திருநெல்வேலி : அறநிலையத்துறையே தேவையில்லை. அதற்கு மக்கள் அனுமதியளிக்கவில்லை என இந்துமுன்னணி தலைவர் ராமகோபாலன் தெரிவித்தார்.
இந்துமுன்னணி
மாநில தலைவர் ராமகோபாலன் நேற்று நெல்லையில், பல்வேறு சமூகங்களை
சேர்ந்தவர்களை சந்திக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், பொதுமக்கள் எந்த பிரச்னைக்கும் தீர்வு ஏற்படுத்த
முன்வரவேண்டும். எதற்கும் ஒதுங்கிபோக கூடாது.இங்கு பேசியவர்கள் பல்வேறு
பிரச்னைகளை தெரிவித்தார்கள். மக்கள் கலந்துரையாடினால்தான் மக்களின் பிரச்னை
தெரியவருகிறது. இங்குள்ள சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களுக்கு
பொதுவான மக்களுக்கு போதுமான இடங்கள் தருவதில்லை என்ற புகார் உள்ளது.ஆனால்
அந்த கல்வி நிறுவனங்கள் பொதுமக்களின் நிலங்களை வாரிச்சுருட்டியிருக்கும்
புகார் குறித்து இந்துமுன்னணியினர் நடவடிக்கைகளில் இறங்குவார்கள்.
சங்கரன்கோவிலில் கொலை செய்யப்பட்ட இந்துமுன்னணி பிரமுகர் ஜீவா, கொலை
சம்பவம் குறித்து மாநிலதுணைத்தலைவர் ஜெயக்குமார் அங்குநேரில் சென்று
விசாரணை நடத்தி அறிக்கை தருவார். நெல்லையப்பர் கோயில் தேரில்
ஆகமவிதிமுறைகளை மீறி பைபர் குதிரைகள் அமைக்கப்பட்டிருப்பது குறித்து
கேட்கிறீர்கள், என்னைப்பொருத்தவரை, அறநிலையத்துறையே தேவையில்லாதது. அதற்கே
மக்கள் அனுமதியளிக்கவில்லை. எனவே ஆகமவிதிமுறை மீறியது குறித்து எங்கள்
அமைப்பினர் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றார். ஆலோசனை
கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், மாநகர நிர்வாகிகள் பாலாஜி
கிருஷ்ணசாமி, குற்றாலநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE