உரிமை நிராகரிக்கப்பட்டது. ஆனால் டி.கே. பாசு வழக்கையொட்டி, இந்த வழக்கின் தன்மை மற்றும் சந்தர்ப்பங்களையொட்டி, பிரதிவாதியுடனான விசாரணை ஒரு வழக்கறிஞரின் பார்வையில், அல்லது அவரால் அதிகாரம் பெற்றவர் கண் பார்வையில் நடைபெறலாம், ஆனால் இவர்கள் சற்றுத் தூரத்திலிருந்து மட்டுமே விசாரணையைப் பார்க்கலாம், கண்ணாடி பார்டிஷன் வழியாகப் பார்க்கலாம், ஆனால் பேச்சு காதில் விழும் தூரத்தில் இருக்கக்கூடாது, குற்றம் சட்டப்பட்டவர் வக்கீலுடன் ஆலேசானை கேட்கக் கூடாது என்ற நிபந்தனைகளின் பேரில், வழக்கறிஞர் உடன் இருக்க அனுமதிக்கப்பட்டது.
மேலே கூறியபடி நந்தினி சத்பதி, மிராண்டா விஷயங்கள் ஆங்காங்கே ஒரு சாதாரணக் கண்ணோட்டத்தில் மேற்கோளாக பல வழக்குகளில் குறிப்பிடப்பட்டிருக்கலாம். டி.கே. பாசு வழக்கில் கவலில் இருக்கும் போது வன்முறைச் சித்திரவதை, போலீஸ் லாக்-அப்பில் மரணம் போன்ற பிரச்சினைகளில் நீதிமன்றம், விசாரணைக் காலங்களில் காட்டப்படும் வன்முறைகளைக் கண்டித்துள்ளது. காவலில் மரணம் என்பது சமுதாயத்துக் கெதிரான பெரிய குற்றமென்று இந்த நீதிமன்றம் கண்டித்துள்ளது. குரூரமான, மனிதாபிமானமற்ற, இழிமைப்படுத்தும் முறையில் ஒருவரை நடத்துவதென்பது அரசியல் சட்டம் 21வது பிரிவின் கீழ் வருகிறது. இது விசாரணையின் போது நடந்தாலும், பின்னர் நடந்தாலும், எப்போது நடந்தாலும் காவலில் உள்ள தண்டனைக் கைதிகள், விசாரணையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், இந்தச் சட்டப் பிரிவின் கீழ் அவர்களது உரிமையை மறுக்கலாகாது. சில அசாதாரணமான விஷயங்களில், சில நியாயமான தடைகளøச் சட்டம் ஏற்றுக் கொண்டிருக்கும் விதத்தில் மட்டுமே விதிக்கலாம்.
இந்த விஷயத்தில் சர்வதேசக் கோட்பாடுகள் மற்றும் பிற நாடுகளில் பின்பற்றப்பட்ட தீர்ப்புகளையும் இந்த நீதிமன்றம் பரிசீலித்தது.ந மது முன்னைய தீர்ப்புகளையும் பரிசீலித்தது. பின்னர் கைது மற்றும் தடுப்பு நடவடிக்கைக் காவல் விஷயங்களில் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டிய வழி முறைகளை வகுத்தது. சந்தேகத்துக்குரிய மற்றும் குற்றம் சாட்டப்பட்டவருடைய அடிப்படை உரிமைகள் - மற்றும் சமுதாயத்தின் அடித்தளத்தை அசைக்கும் மோசமான பயங்கரவாத மற்றும் இனக் கலவர வழக்குகளில் தேவைப்படும் முழுமையான விசாரணை ஆகிய இரண்டையும் சமனப்படுத்தும் வகையில் இந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது மிராண்டா வழக்கில் 4வது பகுதியில் 32-வது பத்தியின் ஆரம்ப வரிகளிலேயே தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்குகளில் மீண்டும் மீண்டும் வைக்கப்படும் வாதம் உரிமைகளைவிட சமுதாயத்துக்குத் தேவை விசாரணையே என்பது தான். இது இந்த நீதிமன்றத்துக்குப் புதிதல்ல. (உதாரணம் சேம்பர்ஸ் வெஸ்சஸ் ப்ளாரிடா, யு.எஸ்) அடுத்து வரும் நமது விவாதங்கள் கூறுவது என்னவென்றால் தனி நபர் உரிமையை நமது அரசியல் சட்டம் உறுதிப்படுத்துகிறது. ஒரு தனி நபர் தனக்குத் தானே எதிரியாவதற்குக் கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்பதை 5-வது திருத்தத்தில் அளித்துள்ளது. இந்த உரிமையைச் சுருக்கிவிட முடியாது. (அழுத்தம் தரப்படுகிறது)
நவ்ஜோத் சாந்து வழக்கு 2002 பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தின் கீழ் (அதாவது போடா) வருகிறது. நமது நாட்டின் சாதாரண கிரிமினல் சட்டத்திற்கும் அப்பால் ஏற்பட்ட முக்கியமான சட்டம் இதுவாகும். கிரிமினல் நடைமுறைகள் மற்றும் சாட்சியங்கள் சட்ட விதிகளைப் போலல்லாது, 2002 போடா சட்டம் 32-வது பிரிவின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு போலீஸ் சூப்ரின்டென்டெண்ட் அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரியிடம் தரும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்கத்தக்கது. அதுவும் செக்ஷன் 32 மற்றும் 52ன் துணைப் பிரிவு (2) முதல் (5) வரையிலான விளக்கப்படி, கைது செய்யும் காலத்தில் பின்பற்றப்படவேண்டும். இந்தப் பாதுகாப்புகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படவேண்டுமென்று வலியுறுத்திய இந்த நீதிமன்றம் நவ்ஜோத் சாந்து வழக்கில் இந்தப் பாதுகாப்புகள் அரசியல் சட்டம் பிரிவு 21 மற்றும் 22(1) உடன் இணைந்துள்ளதை கர்தார்சிங் மற்றும் டி.கே பாசு வழக்கில் வழிமுறைகளாகக் காட்டியுள்ளது. இந்த விஷயத்தில் நந்தினி சத்பதி தீர்ப்பின் 55-வது பத்தியைச் சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் மிராண்டா வெஸ்சஸ் அரிஸோனா, எஸ்கோபெடோ வெஸ்சஸ் இல்லினாய்ஸ் வழக்கில் முறையான பாதுகாப்பு உரிமைகள் இல்லாவிட்டால், காவல் நிலைய விசாரணையை (கஸ்டோடியல் இன்டராகேஷன்) ப்ராசிக்யூஷன் சாட்சியமாகப் பயன்படுத்தக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது வழக்கறிஞர் கொள்ள உரிமை, அப்படிக் கொள்ளவிட்டால் ஏற்படும் விளைவு பற்றி எச்சரிக்கை, மௌனமாக இருப்பது ஆகியவை இந்த உரிமைகளில் அடங்கும். விசாரணைக் காலத்தில் ஒரு வக்கீலைக் குற்றம் சாட்டப்பட்டவர் வைத்துக் கொள்வது இன்றியமையாத உரிமை, தன்னைத்தானே குற்றவாளியாகக் காட்டும் கட்டாயத்திலிருந்து பாதுகாப்பளிக்க 5வது சட்டத் திருத்தத்தில் இது காட்டப்பட்டுள்ளது, பேசுவதா அல்லது மவுனமாக இருப்பதா என்ற உரிமைக்கு வேலி போட முடியாது, விசாரணைக் கால முழுமையும் இந்தப் பாதுகாப்புகள் இருக்க வேண்டும். என்றாலும் இந்த உரிமைகள் பற்றி அவருக்கு - குற்றம் சாட்டப்பட்டவருக்கு - உரிய எச்சரிக்கை செய்த பின்னர், அவர் அதை ஏற்றுக் கொள்வதைப் பொறுத்தது.
நவ்ஜோத் சாந்து வழக்கை ஆராய்ந்த பிறகு, திரு. ராமச்சந்திரன் அந்த அடிப்படையில் பேசுவதை ஏற்பது கஷ்டமான காரியம். போடா சட்டத்தின் செக்ஷன் 32க்கான மூலம் அரசியல் சட்டத்தில் 20(3), 21 மற்றும் 22(1)ல் ஏற்கனவே உள்ளது என்பது ஒரு பக்கம், ஆனால், ஒரு வழக்கறிஞரை வைத்துக் கொள்வது, தன்னைத்தானே குற்றவாளியாகக் காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு எதிரான உரிமை ஆகியவை, குற்றம் சாட்டப்பட்டவருக்குப் படித்துக் காண்பிக்கத் தவறினால், கோர்ட் விசாரணையில் அவரது நிலையை அது பாழாக்கி விடும் என்றெல்லாம் வாதாடுவது முற்றிலும் வேறான ஒரு விஷயம். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தப்படும் போதே அவருக்குச் சட்ட உதவி வழங்க வேண்டுமென்பது கடமை என்ற விதி, நமது கிரிமினல் சட்டங்களில் ஒரு அங்கமாக உள்ளது என்பதே. எனவே, ஆரம்ப காலத்திலேயே அவருக்குச் சட்ட உரிமை வழங்கப்படாததோ, அல்லது கிரிமினல் நடைமுறை 164வது பிரிவின் கீழ், ஒப்புதல் வாக்குமூலத்துக்க முன்போ சட்ட உதவி வழங்கப்படவில்லை, அதனால் விசாரணையே சட்ட விரோதமானது என்று வாதாடுவது, வாதத்தை எங்கோ ஒரு எட்டாத தூரத்துக்கு இழுத்துச் செல்வதாகும், இது ஏற்கத் தக்கதல்ல.
போடா சட்டம் நமது நாட்டில் நடைமுறையில் உளள பொதுவான கிரிமினல் சட்டத்திலிருந்து விலகிப் புதிதாக வந்துள்ள சட்டம் என்பதை திரு. ராமச்சந்திரன் கவனிக்கத் தவறி விட்டார் என்று தெரிகிறது. போடா சட்டம், அது போன்ற பிற சட்டங்கள் பொச் சட்டங்களிலிருந்து விலக்கான ஒன்று என்று கூறலாம். கடுமையான அடிப்பைடகளின் மீது கட்டப்பட்டுள்ள போடா சட்டத்தில் அரசியல் சட்டத்திலுள்ள பாதுகாப்புகள் இந்தச் சட்டத்தின் 32-வது பிரிவிலும் மற்றும் ஓரளவு 52-வது பிரிவிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் நமது முதன்மையான இந்தியக் கிரிமினல் சட்டமுறைகள் கிரிமினல் சட்ட நீதி முறைகள் மற்றும் சாட்சியங்கள் சட்ட ஆளுமை முறையில், தாராள முறையில் வரையப்பட்டுள்ளதாகும். இவற்றில் தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு பல வித்தியாசமான கோணங்களில் மிகவும் பயனுள்ளதாகச் சிறப்பாகவும் செய்யப்பட்டுள்ளது. எனவே போடா சட்ட விவகாரங்களில், பிற கிரிமினல் சட்ட விதிகளும் பின்பற்றப்பட வேண்டுமென்று வாதாடுவது தவறாகும்.
கிரிமினல் நடைமுறை 164 பிரிவின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கெனவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்த பின்னர், அவரது வழக்கு நீதி விசாரணைக்கு - டிரையல் - வந்த பின்னரே அவருக்குச் சட்ட உதவி வழங்கினால் அதில் முழுமை இருக்காது, ஏனென்றால் கைகள் கட்டப்பட்ட நிலையில் அந்த வழக்கறிஞர் ஏனோ தானோ என்றுதான் வாதாட முடியும், என்ற திரு. சுப்பிரமணியம் அவர்களின் வாதம் ஏற்கத் தக்கதாக இல்லை.
கிரிமினல் சட்ட முறைகள் உண்மையைக் கண்டுபிடிக்க உருவானவை. தவறு செய்து விட்டு ஒரு குற்றவாளிக்கு மூடு கவசம் போடுவதற்காக அல்ல. விசாரணைக் காலத்தில் சட்ட ரீதியாகச் சேகரிக்கப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் குற்றவாளியின் வக்கீல் வழக்கை நடத்த வேண்டும். வக்கீல் எச்சரித்திருந்தால் குற்றவாளி இந்த வாக்குமூலத்தை அளித்திருப்பாரா என்ற அடிப்படையில், இந்த வாக்குமூலத்தை ஏற்பதா இல்லையா என்று பரீட்சித்துப் பார்க்க முடியாது. வாக்கு மூலங்கள் கிரிமினல் நடைமுறைச் சட்டம் சிஆர்பிசி - செக்ஷன் 164-ன் கீழ்ப் பதிவு செய்யப்படுகின்றன. வாக்குமூலம் தன்னிச்சையாகத் தரப்பட்டதா என்று பார்ப்பது மட்டுமே சரியான பரீட்சை. "தன்னிச்சை' நிலையில், சட்ட ரீதியான பாதுகாப்புகளுக்கும் அப்பால், ஒரு சந்தேகம் எழுந்து விட்டால் அதைத் தள்ளிவிட வேண்டும். ஆனால் ஒரு வாக்குமூலம் "தன்னிச்சையானதே' என்று நிரூபணமாகிவிட்டால், அதை அரசியல் சட்டரீதியானது, நடைமுறைச் சட்டப்படியானது என்பது மட்டுமில்லாது தார்மீகமானதும் கூட என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தனது வாதங்களின் சுருக்க உரையில் திரு. சுப்பிரமணியம் கூறியதை நாங்கள் ஏற்கிறோம். இது 2 மற்றும் 3 பத்திகளில் கூறப்பட்டுள்ளது. தானே குற்றவாளி என்று ஒருவர் ஏற்கவேண்டிய நிர்பந்தத்தை மறுக்கும் உரிமையைத் தரும் அரசியல் சட்டப் பிரிவு 20(3), அவர் தன்னிச்சையாக வாக்குமூலம் தருவதைத் தடுக்கவில்லை. இந்தச் சட்டப் பிரிவு 20(3) - கிரிமினல் நடைமுறைச் சட்டம் 161, 162, 163 மற்றும் 164 செக்ஷன்களிலும், 1872 சாட்சியங்கள் சட்டத்திலும் முழுமையாகச் சேர்க்கப்பட்டுள்ளதென்பதையும் ஏற்கிறோம். இவையும் அமலாக்கத்துக்குரியது. எனவே சட்டரீதியான இந்தப் பிரிவுகளைப் பயன்படுத்தும்போது, அரசியல் சட்ட உத்தரவாதங்களையும் பின்பற்றுவதேயாகும்.
ஆனால் சந்தேகத்துக்குரியவர் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு வழக்கறிஞரைத் தன் சார்பில் கொள்ள வேண்டுமென்ற விஷயத்தில், திரு. சுப்பிரமணியம் அவர்களின் வாதம் ஏற்கத்தக்கதல்ல. அரசியல் சட்டத்தின் 22(1) பிரிவு கைது செய்யப்பட்டவர் அவர் விரும்பும் வக்கீலுடன் கலந்து ஆலோசனை பெறவும், தனக்காக அவர் வாதாடவும் உள்ள உரிமை, வழக்கு விசாரணைக்கு வரும்போது மட்டும் ஒரு உருவத்தைப் பெறுகிறது என்று சுப்பிரமணியம் வாதாடுகிறார். இதற்கு அவர் கிரிமினல் நடைமுறைச் சட்டம் - சிஆர்பிசி - 304 பிரிவை எடுத்துக் காட்டுகிறார். இந்தக் கண்ணோட்டம் தவறானது மற்றும் தரிப்பதற்கில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு, 1) அரசியல் சட்டம் மற்றும் அதற்குரிய நடைமுறைகள் பற்றிக் காரணமில்லாமல் கொண்டுள்ள கருத்து மற்றும் 2) சமூக - பொருளாதார யதார்த்தங்களை இவை தாண்டிச் செல்கிறது என்பதாகும்.
1950 ஜனவரி 26ல் அரசியல் சட்டம் அமுலுக்கு வரும்போதே 22(1) பிரிவும் அதன் அங்கமாக இருந்துள்ளது. 1973 கிரிமினல் ப்ரொசீஜர் கோர்ட் அதற்கு முன்பாக 1898 சட்டத்துக்குப் பதிலாக 1974 ஏப்ரல் முதல் தேதி (அக்ட் 2 ஆப் 1974) அமுலுக்கு வந்தது. கிரிமினல் நடைமுறைச் சட்டத்தில், திரு. சுப்பிரமணியம் கூறுவது போல குற்றம் சாட்டப்பட்டவர் தானே குற்றவாளி என ஏற்கும் கட்டாயத்திலிருந்து காப்பாற்றப்படுமாறு அரசியல் சட்டப் பிரிவுகள் சிஆர்.பிசியில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சிஆர்பிசியில் செக்ஷன் 304-ல் வழக்கறிஞருக்கான வசதி வழக்கு விசாரணை ஆரம்ப காலத்தில் மட்டுமே உள்ளதென்று திரு. சுப்ரமணியம் நேரடியாக இல்லாமல் மறைமுகமாகச் சொல்ல வருகிறார்.
ஆனால் அரசியல் சட்டமோ அல்லது நமது சட்டங்களோ காலத்தால் உறைந்து போய் விடுவதில்லை. அது உயிரோட்டமுள்ள அமைப்பு. வளர்ச்சி கொண்டது. மேற்கு வங்க மாநிலம் வெஸ்சஸ் அன்வர் அலி சர்க்கார் வழக்கில் நீதிபதி விவியன் போஸ் கூறிய வாசகங்களுக்கு மேல் உயிரோட்டத்துடன் நமது அரசியல் சட்டத்தை யாரும் உணர்ந்து போற்ற முடியாது.
"அரசியல் சட்டப் பிரிவுகளை நான் படிக்கும்போது, எந்தப் பின்னணியில் இருந்து அது பிறந்தது என்பதை எண்ணிப் பார்த்தால் மிகவும் பெருமிதமாக இருக்கிறது. அந்த வரலாற்றை அழித்த விட என்னால் முடியாது. நமது வாழ்நாளில் அந்த உணர்ச்சிகளை நினைவு கூறத் தவறிவிட முடியாது. ஏதோ மந்தமான, உயிரற்ற, எங்கோ தேங்கி ஒதுங்கிப் போன ஒர காகிதக்குப்பை அல்ல, ஆனால் உயிரோட்டமுள்ள ஒரு ஜ்வாலை. ஒரு பெரிய நாட்டுக்கு வாழ்வளித்து அந்த மக்களுக்கு அளிக்கப்பட்ட சாஸனம், ஆக்க பூர்வமான தீ நாக்குகள், வருங்காலத்தையும் அது வடிவமைக்கும், நிகழ்காலத்துக்கு வழிகாட்டும். என்னுடைய தீர்ப்பின்படி நமது அரசியல் சட்டம், காலத்துக்குக் காலம் நீண்டு இழுக்கப்படும் சக்தியாக இருக்க வேண்டும், உலகில் மாறி வரும் தன்மைகளுக்கு ஏற்பவும் மாறுபடும் தேவைகளுக்கு ஏற்பவும் அது உதவ வேண்டும். எனவே ஒவ்வொரு வழக்கிலும் நீதிபதிகள் நேரிடையாக இதயத்தைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு வழக்கிலும் உண்மையைப் பலமாக மதிக்க வேண்டும். ஒரு ஜாரியைப் போலப் பார்க்க வேண்டும். ஆனாலும் அப்படி இருந்து விட முடியாது. ஏனென்றால் நாம் சட்டத்தைப் பரிசீலிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அதில் ஒரு பிரச்சினையல்ல, பல. இந்தச் சட்டங்களையா கேள்விகளுக்கு இழுப்பது. இதைவிடவுமா பெரிய சட்டம் உள்ளது. எந்தப் பெரிய சட்டமும் இந்தச் சட்டத்தின் முன்பு தலை வணங்கித்தான் ஆக வேண்டும்'
நீதிபதி விவியன் போஸ் அரசியல் சட்டத்துக்கு இந்தப் புகழாரத்தைச் சூட்டி நாற்பது ஆண்டு காலம் முடிந்து விட்டது. அவர் கூறியபடி இந்திய மக்களின் தேவைப்படி நமது சட்டம் பெரிதும் ஓங்கி வளர்ந்து நிற்கிறது. தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதையொட்டி இந்த நீதிமன்றத்தில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளன. அரசியல் சட்டத்தின் 42-வது திருத்தம் 39-ஏ இதில் 3.1.1977ல் சேர்க்கப்பட்டது. அதுதான் நாட்டின் வழிகாட்டுக் கொள்கையின் அங்கமாக உள்ளது. "அனைவருக்கும் நீதி, இலவச சட்ட உதவி. இதன் மூலம் சட்ட முறைகள் நீதியை உறுதி செய்ய வேண்டும், இது எல்லாருக்கும் சமமான சந்தர்ப்பங்கள், கிடைக்க குறிப்பாகத் தகுந்த சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டுவர வேண்டும். பொருளாதார் காரணங்களுக்காகவோ அல்லது வேறு பலவீனமான காரணங்களுக்காகவோ யாரொருவருக்கும் நீதியைப் பெறுவதற்குரிய சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டு விடாதிருக்க உறுதி செய்ய வேண்டும்.'
அரசியல் சட்டம் 39ஏ தெரிவிக்கும் லட்சியங்களுக்கும் மேலாக, பாராளுமன்றம் லீகல் சர்வீஸஸ் அதாரி டீஸ் சட்டத்தை (1987) நிறைவேற்றிக் கொடுத்துள்ளது. இந்தச் சட்டம் 9.11.1995ல் நடைமுறைக்கு வந்தது. இன்றைக்கும் பொருந்தக்கூடிய இந்தச் சட்டத்தின் லட்சியம் மற்றும் காரணங்கள் பற்றி கீழ் வரும் விளக்கம் தரப்பட்டுள்ளது.
மக்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கும் வசதியை உறுதியாக்கும் வழியில் மாநில அரசுகளும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைவருக்கும் சமத்துவமான சந்தர்ப்பங்களை நீதி பெற வழங்க வேண்டும். குறிப்பாக இலவச சட்ட உதவி கிடைக்க வழி செய்ய வேண்டும். நீதியைப் பெறும் உரிமை மறுக்கப்படலாகாது. ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைக்கப் பொருளாதாரமோ அல்லது பிற காரணங்களோ தடையாக இருக்கக்கூடாது.'
சட்டத்தின் 4 வது அத்தியாயத்தில் 12 மற்றும் 13வது பிரிவுகள் மிகவும் விசாலமான முறையில், அனைவரும் சட்ட உதவி சேவைகளைப் பெற வழி வகுத்துள்ளது. இதில் பாரபட்சம் ஏதுமில்லை. பிற்பட்ட வகுப்பினர், பழங்குடி மக்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் சுப்ரீம் கோர்ட் அல்லாத பிற நீதி மன்றங்களில் வழக்கைச் சந்திப்போரின் ஆண்டு வருமானம் 9000/- (ஒன்பதாயிரம்) க்கும் குறைவாகவும், உச்சநீதிமன்ற வழக்குகளில் ஆண்டு வருமானம் ரூபாய் 12000/-க்கும் குறைவாக இருப்போருக்கும் சட்ட உதவிகளைப் பெற இந்தச் சட்டம் உரிமை அளிக்கிறது. வருமானத்தைப் பொறுத்த வகையில் அவர்கள் தரும் பிரமானப் பத்திரமே. போதுமானதாகும். கடந்த 17 ஆண்டுகளாக இந்தச் சட்டம் முக்கியத்துவம் பெற்று, ஒரு தேசீய இயக்கத்தின் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
வழக்கறிஞர் உதவி மற்றும் சட்ட ரீதியான வசதிகளைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள சகல வசதிகளையும் முன்னேற்றங்களையும் இந்தச் சட்டம் சுட்டிக் காட்டுகிறது. எனவே கிரிமினல் நடைமுறைச் சட்டத்தின் 304-வது பிரிவு, சட்ட உதவி பெறும் வசதி வழக்கு விசாரணை தொடங்குங் காலத்தில் தான் வருகிறது என்று வாதாடுவது சரியல்ல, கால விரயம்.
திரு. சுப்பிரமணியம் அவர்களின் வாதத்தை ஏன் ஏற்க முடியாது என்பதற்கு இரண்டாவதான காரணமும் உண்டு. கிரிமினல் சட்ட நடைமுறை மற்றும் சாட்சியங்கள் சட்டத்தில் அரசியல் சட்ட உத்தரவாதங்கள் பொதிந்துள்ளன என்ற திரு. சுப்பிரமணியம் கூற்றை நாம் ஏற்கிறோம். ஒவ்வொருவருக்கும் அவரது உரிமை மற்றும் கொளரவத்துக்கு இந்தியாவின் சட்டமுறைகள் முழுப் பாதுகாப்பு அளிக்கிறது. இதில் குறைபாடுகள் இல்லை. ஆனால் இதை விசுவாசமாக நடைமுறைப்படுத்தி அமலாக்கம் செய்யும்போதுதான் ஏதோ ஒரு பிசாசு குறுக்கிடுகிறது. அதுவே, சட்டம் சொல்லுவது என்ன - மற்றும் - சட்ட அமுலாக்க காலத்தில் ஏற்படும் யதார்த்த நிலை என்ன என்பதற்கும் இதை நாம் நீதியின் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். கிரிமினல் சட்ட நடைமுறைகள் மீறப்படும்போது, அரசியல் சட்டம் வழங்கும் விலைமதிப்பற்ற தனிநபர் சுதந்திரம், உயிருக்குப் பாதுகாப்பு ஆகிய உத்தரவாதங்கள் பாதிக்கப்படுகின்றன. தனிநபரின் மனித உரிமைகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே, சட்டரீதியான முறைகளைப் பின்பற்றவும், வழக்கறிஞரின் வசதி/துணை மிக முக்கியமானது. இவை மிக உன்னதமானவை. இதனால் மனித உரிமைகளும், அரசியல் சட்ட உத்தரவாதங்களும் மீறப்படாமல் இருக்க பெரிதும் உதவும்.
எப்படியிருந்த போதிலும், இது வெகு காலத்துக்கு முன்பே முடிந்து போன விஷயம். இது இப்போது விவாதத்துக்கு உரியதல்ல. முப்பது ஆண்டுகளுக்கும் முன்பாகவே உசைனாரா காடூன் வெஸ்சஸ் பிகார் மாநில உள்துறைச் செயலாளர் வழக்கில் இந்த நீதிமன்றம் அரசியல் சட்டத்தின் 39ஏ பிரிவை, பதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் பிரிவைச் சுட்டிக் காட்டி, நல்ல, நேர்மையான நீதி விசாரணைக்கு இலவச சட்ட உதவி என்பது அன்னியப்படுத்தப் பட முடியாத உரிமை உரிமையென்பதை வலியுறுத்தியுள்ளது. இந்த உதவி இல்லாபவிட்டால், பொருளாதார பலவீனமோ அல்லது வேறு கஷ்டங்களோ உள்ள ஒருவருக்கு நீதியைப் பெற முடியாமலே போய் விடும். இந்த உண்மை தீர்ப்பின் 7வது பத்தியில் இந்த நீதி மன்றம் இதைத் தெரிவித்துள்ளது.
"குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு, நேர்மையான விசாரணையும் நீதியும் கிடைக்க வேண்டுமென்றால், இலவச சட்ட உதவி, அரசியல் சட்டம் 21ல் அளித்துள்ள உத்தரவாதத்தின் அடிப்படையில், அத்தியாவசியமான அங்கமாகும். இது அரசியல் சட்டப்படியான உரிமையாகும். ஒரு வழக்கறிஞரைக் கொண்டு தனது வழக்கை வாதாட முடியாத ஒவ்வொருவருக்கும் இந்த உரிமை வழங்கப்பட வேண்டும். வறுமை, சொல்லிக் கொள்ள முடியாத கஷ்டங்கள் அவருக்கு இருக்கலாம். எனவே, வழக்கின் சந்தர்ப்பங்களைக் கொண்டு அவருக்கு நீதி கிடைக்க, அவர் ஆட்சேபிக்காத பட்சத்தில் அவருக்கு இலவச சட்ட உதவி வழங்க வேண்டியது அரசாங்கத்தின் சட்ட ரீதியான கடமை. எனவே விசாரணைக் கைதிகள், ஜாமீனுக்கு உரிய குற்றங்களில், அடுத்த விசாரணைக்கு வரும்போது அவர்கள் ஜாமீன் பெறுவதற்கு உதவியாக, மாநில அரசுகள் தமது சொந்தச் செலவில் அவர்களுக்கு உதவியாக, மாநில அரசுகள் தமது சொந்தச் செலவில் அவர்களுக்கு ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொடுக்க வேண்டும். மாஜிஸ்ட்ரேட் முன்பு ஜாமீன் மனுதாக்கல் செய்ய வழக்கறிஞர் வசதியைச் செய்து தரவேண்டும். இவ்வாறு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டால், இந்த நீதிமன்றம் 1979, பிப்ரவரி 12ம் தேதி அளித்துள்ள தீர்ப்பு வழிகாட்டுதல்களின் படி வழக்கை பைசல் செய்ய வேண்டும். மாநில அரசு பாட்னா உயர்நீதி மன்றத்துக்கு இதை இன்று முதல் ஆறுவாரங்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும்.'
இரண்டாண்டுகளுக்குப் பிறகு, பிகார் மாநிலத்தில் சிறைக் கைதிகளை மிகவும் குரூரமாகக் குருடாக்கிய கத்ரீ வழக்கிலும், இந்த இலவசச் சட்ட உதவி வலியுறுத்தப் பட்டுள்ளது. இதில் உசைநாரா காட்டூன் வழக்கு பற்றித் தீர்ப்பின் 4வது பத்தியில் எடுத்துக்காட்டப் பட்டுள்ளது (7.3.1979). அரசியல் சட்டத்தின் 21வது பிரிவின் உத்தரவாதத்தை அரசுகள் பின்பற்றியே ஆக வேண்டுமென்பது ஆழமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் விரும்பினால் இந்தச் சட்ட விதி பின்பற்றப்படவேண்டும்.
பொருளாதார வசதிகள் ஏதுமற்ற ஒரு ஏழை, குற்றம் சாட்டப்பட்டு ஒரு மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்படும்போதே, அவரது சொந்த உரிமைகளுக்கு அபாயம் ஏற்பட்டு விடுகிறதென்பது ஆரம்பப்பாடம். இந்த நிலையில் ஜாமீன் பெற்று விடுதலையாகி வெளிவருவதற்கு அவருக்கு ஒரு திறமையான வக்கீலின் துணை தேவை. இந்தச் சந்தர்ப்பத்தில் குற்றவாளிக்கு இந்த உரிமையை மறுப்பது நியாயமாகாது. எனவே ஏழைகள் குற்றம் சாட்டப்படுகையில், வழக்கு விசாரணைக்கு வரும்போது மட்டுமல்ல, முன்னதாகவே அவர் முதலில் மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படும் போதும், ரிமாண்டுக்கு அனுப்பப்படும் சமயத்திலும் சட்ட உதவி தரவேண்டமென்பது அரசியல் சட்டத்தின் கட்டாயம்.
தீர்ப்பின் 6வது பத்தியில் இது மேலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இப்படியும் நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளதா என்று குற்றம் சாட்டபட்டவருக்கு சந்தேகம் இருக்கலாம். பொருளாதார வசதி ஏதுமேயில்லாத ஒரு ஏழை, ஒரு மாஜிஸ்ட்ரேட் அல்லது செஷன்ஸ் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படும்போது, அவர் குற்றவாளிக்குரிய இலவச சட்டஉதவி வசதி பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். இதற்கான செலவுகள் அரசைச் சேர்ந்தது, அவர் கவலைப்படவேண்டாமென்றும் அவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். நாட்டில் உள்ள சகல மாஜிஸ்ட்ரேட்டுகள், செஷன்ஸ் நீதிபதிகளுக்கு இது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கத்ரி வழக்கில் இந்த நீதிமன்றம் கூறிய வார்த்தைகள் முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் பொருத்தமானது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலோர் ஏழைகள், கல்வி அறிவில்லாதவர்கள். இலவசச் சட்ட உதவி அவர்களுக்கு இந்த நிலையில் அவர்களுக்கு ஒரு அவசரத்தேவை.
குற்றம் சாட்டப்பட்டவர் மேஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தப்படும் போது, போலீஸ் காவல் மற்றும் சிறைக் காவலைத் தவிர்க்க அவருக்கு இந்த உதவி அவசியம் என்பதை கத்ரீ வழக்கில் இந்த நீதிமன்றம் 1981ல் தெளிவு படுத்தியுள்ளது. அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைப்பற்றி மாஜிஸ்ட்ரேட் வழமுறைகளைப் பற்றி எண்ணும்போதே, குற்றவாளிக்கு அவரைக் காப்பாற்றிக் கொள்ள வக்கீல் தேவைப்படுகிறார்.
ஒரு பயங்கரவாதி விஷயத்திலும், இந்த நாட்டில் ஏழை எளிய மக்களுக்குத் தரும் உரிமையை நாம் தடுக்க விரும்பவில்லை. 31 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நீதி மன்றம் இதை உறுதி செய்துள்ளது.
வெளிப்படையாகவே தெரியும் குற்றங்களிலும் கூட, ஒரு குற்றவாளி மாஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தப்படும்போது, அவருக்குச் சட்ட உதவி வழங்கியே ஆக வேண்டும் என்று வலியுறுத்துவதில் எங்களுக்குத் தயக்கம் ஏதுமில்லை. இந்த உரிமையை அரசியல் சட்டம் 21 மற்றும் 22(1) வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள மாஜிஸ்ட்ரேட்டுகளும், அவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்படும் குற்றவாளிகளுக்கு அவர்களது உரிமைகள், வழக்கறிஞர் வசதி பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். குற்றவாளியிடம் இதைவிளக்க ஒரு மாஜிஸ்ட்ரேட் தவறினால் அது கடமை தவறியதாகும். அவர் மீது இலாக்கா ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கு இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனைகேட்பது, அவரைக் கொண்டு வழக்கு நடத்துவது போன்ற உரிமைகள் "போலீஸ் விசாரணையின் போதும் அவர் இருக்கலாம்' என்று அவமதிப்பதாக ஆகாது. நமது சட்டங்களின் படி கோர்ட் விசாரணைக் காலத்தில் மட்டுமே அவருக்குத் (குற்றவாளிக்கு) வக்கீல் துணை தேவை. போலீஸ் அல்லது நீதிமன்றக் காவலில் இருந்து விடுபட, ஜாமீன் பெற வழக்கறிஞர் தேவை. கிரிமினல் நடைமுறை - சிஆர்பிசி - 164 பிரிவின் கீழ் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதில் உள்ள சட்டரீதியான விளைவுகள் பற்றி அவர் எடுத்துச் சொல்லலாம். இந்த நாட்டின் சட்டப்படி சட்ட உதவி என்பது மிராண்டா தத்துவங்களைப் பின்பற்றியதல்ல. இது இந்தியக் காரணங்களையொட்டி அமைந்தது. அரசியல் சட்டத்தின் இந்த வசதிப் பிரிவுகளை விசுவாசத்துடன் பின்பற்ற வேண்டும்.
ஏழ்மை அல்லது அது போன்ற பிறகாரணங்களுக்காக ஒருவருக்குச் சட்ட உதவி வழங்கத்தவறினால், அதனால் ஏற்படும் சட்ட ரீதியான விளைவுகள் எப்படியிருக்கும் என்ற கேள்வி எழக்கூடும்.
குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும், வழக்கு விசாரணை ஆரம்பமாகி, முழு விசாரணையும் முடியும்வரை, அவரது சார்பில் வாதாட ஒர வக்கீலை அமர்த்தித் தரவேண்டும். அவர் கேட்காவிட்டாலும்கூட, மவுனமாக இருந்தாலும் இதைச் செய்ய வேண்டியது அரசியல் சட்டப்படியான கடமையாகும். தன்னிச்சையாக, தெளிவாக, சந்தேகத்துக்கு இடமில்லாது ஒரு குற்றவாளி "தனக்கு வக்கீல் யாரும் தேவையில்லை, தன் வழக்கைத் தானே வாதாடிக் கொள்ள முடியும்' என்று நீதிமன்றத்தில் கூறினால் ஒழிய, இந்தச் சட்ட உதவி அவருக்கு வழங்கப்படவேண்டும் என்பது கட்டாயம். அவ்வாறு செய்யத் தவறுவது, விசாரணையைப் பாழாக்கிவிடும், தண்டனையில் முடிந்துவிடும். உதாரணம் சுக்தாஸ் வெஸ்சஸ் அருணாசல பிரதேசம்.
வழக்கு விசாரணைக்கு முன்பாகவே வக்கீல் உதவி குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தரப்படாவிட்டால், அது பெரிய பாதகங்களை விசாரணைக்காலத்தில் ஏற்படுத்தாது. ஆனால் குற்றவாளிக்கு அதை விளக்காத காரணத்தால் மாஜிஸ்ட்ரேட் இலாக்கா விசாரணைக்கு ஆளாக வேண்டியிருக்கலாம். இதை ஒவ்வொரு வழக்கின் தன்மையைப் பொறுத்தது.
சட்ட உதவி என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டது. இப்போது மனுதாரன் (கசாப்) விஷயத்துக்கு வருவோம். இந்தத் தீர்ப்பின் ஆரம்பத்தில் "குபேர்' என்ற துணைத் தலைப்பின் கீழ் கூறப்பட்டுள்ளது போல மனுதாரன் 2008 நவம்பர் 27ம் தேதி இரவு 10.45 மணிக்கு, யூனிட் 3 டிசிபி-சிஐடி அதிகாரி மார்டே (பி.டபிள்யூ 48) என்பவரால் கைது செய்யப்பட்டான். அவனைக் கைது செய்து விசாரித்தபோதுதான் பாகிஸ்தானை சேர்ந்தவன், இந்தியாவில் தனக்கு நண்பர்களோ, உறவினர்களோ இல்லை என்று தெரிவித்துள்ளான். இதையொட்டி அதிகாரி மார்டே கைது செய்யப்படும்போது பின்பற்றப்படவேண்டிய ஆவணத்தில் மனுதாரன் கைது பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரிவிக்க முடியவில்லை, ஆனால் அவனது பாகிஸ்தான் உறவினர்களுக்குத் தெரிவிக்க செய்தி சேகரிக்கப்படுகிறது என்று குறிப்பு எழுதினார். க்ரைம் பிரான்ச் கட்டுப்பாட்டு அறை மற்றும் மூத்த அதிகாரிகளுக்கும் கைது செய்தியைத் தெரிவித்தார். கைது ஆவணத்தில் (பஞ்சநாமா) மனுதாரன் பொருளாதாரத்தால் பின்பற்ற பிரிவைச் சேர்ந்தவனென்றும், ஆண்டு வருமானம் ரூபாய் 20000/-க்கும் குறைவு என்றும் எழுதியுள்ளான். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவனுக்குள்ள சட்ட உதவி உரிமையை அவனுக்கு எடுத்துச் சொன்னபோது வேண்டாமென்று மறுத்துவிட்டான்.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு மனுதாரன் எழுதிய தேதியிடப்படாத கடிதம் (பாகிஸ்தான் வக்காலத்து) ஒன்றும் எங்களுக்குக் காட்டப்பட்டது. இந்தக் கடிதம் அரைகுறை உருது மொழியில் அரைகுறைப் படிப்பாளியின் கையெழுத்தில் உள்ளது. இந்தக் கடிதத்தை மார்டேயிடம் மனுதாரன் 2008 டிசம்பர் 8ம் தேதி கொடுத்துள்ளான். இதை ார்டே அவரது மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். மும்பை அஸிஸ்டென்ட் கமிஷனர் ஆப் போலீஸ் இக்கடிதத்தை மத்திய அரசு உள்துறை அமைச்சகச் செயலாளர் (அயல்நாட்டுப் பிரிவு) அவர்களுக்கு அனுப்பியுள்ளார். இது 2008 டிசம்பர் 11ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. மனுதாரனுக்குத் தூதரக உதவி ஏற்பாடு செய்யும்படி ஏசிபி தனது கடிதத்தில் கோரியுள்ளார். தனது கடிதத்தில், மனுதாரன் தனது பாகிஸ்தான் குடியுரிமை (நேஷனாலிடி) மற்றும் அøடையாளத்தையும் (ஐடென்டிடி) குறிப்பிட்டுள்ளதோடு, பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் தான் ஆயுதப் பயிற்சி பெற்றதையும், தானும் தனது சகாக்களும் இந்தியாவைத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளான். போலீசாரோடு நடந்த துப்பாக்கிச் சண்டையில் இஸ்மாயில் சொல்லப்பட்டான். இவனுக்குத் துப்பாக்கிக் காயம் ஏற்பட்டது. அவனுடைய கடிதத்தில் சட்ட உதவி கேட்டும், இஸ்மாயில் உடலைத் த்ய் நாட்டுக்கு எடுத்துச் செல்லவும் உதவி கேட்டும், கடித முடிவில் "உங்கள் தேசபக்தன்' என்று குறிப்பிட்டு (ஆப்காவாதன் பராஸ்தா) முகமது அஜமல் என்று கையெழுத்திட்டுள்ளான்.
அடுத்து 2008 டிசம்பர் 26ம் தேதி, கூடுதல் முதன்மை மாஜிஸ்ட்ரேடிடம் அவன் ஆஜர்படுத்தப்பட்டபோது, இதே மாதிரியான அவன் கைப்பட எழுதிய கடிதத்தை அவரிடம் கொடுத்தான். இதிலும் தனது பாகிஸ்தான் குடியுரிமையைக் குறிபபிட்டுத் தனக்கு பாகிஸ்தானிலிருந்து வக்கீல் உதவி கோரியுள்ளான். இந்தக் கடிதத்தில் தனக்கு, தன் சார்பில் வாதாட இந்திய வக்கீல் வேண்டாமென்று தெளிவாகக் கூறியுள்ளான்.
மேலும், பாகிஸ்தான் தூதரகத்துக்கு ஏற்கெனவே பாகிஸ்தானி வக்கீல் உதவிகேட்டுக் கடிதம் எழுதியுள்ளதாகவும் அவன் மாஜிஸ்ட்ரேடிடம் கூறியுள்ளான். ஆனால் அவனுக்கு அந்த தூதரகத்திலிருந்து பதில் ஏதும் வரவில்லை. இது சம்பந்தமாகத் தனது சார்பில் ஒரு வக்கீல் அமர்த்தி சட்ட உதவி பெற்றுத் தருமாறும் மாஜிஸ்ட்ரேட்டிடம் கேட்டுள்ளான். அந்த சமயத்தில் அவனை மாஜிஸ்ட்ரேட் காவலில் வைக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது. அதாவது அடையாளம் காட்டும் அணிவகுப்புக் காரணத்தை ஒட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த உத்தரவில் மனுதாரன் பாகிஸ்தான் வக்கீல் வேண்டுமென்று÷ கட்டுள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2008 டிசம்பர் 29ம் தேதி, மும்பை எஸ்ப்ளனேட், 37வது நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் வழக்கத்திற்கு மாறாக ஒரு நடவடிக்கை எடுத்தார். மதிப்பிற்குரிய பாகிஸ்தான் தூதுவருக்குத் தனது கடிதம் ஒன்றில் மனுதாரனின் கடிதத்தையும் இணைத்து, தனது அலுவலக முத்திரையிட்டு, கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார். ஆனால் மனுதாரனின் தாய்நாடு அவனது கோரிக்கையை அப்போது மறுக்கும் மனப்பான்மையில்தான் இருந்தது. அவன் கேட்ட பாகிஸ்தான் வழக்கறிஞர் கோரிக்கைக்கு அவர்கள் பதிலளிக்கவும் இல்லை, கடிதம் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கவில்லை. 2009 பிப்ரவரி 17ம் தேதியன்று மனுதாரன், அவனது ஒப்புதல் வாக்குமூலத்தை சிஆர்பிசி 164 செக்ஷன் படி பதிவு செய்வதற்காக கூடுதல் மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டான். அடுத்த 4 நாட்கள் 2009 பிப்ரவரி 21ம் தேதி வரையான நிகழ்ச்சிகளை முன்பே பார்த்தோம். 2009 பிப்ரவரி 25ம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2009 மார்ச் 23ம் தேதியன்று முதன்முறையாக எலக்ட்ரானிக் வீடியோ லிங்கேஜ் மூலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அப்போது அரசு செலவில் தனக்கு ஒரு வக்கீல் வேண்டுமென்று கோரினான். நீதிமன்றக் குழுவில் இருக்கும் வக்கீல்களில் ஒருவரன் மிஸ் அஞ்சலி வாக்மாரே இவனது வக்கீலாக 2009 மார்ச் 30ம் தேதி நியமிக்கப்பட்டார். மேலும் மரணதண்டனைக்குரிய குற்றத்தை மனுதாரன் செய்திருப்பதால் அவனுக்கு உதவ சட்ட உதவி விதிகளின் படி அவனுக்கு ஒரு மூத்த வழக்கறிஞர் மற்றும் அவருக்கு உதவ ஒரு ஜுனியர் வழக்கறீஞரையும் பெற உரிமை உள்ளதால், திரு பவார் அவர்களை ஜூனியராக 2009 ஏப்ரல் 1ம் தேதி நீதிமன்றம் நியமித்தது. இந்த சமயத்தில் மிஸ் அஞ்சலி வாக்மாரே நியமனத்தை எதிர்த்து கைகுஷ்ரு லாம் என்பவர் தானே கசாப் சார்பில் வாதாட வேண்டுமென ஒரு மனுதாக்கல் செய்தார்.பயங்கரவாதத் தாக்குதலில் பலியான ஒருவர் சார்பில் மிஸ் அஞ்சலி வாக்மாரே சாட்சியாக இருந்து, பலியானவர்களுக்காக நஷ்ட ஈடு கோரி சிவில் வழக்கில் வாதாடி வருவதாக லாம் தனது விண்ணபத்தில் கூறியிருந்தார். எனவே மிஸ் அஞ்சலி கசாப் சார்பில் வாதாடினால் முரண்பாடுகள் ஏற்பட சாத்தியமுள்ளதால், நீதிமன்றம் 2009 ஏப்ரல் 15ம் தேதி அவரது நியமனத்தை ரத்து செய்தது. பின்னர் மிகவும் எச்சரிக்கையுடன் மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து நீதிமன்றம் இறுதியாக வழக்கறிஞர் திரு. அப்பாஸ் காஸ்மி வரகளைத் தேர்ந்தெடுத்தது. அவரது திறமை அனுபவங்களைக் கொண்டு திரு. காஸ்மி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கோர்ட் கட்டிடத்தில் அவருக்காகச் சகல வசதிகளுடனும் வழக்கை நடத்த உதவ ஒரு அறை முதல் தளத்தில் ஒதுக்கப்பட்டது. 24 மணி நேர ஆயுதப் போலீஸ் பாதுகாப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது.
2009 ஏப்ரல் 17ம் தேதி, மனுதாரன் ஜூடிசியல் மாஜிஸ்ட்ரேடிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் கோர்ட் முன்னிலையில் திறக்கப்பட்டு அதன் நகல்கள் அரசு வழக்கறிஞர் (பப்ளிக் பிராசிக்யூடர் மற்றும் திரு. காஸ்மி அவர்களுக்கும் தரப்பட்டது. அதே நாளில் மனுதாரன் தனது வாக்குமூலத்திலிருந்து பின்வாங்குவதாக காஸ்மி ஒரு விண்ணப்பம் அளித்தார். அதே நாளில் பிராசிக்யூஷன் தனது வழக்கை தொடர்ந்தது.
வழக்கு விசாரணையின் இறுதிக் கட்டத்தில் திரு காசிம் அடுத்தடுத்து சண்டையில் ஈடுபட்டார் என்பது ஒரு தனி விஷயம்.
இது சம்பந்தமாக நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை, ஆணைகளைப் பார்க்கும்போது, வழக்கு விசாரணையைத் தாமதபபடுத்தவும், அடிப்படையேயில்லாத ஆட்சேபணைகளை எழுப்பியும் விசாரணையைத் தொடர முடியாமல் செய்தார் என்பது தெரிய வருகிறது. இதனால் திரு காஸ்மியை வழக்கு விசாரணையில் நீக்க வேண்டிய நிர்பந்தம் நீதி மன்றத்துக்கு ஏற்பட்டது. தன்னை இவ்வாரு நீக்கியதை எதிர்த்து காஸ்மி உயர்நீதி மன்றம் சென்றார். உயர் நீதிமன்றமும் அவர் நீக்கப்பட்டதை உறுதி செய்துவிட்டது. இந்த வழக்கு விசாரணையில் இருந்து காஸ்மி நீக்கப்பட்ட விஷயத்தில் திரு ராஜூ ராமச்சந்திரனும் குறை காணவில்லை. இந்தக் கட்டத்துக்குப் பின்னால் வழக்கு விசாரணை திரு, பவார் இடம் ஒப்படைக்கப்பட்டு கசாப் சார்பில் அவர் வாதாடினார். தக்க சாட்சியங்களையொட்டி எந்தவொரு வழக்கறிஞரும் நடந்து கொள்வாரோ அதேபோல இந்த வழக்கு விசாரணையை அவர் கையாண்டார் என்பது தெரிகிறது.
மனுதாரன் பாகிஸ்தான் தூதரகத்துக்கு எழுதிய இரண்டு கடிதங்களிலிருந்து தனக்கு ஒரு வழக்கறிஞர் வேண்டும், அவரும் பாகிஸ்தான் வழக்கறிஞராக இருக்க வேண்டும் என்று கசாப் விரும்புகிறான் என்று தெரிய வருவதால், அவனுக்கு ஒரு பாகிஸ்தான் வழக்கறிஞரை ஏற்பாடு செய்து தர வேணடியது நீதிமன்றத்தின் கடமை அல்லது அவனது கோரிக்கையை ஏற்க முடியாது, ஆனால் இந்திய அரசியல் சட்ட விதிகளின் படி ஒரு வழக்கறிஞர் உதவியைப் பெறும் உரிமை அவனுக்கு உண்டு, அவன் விரும்பினால் தேவையான சட்ட உதவி அவனுக்கு வழங்கப்படுமென்று அவனுக்குத் தெளிவாகச் சொல்லிவிடவேண்டும், ஏனெனறால் அவ்வாறு அவனுக்குத் தெரிவிக்கப்பட வேண்டியது இயற்கை நீதி முறைகளின்படி அவசியமென்று திரு, ராமச்சந்திரன் வாதாடினார்.
திரு. ராமச்சந்திரன் பிரச்சினையை எங்கோ ஒரு ஒப்புக் கொள்ள முடியாத தூரத்துக்கு இழுத்துச் செல்கிறார் என்று நாங்கள் நினைக்கிறோம். அவன் கைது செய்யப்படும்போதே, அவனுக்குச் சட்ட உதவி வழங்க போலீஸ் அதிகாரி தயாராக இருந்தார் என்பதையும் முன்பே பார்த்தோம். அவன் அதை ஏற்க மறுத்துவிட்டான். பின்னர் பாகிஸ்தான் தூதரகத்துக்கு வக்கீல் உதவி கேட்டு எழுதினான். இரண்டாவ கடிதத்திலும் இதையே கேட்டிருந்தான். இந்தக் கடிதம் கூடுதல் முதன்மை மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேடிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டாவது கடிதத்தில் ஒரு இந்திய வழக்கறிஞர் தனக்கு வெண்டாமென்று அவன் குறிப்பிட்டிருந்தான். இன்றும் அவன் இந்தியா மீது போர் செய்வதையே விரும்புகிறான் என்பதையே இந்த மனப்பான்மை தெளிவாகவே காட்டுகிறது. எனவே பகை நாட்டிலிருந்து ஒரு வழக்கறிஞரைப் பெற அவன் விரும்பவில்லை. இந்தியா வழக்கறிஞர்கள் வேண்டாமென்ற அவனது எண்ணம் தெரிவிக்குள் செய்தி, இந்திய வழக்கறிஞர்களால் தனக்குப் பயனில்லை என்பதும், அவனுக்கு சட்ட உதவிகள் ஒரு பக்கத்திலிருந்து வந்துள்ளன, ஆனால் அது அவனுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதுமே தெளிவாகத் தெரிகிறது.
ஒரு இந்திய வழக்கறிஞரின் சேவைகளை ஏற்க மறுத்தது மற்றும் தனது நாட்டிலிருந்தே தனக்கு வழக்கறிஞர் வரவேண்டுமென்று மனுதாரன் பிடிவாதம் காட்டியதெல்லாம் அவனது சொந்த முடிவுகள். பாகிஸ்தானே இந்த மனுதாரன் தங்கள் நாட்டவன் அல்ல என்று மறுக்கும்போது, தனக்கு ஒரு பாகிஸ்தான் வழக்கறிஞரே வேண்டுமென்று மனுதாரன் கேட்பது நடைமுறை சாத்தியமல்ல என்பது மட்டுமல்ல, முட்டாள்தனமானதும் ஆகும். இந்த மனிதனுக்கு இந்திய நீதிமன்றத்தின், அதிகாரிகளின் புத்திமதி ஏதும் தேவையில்லை, இந்திய அரசியல் சட்டம் தரும் உரிமைகளும் தேவையில்லை, அவன் மனதில் இருந்ததெல்லாம் அவன் பாகிஸ்தான் தேசபக்தன், இந்தியா மீது போர் தொடுக்க வேண்டிய ஒரு பாகிஸ்தானியன்.
இறுதியாக 2009 மார்ச் 23ம் தேதி தனக்கு ஒரு வழக்கறிஞர் வேண்டுமென்று கேட்டான். பாகிஸ்தானில் இருந்தோ, வேறு எங்கிருந்தோ தனக்காக வாதாட யாரும் உதவிக்கு வர மாட்டார்களென்பதை அவன் உணர்ந்து கொண்டான். உடனடியாக அவனுக்காக வாதாட இரண்டு வழக்கறிஞர்கள் தரப்பட்டனர்.
மேலே கூறப்பட்டுள்ள இந்த உண்மைகளைப் பார்க்கும்போது இந்திய அரசியல் சட்ட விதிகளின் படி மனுதாரனுடைய உரிமைகள் ஏதும் மறுக்கப்படவில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அவன் கைது செய்யப்பட்டபோதும் மற்ற சம்பந்தப்பட்ட கட்டங்களிலும் அவனுக்கு வழக்கறிஞர் சேவை வழங்கப்பட்டது. நீதி மன்ற விசாரணைக்கு முன்பு சட்ட உதவி இல்லாமலிருந்தது அவன இஷ்டப்படி நடந்தது. ஆனால் அதுவும் விசாரணைக் காலத்தில் அவனுக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. வாதாட வந்த வக்கீல்களுக்கு வழக்குக்குத் தங்களை தயார் செய்து கொள்ளக் கூடத் தேவையான கால அவகாசம் இல்லை.
திரு. சுப்பிரமணியம் கீழ்கண்டவாறு வைத்தார். (செஷன்ஸ்) நீதிமன்றம் 2009 ஏப்ரல 21ம் தேதி காஸ்மி-ஐ மனுதாரனுக்கு வாதாட நியமித்தது. அவர் ஸ்பெஷல் பப்ளிக் ப்ராசிக்யூடரின் விண்ணப்பங்களுக்குப் பதிலளிக்க கிரிமினல் நடைமுறைச் சட்டம் 226 விதியின் படி 4 வார அவகாசம் கேட்டார். ஆனால் அவருக்கு 2009 மேல 2 ம் தேதி வரை 8 நாட்களே அவகாசம் தரபபட்டது அந்த நாளில் மனுதாரன் ஒர சிறுவன் என்ற பிரச்சினையை (ஜூவினிலிடி) எழுப்பினார். ஆனால் கோர்ட் அது பற்றிய விசாரணைக்குப் பிறகு நிராகரித்துவிட்டது. நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய 8 நாட்கள் அவகாசம் மிகவும் குறைவென்றும் வழக்கறிஞர் காஸ்மி கோரிய 5 வாரங்கள் மிகவும் நியாயமான தென்றும் திரு. சுப்பிரமணியம் வாதாடினார். மேலும் நீதி என்பது தரப்படவேண்டியது மட்டுமல்ல, தரப்பட்டுள்ளது என்பது தெரியவும் வேண்டும், எனவே காஸ்மிக்குத் தரப்பட்ட குறைந்த கால அளவு இந்தத் தத்துவத்தைப் பொய்யாக்கிவிட்டது, அதனால் நேர்மையான விசாரணையைப் பாதித்து விட்டதென்றும் வாதாடினார். காஸ்மிஐ நியமனம் செய்யும் போதே அவரது அந்தஸ்து பற்றிக் கோர்ட்டுக்குத் தெரியுமென்றும், அவருக்கு ஏற்கெனவே உள்ள கடமைகளைத் தக்கபடி திருத்தியமைத்துக் கொள்ளக் கால அவகாசம் தேவைப்படுமென்பதும் கோர்ட்டுக்குத் தெரியுமென்றும் சுப்ரமணியம் குறிப்பிட்டார். எனவே விசாரணையின் போக்கு இதனால் பாதிக்கப்பட்டு, வழக்கறிஞருக்கும் நியாயமான கால அவகாசம் தரப்படாததால் இதை நேர்மையான விசாரணை என்று கூறமுடியாதென்றும் வாதிட்டார்.
தனது வாதத்துக்கு ஆதரவாக, இந்த நீதிமன்றத்தில் நடந்த ஓவாய்ஸ் வெஸ்சஸ் உ.பி. வழக்கில், ஒரு புதிய வக்கீல் அவகாசம் கோரத் தயங்கலாம் என்பதால் நீதிமன்றமே அவருக்குத் தேவையான கால அவகாசம் தந்து வழக்குக்குத் தயாராக உதவ வேண்டுமென்று கூறியதைச் சுட்டிக் காட்டினார். (ஆனால் இந்த முடிவு வெளியிடப்படவில்லை) மேலும் பஷீரா வெஸ்சஸ் உ.பி. வழக்கையும் மேற்கோள் காட்டினார். இந்த வழக்கில் ஒரு புதியவரை ஒரு மனுதாரன் சார்பில் நியமித்த அதே நாளில் கீழ் நீதிமன்றம் விசாரணையை உடனே, அன்றே தொடங்கியது. எனவே இந்த நீதிமன்றம் அவருக்கு அளிக்கப்பட்ட அவகாசம் போதாது என்று அந்தத் தீர்ப்பை நிறுத்தி, மீண்டும் மறுவிசாரணை செய்யுமாறு கீழ் நீதி மன்றத்துக்கு உத்தரவிட்டது. இது தவிர ரஞ்சோட் மாதூர் வதூவா வெஸ்சஸ் குஜராத் மாநில வழக்கு ஒன்றையும் திரு. ராமச்சந்திரன் சுட்டிக் காட்டினார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞருக்கு, வழக்கைத் தயார் செய்ய போதிய கால அவகாசம் தரப்பட்டுள்ள போதிலும், குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தனது வக்கீல் மீது நம்பிக்கை இருக்கிறதா, தனக்காக வாதாட அவருக்கு போதிய அவகாசம் மற்றும் வழக்கு பற்றிய குறிப்புகள் உள்ளதா என்ற விஷயத்திலும் நம்பிக்கை உள்ளதாயென்று நீதி மன்றங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டுமென்று கூறியிருந்தது.
திரு காஸ்மி மனுதாரன் சார்பில் வாதாட 2009 ஏப்ரல் 16ம் தேதி நியமிக்கப்பட்டது. 2009 ஏப்ரல் 21ம் தேதி அவர் தனது விண்ணப்பத்தை தாக்கல் செய்தார். கோர்ட் அவருக்கு அளித்த 8 நாள் அவகாசம் நியாயமற்றது என்று கூற முடியாது. இந்த 8 நாட்களில் இடையே 2-3 நாட்கள் மனுதாரனின் ஜீவினிலிடி பற்றிய விசாரணை நடைபெற்றதும் உண்மை. ஆனால் அதுவே மனுதாரன் வக்கீலுக்குக் கால அவகாசம் தரப்படவில்லை என்று அர்த்தமாகாது.
திரு சுப்பிரமணியம் எங்களுக்கு ஒரு பட்டியல் கொடுத்தார். அதில் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது, எத்தனை மணி நேரம் கோர்ட் விசாரணை நடந்தது என்ற விவரங்கள் இதில் அடங்கியுள்ளது. இநதப் பட்டியலை ஆராய்ந்ததில், திரு. காஸ்மிக்கு தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்குத் திருப்தி அளிக்கிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் திரு. காஸ்மி அவர்களே தன்கு போதிய அவகாசம் தரப்படவில்லை என்று புகார் கூறவே இல்லை. நீதிமன்ற ஆவணங்களைப் பார்க்கும்போது காஸ்மி சாந்தமானவர் ல்ல என்று தெரிகிறது. வழக்கின் பின் கட்டங்களில் காஸ்மி பல ஆட்சேபனைகளை எழுப்பினார். வழக்கின் போக்கில் நீதிமன்றம் மேற்கொண்ட முடிவுகளை கடுமையாக உரத்த குரலில் எதிர்த்துள்ளார். ஆனால் தனக்குப் போதி கால அவகாசமே தரப்படவில்லைஎன்று எப்போதும் கூறவில்லை.
மேலும் சில முக்கியமான காட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய, விசாரணையின் போது திரு. காஸ்மி (நீதிபதியிடம்) கால அவகாசம் கோரினார் என்று தெரிய வருகிறது. பல சந்தர்ப்பங்களில் நீதி மன்றம் அவரது வேண்டுகோளை அனுமதித்துள்ளது. எனவே, குற்றவாளியின் தரப்பில் அவனது வழக்கைத் தயார் செய்யத் தேவையான அவகாசம் தரப்படவில்லை, அவ்வாறு அவகாசம் தரப்படாமையால், குற்றவாளிக்கு நீதி மறுக்கப்பட்டு விட்டது என்ற ராமச்சந்திரனின் வாதத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை
மனுதாரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முழுமையாக நிரூபிக்க அரசு தவறிவிட்டது என்ற ராமச்சந்திரனின் வாதங்கள் மிகவும் பலவீனமாகவுள்ளது. ஆனால் அவரது வாதங்களைக் கேட்க நாங்கள் தயாராகவே இல்லை என்று அவரே முடிவு செய்து கொண்டு, பிராசிக்யூஷன் வாதங்களை வித்தியாசமான வழிகளில் மறுக்க முயல்கிறார்.
ஒப்புதல் வாக்குமூலம் தன்னிச்சையானதல்ல- அதைப் பரிசீலிக்காது நிராகரிக்க வேண்டும்
மனுதாரனின் ஒப்புதல் வாக்குமூலம் தன்னிச்சையானதல்ல, ப்ராசிக்யூஷன் தனது தேவைக்கேற்ப உருவாக்கியது என்று ராமச்சந்திரன் கூறுகிறார். வாக்குமூலத்தின் மொழியமைப்பு, தொனி மற்றும் போக்கு ஆகிய அம்சங்களைக் காணும் போது, அது தன்னிச்சையாகனதல்ல என்பதையே காட்டுகிறது. அதில் காணப்படும் பல அம்சங்கள், புலன் விசாரணைக் குழுவின் தேவைகளுக்கேற்பவே அது தயாரிக்கப்பட்டுள்ளதென்று தெரிகிறது. அது தேவைக்கு அதிகமாக நீளமாகவுள்ளது, தேவையற்ற விபரங்கள் அதில் உள்ளன. சம்பந்தமில்லாமலும் இருக்கிறது, எந்தக் குற்றச்சாட்டுக்காக வாக்குமூலம் வாங்கப்படுகிறதோ, அதற்கு முற்றிலும் தொடர்பற்றதாக இது உள்ளது என்பது இவரது வாதம்.
இவரது வாதம் இதுவே. மனுதாரன் பிறந்த கிராமம், முகவரி, அவரது பிள்ளைப் பிராயம் ஆகிய விபரங்களோடு, மனுதாரனின் ஒப்புதல் வாக்குமூலம் ஆரம்பமாகிறது. அவனது தந்தையின் மொபைல் போன் எண், பெற்றோர் பெயர், சகோதர சகோதரிகள், திருமணமான அண்ணன், அக்கா விபரங்கள், தாய் வழி, தந்தை வழிஉறவுகள், இவர்களது முகவரிகளுடன் ஒப்புதல் வாக்குமூலம் ஆரம்பமாகிறது. மேலும், அத்தை, மாமா என்று உறவுப் பட்டியல் விபரம் தொடர்கிறது. ஜிகாதி குறிக்கோளுடன் லஷ்கர் - ஈ - தொய்பா இயக்கத்துடன் இவர் சேர்வதற்கு பல காலம் முன்பாகவே இந்த .றவுகளை மனுதாரன் பிரிந்து விட்டான். எனவே மும்பை பயங்கரவாதத்தாக்குதல் விஷயத்துக்கு இந்த விபரங்கள் வாக்குமூலத்துக்குத் தேவையில்லை. மேலும் இந்த வாக்குமூலத்தில் மனுதாரனின் அபரிதமான ஞாபக சக்தி தெரிகிறது. உறவினர்கள் பற்றி நீண்ட அட்டவணை கொடுத்துள்ளது வியப்பாக இருப்பதாக ராமச்சந்திரன் வாதித்தார். அவர்கள் வாழுமிடங்கள், அவர்களது செல்லப் பெயர்கள், தெருவின் பெயர்கள், அவர்களுக்கு ஜிகாதி குழுவினர் கொடுத்த இந்த பெயர்கள் ஆகிய விபரங்களைப் பார்க்கும்போது நம்பவே முடியாத ஞாபக சக்தி தெரிகிறது. மேலும் மனுதாரன் சென்று வந்த ஜிகாதி முகாம்கள், பிரயாண காலம், பிரயாணம் செய்த வாகனங்கள், சென்ற இடத்தில் வாசலில் யாøச் சந்தித்தான், உள்ளே யாரைச் சந்தித்தான் என்ற விபரங்களையெல்லாம் மனுதாரன் தெரிவித்துள்ளான். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அல்லது பயிற்சி முகாமுக்கு அனுப்பப்படுகையில் அவனிடம் தரப்பட்ட சீட்டு விபரம் போன்ற விஷயங்கள் வாக்குமூலத்துக்கு முற்றிலும் அவசியமானவை என்று வாதித்த ராமச்சந்திரன், மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்காக வந்தவன், ஒரு தூண்டுதல் இல்லாமல் இப்படி வாக்குமூலம் தரமாட்டான் என்று அவர் வாதாடினார்.
அவரது வாதத்தில் மேலும் தெரிவித்ததாவது - வாக்குமூலம் அளித்த மனுதாரன் ஒரு அரைகுறைப் படிப்பாளி, முரடன், அவன் அளித்துள்ள வாக்குமூலம் முறையாக, கோர்வையாக நல்ல வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இது உண்மையான நேர்மையான வாக்குமூலமாக இருக்க முடியாது. இந்த வாக்குமூலம் மனுதாரனின் பாகிஸ்தான் பஞ்சாப் மாநில, ஒகாரா மாவட்டம், திபல்பூர் தாலுகா, பரீத்கோட் கிராமத்தில் தொடங்கி, மும்பை வினோரி சௌபாத்தியில் அவன் கைதாகும் வரையில், இடையில் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்கள் வரிசை வரிசையாகக் கோர்வையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. மனுதாரனை போன்ற குறைந்த கல்வியே பெற்றுள்ள ஒருவன் வாய்மொழியாக ஒரு வாக்குமூலத்தை அளிக்கும் போது, அங்குமிங்கும் முன் பின்னாகத்தான் சம்பவங்களைக் கூறுவானே தவிர, அதில் கோர்வை இருக்க முடியாது. ஆனால் மனுதாரனின் இந்த வாக்குமூலம், கோர்ட்டில் சமர்ப்பித்தது போல இந்த நியதியை ஒட்டியதாக இல்லையென்று ராமச்சந்திரன் வாதாடினர்.
அடுத்து வாக்குமூலத்தில் காணப்படும் சில சொற்களை அவர் சுட்டிக் காட்டினார். இது போன்ற வார்த்தைகளை மனுதாரனால் சாதாரணமாக உபயோகிக்க முடியாது. எனவே இவை அவனது சொந்த வார்த்தைகள் அல்ல என்று அவர் குறிப்பிட்டார். உதாரணமாக அவனது வாக்குமூலத்தை 2009 பிப்ரவரி 18ம் தேதி பதிவு செய்த மாஜிஸ்ட்ரேட் திருமதி சாவந்த் வாகுலே (பிடபிள்யூ 218)யின் சொற்களை இவர் சுட்டிக் காட்டுகிறார். அவரது 14-வது கேள்வியில், அவனது வாக்குமூலத்துக்கான குற்றம் என்ன என்று கேட்கிறார். அவன், மும்பையில் நடந்த ஃபிடாயின் தாக்குதலை தனது கூட்டாளிகளுடன் 2008 நவம்பர் 26ம் தேதி நடத்தியது பற்றியும், இந்தத் தாக்குதல் பின்னணியில் உள்ள ஸாஜிஷா பற்றியும் வாக்குமூலம் தர விரும்பியதாகக் கூறியதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த ஸாஜிஷா என்ற உருதுச் சொல்லை ஆங்கிலத்தில் சுமாராக "சதி' என்று மொழிபெயர்க்கலாம். ஆனால் இதற்கு எதிர்மறையான அர்த்தமும் உள்ளது. அதாவது, மனுதாரனை பொறுத்தவரையில், இதற்கான தயாரிப்பு, பயிற்சி மற்றும் தாக்துல் என்பது ஒரு தேசபக்திக்கடமை, சதி அல்ல. இந்த வாக்குமூலத்தில் முசாபராபாத் பயிற்சி முகாம் பற்றிய பகுதியை அவர் சுட்டிக் காட்டினார். இந்த முசாபராபாத் பகுதியை மனுதாரன் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் இருப்பதாக கூறியதாகப் பதிவாகியுள்ளது. இந்தியர்கள் மட்டுமே இப்பகுதியை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் எஜன்பார்களே தவிர, பாகிஸ்தானியர்கள் இதை ஆசாத் காஷ்மீர் என்றுதான் குறிப்பிடுவது வழக்கமென்றும், எனவே மனுதாரன் ஸாஜிஷா என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்க முடியாதென்றும் ராமச்சந்திரன் வாதாடினார். அதேபோல பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்ற சொல்லை அவன் பயன்படுத்தியிருக்க முடியாதென்றும், வாக்குமூலத்தில் கணப்படும் பிறசொற்களையும் அவன் பயன்படுத்தியிருக்க முடியாதென்றும் வாதாடினார்.
திரு. ராமச்சந்திரன் தனது வாதத்தில் மேலும் கூறியதாவது - (மும்பை சம்பவம்) இது மாதிரியான, காரியங்களில் ஈடுபடுத்தப்படுவோருக்குச் சில, வரம்புகளுக்குட்பட்ட செய்திகள் மட்டுமே தெரிவிக்கப்படும். அவர்கள் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன என்ற முக்கியமான விஷயங்களே கூறப்படும். காரணம் இவர்களது பாதுகாப்பு (பின்னணியில்) இருக்கும் பெரிய கூட்டத்தின் பாதுகாப்பு, மற்றும் சதித்திட்டத்தின் வெற்றி ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். ஆனால் இந்த வழக்கில் பயிற்சி காலத்தில் மனுதாரன் மிகவும் தாராளமாகப் பெரியவர்-சின்னவர் பேதமின்றி அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளான்; அவர்களது அந்தஸ்து பற்றி அவனுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது; இவர்களது கூட்டத்தில் யார் யார் தலைமைக்கு வாரிசுகள் போன்ற விபரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் மனுதாரன் இந்தச் சட்டத்தின் செய்திப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டது, அங்கு ஜரார்ஷா என்பவரே செய்திப் பிரிவின் தலைவராக அறிமுகப்படுத்தப்பட்ட விஷயம் வாக்குமூலத்தில் இடம் பெற்றுள்ளதையும் திரு. ராமச்சந்திரன் ஒரு உதாரணமாகச் சுட்டிக் காட்டினார்.
தனது பயிற்சிக் காலத்தில் பாகிஸ்தானில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மனுதாரன் ஒன்று விடாமல் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதை ராமச்சந்தினர் தனது வாதத்தில் சுட்டிக் காட்டினார். வேறு சிலர் பேசிய உரைகளை அவர் நினைவு கூர்ந்தது மட்டுமின்றி அந்த நீண்ட வாக்கியங்களை மேற்கோள் குறியிட்டு, மாஜிஸ்ட்ரேட் பதிவு செய்திருப்பதையும் அவர் எடுத்துக் காட்டினார். எனவே, வாக்குமூலத்தை நிராகரித்து இந்த அம்சங்களே போதுமானவை என்று வாதாடினார்.
மேலும், பல இடங்களில் குழுவினருக்கு இடையே நடந்த விவாதங்களில், மனுதாரன் ஒரு கேள்வி கேட்பதாகவும் அதற்கு அவன் பெற்ற பதில்கள் ப்ராசிக்யூஷனுக்கு அனுகூலமாக அமையும் முறையில் அமைந்துள்ளதென்றும் ராமச்சந்திரன் சுட்டிக் காட்டினார். நன்றாக ஊன்றி கவனித்தால், வாக்குமூலத்தின் இந்தப் பகுதிகள் தேவையற்றது, ஆனால் ஜோடிக்கப்பட்டுள்ளதென்றும் அவர் வாதாடினார். உதாரணமாக, இந்தக் கூட்டத்திற்கு தரப்பட்ட மொபைல் போன்களுக்கான சிம் கார்டுகள், இந்தியாவில் சிலரை ஏமாற்றிப் பெறப்பட்டது போன்ற விபரங்கள், வாக்குமூலத்துக்குத் தேவைப்படாதது என்பது மட்டுமில்லாது, இது ஜோடிக்கப்பட்டதென்று அவர் வாதாடினார்.
குற்றவாளிகள் 2 மற்றும் 3, ஃபஹீம் மற்றும் சபாவுதீன் இருவரும் வைத்துக் கொண்டிருந்த வரைபடங்கள், அவர்களே தயாரித்தது என்று வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் ஜோடனையே என்பது இவரது வாதமாகத் தொடர்ந்தது. வாக்குமூலத்தில் இது மூன்று இடங்களில் காணப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் இந்தக் குறிப்பு, அந்த இடத்துக்குரிய நிகழ்ச்சிகள் பொருத்தமில்லாமல் உள்ளது.
குபேர் படகு நிகழ்ச்சியில் இருந்து, வினோலி சௌபாத்தியில் மனுதாரன் கைது செய்யப்பட்ட வரையில், மனுதாரன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ள ஒவ்வொரு செய்தியும், விசாரணைக் குழுவினர் சேகரித்துள்ள விஷயங்களை உறுதிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. மனுதாரனும் இவனது கூட்டாளி அபு இஸ்மாயில் இருவரும் ஸ்கோடா காரை அவரது உரிமையாளரிடமிருந்து துப்பாக்கி முனையில் பறித்தது, எங்கே போகிறோம் என்று மனுதாரன் கேட்டது, மலபார் ஹில்ஸ் பகுதிக்குச் செல்வதாக அபு இஸ்மாயில் பதிலளித்தது போன்ற வாக்குமூலப் பகுதிகளை ராமச்சந்திரன் சுட்டிக் காட்டினார். பின்னர் அவர்கள் கடற்கரைச் சாலை வழியாகச் சென்றார்கள். மற்ற இரண்டு குற்றவாளிகள் தயாரித்த வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ள பாதை இதுவேயென்று மனுதாரன் அப்போது தெரிவித்திருக்கிறான். இந்த இருவரும் மலபார் ஹில்சுக்குத்தான் போகிறார்கள் என்றால், எங்கே செல்கிறோம் என்று அபு இஸ்மாயில் கூறுவது நம்பவே முடியாத செய்தியாகும். இந்த பகுதி முழுவதுமே உண்மையல்ல, பிராசிக்யூஷன் தனக்குச் சாதகமாகக் காலியிடங்களைப் பூர்த்தி செய்து அமைத்துக் கொண்டு, திணிக்கப்பட்ட செய்தி என்று ராமச்சந்திரன் வாதாடினார்.
தனது தொடந்த வாதத்தில், வாக்குமூலத்தில் காணப்படும் மேலும் இரண்டு பகுதிகளை ராமச்சந்திரன் சுட்டிக் காட்டினார். ஒன்று பத்வார் பார்க் பகுதியில் இறங்கியவுடன் இந்தப் பயங்கரவாதிகள் இருவருடன் சண்டையிட்டது, இரண்டாவது தாங்கள் சிஎஸ்டி செல்வதற்காக ஏறிவந்த டாக்சியில் மனுதாரன் வெடிகுண்டு வைத்தது. ப்ராசிக்யூஷன் காட்சியான பரத் தத்தாத்ரேயா தாமூர் என்பவரின் (பிடபிள்யூ 28) சாட்சியத்தை உறுதி செய்வதற்காக ஜோடிக்கப்பட்டது என்றும், இந்தச் சாட்சியின் கண்ணியத்துக்கு ஆதரவாக ஏதுமில்லை என்று அவர் வாதாடினார். விலி பார்லேயின் குண்டுவெடிப்பு டாக்சி டிரைவர் கொல்லப்பட்ட செய்தி ஜோடிக்கப்பட்டதென்றும், இந்தக் குண்டு வெடிப்புக்கு வேறு சாட்சியங்கள் ஏதுமில்லை என்றும் அவர் வாதாடினார்.
414. தான் கைது செய்யப்பட்டதும் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க மனுதாரன் விரும்பினான் (பிடபிள்யூ 218 - மாஜிஸ்ட்ரேட் திருமதி 2009 பிப்ரவரி 29ம் தேதி அவர் கேட்ட 9வது கேள்விக்கு மனுதாரன் அளித்த பதிலைக் காண்க). மனுதாரன் ஒப்புதல் வாக்குமூலம் தர விரும்பினான் என்பது தனக்கு 2008 டிசம்பர் முதல் வாரத்தில்தான் தரிய வந்ததாகத் தலைமைப் புலன்விசாரணை அதிகாரி ரமேஷ் பத்மநாப் மஹாலே (பிடபிள்யூ 607) தனது சாட்சியத்தில் கூறியுள்ளார். ஒரு மாஜிஸ்ட்ரேட் முன்பாக வாக்குமூலம் அளிக்க அவன் விரும்பினான் என்று (பாரா எண் 25) தனது சாட்சியத்தில் கூறியுள்ளார். ஆனால் 2009 பிப்ரவரி 17ம் தேதிக்குப் பிறகு, நீண்ட தாமதத்துக்குப் பின்பே மனுதாரன் மாஜிஸ்ட்ரேட் முனபு ஆஜர் படுத்தப்பட்டான். அதற்குள் விசாரணை முடிந்துவிட்டது. குற்றப்பத்திரிகையும் 25.02.2009ல் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. புலன் விசாரணை முடிந்து விட்ட பின்னர், விசாரணைக் காலத்தில் தாங்கள் கண்ட உண்மைகளை மனுதாரன் உறுதிப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டிருக்கிறான் என்று ராமச்சந்திரன் தனது வாதத்தில் கூறினார்.
415. தான் எடுத்துக் காட்டிய காரணங்களைக் கொண்டு இந்த நீதிமன்றம் மனுதாரனின் வாக்குமூலத்தை முழுமையாக நிராகரிக்க வேண்டுமென்றும், அப்படி அதைப் புறக்கணிக்கும் பட்சத்தில் குறைந்த பட்சம், குபேர் படகிலும், விலிபார்லேயில் நடந்த டாக்சி வெடிகுண்டு கொலைக் குற்றங்களுக்காகவும் அவர் மீது தண்டனை விதிக்க முடியாதென்று ராமச்சந்திரன் வாதாடினார்.
416. மனுதாரனின் ஒப்புதல் வாக்குமூலம் தன்னிச்சையானதல்ல என்ற திரு. ராமச்சந்திரனின் வாதங்களை, விளக்கங்களை யொட்டி, நாங்கள் அவனது வாக்குமூலத்தைப் பலமுறை படித்துப் பார்த்தோம். ஆனால் அது தனிச்சøயானதல்ல என்ற காரணத்தை öாண்டு, அதைத் தூக்கியெறிந்து விடவேண்டுமென்ற வாதத்தை எங்களால் ஏற்க முடியவில்லை. மேலெழுந்த வாரியாக பார்த்தால் திரு. ராமச்சந்திரனின் விமர்சனங்கள் ஏற்புடையது போல தோன்றும். ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தாலும் கூட இந்த வாதத்தில் வலிமையில்லையென்பது புலப்படும். இதுபற்றி மேலும் ஆராய்வதற்கு முன்னால் திரு. ராமச்சந்திரன் சுட்டிக் காட்டிய மற்ற இரண்டு குற்றவாளிகளைப் பற்றிய குறிப்பு மூன்று இடங்களில் பிரஸ்தாபிக்கப் பட்டிருப்பது பற்றிய ஆட்சேபனை நியாயமானதே. வாக்கு மூலத்தின் இந்தப் பகுதி மிகவும் அதிருப்தியளிப்பதாகவுள்ளது. அபு இஸ்மாயில் மற்றும் மனுதாரன் வினோலி சௌபாத்தியில் பிடிபடுவதற்கு முன்னால் மலபார் ஹில்ஸ் நோக்கிப் போவதாக அமைந்த வாக்குமூலப் பகுதியும் தெளிவாக இல்லையென்பதே எங்கள் கருத்துமாகும். குற்றவாளிகள் 2 மற்றும் 3 ஆகியோர் தயாரித்ததாகக் கூறப்படும் வரைபடங்களைப் பொருத்திப் பார்க்கும் முயற்சியாக ஒருவேளை இருந்திருக்கலாம். இவை தவிர, வாக்குமூலத்தின் விரிவான பிற பகுதிகள் சம்பந்தப்பட்ட வரையில், அது தன்னிச்சையாகவே தரப்பட்டுள்ளது. வெளியார் வற்புறுத்தல் மற்றும் வெளியார் மிரட்டல்கள் இல்லையென்பதில் எங்களுக்கு எந்த விதமான சந்தேகங்களும் இல்லை, சந்தேகப்படக் காரணங்களும் இல்லை.
417. திரு. ராமச்சந்திரனின் ஆட்சேபனைகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மனுதாரனன் பெற்றோர்கள் பற்றி செய்திகள், அவனது உறவினர்கள், முகவரிகள், மொபைல் போன் எண்கள், பாகிஸ்தானில் உள்ள பல்வேறு இடங்களைப் பற்றிய குறிப்புகள், பாகிஸ்தான் அதிகாரிகளøக் குறிவைத்துப் பேசப்பட்டதாகவே நாங்கள் கருதுகிறோம். மனமார, அல்லது தன்னையறியாமலோ தனது பாகிஸ்தானி குடியுரிமையை அவன் காட்டியுள்ளான். தான் கைது செய்யப்பட்டவுடன் அவன் இரண்டு கடிதங்கள் - ஒன்றில் தேதி குறிப்பிடப்பட்வில்லை, மற்றொன்று 2008 டிசம்பர் 28ம் தேதி கொண்டது. இரண்டுமே பாகிஸ்தான் தூதரகத்துக்கு, தனக்கு ஒரு பாகிஸ்தான் வழக்கறிஞர் வேண்டுமென்று கேட்டு எழுதப்பட்டவை. இது கூடுதல் முதன்மை மாஜிஸ்ட்ரேடிம் தரப்பட்டுள்ளது. இந்த இரண்டு கடிதங்களும் பெறப்பட்டதற்கான ஒப்புதலும் தரப்படவில்லை. அவனுடைய சொந்த நாடு அவனை கைவிட்டு விட்டது. 2009 பிப்ரவரி 20ம் தேதி மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் அவன் அளித்த வாக்குமூலத்தில் தான் பாகிஸ்தானில் பிறந்தவன், அந்த நாட்டுக் குடிமகன் என்று தெரிவித்துக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளான். அதை யாரும் மறுக்க முடியாது.
418. வாக்குமூலத்தின் அமைப்பு முறையில் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவங்கள், பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் இயற்கையாக இல்லை என்ற கருத்தைப் பற்றி ஆராயலாம். பல மாதங்கள் போலீஸ் காவலில் இருந்த பின்னரே, மனுதாரன் தனது வாக்குமூலத்தை அளித்துள்ளான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பல்வேறு கட்டங்களில் நடத்தப்பட்ட போலீஸ் விசாரணையில் மனுதாரன் மனதைத் திறந்திருக்கக்கூடும். இதே செய்திகளை, இதே வரிசை வழியில் போலீஸாரிடமும், அவன் தெரிவித்திருக்கக்கூடும். தொடர்ந்த போலீஸ் விசாரணைக் காலத்தில் அவன் தனது பழைய வாழ்க்கையில் மிகவும் சிறியதாகக் கருதப்படம் செய்திகளையும் நினைவு கவர்ந்திருக்கலாம். குறிப்பாக மும்பை தாக்குதலுக்கு ஆயத்தமான பயிற்சி விஷயங்களை அவன் தெரிவித்திருக்கலாம் (போலீஸிடம் தரப்படும் வாக்குமூலங்கள் கிரிமினல் நடைமுறைச் சட்டப்படி செல்லத்தக்கதல்ல. சாட்சியங்கள் சட்டப்படியும் ஏற்கத்தக்கதல்ல என்பதை விரிவாக முன்பே விவாதித்திருக்கிறோம்) ஆனால் வாக்குமூலம் அளிக்க மனுதாரன் மாஜிஸ்ட்ரேட்டிடம் சென்றபோது அவனது எண்ணங்கள் தெளிவாக இருந்திருக்கக்கூடும். திரு. ராமச்சந்திரன் எடுத்துக் காட்டிய சில வார்த்தைகளை அவர் அவனையறியாமலேயே பேசியிருக்கலாம் அல்லது அவனது பேச்சு முறையாகவும் இருக்கலாம். எனவே, அவனது ஸாஜிஷா (சதி) அல்லது பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் போன்ற சொற்கள் உபயோகிப்பில் நாங்கள் எந்த வாய்ப்பையும் காணவில்லை.
419. லஷ்கர்-ஈ-தொய்பா உறுப்பினர்கள், இயக்கத்தில் அவர்களுக்குள்ள அந்தஸ்து, அவர்கள் பொறுப்பு, கடமைகள் பற்றி மனுதாரன் பேசியிருப்பதிலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. மனுதாரன் கூலிப்படை ஆளில்லை. இந்த இயக்கத்தில் முழு நம்பிக்கை, விசுவாசத்தோடு, அர்ப்பணிப்புடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவன். எனவே இயக்கத்திலுள்ள ஒவ்வொருவரைப் பற்றியும் பயிற்சிக் காலத்தில் அவன் அறிந்துள்ளான். அவனை உயிரோடு பிடிக்க வேண்டுமென்று யாரும் திட்டமிடவில்லை. மற்ற 9 பயங்கரவாதிகளுடன் அவனும் கொல்லப்பட்டிருக்கலாம். அவனது மரணத்தோடு எல்லாமே முடிந்து போயிருக்கும். எந்தச் சதித் திட்டமுமே வெளிச்சத்துக்கு வராது மறைந்து போயிருக்கும். அவனை உயிரோடு பிடித்து, இயக்கத்தில் .ள்ளவர்கள் பெயர்கள், அவர்களது குறிப்பிட்ட செயல்பாடுகள், தொலைபேசிச் செய்திகளின் பதிவுகள் பாதுகாப்பு படையினரை ஊக்குவித்து இந்த செய்திகளைச் சேகரிக்க உதவியது என்பது பாராட்டுக்குரிய விஷயம். வாக்குமூலத்தில் மேற்கோள் குறியிட்டு மாஜிஸ்ட்ரேட் பதிவு செய்துள்ள பகுதிகள் அவனது சொந்த வார்த்தைகள். ஒரு நீண்ட வாக்கியத்தில், மனுதாரன் இன்னார் இப்படிப் பேசினார்கள் என்று சொல்லியிருக்கலாம். அதை மாஜிஸ்ட்ரேட் மேற்கோள் குறிப்பிட்டுக் காட்டிப் பதிவு செய்திருக்கலாம். இவை மனுதாரனே பேசிய வார்த்தைகளாக இருந்தாலும், மற்றவர்கள் பேச்சு இவன் மூலமாக வந்துள்ளது. மேலும் வாக்கு மூலம் போலீஸ் விசாரணையை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது என்று கூறுவது, அவர்களின் நல்ல பணியைப் பழித்துப் பேசுவதாகும். அவனது வாக்குமூலம் புலன் விசாரணையை உறுதிப்படுத்துவதாக இருந்தால், அது விசாரணைக் குழுவுக்கு ஒரு பெருமையாகுமே தவிர, விசாரணையை உறுதிப்படுத்தவே அடைந்தது என்று கூறமுடியாது.
420. 2008 டிசம்பர் ஆரம்பத்திலேயே மனுதாரன் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க விரும்பினாலும் 2009 பிப்ரவரி 17ம் தேதியில் அவன் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டான் என்பதிலும் நியாயம் உள்ளது. தங்களது விசாரணைக்கு அவன் அவசியம் தேவை என்ற நிலையில் போலீஸ் தங்களது காவலில் இருந்து அவனை விடுவிக்க முடியாது. அப்போது விசாரணை முடியவில்லை. பல விஷயங்கள் பாக்கியிருந்தன. ஒப்புதல் வாக்குமூலத்துக்காக மனுதாரன் கிரிமினல் நடைமுறைச் சட்டம் 164 பிரிவின் கீழ் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மாஜிஸ்ட்ரேட் அவனை நீதிமன்றக் காவலுக்கு மட்டுமே அனுப்ப முடியுமே தவிர போலீஸ் காவலுக்கு அனுப்ப முடியாது. எனவே இத்தகையதொரு சந்தர்ப்பத்தில், தங்களது விசாரணைகள் முடிந்த பின்னரே, அவனது போலீஸ் காவல் மேலும் தேவையில்லை என்று உறுதி செய்து கொண்ட பின்னரே, மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தினார்கள் என்றால் அது நியாயமானதே.
421. திரு. ராமச்சந்திரனின் வாதங்களைச் சற்று ஒதுக்கிவைப்போம். ஒப்புதல் வாக்குமூலம் தன்னிச்சையானதே என்பதற்கு, அவனது வார்த்தைகளே நிரூபணமாக உள்ளது. விசாரணை நீதி மன்றத்தின் தீர்ப்பின் ஆரம்பப் பகுதியில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரன் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட போது அவர் அவனிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டுமென்று எப்போது அவனுக்குத் தோன்றியது என்று கேட்க, கைது செய்யப்பட்ட உடனேயே அந்த எண்ணம் வந்ததென்று கூறியுள்ளான். மேலும் தான் செய்த எந்தச் செயலுக்கும் வருத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளான். வாக்குமூலத்தில் இன்னொரு கட்டத்தில், ஏன் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறாய் என்று மாஜிஸ்ட்ரேட் கேட்க, மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் தான் இருக்க விரும்பியதாகப் பதிலளித்துள்ளான். எனவே பயந்தோ பலவீனப்பட்டோ அல்லது ஒரு சலிப்பு உணர்வு காரணமாகவோ மனுதாரன் வாக்குமூலம் அளிக்க விரும்பவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. அவன் கண்களுக்கு அவன் ஒரு மாவீரன். அவனது ஒப்புதல் வாக்குமூலம் தன்னிச்சையானதல்ல என்று கூறுவதற்கில்லை. திரு. ராமச்சந்திரன் வாக்குமூலத்தின் தன்னிச்சை நிலை பற்றிக் கேள்வி எழுப்பிய போதிலும், அது உண்மையல்ல என்று கூறவில்லை.
422. இந்த இடத்தில் ஒரு செய்தியைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. விசாரணைக் கட்டத்தில் 58 ப்ராசிக்யூஷன் சாட்சிகள் விசாரிக்கப்பட்ட பின்னர், 2009 ஜூலை 29ம் தேதி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சவான் சாட்சியமளிக்கக் கூண்டின் அருகே வந்தார். அப்போது மனுதாரன் தனது வழக்கறிஞரிடம் பேச விரும்பினான். ஒரு அறை நிமிட நேர ஆலோசனைக்குப் பின்னர், அவனது வழக்கறிஞர் காஸ்மி மனுதாரன் நீதிமன்றத்தில் நேரிடையாகப் பேச விரும்புவதாகத் தெரிவித்தார். கோர்ட் அனுமதி தர, மனுதாரன் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகக் கூறினான். ஆனால் ஸ்பெஷல் பப்ளிக் ப்ராசிக்யூடர் இதை ஆட்சேபித்து, கிரிமினல் நடைமுறைச் சட்ட 229 விதியின் கீழ் இந்தச் சலுகை முடிந்து விட்டதென்று கூறினார். அவரது ஆட்@Œபனையைப் புறக்கணித்து, மனுதாரனுக்கு ஒரு (பாதுகாப்பு) எச்Œரிக்கையும் தந்து, அவனை நீதிமன்றம் @பŒ அனுமதித்தது.
423. இது ஒரு நீண்ட வாக்குமூலம். திரு. ராமச்Œந்திரன் குறிப்பிட்டது @பால ஒப்புதல் வாக்குமூலத்தில் உள்ள @கார்வையான அமைப்பு (மாஜிஸ்ட்@ரட் பதிவு öŒ#திருப்பது @பால) இதில் இல்லை. நீதிமன்றத்தில் மனுதாரன் Œத்ரபதி சிவாஜி டெர்மினல் ரயில் நிலையத்திலிருந்து கதையைத் தொடங்குகிறான். அவனும் அவனது கூட்டாளி அபு இஸ்மாயில் இருவரும் ஏ@க 47 துப்பாக்கியால் ”ட்டது, அபு இஸ்மாயில் கைக்குண்டுகளை பயணிகள் கூட்டத்தின் மீது எறிந்த விஷயங்களைத் தெரிவித்தான். அங்கிருந்து (சிஎஸ்டி) அவர்கள் வி@னாலி öŒளபாத்திக்குச் öŒன்றார்கள். அங்கு பிடிபட்டார்கள். பின்னர் கராச்சியிலிருந்து மும்பை வந்த கடற் பிரயாணம் பற்றிக் கூறினான். சிறிய படகில் தொடங்கி, அல்-ஹுøŒனி, கு@பர் ஆகிய பெரிய படகுகளுக்கு மாறியது, காற்றடைத்த ரப்பர் படகில் பத்வார் பார்க் வரை வந்த நிகழ்ச்சிகளைக் கூறினான். பின்னர் பாகிஸ்தானில் வெவ்@வறு இடங்களில் தான் பெற்ற பயிற்சிகளைப் பற்றிக் கூறினான். இதில் முக்கியமான அம்Œம் என்னவென்றால், மனுதாரன் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம், மாஜிஸ்ட்@ரட் முன்பு அளித்த வாக்குமூலத்தில் உள்ள நிகழ்ச்சிக் @கார்வை அமைப்பு இல்லாமலிருந்தது என்றாலும், தெரிவித்த தேதிகளில் வேறுபாடு ஏதுமில்லை என்பதை. தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் சகல நிகழ்ச்சிகளிலும் தன்னையே ஒரு மைய சக்தியாகக் காட்டிக் கொள்ளும் மனுதாரன், நீதிமன்றத்தில் பேசியபோது தன்னை ஒரு திரைமறைவு மனிதனாகவே காட்டிக் கொண்டிருக்கிறான். இந்தத் தாக்குதலில் தலைமை மற்றும் வன்முறைப் பெருமைகளை மற்றவர்களுக்கே உரிமையாக்குகிறான். தனது சாதனையாக எதையும் கூறவில்லை. அபு இஸ்மாயிலுடன் இணைந்து மும்பையில் நடத்திய சம்பவங்களில் அவனுக்கே தலைமையை அளித்துத் தன்னைச் சாதாரணமாகவே காட்டிக் கொள்கிறான். குபேர் படகில் அதன் உரிமையாளர் அமர்சந்த் சோலங்கி-ஐக் கொலை செய்ததும் அபு ஸொஹெய் என்றும், அந்தப் படகு இஞ்சின் அறையில் தான் இல்லவேயில்லையென்றும் தெரிவித்துள்ளான். இந்தியாவைத் தாக்க அவனுக்குத் தரப்பட்ட பயிற்சி, சதித்திட்டங்கள், இந்த இயக்கத்தில் @மல் மட்டத்தில் .ள்ளவர்களின் அந்தஸ்து, அவர்களது பாகிஸ்தான் குடியுரிமைகள் ஆகிய விஷயங்களில், கஸாப் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் எந்தச் öŒ#தியும் விட்டுப் @பாகவில்லை.

நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையில் கையால் வரைந்த வரைபடங்கள் பற்றிக் குறிப்பு காணப்பட்டாலும், அவை எங்கிருந்து பெறப்பட்டது என்று öŒ#து ஏதுமில்லை. பஹீம் மற்றும் Œபாபுதீன் (குற்றவாளி 2, 3) இருவரு@ம இதை முறை@ய வரைந்து, இவர்களிடம் தந்தார்கள் என்பதற்குரிய குறிப்புகளும் இல்லை.நீதிமன்றத்தில் @பசிய@பாது மனுதாரன் தனது குடும்பத்தை பற்றி ஏதும் குறிப்பிடவில்லை@ய என்ற @கள்விக்குக் காரணம் @தடுவது கஷ்டமல்ல. அவனது வாக்குமூலம் 40வது பத்தியில் கோர்ட் இவ்வாறு பதிவு செய்துள்ளது.
"நான் குற்றத்தை ஒப்புக் கொள்ள விரும்பி@னன். பாகிஸ்தான் என்னை ஒதுக்கிவிட்டது. நான் அதனால் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. நான் பாகிஸ்தானியன் என்று பாகிஸ்தான் ஒப்புக் கொண்டு விட்டதாக அறிந்து கொண்@டன். ஆக@வ தன்னிச்øŒயாக என்மீது ”மத்தப்பட்டுள்ள குற்றச்Œாட்டுகளை ஒப்புக் கொள்கி@றன். நான் தனிச்øŒயாக@வ வாக்குமூலம் அளித்துள்@ளன். இதில் வெளியார் முயற்சி, நிர்ப்பந்தம் அல்லது öŒால்ல முடியாத காரணம் ஏதும் இல்லை.'மனுதாரனின் பாகிஸ்தான் குடியுரிமை ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டதால், தனது பாகிஸ்தான் உறவுகள் பற்றி@யா, குடும்ப விஷயங்கள் பற்றி@யா, அவர்களது முகவரிகள் பற்றியோ பேச வேண்டிய தேவை மனுதாரனுக்கு இல்லை.ஆனால் குற்றவாளியின் @வண்டுதலாகக் @காரப்பட்ட அவனது@பச்øŒ நீதிமன்றம் ஏற்கவில்லை. அது தெளிவற்றதாகவும், சில விஷயங்களை மட்டு@ம ஒப்புக் கொள்வதாக இருந்தபடியால், @கார்ட் அதை விலக்கி, விŒாரணையைத் தொடந்தது.மனுதாரன் தனது @கார்ட் வாக்குமூலத்தில் (கிரிமினல் நடைமுறைச் Œட்டம் 313வது விதியின் கீழ்ப் பதிவு öŒ#யப்பட்டது), இறுதியாக ப்ராசிக்யூஷன் வழக்கை முழுமையாக மறுத்துள்ள@தாடு, தனது முன்னைய வாக்குமூலங்களையும் மறுத்துள்ளான்.இந்த விவாதங்களை ஆராய்ந்து பார்க்கும் போது, மனுதாரன் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்தை அலட்சியம் செய்து ஒதுக்கி நிராகரிக்க வேண்டுமென்ற திரு. ராமச்சந்திரனின் வாதத்தை எங்களால் ஏற்க இயலவில்லை.மனுதாரன் மீதான சதிக் குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளதென்று கூறுவதற்கில்லையென்று திரு. ராமச்சந்திரன் கூறினார். அவன்மீது பெரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
1) இந்தியாவின் பல பகுதிகளிலும் வன்முறையைத் தூண்டி இந்திய அரசை நிலைகுலையச் செய்யும் முயற்சி,
2) இந்தப் பிரிவினைச் செயல்கள் மூலம் இந்தியாவில் உறுதியினைச் சீர்குலைக்கும் முயற்சி,
3) இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் பயங்கரவாதச் செயல்கள் மூலம் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பயன்படுத்திக் கொலை செய்தல், சொத்துக்களை அழித்தல் ஆகிய காரியங்களைத் தெரிந்தே வேண்டுமென்றே செய்தது,
4) இந்தியப் பொருளாதார வலிமையை அழிக்கச் சதி செய்தல்,
5) அயல் நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கொன்று, இந்தியச் சுற்றுலாத் துறைக்குக் களங்கம் ஏற்படுத்துதல்,
6) இந்தியாவில் மதரீதியாகவும் பிற வேற்றுமைகளைப் பயன்படுத்திபல்வேறு சமூகத்தினரிடையேயுள்ள நல்லிணக்கத்தை நாசப்படுத்துவது
ஆகிய குற்றச் சாட்டுகளை ராமச்சந்திரன் சுட்டிக் காட்டினார்.மனுதாரனின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பரிசிலனைக்கு எடுத்துக் கொள்ளாது புறக்கணித்தால், பிராசிக்யூஷன் அவன் மீது தொடுத்துள்ள குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கிடமில்லாதவை என்று ஏற்க முடியாது, ப்ராசிக்யூஷன் வற்புறுத்திக் கூறும் தொலைப்பேசி உரையாடல்களைக் கொண்டு, சதியை நிரூபிக்கும் சாட்சியங்களாகப் பயன்படுத்த முடியாதென்றும் திரு. ராமச்சந்திரன் வாதாடினார்.இந்த வாரத்தில் வலிமையிருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. மனுதாரனின் ஒப்புதல் வாக்குமூலம் தன்னிச்சையானது. அரசியல் சட்டரீதியாக மனுதாரனின் உரிமைகள் இந்தப் பதிவில் மீறப்படவில்லையென்பதையும் முதலில் பார்த்தோம். எனவே, மனுதாரன் மீதான் குற்றச்சாட்டுகளைத் தீர்மானிக்க அவனது ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்க முடியாது என்பதற்குக் காரணம் ஏதும் இல்லை. மேலும் இந்தத் தீர்ப்பின் ஆரம்பப் பக்கங்களில், சதித்திட்டம் பற்றிய சாட்சியங்களை விரிவாக மூன்று தலைப்புகளில் விவாதித்துள்ளோம்.
1) மனுதாரனின் ஒப்புதல் வாக்குமூலம்,
2) குபேர் படகு, காற்றடைக்கப்பட்ட ரப்பர் படகு, பயங்கரவாதக் குழு பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதல்கள், இரண்டு டாக்சிகளில் நடத்திய வெடி குண்டு தாக்குதல்கள்,
3) எல்லைக்கு அப்பாலுள்ளவர்களோடு இவர்கள் கொண்ட தொலைபேசிப் பதிவுகள்
எங்கள் பார்வையில் இந்த மூன்று தலைப்புகளின் மீது பெறப்பட்டுள்ள சாட்சியங்களே. மனுதாரனுக்கு எதிரான சதிக் குற்றச்சாட்டை நிரூபிக்கப் போதுமானது.மனுதாரனுக்கு எதிராகப் பேச்சுப் பதிவுகளை ஏற்கலாகாது என்ற திரு. ராமச்சந்திரனின் வாதத்தை இந்தக் கட்டத்தில் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இந்தப் பேச்சுப் பதிவுகள் 2008 நவம்பர் 27, நள்ளிரவில் 01 மணி 04 நிமிடத்துக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதேநாள் மனுதாரன் இரவு 12.30 மணிக்கு கைது செய்யப்பட்டுவிட்டான் என்று வாதாடினார்.
அதாவது பேச்சுப்பதிவுகள் மனுதாரன் போலீஸ் காவலில் இருந்த போது ஆரம்பமாகின்றன. அதாவது அவன் கைது செய்யப்பட்ட உடனேயே அவனுக்கும் பிற சதிகாரர்களுக்கும் இடையேயான தொடர்பு அறுந்து விட்டது. எனவே பிறகும் சதிக்கு அவன் ஒரு பங்காளியாக இருந்தான் என்று கூறமுடியாது என்பது இவரது வாதம். இந்தக் கட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிற சதிகாரர்களுக்கிடையேயான உரையாடலை மனுதாரனுக்கு எதிரான சாட்சியமாகக் கொள்ள முடியாது. இதை வலுப்படுத்த இதே நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடந்த அரசு மற்றும் நளினி வழக்கை அவர் ஆதாரமாகக் காட்டினார். இந்த வாதத்தில் வலிமையில்லை. தடா சட்டத்தின் 32வது பிரிவின் படி ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அவருக்கு எதிராக இருந்தாலும் அதை அதே வழக்கில் இன்னொரு ற்றவாளிக்கும் பொருத்திப் பார்க்கலாமா என்பது பற்றியதாகும். 1993 தடா சட்டம் 43 திருத்தத்தையொட்டி இந்தப் பிரச்சினையை நீதிமன்றம் பரிசீலித்தது. ஒரு ஒப்புதல் வாக்குமூலமே போதுமானதாக இருக்கும்போத அதை மற்றவருக்கும் எதிராக, அவர் கூட்டுக் குற்றவாளியாக இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது என்றும், அதை ஒரு ஒப்பு நோக்குத் துணைக் கருவியாக மட்டுமே, பிற சாட்சியங்களுக்கு ஆதரவாக மட்டுமே கொள்ளலாம் என்று இந்த நீதிமன்றம் முடிவு செய்தது. ஆனால் அரசு தரப்பில் சாட்சியங்கள் சட்டத்தின் 10வது பிரிவு (எவிடன்ஸ் ஆக்ட்) மிகவும் நீளமாக இருப்பதால் அதைக் கொண்டு ஒரு சதிகாரரின் வாக்குமூலமே, இந்தச் சட்டப் பிரிவின் மற்ற நிபந்தனைகளைத் திருப்தி செய்யும் பட்சத்தில் போதுமான சாட்சியமாகுமென்று வாதிடப்பட்டது. அரசின் இந்த வாதத்தை இந்த நீதிமன்றம் நிராகரித்து, பொதுவாக வாக்குமூலம் போலீஸ் காவலில் இருக்கும் போதே தரப்படுகிறது, அப்போது அவருக்குப்பிற சதிகாரர்களும் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது என்று எடுத்துக்காட்டி, அந்த வழக்குத் தீர்ப்பில் 111வது பாராவில் கீழ்கண்டவாறு கூறியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட குற்றவாளி, ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் சதிகாரன் என்ற நிலையிலிருந்து மாறுகிறானா, மாறிவிடுகிறானா, என்பது குறிப்பிட்ட வழக்குகளின் தன்மையையொட்டி அமைவதாகும். பொதுவாக, ஒரு சதிகாரனின் சதிக்கூட்ட சம்பந்தங்கள் அவன் கைது செய்யப்பட்டவுடன் முடிந்து போகிறது. ஏனென்றால் பின்னர் அவர்களது ஏஜெண்டாகச் செயல்படமுடியாது. ஆனாலும் சில அபூர்வமான வழக்குகளில் கைது செய்யப்பட்ட சதிகாரன் பின்னரும் கூட்டாளிகளோடு இணைந்து சதியைத் தொடரமுடியும் என்பது எங்களுக்குத் தெரியாததல்ல. இதற்காக ஒரு தனிச்சட்ட விளக்கத்தை உருவாக்க முடியாது என்று நாங்கள் சுருக்கமாகக் காட்டும் காரணம் இதுவே. இதைக் கொண்டே சதித்திட்டத்தோடு கைது செய்யப்பட்பிறகு உறவு முறிந்து விட்டது என்று கூற முடியாது.இந்த வழக்கு முற்றிலும் வித்தியாசமானது. தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட திட்டம், அதற்கான பயிற்சி ஆகியவை இந்தச் சதியின் ஆரம்பமாகும். இவை பாகிஸ்தானின் நிகழ்ந்தவை. இந்தச் சதியை நிறைவேற்றவே, மனுதாரன் உட்படப் பயங்கரவாதிகள் மும்பையில் பிரவேசித்தனர். இந்தச் சதியை நிறைவேற்றக் கொலைவெறிச் செயலை மனுதாரன் நிறைவேற்றிக் கொண்டிருந்த போதுதான் அவன பிடிபட்டான். அந்த சமயத்தில் தான் மற்ற சதிகாரர்களின் தொலைபேசி உரையாடல்கள் நடந்தன. அவர்கள் பிற பயங்கரவாதிகளுடன், வெளிநாட்டிலுள்ளவர்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் மிகச் சுதந்திரமாக மட்டுமல்ல, சுறுசுறுப்பாகவும் சதிவேலையை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருந்தனர். இந்தத் தொலைபேசிப் பதிவுகள் கைது செய்யப்பட்ட பின்னர் பெற்ற ஒப்புதல் வாக்குமூலங்களல்ல. அவை இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 10ன் கீழ் உள்ளவையாதுகம். எனவே மனுதாரனுக்கு எதிரான சதித்திட்ட குற்றச் சாட்டுக்கு- இந்திய அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பது - ஆதரவாக தொலைப்பேசிப் பதிவுகளைக் கொள்ளக்கூடாது என்று கூற எந்தக் காரணமும் இல்லை.இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்க முயற்சித்த குற்றத்துக்காக மனுதாரனுக்கு இந்தியன் பீனல் கோட் 121வது பிரிவின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிவு 121 மற்றும் பிரிவு 121ஏ- ன் கீழ் இந்திய அரசு மீது போர் தொடுக்க ஆயுதங்கள் சேகரித்த குற்றத்துக்காகவும் தனியாகத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரிவின் கீழும் விதிக்கப்பட்டது. ஆயுள் தண்டனையாகும். பிரிவு 121ஏ-ன் கீழ் விதிக்கப்பட்டுள்ள தண்டனை, மனுதாரன் இல்லாத இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைச் சேர்ந்ததென்றும், அதைக் குறித்து அவன் சதித்திட்டம் பற்றிப் பேசிய விஷயங்களையே தெரிவித்து விட்டான் என்று ராமச்சந்திரன் கூறுகிறார். 121ன் பிரிவின் கீழ் விதிக்கப்பட்டுள்ள தண்டனை, அவனோடு நேரடியாகத் தொடர்புடைய விஷயங்களோடு அடங்கிவிட்டதென்றும் அவர் கூறுகிறார்.மனுதாரன் இந்திய அரசின் மீது போர் தொடுக்க முயன்றான் என்ற குற்றச்சாட்டிலிருந்து அவனை விடுவிக்கத் திரு. ராமச்சந்திரன் மிகவும் ஆர்வம் காட்டினார். உயர்நீதிமன்றம் இந்தப் போர் தொடுப்புக் குற்றச்சாட்டு ஒன்னையே மிகவும் கொடுமையான தூண்டுதலாகக் கருதியது என்ற அம்சமே, அவரை இதில் மிகவும் ஆர்வம் காட்டச் செய்துள்ளது. இந்தக் காரணத்தால்தான் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அவர் கருதுகிறார். இந்திய அரசுக்கு எதிராகப் போர் தொடுக்க மனுதாரன் முற்பட்டான் என்ற குற்றச்சாட்டில் இருந்து அவனை விடுவித்து விட்டால், அவனது நிலைமை மாறி, இந்த நீதிமன்றத்தில் அவனது மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க முடியும் என்று ராமச்சந்திரன் பெரிதும் நம்பினார்.சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், மற்றும் பிற இடங்களில் மனுதாரன் செய்த கொலைகள், எண்ணிக்கையில் பெரிதாக இருந்தாலும், இவை காமா மருத்துவமனை உள்ளே, காமா மருத்துவமனை உள்ளே, காமா மருத்துவமனை வெளியே, ஸ்கோடா கார் கொள்ளை, மற்றும் வினோலி சௌபாத்தி நிகழ்ச்சிகள் யாவும் முன்பே விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தச் செயல்கள் அரசுக்கு எதிரான போர் என்று இந்தியன் பீனல் கோர்ட் செக்ஷன் 121ன் கீழ் அர்த்தம் செய்து கொள்ள முடியாது. அரசுக்கு எதிரான போர்க்குரல் என்னால் அதில் ஒரு சவால் இருக்க வேண்டும். அப்படியேதும் இந்தக் கொலைச் செயல்களில், இந்த வழக்கில் இல்லை. மனுதாரனின் குற்றங்களெல்லாம், ஒரு பயங்கரவாதச் செயல், 1967 சட்ட விரோத செயல்கள் (தடுப்பு) சட்டம் 15-வது பிரிவின் கீழ் வருவதாக மட்டுமே அர்த்தம் செய்து கொள்ள வேண்டுமென்று மதிப்பிற்குரிய வழக்கறிஞர் வாதாடுகிறார். விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதாக இருந்தால், ஒவ்வொரு பயங்கரவாதச் செயலும் இந்தியாவின் மீது போர் தொடுப்பது என்ற அர்த்தத்தை அங்கீகரிப்பதாக ஆகிவிடும், என்று அவர் மேலும் வாதிட்டார்.இந்தியன் பீனல் கோர்ட் பிரிவு 121ன் படி இந்திய அரசு என்ற சொல் இந்திய நாடு என்றே பொருள்படும் என்று வைத்தக் கொண்டாலும் கூட சிஎஸ்டி ரயில் நிலையத்தாக்குதலை இந்தச் சட்டப் பிரிவின் கீழ்க் கொண்டு வர முடியாது என்று ராமச்சந்திரன் வாதாடுகிறார். இந்தியாவின் ஒரு முக்கியமான அடையாளத்தின் மீதோ-சிம்பால் - அல்லது முக்கியமான ஸ்தாபனங்கள் மீதோ அல்லது உயர்மட்ட நிர்வாகத்தில் உள்ளவர்கள் மீதோ நடந்த நேரடியான தாக்குதலாக சிஎஸ்டி தாக்குதலைக் கூற முடியாது. நாட்டை பலவீனப்படுத்துதல், அச்சுறுத்தல் போன்ற நோக்கம் இருக்கலாம். என்றாலும் இந்தியன் பீனல் கோட் 121வது பிரிவின் அர்த்தங்களை இதில் புகுத்த முடியாது. 1967 சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 4வது பிரிவு (சேப்டர் 1 ஆர்) அமலாக்கப்பட்ட பின்னர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியன் பீனல் கோர்ட் பிரிவு 121, இந்திய அரசின் மீதான தாக்குதல்களுக்குப் பொருந்தாது முடிவு பெற்று விடுகிறது. இவை ஒன்றுக்கொன்று ஒரே மதிரியாகக் காணப்படுகிறது என்றாலும் தனித்தனியான சட்டங்களாகும்.ஒரு பொது இடத்தில் மூர்க்கத்தனமாக மக்களை கொல்வதென்பதை ஒரு யுத்தமாகக் கருத முடியாது, இந்திய அரசுக்கு எதிரான யுத்தமாகக் கருத முடியாதென்று ராமச்சந்திரன் மேலும் வாதாடினார். ஒரு பொதுப் போக்வரத்து மையமாக மட்டுமே இருக்கும் இடத்தில் நடத்தப்படும் தாக்குதல் நாட்டின் மீது நடத்தப்படும் யுத்தம் என்று வாதிடுவது குற்றவியல் சட்டங்களால் ஏற்படும் ஒரு மனமயக்கம் என்பது திரு. ராமச்சந்திரன் கருத்து. அதாவது தேசத்தின் மிக முக்கியமான ரயில் நிலையம், நாட்டின் பொருளாதாரத் தலைநகரம் அல்லது பொருளாதார வலிமையின் மீதான தாக்குதலை, நாட்டின் மீதே தொடுக்கப்பட்ட போராக வர்ணிப்பது, கிரிமினல் சட்டங்களுக்கு மிகவும் விரிவான, தாராளமான அர்த்தங்களைத் தருவதாகும், இது அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் மதிப்பிற்குரிய வழக்கறிஞர் வாதாடுகிறார்.போர் தொடுப்பது என்ற பிரச்சனையைப் பொறுத்தவரை, நவ்ஜோத் சாந்து, முகம்மது அரீப் வெசஸ் டெல்லி அரசு வழக்கோடு, இந்த வழக்கை ஒப்பிட முடியாது என்பது திரு. ராமச்சந்திரனின் வாதம், நவஜோத் சாந்து, முகம்மது அரீப் வழக்கில் அவர்களது தாக்குதல் இலக்கு பாராளுமன்றம் மற்றும் செங்கோட்டை. இந்த இரண்டு இடங்களும் இந்தியாவின் பெருமைக்குரிய, நாட்டின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் சின்னங்களென்று இந்த நீதிமன்றம் உறுதிபடக் கூறியுள்ளது. ஆனால் சிஎஸ்டி ரயில் நிலையம் ஒரு பொதுக்கட்டிடம் என்று ராமச்சந்திரன் கூறுகிறார்.இந்தியன் பீனல் கோட் 4வது அத்தியாயத்தின் கீழ், போர் தொடுத்தல் என்ற தலைப்பின் கீழ், செக்ஷன் 121 இந்திய அரசு என்ற சொல்லை உபயோகப்படுத்தியுள்ளது. யுத்தம் தொடுத்தல் அல்லது யுத்தத்துக்கு முயற்சி, யுத்தத்துக்கு தூண்டுதல் (இந்திய அரசுக்கு எதிராக) ஆகிய விளக்கங்களைத் தருகிறது. யாரொருவர் இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்கிறார்களோ, அல்லது போருக்கு முயற்சிக்கிறார்களோ, அல்லது போரைத் தூண்டுகிறார்களோ அவர்களுக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.செக்ஷன் 121ன் கீழ் இழைக்கப்படும் சதிக் குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சதி என்ற குற்றத்தைப் பொறுத்த வரையில், சதியில் ஈடுபட்ட பின்னர் ஏதோ ஒரு காரியம் செய்யப்படவில்லை அல்லது (வேறு) சட்ட விரோதச் செயல் செய்யப்படவில்லையென்ற விதி விலக்கு இல்லை. "சதியில்' ஈடுபட்டது என்பதே போதுமானது என்று இந்தப் பிரிவுகள் தெளிவாகவே தெரிவிக்கின்றன. இந்தப் பிரிவில் மத்திய அரசு, அல்லது ஏதாவதொரு மாநில அரசு என்ற சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பிரிவு - செக்ஷன் 121 பின்வருமாறு கூறுகிறது.
121ஏ இந்தியாவுக்குள் இருந்து கொண்டோ அல்லது வெளியில் இருந்து கொண்டோ 121வது பிரிவின் கூறியபடி கிரிமினல் முறைகளைக் கொண்டோ, அல்லது கிரிமினல் சக்தியைக் கொண்டோ, மத்திய அரசை அல்லது எந்தவொரு மாநில அரசையோ குலை நடுங்கச் செய்யும் சதியில் ஈடுபட்டால், அக்குற்றம் ஆயுள் தண்டனைக்குரியது, அல்லது சில விளக்கங்களின் அடிப்படையில் 10 ஆண்டு சிறைத் தண்டனைக்குறியது. அபராதத்துக்கும் உரியது. எனவே அந்தப் பிரிவின் கீழ் பேசப்படும் "சதி' என்ற சொல்லுக்கு சட்ட விரோதமாக ஏதும் செய்யப்படவில்லை எனறு வியாக்கியானம் தேவையில்லை.இந்தியன் பீனல் கோட் செக்ஷன் 122 போர் தொடுக்கும் எண்ணத்துடன் ஆயுதங்களைச் சேகரித்தல், அதை உபயோகப்படுத்தாமல் இருந்தாலும், குற்றமே என்று கூறுகிறது. இந்தப் பிரிவிலும் இந்திய அரசு என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
செக்ஷன் என்ன சொல்லுகிறது:
இந்திய அரசுக்கு எதிராகப் போர் தொடுக்கும் எண்ணத்துடன், படை, ஆயுதம், வெடிப் பொருட்கள் அல்லது வேறுவழியில் இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுக்கவோ, ஆயத்தம் செய்வதோ, ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாகும், அல்லது 10 ஆண்டு சிறைத்தண்டனைக்கு உரிய குற்றமாகும். அபராதமும் விதிக்கப்படும்.செக்ஷன் 123: இந்திய அரசுக்கு எதிராகப் போர் தொடுக்கும் எண்ணத்தை மறைத்து வைத்துக் கொண்டிருப்பது பற்றிப் பேசுகிறது. செக்ஷன் 125 இந்தியாவுடன் நட்புறவில் இருக்கும் ஆசிய நாடுகள்மீது போர் தொடுப்பது பற்றி விளக்குகிறது. செக்ஷன் 126 இந்திய அரசின் கீழ் உள்ள பிரதேசங்களில் கொள்ளைகள் நடத்தி அமைதியைக் குலைப்பது பற்றிப் பேசுகிறது.கிரிமினல் நடைமுறைச் சட்டம் செக்ஷன் 39, இண்டியன் பீனல் கோட் 176ம் பிரிவு இணைந்து தெரிவிக்கும் எச்சரிக்கை: ஒருவர், எந்தவொரு நபரும் இந்தியாவுக்கு எதிராக செக்ஷன் 121 முதல் 126 வரை விவரிக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு குற்றத்தைச் செய்கிறார் என்பது தெரிந்திருக்கும் பட்சத்தில், அந்தச் செய்தியை அரசு அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமலிருந்தால் அது குற்றமாகக் கருதப்படும். மேலும் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு போர் தொடுப்பு முஸ்தீபுகளைத் தெரிந்திருந்தும் மறைப்பதோ, அவ்வாறு மறைப்பதனால் அவர்களுக்குத் தெரிந்தே ஆதரவளிக்கும் குற்றம் பற்றி இந்தியன் பீனல் கோட் செக்ஷன் 123 விளக்கிக் கூறுகிறது.இந்த இடத்தில் நாம் பரிசீலிக்க வேண்டிய கேள்வி "இந்திய அரசு' என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்பதே சுருக்கமாகச் சொன்னால் நாட்டின் நிர்வாக அங்கமே இந்திய அரசு என்று சொல்லலாம். இதில் புனா குழு உள்ளது. அதிகாரிகள் (எக்ஸிக்யூடிவ்ஸ்) அந்தந்தக் காலங்களில் உரிய அதிகாரங்களுடன் நிர்வாகம் செய்கிறார்கள். அடுத்தடுத்து வரும் அரசுகள் நாட்டுக்கு (மக்களுக்கு) சேவை செய்யத் தேவையான அதிகாரங்களைக் கொண்டுள்ளார்கள். நாட்டை நிர்வாகம் செய்கிறார்கள். இந்தக் குறுகிய கண்ணோட்டத்தில் மட்டுமே செக்ஷன் 121 இந்திய அரசு என்ற சொல்லுக்கு விளக்கம் தருகிறது என்று நாங்கள் கருதவில்லை. இதற்கான பொருள் விரிவானது, ஆழமானது. இது நீதி உணர்வு மிக்கது. மக்களின் ஒட்டு மொத்தமான அங்கீகாரத்தைப் பெற்ற நாட்டின் இறையாண்மையைப் பெற்ற பெருமை மிக்கது. சர்வதேச பொதுச் சட்டங்களின் கீழ் அமைந்த சிறப்புடையது. பிரதேச இறையாண்மை உடையது. இதிலுள்ள மக்களின் பிரதிநிதித்துவமாக விளங்குவதே இந்திய அரசு. ஏதோவொரு நிர்வாகக் கூட்டமல்ல. மக்களின் ஒட்டு மொத்தமான ஆத்மா.இன்னொரு முக்கியமான செய்தியையும் குறிப்பிடவேண்டும். செக்ஷன் 121 (மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள பிற செக்ஷன்கள் உட்பட) முதலில் (இந்தியாவை) ராணி என்ற பெயரில் குறிப்பிட்டன. புதிய அரசியல் சட்டத்தின் கீழ் குடியரசு உருவாக்கப்பட்ட பின்னர், 1950ல் இந்திய அரசு என்ற சொல் அறிமுகமானது. ஒரு குடியரசில் இறையாண்மை என்பது மக்களுக்குரியது. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அது மக்கள் பிரதிநிதித்துவ அரசு. மக்களே அரசு. எனவே செக்ஷன் 121-ல் காணப்படும் இந்திய அரசு என்ற சொல் மக்களிடமிருந்து பிரிக்கப்படமுடியாத மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அசு என்று பொருள்படும், பொருள் கொள்ளவேண்டும்.இந்திய அரசுக்க எதிராகப்போர் என்றால் என்ன என்பது பற்றி இந்த நீதி தெளிவாக விவாதித்துள்ளது. நவஜோத் சந்து வழக்கின் தீர்ப்பின் 272 பத்தியில் இது விளக்ப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் சார்பில் நீதிபதி பி வெங்கட்ராம ரெட்டி தெளிவாக விளக்கியுள்ளார். 1847 வரைவு இந்தியன் பீனல் கோட் சட்ட வரைவைப் பரிசீலித்த இந்தியச் சட்டக் கமிஷன் தெரிவித்த கருத்தை அவர் சுட்டிக் காட்டினார்.
"எந்தவொரு நபரும் மிகவும் திட்டமிட்ட முறையில் அரசுக்கு எதிராக, ஒரு அந்நிய நாட்டவன் யுத்த முஸ்தீபுகளைச் செய்வானேயானால் அது இந்தியாவுக்கு எதிரான போர்ச் செயலாகவே கருதப்படும் என்று இந்தச் சட்ட வரைவினை எழுதியவர்கள் தெரிவிப்பதே சரியென்றே நாங்களும் கருதுகிறோம். சந்தேகத்துக்கு இடமில்லாது. இந்த விளக்கம் அமைந்துள்ளது.'ஒரு அன்னிய நாட்டுப் பகைவன் மற்றும் அவனது செயல்களைப் போலவே என்ற விளக்கம் எங்களுக்கு மிக முக்கியத்துவம் நிறைந்ததாகும். வன்முறைச் செயல்களின் தன்மையே ஒரு யுத்த முயற்சியே. அன்னியப் பகைவனுடைய நோக்கம் பொது அமைதியைக் குலைப்பது மட்டுமல்ல, சட்ட ஒழுங்கைச் சீர்குலைப்பது மட்டுமல்ல, அவன் - அந்த அன்னிய நாட்டுப் பகைவன். இந்த நாட்டின் இறையாண்மை மீது அடிக்கிறான். இந்தக் குரோத உணர்வின் தூண்டுதலில்தான் அவனது சதித்திட்டமும், நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.நவஜோத் சாந்து வழக்கில் இந்திய அரசுக்க எதிராகப் போர் தொடுத்தல் என்ற பிரச்சினை பயங்கரவாதச் செயல்களையொட்டியே பரிசீலிக்கப்பட்டது. நீதிமன்றம் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளது.
போர் பயங்கரவாதம் மற்றும் வன்முறைச் செயல்கள் கொண்டு நன்கு நிலையாக அமைந்துள்ள ஒரு அரசைப் பயமுறுத்துவது என் பதில் பொதுத் தன்மைகள் பலவுள்ளன. அவற்றைத் தனித் தனியாக ஒன்றைப் பிரித்துக் காண்பது சுலபமான காரியமல்ல.
சர் ஜே.எஃப். ஸ்டீபன் இதைத் தெளிவாக விளக்குகிறார்.
சட்ட விரோதமாகக் கூடுதல், கலவரங்கள், திட்டமிட்டே குழப்பங்கள் விளைவித்தல், கலகங்கள் ஆகிய போர்க்குற்றங்கள் ஒன்றுடன் ஒன்று ஊடுருவி நிற்பனை. இவைகளுக்குத் தனித்தனியாக வரம்பு கட்டமுடியாது. இதிலுள்ள பொதுவான அம்சம் என்னவென்றால், ஒரு நாகரீக சமுதாயத்தை, இந்த நடவடிக்கைகளைக் கொண்டு, வலிமையைக் கொண்டோ, அச்சுறுத்தலைக் கொண்டோ அமைதியில்லாமல் செய்து விடுவதாகும். இந்தப் பட்டியலில் பயங்கரவாதமும் அடங்கும். இக்காலத்தில் இதுதான் வெளிச்சமாக, வெளிப்படையாக நிற்கிறது. எல்லா பயங்கரவாதச் செயல்களையும் போர் என்று கொள்ள முடியாதென்றாலும் சில பயங்கரவாதச் செயல்கள் போர் தொடுக்கும் எண்ணமுள்ள குற்றமாகவும் இருக்கும். இந்த இரண்டுக்கும் இடையே பிரிவினைகள் கிடையாது. பயங்கரவாதச் செயல்களே போராக முடியக்கூடும். அரசுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் (நவ்ஜோத் சந்து வழக்கு) கூறியது போல, ஒரு நாட்டின் இறையாண்மையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலில், ஈடுபடுவோர் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அந்தத் தாக்குதல் போர் தொடுப்பதே ஆகும்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் முதல் அங்கமான செக்ஷன் 3(1), இந்தியாவின் ஒருமைப்பாடு, நேர்மை நிலை, அல்லது மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏவுதல், அல்லது மக்களின் ஒரு பகுதியினரைத் தாக்குவதற்கு, வெடிகுண்டுகள், டைனமைட், அல்லது பிற வெடிகுண்டு அல்லது தீப்பிடித்து எரியும் சாதனங்கள், ஆயுதங்களைக் கொண்டு விடிப்பது, பயங்கர ஆயுதங்கள், விஷம் அல்லது விஷ வாயுக்கள், ரசாயனப் பொருட்கள், அல்லது வேறு வகை அபாயப் பொருட்கள், அல்லது இவற்றுக்கும் அப்பாலான வேறு முறைகளைக் கையாளுவது எல்லாமே நாட்டின் மீது போர் தொடுத்தல் என்றே பொருள்படும். என்றாலும், பயங்கரவாதச் செயலில் உள்ள மிருகச் சிந்தனையின் பரிமாணம், நோக்கம் ஆகியவை போர் தொடுக்கும் நோக்கம் உடையதுதானா என்பதைப் பரிசீலனை செய்ய அடிப்டையாகக் கொள்ளப்படலாம். என்றாலும் இதற்கு வரம்பு கட்டும் எல்லைக் கோடு தெளிவாக இல்லை. வெளிப்படையாகவும் இல்லை. அளவு கோலில் வித்தியாசம் காணப்படுகிறது. பயங்கரவாதச் செயல்கள், அரசுக்கு கிரிமினல் வழியாக வலிமையோடு மிரட்டல் விடுவது என்று செயல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் வித்தியாசம், சற்றுக் குறைவாகத் தெரிகிறது. இவ்வாறான செயலுக்குச் சதி செய்வதென்பது செக்ஷன் 121ஏ-ன் கீழ் வருகிறது.இந்த விளக்கங்கள் திரு. ராமச்சந்திரனின் வாதங்களுக்குப் பதிலாக அமைகின்றன. சட்டவிரோதமாகக் கூட்டம் கூடுதல் (தவிர்ப்பு) சட்டத்தின் 15வது பிரிவி, இந்தியன் பீனல் கோடர் 121, மேற்படி சட்டவிரோதமாகக் கூட்டம் கூடுதல் தவிர்ப்புச் சட்டத்தில் ÷ர்க்கப்பட்டுள்ள சேப்டர் 4 எவ்வாறு கருதப்படவேண்டுமென்று அவரது வாதங்கள் அனைத்துக்கும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. பயங்கரவாதக் குற்றங்களில் இந்தச் சட்டப்பிரிவுகள் எவ்வாறு பொருந்துமென்றும் விளக்கப்பட்டது. நவஜோத் சாந்து வழக்கு ஒரு பயங்கரவாதச் செயல் வழக்கு. இதில் சில் அம்சங்கள் வேறுபட்ட நிலையில் காணப்படலாம். ஆனால் ஒவ்வொரு பயங்கரவாதச் செயலுமே போர் தொடுக்கும் செயலாகவே இருக்க வேண்டியதில்லை. அப்படியிருக்கும் நிலைமைகளும் உண்டு. சட்ட விரோதமாகக் கூட்டம் கூடுதல் (தவிர்ப்பு) சட்டம் சேப்டர் 4 மற்றும் செக்ஷன் 121 உட்பட பினல் கோட் சட்டம் இரண்டிலும் உள்ள விதி முறை அம்சங்கள் ஆகியவை அடிப்படையில் வேறுப்பட்ட நிலைகளைக் கொண்டுள்ளவை.இந்த வழக்கு பற்றிய விவரங்களுக்கு மீண்டும் வருவோம். மனுதாரன் மற்றும் அவன் கூட்டாளிகள் செய்த முதல் குற்றம் இந்திய அரசின் மீது போர் தொடுக்க வந்த குற்றமேயாகும் என்று நாங்கள் காண்கிறோம்.
அவர்களுக்கு - மனுதாரன் மற்றும் அபு இஸ்மாயிலுக்குத் தரப்பட்ட இலக்கு சிஎஸ்டி ரயில்நிலையம் (அதாவது ராமச்சந்திரனைப் பொறுத்தவரை அது ஒரு பொது இடம்) மட்டுமே என்பதோ அல்லது பல மக்களை அவர்கள் காமா மருத்துவமனையிலும், பத்ருதீன் தாயாப்ஜி சாலையில் கொன்று கொன்று குவித்தார்கள் என்பது மட்டுமே பிரச்சனையில்லை. பிரச்சினை அவர்கள் இந்தியாவை, இந்திய மக்களைத் தாக்கினார்கள் என்பதேயாகும். அன்னிய நாட்டவரால் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்தியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிற நாட்டவர்களும் கொல்லப்பட்டனரே என்றால், இந்தக் காரணத்தால் இந்தியாவுக்கத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்த முடியும் என்பதாம். சதிதிட்டம், அதைச் சார்ந்த தாக்குதல் எல்லாம் இந்தியாவின் பொருளாதார மையத்தைத் தாக்குவது, இதன் மூலம் சமூக பிரச்சினைக்கு வழி வகுப்பது, உள்நாட்டுக் கலகத்தை உருவாக்குவது, பயங்கரவாதத்தை பரப்புவது, காஷ்மீரில் இருந்து வாபஸ் பெற வைப்பது மற்றும் உலக நாடுகளுடனான உறவுகள் பற்றி அதிகாரம் செய்வது என்ற பல அம்சங்கள் இந்த சதித்திட்டத்தில் உள்ளன. இந்த லட்சியத்தோடு நடத்தப்பட்ட தாக்குதலில் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களை விட காயமடைந்தவர்கள் அதிகம். ஒரு அன்னிய நாட்டுப் பகைவன் அவன் கூட்டாளிகள் இதைச் செய்துள்ளனர்.இதைக் குறித்து திரு. கோபால் சுப்ரமணியம், பயங்கரவாதிகளுக்கும், எல்லைக்கப்பாலுள்ள இவர்களது பங்காளிக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்களை பற்றிய பதிவுகளைக் குறிபிட்டுள்ளார். மனுதாரன் மாஜிஸ்ட்ரேட் முன்பு அளித்த ஒப்புதல் வாக்குமூலத்திலிருந்து, அமீர் ஹபீஸ் சையது (தேடப்படும் குற்றவாளி 1) ஜாகீர் உர் ரஹிமான் லக்வீ (தேடப்படும் குற்றவாளி 2) மற்றும் பலர் கொடுத்த ஆணைகளை எடுத்துக் காட்டியுள்ளார். இந்த ஆணைகளின் முக்கியமான லட்சியம் தாக்குதல்களைப் பற்றியதாகும். அந்த .ரையாடல்கள் நாட்டுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளுக்கும், எல்லைக்கப்பாலிருந்து கூட்டாளிக்கும் இடையே நடந்தவை. இந்த உரையாடல் பதிவுகளின் பல பகுதிகள், நடைபெற்ற தாக்குதல் பகைவர்கள் தாக்குதல் என்பதையே காட்டுவதாகத் திரு. கோபால் சுப்ரமணியம் எடுத்துக் காட்டிய விஷயங்கள் சரியேயென்று நாங்களும் ஏற்கிறோம்.இருதரப்பு வாதங்கள், ஆவணங்கள், ஆகியவற்றை ஆராய்ந்து பரிசீலித்த பின்னர், மனுதாரன் இந்திய அரசுக்கு எதிராகப் போர் தொடுக்கும் தாக்குதலை நடத்திய குற்றவாளியாகச் சரியாகவே தீர்மானிக்கப்பட்டு இந்தியன் பீனல் கோட் செக்ஷன்கள் 121, 121ஏ மற்றும் 122ன் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளான் என்பதில் எந்த விதமான தயக்கமும் எங்களுக்கில்லை.
4-தண்டனை என்ன?விசாரணை நீதிமன்றம் 5 மரண தண்டனைகளை மனுதாரனுக்குக் கீழ்க்கண்ட சட்டப் பிரிவுகளின் விதித்துள்ளது.
1) கொலை செய்வதற்கான சதித்திட்டம் - இண்டியன் பீனல் கோட் செக்ஷன் 120பி மற்றும் செக்ஷன் 302.
2) இந்திய அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தது - இண்டியன் பீனல் கோட் செக்ஷன் 121.
3) சட்ட விரோதமாகக் கூட்டம் கூடுதல் (தவிர்ப்பு) சட்டம் செக்ஷன் 16.
4) 7 பேரைக் கொலை செய்தது - இண்டியன் பீனல் கோட் செக்ஷன் 302.
5) இண்டியன் பீனல் கோட் செக்ஷன் 302-34; மற்றும் 302, 109 மற்றும் 120பி.விசாரணை நீதிமன்றம் வழங்கிய 5 மரண தண்டனைகளையும் உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.ஆனால் மனுதாரனுக்கு எந்த வழக்கின் கீழும் மரண தண்டனை வழங்கக்கூடாதென்று வாதாடுகிறார். எந்தவொரு நபரும் முறையான சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட முறைகளில்லாமல் அவரது உயிரை இழக்கும்படி செய்யப்பட்டு விடலாகாது. இந்த நடைமுறைகள், நேர்மையாக, நியாயமாகக் காரணங்களுக்குட்பட்டதாக இருக்க வேண்டும். எனவே மரண தண்டனையை நீதிமன்றம் விதிக்கக்கூடாது. இது அதீதமானது. விசாரணையின் நேர்மை பற்றி ஒரு சின்னஞ்சிறிய சந்தேகம் ஏற்பட்டாலும் மரணதண்டனை கூடாது, அது ரத்து செய்யப்பட முடியாததாக, மாற்ற முடியாததாக இருக்க வேண்டும் என்று வாதிட்ட திரு. ராமச்சந்திரன் விசாரணையின் முறைகளில் தவறுள்ளது. எனவே மரணதண்டனை தரப்படலாகாது என்று கூறினார்.அவர் ஏற்கெனவே விசாரணை சரியல்ல, எனவே செயலிழந்து விட்டது என்று வாதாடியுள்ளார். அரசியல் சட்டப்படியான பாதுகாப்புகள் இல்லாது, மனுதாரன் சார்பில் ஒரு வழக்கறிஞரை நியமிக்காது, மனுதாரனின் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது, அவன் சார்பில் வழக்கைத் தயாரிக்கப்போதிய கால அவகாசம் தரப்படவில்லை என்பது அவரது வாதங்கள். விசாரணை வேகமாக நடைபெற வேண்டும்-நேர்மையாக நடைபெற வேண்டும் என்ற நிலையில் ஒரு தேவையற்ற காம்ப்ரமைஸ் நிகழ்ந்து விட்டது. இந்தச் சூழ்நிலையில் விவேகம் செயல்பட வேண்டும், மனுதாரனின் மரண தண்டனையை உறுதிப்படுத்தாமல், ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும்.இந்தத் தீர்ப்பின் ஆரம்பப் பகுதிகளில் இந்த விவாதங்களை விரிவாகப் பரிசீலித்து அவை ஏற்கத்தக்கதல்ல என்று கூறியுள்ளோம். விசாரணையில் நேர்மையிலும் மற்றும் காரண நிலை நோக்கிலும் அளவுகோல்களில் எந்தக் குறையுமில்லை என்றும் தெரிவித்துள்ளோம். எனவே இவைகளைக் காரணமாகக் கொண்டு தண்டனையைக் குறைக்க வேண்டுமென்று கேட்க முடியாது.திரு. ராமச்சந்திரனின் அடுத்த வாதம் உயர்நீதி மன்றத்தை நோக்கியுள்ளது. மனுதாரனுக்கு எதிரான சம்பவங்களைச் சீர் தூக்கிப் பார்ப்பதில் உயர்நீதி மன்றம் தவறிழைத்துள்ளது. இது பெரிய தவறு. மனுதாரன் மீதான குற்றச் சாட்டுகளில் போர் தொடுத்தல் என்பதையே பிரதானமாகக் கொண்டு இந்தத் தண்டனையை முடிவு செய்துள்ளது. இதைக் கொண்டே அவனைக் குற்றவாளி என்று முடிவு செய்தது தவறு. மேலும் 7 பேர் கொலை செய்யப்பட்டதற்கு, (அமர்சந்த் சோலங்கி உட்பட) மனுதாரன் ஒருவனையே தனிப்பட்ட முறையில் பொறுப்பாளியாக்கியதும் உயர்நீதி மன்றம் இழைத்த தவறாகும். சிஎஸ்டி ரயில் நிலையத்தில் பயணிகளைச் சுட்டுத்தள்ளிக் கொண்டிருந்தபோது மனுதாரன் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டான் என்று ஒரு தனி மனிதன் கூறிய சாட்சியத்துக்கு உயர்நீதி மன்றம் முக்கியமளித்தது பெரிய தவறு. போலீசாரிடம் கூறிய சாட்சியத்தில் இவர் இவ்வாறு (மனுதாரன் மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாக) கூறவில்லை.
இந்திய அரசைத் தாக்குதல், அமர்சந்த் சோலங்கி உட்பட ஏழுபேர் கொலை ஆகிய மனுதாரன் மீதான குற்றச்சாட்டுகள் ஆகியவை நாங்களே சுதந்திரமாகக் கண்ட உண்மைகளோடு ஒத்து வருகின்றன. உயர்நீதி மன்றமும் இதே முடிவுக்கு வந்தது நியாயமானதே, தண்டனையைத் தீர்மானித்ததும் நியாயமானதே. சுட்டுத்தள்ளும் போது மனுதாரன் மகிழ்ச்சியாக இருந்தான் என்பதை ஆதாரமாகக் கொண்டு தண்டனை முடிவு எடுக்கப்படவில்லையாதலால், அதை ஒதுக்கிவிட்டு, பிடபிள்யூ 52 சாட்சியத்தை முழுமையாகத் தவிர்த்து விட்டு பேசுமாறு திரு. ராமச்சந்திரனை நாங்கள் கேட்டுக் கொண்டோம்.


கசாபின் கடைசி கட்ட தந்திரம்:

விசாரணை நடந்து கொண்டிருந்த போது நீதிமன்றம் ஒரு கேள்வியை எழுப்பியது. நீதிமன்றக்காவலில் இருக்கும் மனுதாரர் ( கசாப்) பாகிஸ்தான் அரசு தன்னை அந்த நாட்டவனே என்று ஒப்புகொண்ட விஷயத்தை எவ்வாறு அறிந்து கொண்டான் என்பதே கேள்வி. அப்போது ட்யூடியில் இருந்த காவலாளி மூலம் அவன்இந்த செய்தியை அறிந்தான் என்பது பின்னர் தெரியவந்தது. 2009 பிப்ரவரி 12ம் தேதி ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர், மனுதாரர் கசாப் தங்கள் நாட்டவனே என்று ஒப்புக்கொண்டிருந்தார். நீண்ட நாட்களுக்கு பின்னரே மனுதாரருக்கு இது தெரியவந்துள்ளது. அதை தெரிந்து கொண்டவுடன் நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலம் (விசாரணை நடந்து கொண்டிந்தபோது) கசாப் விரும்பியுள்ளான்.
இந்த திட்டத்தில் நாம் ஒன்றை நினைவு கூற வேண்டும். அதுவே மனுதாரரின் விசாரணை இடையில் பேச விரும்பியது. அவன் மிகவும் சாமர்த்தியமாக முன்னர் 164 பிரிவின் படி அளித்த வாக்குமூலத்தில் இருந்து மாறினான். தண்டனைக்கு உட்பட தயார் என்றான். அவ்வாறு பணிந்து விட்டால் மரண தண்டனையில் இருந்து தப்பி விட முயற்சித்தான். இது அவன் மேற்கொண்ட பலே முயற்சி.பாகிஸ்தானின் பயங்கர சதி:


இந்தியாவின் இறையாண்மையை பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்க, மக்களிடையே மத வெளியை தூண்டி கலவரங்களை ஏற்படுத்த, பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம், பல மாதங்கள் திட்டமிட்டு, 10 பேரை தேர்ந்தெடுத்து, பயங்கரவாத செயல்களில் தக்க பயிற்சி கொடுத்து, தங்களின் திட்டத்தை நிறைவேற்ற கடல் மார்க்கமாக மும்பைக்கு அனுப்பி வைத்தது. வந்து இறங்கிய சில மணி நேரங்களில் மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் தொடங்கி அருகிலுள்ள காமா மருத்துவமனை மற்றும் ஹோட்டல் தாஜ், ஹோட்டல் லியோபோல்ட், ஒபாராய் மற்றும் மும்பை நகருக்குரிய பெருமை மிக்க நரிமான் ஹவுஸ் ஆகிய இடங்களில் பேரழிவுகளை இவர்கள் நிகழ்த்தினார்கள். ஆனால் தாமதமின்றி மும்பை போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தமது உயிரை துச்சமாக கருதி மேற்கொண்ட நடவடிக்கைகளால் உயிர்ச்சேதங்கள், பொருட்சேதங்கள் தொடராது தடுக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்பு துறையை சேர்ந்த பல வீரர்களை இந்தியா விலையாக கொடுக்க நேர்த்தது. 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு விட்டனர். ஒருவன் கசாப் பிடிப்பட்டான். பாகிஸ்தானின் பல பயங்கரவாத திட்டங்கள் அம்பலத்துக்கு வந்தன.


தியாகம் செய்த அதிகாரிகளை வணங்குகிறோம்:

கசாப் வழக்கு, மும்பை விசாரணை நீதிமன்றம், மும்பை உயர்நீதிமன்றங்களை தாண்டி, இறுதியாக உச்ச நீதிமன்றத்துக்கு வந்து கசாப்பின் மரண தண்øனை உறுதி செய்யப்பட்டது. பாரத பண்பாட்டுக்கேஉரிய உணர்வுடன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குற்றவாளிக்கு காட்டவேண்டிய சலுகைகளை கடுகளவும் குறைக்காது. மறுக்காது அளித்த தீர்ப்பு, இந்திய உச்ச நீதிமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்கால் பொறிக்க தக்கது. இருதரப்பு வாதங்களில் காணப்பட்ட சட்ட நிபுணத்துவ மேதா விலாசம், கண்ணிய ம், நீதிபதிகள் நடுநிலை மாறாது அளித்த தீர்ப்பு னெ பல கோணங்களில் இந்தியாவின் நேர்மையை இந்த வழக்கு தீர்ப்பில் காணலாம். நாட்டை காப்பாற்றும் நடவடிக்கையில் தங்கள் உயிரையே தியாகம் செய்த அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் தனது வணக்கத்தை தெரிவித்துள்ளது. நாமும் நமது நன்றி வணக்கங்களை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DINESH KUMAR V - chennai,இந்தியா
04-ஆக-201401:02:00 IST Report Abuse
DINESH KUMAR V அந்த ...தூக்கில் போடுங்க
Rate this:
Cancel
cpleninchinnapa - TIRUPUR,இந்தியா
31-ஜூலை-201411:42:40 IST Report Abuse
cpleninchinnapa மனிதர்கள் ஆக்கிரமிக்க ஆக்கிரமிக்க நிலமகள் பொறுமை இழந்து போகின்றாள் ,என்மீது மரம் வளராமல் .மனிதர்கள் வளருவது என்னை நிலைநிருத்துவதற்கு அல்ல என்னை தள்ளிவிடுவதர்கே மனிதர்கள் முயலுகிறார்கள் என்று சீரும் குரல் எனக்கு கேட்கிறது .மண்ணை நேசிக்கும் நிறைய ஆதமாகளுக்கு கேட்கும் .ஆனாலும் வருந்துகின்றேன் .
Rate this:
Cancel
cpleninchinnapa - TIRUPUR,இந்தியா
31-ஜூலை-201411:38:01 IST Report Abuse
cpleninchinnapa காங்கிரஸ் ஒட்டுக்கேட்டது இல்லை என்பதை நிருப்பிக்க வேண்டும் .அரசாங்கம் நடத்தும்போது கண்டிப்பாக செய்துதான் ஆகவேண்டும் .குற்றம் இல்லையெனில் பயப்பட என்ன இருக்கிறது .அப்படியானால் குற்றம் செய்கிறார்கள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும் .நேர்மையாக நடப்பவர்கள் எதிர்ப்பு காட்ட வேண்டியதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X